வியாழன், 28 ஆகஸ்ட், 2025
புதன், 4 மே, 2016
முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ? 1
ஏக இறைவனின் திருப்பெயரால்..!
படைப்புகள் அனைத்தையும் செவ்வையாய் படைத்து பரிபாலித்து போற்றக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்❕
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக❕
பலதாரமணம் செய்வது தவறு,பாவம்
முஹம்மது நபியவர்கள் பலதாரமணம் செய்தார்கள் எனவே அவர் கள்ளத்தீர்க்கதரிசி என அநேக கிறிஸ்தவர்கள் கூற கேட்டுள்ளேன்
அன்பிற்குரியவர்களே!
உங்கள் பைபிள் அப்படி போதிக்கிறதா ?
எது பாவம் ❔
4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4
17 அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5 :17
• பாவம் என்பது தேவன் விதித்த கட்டளைகளை மாம்ச ரீதியாகவோ ஆத்ம ரீதியாகவோ மீறுவதாகும்
∆ 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது,
→ நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.←
ரோமர் 5 :13
↑→ ஒன்றை குறித்த சட்டம் இல்லையேல் அது பாவமாக எடுத்துக்கொள்ளப்படாது.
√ பலதாரமணத்தை தேவன் தடை செய்ததாய் அல்லது பாவம் என குறிப்பிட்டதாய் சட்டமோ வசனமோ பைபிளில் உண்டா ⁉
அவ்வாறில்லாத பட்சத்தில் எதனடிப்படையினில் அதனை விமர்சிக்கிறீர்கள்❓ குற்றமென்கிறீர்கள்❓
16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3 :16-17
இப்படி மனிதனுக்கு தேவையான அனைத்தும் அருளப்பட்ட தேவ ஆவியினால் வழங்கப்பட்ட வசனங்களை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ !?
இன்னும் பலதாரமணம் தவறு அப்படி செய்பவர் கள்ளத்தீர்க்கதரிசி⁉ அவரால் வரும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்களேயானால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவர்களின் வெளிப்பாடுகள் அவர்களால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என அனைத்தையும் நிராகரித்து விட்டு முஹம்மது நபியவர்களை விமர்சிக்க வாருங்கள்..!
பலதாரமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் கீழ்காணும் வசனங்கள்
பழைய ஏற்பாடு
உபாகமம் 21 : 15 , 15: 17
எண்ணாகமம் 31 : 18, 46
2 சாமுவேல் 12 : 8
1 ராஜாக்கள் 15: 5
நியாயபிரமாணத்தில் உள்ள சட்டங்கள் சரி என்று புதிய ஏற்பாட்டில் பார்க்க:
மத்தேயு 5:17
மத்தேயு 22 : 24 - 26
ரோமர் 7: 12, 16
காலாத்தியர் 3: 21 , 5: 3 , 4 .
முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ?
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ !
✴#முஹம்மது நபியவர்கள் கள்ளத்தீர்க்கதரிசியா❕❔❔
பகுதி - 2⃣
அல்குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதி அளிக்கிறது.மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் எப்படி இறைவனாவார் ?
இந்த வெளிப்பாட்டை கொண்டு வந்தவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்க முடியும் ?
என்ற மாபெரும் அறிவுப்பூர்வமான கேள்வியை முன் வைத்து ஈசாகுரான் போன்ற இனையமேதைகள் முஹம்மது நபியவர்கள் நபி கிடையாது என கூறி வருகின்றனர்.😜😄😂
என்னவென்று சொல்ல இவர்களின் அறியாமையை ❕
° மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி என பைபிலில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா ❔
• பைபிலில் இச்செயலை தேவனோ இயேசுவோ கண்டித்ததாக ஏதேனும் ஒரு வசனமாகிலும் உண்டா ❔
இல்லை, அவ்வாறிருக்க இதன் அடிப்படையில் ஒருவர் கள்ளத்தீர்க்கதரிசி என எங்கனம் தீர்ப்பு கொடுக்கின்றீர்கள் ❔
தேவனை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ ❔
மேலும் வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
2 தீமோத்தேயு 3 :16
• மனிதன் எல்லா நல்ல காரியங்களும் செய்யும்படியாகவும் வேத வசனங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டு விட்டது என பைபில் கூறுகிறது.அவ்வாறிருக்க ஒரு தீர்க்கதரிசியை நல்லவரா கள்ளரா என சொல்ல தேவ ஆவி மறந்து விட்டது என்கிறீர்களா ❔
ஆம் என்றுவிடாதீர் கிறிஸ்தவர்களே ஆவிக்கெதிரான தூஷனம் மன்னிக்கப்படாது.(லூக்கா 12:10)
சரி இவர்கள் வாதத்திற்கு இஸ்லாமிய நிலைபாட்டை பார்க்கும் முன் பைபில் நிலைபாட்டை பார்க்கலாம்😉
-- உன் ஆசை புருசனை பற்றியிருக்கும்.அவன் உன்னை ஆண்டு கொள்வான். ஆதி 3:16
∆ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
(எபேசியர் 5:22-23 )
பைபில் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யவே,மகிமைபடுத்தவே படைக்கப்பட்டனர் என்கிறது.
( 1 கொரிந்தியர் 11:6-7 )
மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுத்தால்...?
அவள் பொல்லாதவள் தானே!
அவர்களை குறித்து பைபில் காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் #அடிகளும், பொல்லாதவனை #அழுக்கறத்_துடைக்கும்.
