ஆதியாகமம் தொடர்-5
ஆதியாகமம் தொடர்-5 தொடர்4 இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 14.தேவன் பறவைகளை எதனால் படைத்தார்? எப்போது படைத்தார்?-முரண்பாடு 15.ஆடையின்றி நிர்வாணமாக இருந்த மனிதன் 16.ஏதேன் தொட்ட வாழ்க்கை தற்காலிக பயிற்சியே 17.பாம்பு சொன்னது உண்மையானதாம். தேவன் சொன்னது பொய்யானதாம் 18.பெண்ணின் வித்தும் கிறிஸ்தவமும் 14.தேவன் பறவைகளை மண்ணினால் படைத்தாரா தண்ணீர் உண்டாக்கியதா? பறவைகளும் மிருகங்களும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டனவா? மனிதனுக்கு பின்பு படைக்கப்பட்டனவா? “"தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி , ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று."” — ஆதி 2:19 (TBSI) ஆனால் பறவைகள் தண்ணீர் மூலமாகவும், மிருகங்கள் தான் மண் மூலமாகவும் படைக்கப்பட்டதாக முதலாம் அதிகாரம் சொல்கிறது. ²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ...