இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

இயேசு கடவுள் அல்லவே அல்ல!!

------------------------------------------------------------------------




உலகிலுள்ள கிறிஸ்தவர்களில் ஒருசில பிரவினரை தவிர மற்ற அனைவரும் இயேசு கிறிஸ்துவை கடவுள் என நம்புகிறார்கள்.   இயேசு கிறிஸ்து அவர்கள் கடவுளா? என்றால் நிச்சயமாக இல்லை என்பதையே நாம் பைபிளிலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.

கிறிஸ்தவர்கள் செய்வது என்னவென்றால், பைபிளை தமது தவறான நம்பிக்ககைக்கேற்ப திரித்து படிக்கிறார்களேயன்றி உண்மையை அறிந்துகொள்ள படிப்பதில்லை!!


*இயேசு கடவுளாக இருந்திருப்பாரானால், தன்னை கடவுள் என நேரடியாக "நானே கடவுள்! என்னை தான் நீங்கள் வணங்கி வழிபட வேண்டும்" என கூறியிருப்பார்.

ஆனால் அவர் அப்படி கூறவில்லை..... தன்னை கடவுள் என கூறாத நபரை  , "கடவுள் என்றும், அவரையே வணங்கவேண்டும்" என்று சொல்வதும் மிக அபத்தம்!!!



*இயேசு ஏன் தன்னை கடவுள் என கூறவில்லை??:



இக்கேள்வியை நாம் கிறிஸ்தவர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது :



"ஒரு மனிதன் தன்னை கடவுளென வாதிட்டால் ஏற்றூக்கொள்வீர்களா? தன்னை கடவுளென வாதிடுபவர்களையெல்லாம் கடவுளென ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்கிறார்கள்.


நம் பதில் என்னவென்றால்,,,

ஒரு மனிதன் கடவுளென சொல்வதானால் அவன் பைத்தியமாக இருப்பான் அல்லது பொய்யனாக இருப்பான்.

ஆனால் இயேசுவோ பொய்யருமல்ல பைத்தியமும் அல்ல!

அதனால் அவர் சொல்வது உண்மையாக தானே இருக்கும்! அப்படிப்பட்டவர் சொன்னால் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.


நாம் ஏன் அவர் வாதிட்டாரா என கேட்கிறோமெனில், 

அவர் தன்னை கடவுளென கூறவேயில்லை என்று நாம் அறிவோம்!! கிறிஸ்தவர்களும் அறிவார்கள்!!




ஒருவர் வெற்றியடைய (நித்தியஜீவனை அடைய) வேண்டுமானால், உண்மையான கடவுளை அறிய வேண்டும்!!! 

பொய்யான கடவுளை வணங்கினால் நிச்சயமாக அடையவே முடியாது!

ஆகவே ஒருவர் நித்தியஜீவனை அடைய உண்மை கடவுளை கட்டாயம் அறிய வேண்டும்!! இயேசு கடவுளெனின் அவர் கடவுளென அறயவேண்டுமா இல்லையா?

இப்படி அத்தியாவசியமான விசயத்தில் வாயை மூடிக்கொண்டு "தன்னை கடவுளென" நேரடியாக அறிவிக்காமல் இருந்தால்  ,   எப்படி நித்தியஜீவனை அடைவது??




எனவே நிச்சயம் அவர் கடவுள் இல்லை என்பதால் தான் , தன்னை கடவுள் என கூறவில்லை!!

  உண்மைக் கடவுளை அறியாதவன் பரலோகம் போகமுடியாது!!  போலியான கடவுளை வணங்குபவனும் போக முடியாது!

இப்படிப்பட்ட விசயத்தில் அவர் தன்னை கடவுளென வாதிடவில்லை எனின் அவர் கடவுள் அல்ல என்ற ஒரே காரணம் தான்!


எனவே அவர் அந்த மெய்க்கடவுள் அல்ல!!