நீதிமொழிகள் 20 :30
மனைவி கொஞ்சம் சண்டைக்காரியா இருந்தா அவள் விட வீட்டின் ஒரு மூலை சிறந்தது என்கிறார் தேவ ஆவி
24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதிமொழிகள் 25 :24
அடப்பாவி 😀
இதாச்சும் பரவாயில்லை வீட்டு மூலை கூட வேணா காட்டுக்கு போனு சொல்றார் நீதிமொழிகள் 21:19
கொஞ்சம் டீப்பா போவோமா ❔
மனைவியை அடிப்பது குறித்து பைபில்:-
• மனைவி ஒருவேளை வேறு தேவனை சேவித்தால் அவளை கல்லால் அடித்து கொள்ளலாம்.
உபாகமம் 17:2-7;யாத் 22:20
• விபச்சாரத்தினிமித்தம் மனைவியை அடித்து கொள்ளலாம்.
உபா 22:22
மனைவியின் கையை கூட வெட்டலாம் அடுத்தவரின் ****யை கணவனை காப்பாற்ற பிடித்தால் உபா 25:11-12
➰முடிவுரை➰
• மனைவியை அடிக்க அனுமதி அளிப்பது தவரென பைபிலில் எங்கும் இல்லை
• அடிக்கலாம் கொல்லலாம் என பைபில் அனுமதி அளிக்கிறது
• அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி எனில் அந்தோ பரிதாபம் தேவ ஆவி கள்ளத்தீர்க்கதரிசி❕
7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 :7
இப்படி பைபில் சொல்ல அதற்கு மாற்றமாய் பிரசங்கிக்கும் ஊழியர்களே
மல்லாக்கப்படுத்து எச்சிலை துப்பினால் மூஞ்சியில் விழும் எனக்கூறி இப்பதிவு முடிக்கிறேன்..!
வியாழன், 10 மார்ச், 2016
கிறிஸ்தவம் விதியை மறுக்கிறதா ?
சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
அவனது சாந்தியும் சமாதானமும் நேர்வழியை பின்பற்றி வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ்வுக்கே புகழனைத்தையும் உரித்தாக்கியவனாய் !
இஸ்லாமிய மார்க்கத்தை ஏளனம் செய்வதாக எண்ணிக் கொண்டு இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் தாங்கள் நம்புகின்ற நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களையே மறந்தும் மறுத்தும் கேள்வியெழுப்பி வருகின்றனர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் #விதி !
விதியை குறித்து பைபிளினில் எந்த வசனமும் இல்லை !
விதியை குறித்து கிறிஸ்தவம் போதிக்கவில்லை !
இயேசு அதனை குறித்து எதனையும் சொல்லவேயில்லை !
எனவே விதி என்ற ஒன்று இல்லை என மறுதலிக்கும் கிறிஸ்தவர்களே !
உண்மையில் நீங்கள் மறுதலிப்பது கிறிஸ்தவத்தின் அடிப்படையை தான்!
உதாரணமாக சில வசனங்களை பார்க்கலாம்
• குழந்தை கருவுற்றது முதல் அதன் வளர் நிலைகள் என எல்லாமே தேவனால் முன்னமே எழுதப்பட்டிருக்கிறது.
16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது, என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. சங்கீதம் 139 :16
• எது நடந்தாலும் அதில் தேவனின் சித்தம் இல்லாமலில்லை!
பறவை வானில் பறப்பது உட்பட⁉
29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. மத்தேயு 10 :29
• தீர்சனங்களும், தீர்க்கதரிசிகளும் கூட எழுதப்பட்டபடியே நடக்கிறார்கள்
7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். எபிரேயர் 10 :7
அவ்வளவு ஏன் விதி உண்டு என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையான சிலுவைபலியே !
ஆம்
தான் கொலை செய்யப்பட வேண்டியது விதி என இயேசு போதித்தார் !
21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். மத்தேயு 16 :21
தீர்மானிக்கப்பட்ட(#விதிப்)படியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். லூக்கா 22 :22
இதைவிட மறுக்கவியலாத வசனம் ஏது ?
• விதிக்கப்பட்ட யாவையும் நிச்சயமாக நடக்கும் என இயேசு கூறுகிறார்
7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள், இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. மாற்கு 13 :7
இதே கருத்து மத்தேயு 24:6லும் சொல்லப்படுகிறது.
தம்முடைய விதியின்படி தாம் செல்லவேண்டிய நேரம் குறித்து இயேசு அறிந்திருந்தார்
1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். யோவான் 13 :1
• இரட்சிப்பு கூட தேவனின் சித்த்ப்படியே முன்னமே குறிக்கப்பட்டது தானே தவிர கிரியைகலினாலே அல்ல!
9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை #இரட்சியாமல், #தம்முடைய_தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 2 தீமோத்தேயு 1 :9
இரட்சிப்பும் முன்னமே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கே !
12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய #தீர்மானத்தின்படியே, நாங்கள் #முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி #தெரிந்துகொள்ளப்பட்டோம். எபேசியர் 1 :12
தேவனின் சித்தப்படி, தேவனால், தேவன் முன் குறித்தபடியே முன்குறித்தவர்களுக்கே இரட்சிப்பு !
இதனை மனதிற்கொண்டு தான் இயேசு இவ்வாறான பிரார்த்தனையை செய்கிறார்
39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். மத்தேயு 26 :39
பைபிளின் கூற்றுப்படி தான் மரணிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்ததாக சில வசனங்கள் இருப்பினும் அதனை சித்தமானால் தன் விதியை மாற்றுமாறு பிரார்த்தனை செய்கிறார்(ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது வேறு)
ஆக விதியை குறித்து நீங்கள் என்னவெல்லாம் கேள்வி எழுப்புவீர்களோ அவையனைத்தும் நீங்களும் நம்பிக்கை கொள்ள வேண்டியவையே !
இன்ஷா அல்லாஹ்..!
ஆய்வுகள் இனியும் தொடரும்..!
சனி, 12 டிசம்பர், 2015
பைபிளின் வழமை போன்ற கணித பிழை
பைபிளின் வழமை போன்ற கணித பிழை
கணித பிழை இலக்கம் 1
1.இஸ்ரவேலர் 400 வருடம் அடிமையாக இருப்பார்கள
ஆதியாகமம் 15
13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானு}று வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.
மேலும், அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:6
2. இஸ்ரவேலர் 430 வருடம் எகுப்திலே தங்கியிருந்தார்கள்.
யாத்திராகமம் 12
40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானு}ற்றுமுப்பது வருஷம்.
இந்த இரண்டிலிருந்தும் வரக்கூடிய முடிவு: இஸ்ரவேலர் 30 வருடம் மட்டுமே , எகிப்தில் சுதந்திரமாக இருந்துள்ளனர்.
3.மோசே 120 வயதில் செத்தார்.
(உபாகமம் 34)
இஸ்ரவேலர் 40 வருடம் அழைந்து திரிந்தனர்.
அப்போதும் மோசே உயிரோடிருந்தான்.
உபாகமம் 2:7
மோசே பார்வோனுடன் பேசியபோது அவனுக்கு 80 வயது.
(யாத்திராகமம் 7:7)
எனவே, மோசேயின் 80வது வயதுவரை மட்டுமே எகிபதில் அடிமையாக தங்கியிருந்தனர்.
எனவே, மோசே பிறக்க முன்பு 400-80=320 வருடங்கள் அடிமையாக இருந்துள்ளனர்.
---
பிரச்சனை:
யாக்கோபு தன் 130வது வயதில் எகிபதுக்கு போனார். அவருடன் 66 பேர் போனார்கள்.
அதில் லேவியும், அவனது மகன் கோகாதும் அடங்கும்.
ஆதி 47;9 46:11
யோசேப்பு 110 வருடம் வாழ்ந்தார்.
ஆதி 50:22&26
இஸ்ரவேலர் அடக்கி ஒடுக்கப்பட்டது, யோசேப்பும் அவனது தலைமுறையும் அழிந்த பின்னாலேயே..
யாத்தி 1
எனவே, அப்போது கோகாத் பெரிய கிழவனாக/ இறந்து இருப்பான்.
*கோகாதின் குமாரன் , அம்ராம். இந்த கோகாத் 133 இல் செத்தார்.
யாத்தி 6:18
*அம்ராமின் குமாரன் மோசே. இந்த அம்ராம் 137 வருடம் வாழ்ந்தான்.
யாத்தி 6:20
ஒரு பேச்சுக்கு, கோகாத் பிறந்ததிலிருந்து எகிப்தில் அடிமையாக இருந்ததாக கருதுவோம்.
அவன் 133 இல் சைத்த படியால், அதிகபட்சமாக அம்ராமை 132வது வயதில் பெற்றதாக கருதுவோம்.
இந்த அம்ராம் 137 இல் செத்தான். ஒரு பேச்சுக்கு அதிக பட்சமாக மோசேயை 136 இல் பெற்றதாக கருதுவோம்.
மோசே 80வது வயதில் எகிப்திலிருந்து புறப்பட்டான்.
எனவே, அதிகபட்சமாக எகிப்தில் அடிமையாக தங்கியிருக்க வாய்ப்பு=
132+136+80=348 வருடங்கள.
மிகுதி 52 வருடங்கள் எங்கே போனது??
இது அதிக பட்சம். இதைவிட மிக குறைவாகவே உண்மை காலம் வர போகிறது.
எனவே, கர்த்தரின் தீர்க்கதரிசனமும் பொய்யாகிறது. யாத்திராகமம் 12:40 உம் பொய்யாகிறது!!
பைபிளே சந்தேகத்திற்குரியதாகிறது!!
******
கணித பிழை இலக்கம் 2
1.இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட 480வது ஆண்டில், சொலமோன் ராஜாவாகி 4வது ஆண்டு.
(1 இராஜாக்கள் 6:1)
எனவே, சொலமோன் ராஜாவனது, எகிபதிலிருந்து புறப்பட்ட 476வது ஆண்டு.
2. 2.இஸ்ரவேலர. எகிப்திலிருந்து புறப்பட்ட பின் 40 வருடம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர்.
(யாத்திராகமம் 16:35 எண்ணாகமம் 14:33-34 32:13 உபாகமம் 2:7 8:4 29:5 யோசுவா 5:6)
450 வருடங்கள் நியாயாதிபதிகள் சாமுவேல் வரை.
( அப்போஸ்தலர் நடபடிகள் 13:19-20)
மொத்தம் 490.
சவுல் 40 வருடம் ஆட்சி.
(அப்போஸ்தலர் நடபடிகள் 13:21)
மொத்தம் 530
தாவீது 40 வருடம் ஆட்சி.
(1 நாளாகமம் 29:27)
மொத்தம் 570.
இதன்படி, சொலமோன் ராஜாவானது இஸர்வேலர் எகிப்திலிருந்து புறப்பட்டு 570 வது ஆண்டு..
570-476= 94 வருட இடைவெளி உள்ளது.. பைபிளுக்கு கணிதம் தெரியாது.
