மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?
மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல!! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மத்தேயுவின்படி இயேசு கடவுள் அல்ல மாற்குவின்படி இயேசு ஒரு சாதாரண நல்ல மனிதர். இவரை தேவன் தனது பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு பூமியில் சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்.. இயேசுவை மாற்குவின்படி கடவுளாக காட்ட கிறிஸ்தவர்களால் ஒருபோதும் இயலாது!! (மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல என ஏற்கனவே எழுதியிருந்தேன்.) 1.இயேசு தேவனுடைய குமாரனாம்! குமாரன் என்றாலே தேவனுக்கு பின்னால் தோன்றியவர். சோ கடவுளல்ல. ¹ தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1) தேவனுக்கு பல குமாரர்கள் உண்டென பைபிள் சொல்கிறது. இஸ்ரேல் தேவனுடைய குமாரன்-யாத்தி 4:22, ஓசியா 11:2 சொலமோன் தேவனுடைய குமாரன்- 2 சாமுவேல் 7:14-16 இயேசு தேவனால் அனுப்பப்பட்டதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என்றார் என இயேசு சொன்னதாக யோவான் 10:34-36 கூறுகிறது. 2.இ...