தான் கடவுள் இல்லை என்ற காரணத்தால், தன்னை கடவுள் என கூறாத பணிவான மனிதரை கடவுளாக்கி வணங்குவது மிகப்பெரிய தப்பு ஆகும்!!


இதிலிருந்து விலகிக்கொள்ளவிட்டால் நித்திய அக்கினியில் கருக வேண்டிவரும்!!! தோல் கருகிப்போனதும் புதுத்தோல் தரப்பட்டு நித்தியமாக வேதனை அனுபவிக்க வேண்டிவரும்! 
எனவே எச்சரிக்கையாயிருங்கள்.





*அப்படியென்றால் அவர் தன்னை கடவுள் இல்லை என்றாரா??




ஒருவர் மனிதராக பூமியில் உள்ளபோது , "நான் கடவுளில்லை" என சொல்ல அவசியமே இல்லை!! காரணம் , பார்த்தவுடனே இவர் கடவுளல்ல! மனிதனே ஆவார் என புரிந்துகொள்ள முடியும்



ஆனாலும் இயேசு தன்னை கடவுள் இல்லை என்பதை தன் வாயாலேயே உணர்த்தினார்! நேரடியாகவே சொன்னார்.


உதாரணமாக,..


1. உண்மையான கடவுள் ஒருவரே! அவரே அந்த பிதா என்று இயேசு தன் வாயாலேயே கூறுகிறார்:



3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 
யோவான் 17:3



ஒரே உண்மைக்கடவுளே உள்ளார். அவரே பிதா எனும்போது, இயேசு  உண்மைக்கடவுள் அல்ல என்று தெளிவாகிறது. இது இயேசு நேரடியாக சொன்ன வார்த்தை!


பவுலடிகளார் கூட , தேவர்கள் என அநேகர் இருந்தாலும், நமக்கு பிதா எனும் ஒரே கடவுளே உள்ளார் என்கிறார். (1 கொரிந்தியர் 8:5-6)


பிதா ஒரே ஒரு உண்மை கடவுளாக இருக்க, இயேசு உண்மைக்கடவுளாக முடியாது
--------


2. இயேசு பிதாவிடமே (உண்மைக்கடவுளிடமே)  ஜெபம் செய்தார், பிரார்த்தித்தார்.




39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 
மத்தேயு 26:39



12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 
லூக்கா 6:12



இதன்மூலம் ஜெபம் செய்யப்படவேண்டியவர் பிதா ஒருவரே என வாழ்ந்து வழிகாட்டினார்.

-------

3. பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என ஜெபத்தை கற்பித்தார்:




1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 
லூக்கா 11:1

2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக, 
லூக்கா 11:2



இங்கே நாம் ஜெபிக்க வேண்டியது பிதாவாகிய உண்மை தேவனை நோக்கி தான் இருக்க வேண்டும் என இங்கே கற்பிக்கிறார். அவர் ஜெபித்து முடிந்த பின்பே , சீடர்களுக்கு கற்பித்தார்.

-----


4. உண்மையாக தொழுதுகொள்பவர்கள் பிதாவையே தொழுதுகொள்வார்கள்  என்றும் பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும் என்றும் கூறினார் கூறினார்:



23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 
யோவான் 4:23

24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 
யோவான் 4:24


இங்கே உண்மையான தொழுகையாளிகள் பிதாவை தான் தம் ஆவியோடு தொழுவார்கள் என்பதன்மூலம் பிதாவை தொழுதுகொள்வோரே உண்மையான தொழுகையாளிகள் என கூறுகிறார். அதன்மூலம் தான் தொழுகொள்ளப்பட கூடாது என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார் என பாருங்கள்

------;



5. பிதாவின் சித்தப்படி செய்வோரே பரலோகத்தில் நுழைவார்கள் என்றும் இயேசுவை நோக்கி வெறுமனே "கர்த்தாவே! கர்த்தாவே!" என கூறுவோர் நுழையமாட்டார்கள் என்றார்:



21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 
மத்தேயு 7:21

22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 
மத்தேயு 7:22

23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 
மத்தேயு 7:23



இங்கே பிதாவின் சித்தப்படி செய்யாமல் இயேசுவை கர்த்தாவே! கர்த்தாவே என அழைப்போரும், இயேசுவின் பெயரால் அற்புதம் செய்வோரும் அதில் நுழைவதில்லை என்கிறார்.



பிதாவின் சித்தம் என்ன??


1. பிதாவாகிய அவரை ஆவியுடன் உண்மையாக தொழ வேண்டும்.  (யோவான் 4:23)


2. பிதாவாகிய அவரை தவிர வேறு யாரையும் நமஸ்கரிக்கவோ தொழவோ கூடாது!


3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 
யாத்திராகமம் 20:3

4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 
யாத்திராகமம் 20:4

5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 
யாத்திராகமம் 20:5



இங்கே பிதா, வானத்திலுள்ளவர்களைப்போலவோ பூமியிலுள்ளவர்களை போலவோ யாரையுமே வணங்க வேண்டாம் என்கிறார்.

குறிப்பாக அவரை தவிர வேறு தேவர்கள் உண்டாயிருக்கவே கூடாது என்கிறார்.

இயேசு பிதா அல்ல என எல்லோருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது அவரை தேவனாக ஆக்கி அவரிடம் ஜெபம் செய்வது மிகப்பெரிய தவறாகும்.

அப்படி செய்தால் , அவர் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஏற்றவராக இருந்தாலும் அவர் பரலோகம் போக மாட்டார் என்றே இயேசு சொல்கிறார்.



அப்படியிருக்க அவரை கடவுளாக தொழுதுகொண்டு நரகம் போகவேண்டுமா?????

------

6. இயேசு தன்னை தேவ குமாரன் என சொன்னதன் அர்த்தம்கூட, தன்னை தேவன் அனுப்பினார் என்பதாலும் அவருக்கு அடிபணிந்து இருக்கிறார் என்பதாலும் தான் என அவரே விளக்கமளிக்கறார்!


34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 
யோவான் 10:34

35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 
யோவான் 10:35

36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 
யோவான் 10:36



தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் தேவர்கள் அல்ல..

அதேபோன்றே நானும் என்னை தேவ குமாரன் என்கிறேன். காரணம் தேவன் என்னை பெற்றெடுத்தார் என்பதல்ல.. மாறாக அவர் என்னை அனுப்பினார், பரிசுத்தப்படுத்தினார் என்பதால் தான் என்று கூறி யூதர்களை வாயடைக்க வைத்தார்...

-----

7. ஒரு யூதர் இயேசுவை நல்ல போதகர் என்கிறார். அப்போது இயேசு, "என்னை ஏன் நல்லவன் என்கிறாய்? தேவன் ஒருவரை தவிர நல்லவர் இல்லையே" என கூறி தனக்கு தெய்வீகமெல்லாம் இல்லை என தெளிவாகவே கூறிவிட்டார்:



17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 
மாற்கு 10:17

18 அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 
மாற்கு 10:18

19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக,உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். 
மாற்கு 10:19




இப்படியிருக்க அவரை வணங்கினால் நிச்சயம் நரகம் போகவேண்டும்!! (அதையே இயேசு மத்தேயு 7:21ல் சொன்னார் மேலே பார்க்கவும்).



எனவே நரகத்தில் வீழ்ந்துவிடாதிருக்க இயேசுவை கடவுளாக வணங்குவதை விட்டு விலகியிருங்கள்!!




இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்,

*நிச்சயமாக அல்லாஹ் தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். எனவே அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழி ஆகும் (என ஈசா கூறினார்.)"
(3:51)



"நிச்சயமாக அல்லாஹ் தான் மர்யமின் குமாரன் மஸீஹ் என கூறியோர் நிராகரித்துவிட்டனர்.  இன்னும் மஸீஹோ , " இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்றுகூறினார். " 
(5:72)


--------------

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்