ஏன் இப்படி??
----
கணித பிழை இலக்கம் 3
1. தேராகு , ஆபரஹாமை 70வது வயதில் பெற்றார்.
(ஆதி 11:26)
2. ஆப்ரஹாம் ஆரானிலிருந்து, கானானுக்கு போனபோது 75 வயதாக இருந்தார்.
(ஆதி 12:4-5)
எனவே, அப்போது அவரது தந்தைக்கு வயது 70+75=145
3. ஆப்ரஹாமுடைய தந்தை மரணித்த பின்பு, அவர் ஆரானிலிருந்து கானானுக்கு வந்தார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:4
இதன்படி, தேராகு 70+75=145 வயதில் மரணித்திருக்கிறார்.
ஆனால், பைபிளோ 205 வயதில் மரணித்தார் என்று தவறாக சொல்கிறது
(ஆதி 11:32)
60 வருடத்தை பைபிள் கூட்டி சொல்கிறது!!
கணிதம் தெரியாட்டி, ஏன் கணித்து சொல்ல முற்படணும்?? வாய மூடிட்டு கெடக்க வேண்டியது தானே??
****
கணிதப்பிழை இலக்கம் 4
1. எஸ்றா 2 இலுள்ள ஜனங்களை கூட்டி சொல்லும் போது,
எஸ்றா 2:64 இல், அவர்கள் 42360 என்கிறது.
ஆனால், அதிலுள்ளோரை கூட்டி பார்த்தால் 29,818 தான் வருகிறது.
2.இதே கதையை நெகேமியா 7:66 இல் கூட்டி சொல்லும் போது, 42,360 என்று சொல்கிறது.
அதிலுள்ளதை கூட்டி பார்த்தால், 31089 தான் வருகிறது.
பைபிளை எழுதினவரை, என்கிட்ட அனுப்புங்க.. கணக்கு சொல்லி கொடுக்கிறேன்.
மேலும், அந்த இரு அதிகாரங்களையும் படிதமால் 30+ முறண்பாடுகள் அங்கேயே வருகின்றன..
நம் பழைய பதிவுகளில் இதை அலசியுள்ளோம்.
******
கணித பிழை இலக்கம் 5
எஸ்றா 1:9-11 இல் கூறப்பட்டதை, கூட்டி சொல்லும்போது
30 + 1000 + 29 +30 + 410 + 1000= 5400
ஆனால் உண்மையில் அதை கூட்டினால் 2499 தான் வருகிறது.
*****
கணித பிழை இலக்கம் 6
யோசுவா 15:21-32 இல் 36 பட்டணங்களின் பெயர்களை கூறிவிட்டு, அவை 29 என்கிறது
***
கணித பிழை இலக்கம் 7
1. நோவா 500 வயதான போது, 3 பிள்ளைகளை பெற்றான்
ஆதியாகமம் 5
32 நோவா ஐந்நு}று வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
2.நோவாவின் 600 வது வயதில் ஜலபிரளயம் ஏற்பட்டது.
ஆதியாகமம் 7
6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநு}று வயதாயிருந்தான்.
எனவே, அப்போது, அவனது மகனாகிய சேமின் வயது 100 ஆக வேண்டும்.
ஆனால், ஜலப்பிரளயத்தின்கு 2 வருடங்களின் பின்பே, 100 வயதானதாம்.
ஆதியாகமம் 11
10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நு}றுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
100=102 ??
***
வியாழன், 26 நவம்பர், 2015
பைபிளை பார்த்து எழுதப்பட்டதா குர்ஆன்?
பல கிறிஸ்தவ சகோதரர்களும் இன்னும் பலரும் வேதாகமத்திலிருந்து தான் குர்ஆன் காப்பி அடிக்கபட்டது என்று கூறுகிறார்கள்.
இதன் உண்மை நிலை என்ன??
அலசுவோம்:
1.நபியவர்கள் வேதக்காரரிடம் இருந்து கேட்டு எழுதியிருக்க வாய்ப்பிருந்ததா?
* வரகா இப்ன் நவ்பல் என்பவரிடம் கேட்டிருந்து எழுதினாரா?
இதற்கு வாய்ப்பில்லை. அவர் இன்ஜீலை அரபியில் கூறி போதனை செய்து வந்திருந்தாலும், அவரை நபியவர்கள் இரண்டு முறை மாத்திரமே சந்தித்துள்ளார்கள்
1. நபியவர்களை கஃபாவில் வைத்து , சந்தித்து முத்தமிட்டார் வரகா.
2. நபியவர்களின் 40வது வயதில், முதல் வஹீ வந்தவுடன் வரகாவிடம் நபியவர்களை கதீஜா (ர) அழைத்து சென்றார்.
இதற்கு பின்பு அவர் நீண்ட நாள் வாழவில்லை மரணித்து போனார்.
எனவே, அவரிடமிருந்து எதையும் கற்றிருக்க வாய்ப்பில்லை .
*மக்காவுக்கு வெளியில் வாழ்ந்த கத்தோலிக்க கொள்ளரிடம் கற்றார்களா??
இதை நபியின் கால மக்களே குற்றச்சாட்டாக வைத்தனர்.
ஏனெனில், குர்ஆன் உயர் இலக்கிய நடையிலும், அவர்களால் குறை கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் இருந்ததால்,, படிப்பறிவற்ற முஹம்மதுவால் இதை கொண்டுவந்திருக்க முடியாது, இந்த நபர் தான் இரகசியமாக கற்றுகொடுக்கிறார் என்று குற்ற சாட்டை வைத்தார்கள்.
