இடுகைகள்

நவம்பர் 26, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 1 (ஆதி-யாத்தி)

படம்
 *பைபிள் தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது* 1.ஆதியாகமம் - யாத்திராகமம் 1.எதிர்கால அறிவு இல்லாதவர் - மனிதன் கொடுமை செய்தபோது அவனை படைத்ததற்காக மனஸ்தாபப் பட்டார்- ஆதி 6:5-7 2.சாதாரண இயற்கை அறிவும் இல்லாதவர்- வானவில்லை குறித்து அதை நோவா காலத்தில் அடையாளமாக தன் வில்லை மேகத்தில் வைத்தேன் என்றும் மேகத்தை பூமிக்கு மேலால் கொண்டுவருகையில் அது தெரியும் என்கிறார் - ஆதி 9:13-14 ஆனால் உண்மையில் அது வில் கிடையாது.. ஒளி முறிவினால் உண்டாவதாகும். அதன் வடிவமும் முழு வட்ட வடிவம் ஆகும். 3.அவர் மனிதன் நன்மை தீமை அறிவதை விரும்பாதவர். நன்மை தீமை அறிந்ததால் அவனை நிலையாக வாழ விட கூடாது என நினைப்பவர்- ஆதி 3:22-24 4.பொறுப்பு இல்லாதவர். ஆதாமைஏதேனில் விட்டு பொல்லாத பேசும் பாம்பையும் உள்ளே விட்டவர்.(ஆதி 3:1)  அந்த பாம்பினால் தான் இயேசு சாக வேண்டி வந்தது. அதாவது இயேசுவை சாவடிப்பதற்காகவே ஆதாமோடு பாம்பை அனுப்பி திட்டம் போட்டுள்ளார் என தெரிகிறது 5.மிருகத்துக்கும் மனிதனுக்கும் பகைமையை உண்டாக்குபவர். பேசும் பாம்பு ஏவாளை வஞ்சித்ததற்காக ஏவாளுக்கும் பாம்புக்கும் ஏவாளது வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் பகையை மூட்டினார...