சுவர்க்கமும் மதுவும் ஹூருல் ஈனும் வேலைக்கார சிறுவர்களும்
சுவர்க்கத்தின் மது சுவர்க்த்து மதுவில் போதையோ, தீங்கோ , தலைவலியோ இருக்காது (குர்ஆன் 37:47, 52:23, 56:19) சிறுவர்கள் வேலைக்காரர்கள் உலகத்தில் சிறுவர்களின் கல்வியுரிமை வேறு உரிமைகள் பறிக்கப்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுவதால் சிறுவர்களிடம் வேலை வாங்குவது குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சுவர்க்கத்திலோ அதற்கென்றே படைக்கப்பட்டவர்கள் அதை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை... உதாரணமாக ரோபோவை குறித்த வேலைக்கு நியமிப்பதால் அது குற்றம் என சொன்னால் எப்படி?.. இறைவனே உடலைக் கொடுத்து உயிரைக் கொடுத்து அதற்கான தெம்பையும் கொடுத்து வேலை செய்விப்பதை எப்படி விமர்சிக்க முடியும் ?? கண்ணழகிகள் -கண்ணழகிகள் திருமணம் முடித்தே தரப்படுவார்கள் (குர்ஆன் 52:20, புகாரி 3254) -சுவர்க்கத்தில் சாப்பிடும் நேரத்தில் சாப்பிடுதல் குடிக்கும் நேரத்தில் குடித்தல் தாம்பத்ய நேரத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடல், இறைவனை துதிக்கும் நேரத்தில் இறைவனை துதித்தல் என அதற்கேற்றபடியே இருக்கும் (புகாரி 3245,3246) வெறுமனே ஆன்மீகரீதியிலோ அல்லது வெறுமனே மாம்சரீதியிலோ சுவர்க்கம் இருக்காது. மாறாக இவ்வுலகில் நல்லோராக வாழ்ந்தோரு...