அதற்கு குர்ஆன் இவ்வாறு பதில் கூறுகிறது:
ٌ
103. "ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்'' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும்.142 இதுவோ தெளிவான அரபு489 மொழியாகும்.227
திருக்குர்ஆன் 16:103
அவர்கள் குறிப்பிட்ட மனிதரின் மொழியோ அரபியல்ல. நபியவர்களோ அரபி பண்டிதருமல்ல மாறாக எழுத்தறிவற்றவர். இவர்கள் கூறும் குற்றச்சாட்டு தவறு என்று. அவர்களுக்கே உணர்த்தியது.
மேலும் நபியின் நிலை பற்றி குர்ஆன் கூறும்போது:َ
48. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும்4 நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!152& 312 அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன் 29:48
மேலும், 7:157-158 62:2 இலும், நபியவர்களை " உம்மீ" என்று அழைக்கிறது.
"
உம்முன்" என்றால் தாய், உம்மீ என்றால் , தாயை சார்ந்தவர் அதாவது குழந்தை னு சொல்லலாம்.
எழுத படிக்க தெரியாதவர்களை இந்த வார்த்தை குறிக்கும்.
இவற்றின்படி, நபியவர்கள் படிப்பறிவற்றவர், அந்த வேதக்காரரோ அரபியல்லாதவர்
இவரிடமுருந்து கற்றாலும், உயர் இலக்கியத்தில் கூற முடியாது.
எனவே இந்த வாதம் தவறு.
மேலும் நபியவர்கள் மக்காவை விட்டு நான்கு தடவைகள் தான் வெளியே போயுள்ளார்கள்.
1. தன் 6 வது வயதில் தன் தாயுடன் மதீனாவுக்கு போனார். வரும் வழியில் தாய் "அப்வா" என்ற இடத்தில் மரணித்துவிட்டார்.
2.தன் 12 வது வயதில், தன் பெரிய தந்தை அபூ தாலிபுடன் சிரியாவுக்கு வியாபாரத்திற்காக சென்றார். அங்கு புஹைரா என்ற பாதிரியாரின் சொல்லிற்கிணங்க அவரை திருப்பி மக்காவுக்கே அனுப்பி விட்டார்கள்.
3. தன் 25 வது வயதில் கதீஜா (ர) அவர்களின் வியாபார பொருட்களை எடுத்துக்கொண்டு, சிரியாவுக்கு சென்றார்.
4.நபியானதன் பின்பு, ஹிஜ்ரத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு, தாயிபுக்கு பிரச்சாரத்திற்காக போனார். அங்கே அவர்களை சிறுவர்களை வைத்து கல்லால் அடித்தார்கள்.
அந்த நபர்களை அவர்கள் மன்னித்ததுடன், அவர்களின் நேர்வழிக்காக பிரார்த்தனை செய்தார்கள்
குறிப்பு: நம் வேதாகம தீர்க்க தரிசியை , "மொட்டை தலையா" என்று சிறுவர்கள் சொன்னதற்காக, கர்த்தர் 42 சிறுவர்களை கரடியை அனுப்பி கொலை பண்ணினார்.
(11 ராஜாக்கள் 2:23-24)
இத்தனை தடவைகள் தான் மக்காவிலிருந்தே வெளியில் போயிருக்கும் நிலையில், வெளியூர் வேத காரர்களிடம் கற்றார் என்ற வாதம் அபத்தமானது.
*ஹிஜ்ரத்திற்கு பின்பு, வேதகாரர்களிடம் மதீனாவில் கற்றார்களா??
மதீனாவில் வைத்து தான் அதிக யூத கிறுச்தவர்களை நபி சந்தித்தார். முதல் 13 வருடங்கள் மக்காவில் வாழ்ந்த நபியவர்கள், ஊரார் விரட்டிய போது கவலையுடன் மக்காவிலிருந்து வெளியேறினார்.
கடைசி 10-11 வருடங்கள் மதீனாவில் தான் வாழ்ந்தார்கள்.
அதை வைத்து சிலர், வேதாகமத்திலிருந்து நபியவர்களுக்கு காப்பி அடிக்க வாய்ப்பு இருந்தது என்று வாதம் வைக்கிறார்கள்.
இஸ்லாத்தை ஏற்ற யூத ரப்பிகளாக முக்கியமாக 1.அப்துல்லாஹ் இபன் ஸலாம்.
2.ஸைத் இப்ன் ஸாபித்.
3.க அ ப் இப் ன் அஹ்பர.
கிறிஸதவராக, , சல்மான் அல் ஃபாரிஸீ ஆகிய நபித்தோழர்கள் இருந்தனர்.
சல்மான் (ர) அவர்களை பற்றி நான் தேடிப்பார்த்தவரைக்கும், இன்ஜீலை படித்தவர் என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. அவர் பாதிரியார்களுடன் இருந்ததாகவும், கடைசியாக ஒரு பாதிரியார் மதீனாவாவை சுட்டிக்காட்டி இங்கே தூதர் வருவார் என்றும் அவருடன் போய் சேர்ந்து கொள் என்றும் கூறினார்.
அவரை அங்கிருந்து மதீனாவுக்கு அழைத்துவர சில வியாபாரிகளுடன் சல்மான் பேசினார். அவர்கள் அவரை மதீனாவில் அடிமையாக விற்பனை செய்துவிட்டார்கள். பின்பு மதீனாவுக்கு நபி வந்த போது அவர் இஸ்லாத்தை ஏற்றார்.
ஏனையவர்கள் மதீனாவில், நபியை சோதித்து பார்த்தே இஸ்லாத்தை ஏற்றார்கள்.
மேலும், நபியவர்கள் யூதர்கள் எதை தவ்றாத் என்று போதனை செய்தார்களோ, அவற்றை முழுமையாக ஏற்கவும் வேண்டாம், முழுமையாக மறுத்துவிடவும் வேண்டாம். அவர்களிடம் உங்களுக்கு இறக்கியதை நம்புகிறோம் என்றே கூறுங்கள் என்று சொல்பவர்களாக இருந்தனர்.
(பார்க்க புஹாரி)
முந்தைய வேதங்களை படிப்பதை குர்ஆன் கண்டிக்கிறது.
(28:51)
இது தவ்றாத்தை படிக்கும் நபித்தோழர்கள் விசயத்தில் தான் இறங்கியது.
மேலும், நபியவர்கள் முன்னிலையில் சில வசனங்களை தவ்றாத்திலிருப்பதாக கூறிய போது, மூஸா உயிருடன் இருந்தாலும் அவர் என்னையே பின்பற்றி ஆகவேண்டும் என்று கூறியதோடு கோபப்பட்டார்கள்.
இப்படி இருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து தவ்றாத்தை காப்பி அடிப்பார்கள் என்ற வாதம் அபத்தமானதே.
மேலும் மதீனாவில் வரலாறுகளை மட்டுமே குர்ஆன் கூறவில்லை. 80% இற்கும் அதிகமான சட்டம் பற்றிய வசனங்கள் மதீனாவில் தான் இறக்கபட்டது.
பல முன்னறிவிப்பு பற்றிய வசனங்கள் மதீனாவில் தான் இறக்கபட்டது.
எனவே தவ்றாத்திலிருந்து எதுவும் காப்பி அடித்திருக்க வாய்ப்பில்லை.
சில வரலாறுகள், கடவுள் கொள்கையில் ஒற்றுமை இருப்பதை வைத்து காப்பி அடித்தார் என்று வாதிடுவது அபத்தமானது.
ஒரே இறைவனே source ஆக இருப்பதாலும், உண்மையில் நடந்த சம்பவங்களை கூறும்போதும் இந்த ஒற்றுமை ஏற்படுவது சாத்தியமே.
தவ்றாத் ஒரு இறைவன் என்று சொல்வதால், அதற்கு மாற்றமாக தான் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது கிறிஸ்தவர்களுக்கே சொந்தமான மடத்தனம்.
தவ்றாத்தில் சில வரலாறுகள் சொல்லபட்டிருப்பதால், அதற்கு நேர் மாற்றமான வரலாற்றை கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பைபிளின் நிலையை போன்ற கேடுகெட்ட நிலை ஆகும்.
எனவே ஒற்றுமை இருப்பதை வைத்து காப்பி என்று வாதிடுவதானால், யூதர்களின் புத்தகத்தை தான் கிறிச்தவர்கள் காப்பி அடித்தார்கள் என்று ஒப்பு கொள்ள வேண்டும்.
எனவே இந்த வாதங்கள் அபத்தமானவை என்பதால், அடுத்த கட்டத்திற்கு நகருவோம்:
--------------------------------------------------------
2. வேத காமத்தில் இல்லாத, குர்ஆனில் மட்டும் கூறப்படும் விசயங்கள்.(சட்ட தீர்ப்புகள், அறிவியல் சம்பந்தபட்ட விசயங்கள் தவிர்க்க படுகின்றன.)
-----
தற்போது இருக்கும் வேதகாமமானது, தவ்றாத்துமல்ல, இன்ஜீலுமல்ல என்பதே நம் நிலைப்பாடு. இதற்கு வேதகாமத்திலிருந்தே இவற்றை விளக்கி கட்டுரை எழுதியுள்ளோம். அவற்றை பார்த்துகொள்ளவும்.
இப்போது இருக்கும் வேதகாம பழைய ஏற்பாடு கி.பி. 9-10 நூற்றாண்டிலும், புதிய ஏற்பாடு கி.பி 16 நூற்றாண்டிலும் தான் அரபியிற்கு மொழியாக்கம் செய்யபட்டது என்பதையும் ஞாபகத்தில் வைத்து கொள்ளவும்!!
1. குர்ஆன், ஹூத் என்ற இறைத்தூதர் பற்றியும், அவரது கூட்டமாகி ய"ஆது" பற்றியும் கூறுகிறது.
(7:65-72 11:50-60 23:32-41 26:123-139 இன்னும் பல வசனங்கள்)
இவர்கள் வாழ்ந்த இடம் சஊதி அரேபியாவில் உள்ள ஒரு பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்க பட்டது.
ஆனால், இவரை பற்றியோ, இவரது கூட்டத்தை பற்றியோ வேதகாமத்தில் எங்கும் இல்லை.
ஆனால் தேவையில்லாத திட்டுதலை வேதகாமம் கூற தவறவில்லை
உதாரணமாக ஏசாயா 47:1-3 இல், சில ஊர்களை பெண்ணாக உருவகித்து, அவர்களுக்கு பாவாடையை தூக்கி கொண்டு, அம்மண தொடையுடன் ஓடு என்று சொல்கிறார்!!!
***
2.குர்ஆன் , ஸாலிஹ் என்ற இறைத்தூதர் பற்றியும், அவரது கூட்டமாகிய "ஸமூது" கூட்டம் பற்றியும் கூறுகிறது.
(7:73-79 11:61-68 15:80-84 17:59 26:141-158 இன்னும் பல வசனங்கள்.)
இவர்கள் வாழ்ந்த பகுதி, மதாயின் ஸாலிஹ் என்ற பெயரில் சஊதியில் உள்ளது. அவர்கள் மலையை குடைந்து வாழ்ந்த இடங்கள் சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது.
இவர்கள் பற்றியும் வேதகாமம் கூறவில்லை.
இதற்கு பதிலாக, நாகூம் 3:4-5 இல், நினிவே என்ற ஊரை வேசியாக உருவகித்து, அவளுடைய பாவாடையை முகம் வரை உயர்த்தி மர்மஸ்தானத்தை காட்டுவாராம் கர்த்தர்.
இது கர்த்தருக்கு மர்மஸ்தானத்திலுள்ள ஆர்வத்தை உணர்த்துவது போல உள்ளது. இதே போன்று Jeremiah எரேமியா 13:26 இலும் உள்ளது.
***
3.லுக்மான் என்ற அறிஞர் பற்றியும், அவர் தன் மகனுக்கு செய்த அற்புத போதனை பற்றியும் குர்ஆன் கூறுகிறது.
(31:12-19)
ஆனால் வேதகாமம் இதை பற்றி கூறவில்லை.
மாறாக, Micah மிக 1:11 இல், சாப்பீர் என்ற ஊரில் வசிக்கும் பெண்களை அம்மணமாக ஓட சொல்ல மறக்கவில்லை.
***
4. நூஹ் நபி தன் சமூதாயத்திற்கு செய்த உபதேசங்களை பற்றியும், அன்றைய கால அவரது கூட்டம் அவருக்கு சொன்ன பதில்களையும், அவர்கள் வணங்கிவந்த சிலை கடவுள்களையும் குர்ஆன் குறிப்பிடுகிறது.
(71 அத்தியாயம் முழுவதும், 7:59-64 11:25-48 26:105-121 இன்னும் பல வசனங்கள் உள்ளன)
வேதகாமம் நோவா கதையில் இவை பற்றி இல்லை .
மாறாக, எருசலேமையும், சமாரியாவையும் வேசிகளாக உருவகித்து, அவர்களது முலைகள் அமுக்க பட்டதாக கூற மறக்கவில்லை.
Ezekiel எசேக்கியேல் 23:3)
***
5.சுஐப் என்ற இறைத்தூதர் பற்றியும், அவரது ஜனமாகிய மத்யன் ஊர்வாசிகள் (அஸ்ஹாபுல் ஐகாஹ்) பற்றி குர்ஆன் கூறுகிறது.
(7:85-93 11:84-95 26:176-189 இன்னும் பல வசனங்கள.)
வேதகாமம் வழமை போல் இவரை பற்றி கூறவில்லை.
ஆனால், எருசலேமை வேசியாக உருவகித்து, அந்த வேசியுடன் விபச்சாரம் செய்தவர்களின் ஆணுறுப்பு, கழுதையின் ஆணுறுப்பு போன்றது என்றும், இந்திரியம் குதிரையின் இந்திரியத்தை போன்றது என்று கூறவும் மறக்கவில்லை.
Ezekiel எசேக்கியேல் 23:20
***
6. லோத்தின் கூட்டம் ஓரின சேர்க்கையாளர்கள் என்றும், angels ஐ கற்பழிக்க பார்த்தையும் அழிக்கபட்டதையும் மட்டுமே வேதகாமம் கூறுகிறது.
ஆனால் குர்ஆன், லோத் அவர்களுக்கு செய்த போதனைகள் பற்றியும், அவர்கள் கூறிய பதில்கள் பற்றியும் மேலதிகமாக சொல்கிறது.
(7:80-84 26:160-171இன்னும்பல)
ஆனால், வேதகாமம் எருசலேமை பெண்ணாக உருவகித்து , அந்த லூசுப்பெண் தங்கத்தால் செயற்கை ஆணுறுப்பு செய்து சுய இன்பம் கண்டதாக கூறுவதற்கு மறக்கவில்லை.
Ezekiel எசேக்கியேல் 16:17
***
7. மனிதனை படைத்தபின் மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு மலக்குகளிடம் கூறய போது அவர்கள் செய்ததாகவும், ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸ் செய்யவில்லை என்றும் குர்ஆன் கூறுகிறது.
(2:31-35 7:11-22 15:28-33 இன்னும் பல)
ஆனால் வேதகாமம் இவற்றை கூறவில்லை
மாறாக, கர்த்தர் ஆணுறுப்பின் நுனித்தோலை கேட்டு பூமிக்கு வந்ததையும், சிப்போரா என்ற மோசேயின் மனைவி கர்த்தரை my bloody husband என்று சொன்னதும் போய்விட்டதாகவும் கூற மறக்கவில்லை.
(Exodus யாத்திராகமம் 4:24-26)
***
8.குகையில் தங்கிய வாளிபர்களின் வரலாற்றை குர்ஆன் கூறுகிறது. இவர்கள் விட்டு சென்றதாக நம்பப்படும் சுருள்கள் 1947 உல் ஒரு இடையனால் கண்டுபிடிக்கபட்டது.
(18:9-22)
ஆனால வேதகாமம் இதையும் கூறவில்லை.
மாறாக, அப்பனோடு விபச்சாரம் செய்த மகள்மாரின் வரலாற்றை கூறி உங்களை மூட் ஆக்க மறக்கவில்லை.
Genesis ஆதியாகமம் 19:30-36
***
9. மூஸா நபி, ஹிழ்ர் என்ற இறைத்தூதரிடம் கற்க சென்ற போது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை குர்ஆன் கூறுகிறது.
(18:60-82)
ஆனால் வேதகாமம் இதையும் கூற வில்லை.
மாறாக, காதலனின் ஆணுறுப்பை வாயில் போடுவதை கூற மறக்கவில்லை.
Song of Solomon உன்னதபாட்டு or இனிமை மிகு பாடல்கள் 2:3
**"
10. துல்கர்னைன் என்ற பெரும் மன்னனை பற்றி குர்ஆன் கூறுகிறது.
,(18:83-98)
இவரை பற்றியும் வேதகாமம் கூறவில்லை.
மாறாக, காதலியின் நாக்கிற்கு அடியில் தேனும்,பாலும் உற்பத்தியாகிறது என்று கூற மறக்கவில்லை.
Song of Solomon உன்னதபாட்டு 4:11
***
11.தாவூத் நபிக்கு பறவைகளையும்,மலைகளையும் வசப்படுத்தி கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது, மேலும் கவச ஆடைகள் செய்ய கற்றுகொடுக்கபட்டதாக கூறுகிறது.
(21:79-80 இன்னும் சில)
இது பற்றியும் வேதகாமம் கூறவில்லை .
ஆனால் காதலியின் முலைகள் திராட்சை குலைகள் என்று கூறுவதற்கு மறக்கவில்லை.
Song of Solomon 7:7,8
***
12.பிர்அவ்னின் அரச மாளிகையில் ஒரு விசுவாசத்தை மறைத்து வாழ்ந்த ஒரு நபர் இருந்ததாகவும், அவர் மூஸா விசயத்திலும் நல்ல விசயங்களிலும் பிர்அவ்னுக்கு உபதேசம் செய்ததாகவும் குர்ஆன் கூறுகிறது.
(40:28-32)
இதுபற்றியும் வேதகாமத்தில் இல்லை .
ஆனால், சகோதரியை கற்பழித்த கதையை படிமுறையாக வேதகாமம் நமக்கு கூறுகிறது.
2 Samuel 13:1-15
****
13. ஒரே சமூதாயத்திடம் 3 தூதர்கள் அனுப்ப பட்டதாகவும், அவர்களை அவர்கள் நிராகரித்தது மட்டுமல்லாமல், அ ர்களை கொல்லபார்த்ததாகவும், அப்போது ஒரு விசுவாசி இந்த தூதரகளுக்காக பரிந்து பேசிய போது அவரை கொன்றதாகவும், அவர்கள் ஒரு சத்தம் மூலமாக அழிக்கபட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது.
(36:13-29)
இது பற்றியும் வேதகாமம் கூறவில்லை .
மாறாக, கர்த்தர் தாவீதின் பொண்டாட்டிகளை விபச்சாரம் செய்யவைத்து, அந்த காட்சியை விசுவாசிகளுக்கு நீலப்படமாக காட்டியதை கூற மறக்கவில்லை.
2 Samuel 12:11-12
***
14. இப்றாஹீம் நபி, தன்னை கடவுள் என்று வாதிட்ட மன்னனுடன் விவாதித்து, அவனை வாயடைக்க செய்த வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(2:258)
இதுவும் வேத காமத்தில் இல்லை.
ஆனால், கர்த்தரை கணவராகவும், எருசலேமை வேசி மனைவியாகவும் உருவகித்து, அந்த வேசி தன் முலைகளுக்கு நடுவில் வியாபாரம் செய்வதாக கூற தவறவில்லை.
Hosea ஓசியா 2:2
***
15. மூஸா நபி காலத்தில் கொலையுடன் சம்பந்த பட்டவனை கண்டுபிடிக்க, ஒரு மாட்டை அறுக்க சொன்னதாக கூறப்படும் வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(2:67-73)
இதுவும் வேதகாமத்தில் இல்லை .
மாறாக, மாடு மனிதனை குத்தி மனிசன் செத்துபோனால், மாட்டை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்ற அற்புத போதனையை கூற மறக்கவில்லை.
Exodus யாத்திரகாமம் 21:29
***
16. 100 வருடம் தூங்கச்செய்யப்பட்டு, உயிர்த்தெழுப்பப்பட்ட நல்ல மனிதரின் அந்த நிகழ்ச்சியை குர்ஆன் கூறுகிறது.
(2:259)
இதுவும் வேத காமத்தில் இல்லை .
மாறாக, தேன் பூச்சிகள் செத்துப்போன சிங்கத்தின் வயிற்றில் கூடு கட்டி தேனை சேமித்ததாக கூற மறக்கவில்லை.
Judges நியாயாதிபதிகள் 14:5-9
***
17. இப்றாஹீம் நபி, இறைவனிடம் நீ இறந்தவர்களை எப்படி உயிர்பிப்பாய் என்று காட்டுவாயாக என்று கூறியபோது நிகழ்ந்த வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(2:260)
இதுவும் வேதகாமத்தில் இல்ல.
மாறாக, தாயின் கர்ப்பத்திலிருந்த குழந்தை தன் கையை மர்மஸ்தானம் வழியாக வெளியே போட்டு , திரும்ப உள்ளே வாங்கி கொண்டதாக மாபெரும் மருத்துவ உண்மையை கூற மறக்கவில்லை.
Genesis ஆதிகாமம் 38:27-29
***
18. மர்யமின் தாய் பற்றிய சிறிய வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(3:35-37)
இதுபற்றியும் வேதகாமதமில் இல்லை .
மாறாக, தாயின் வயிற்றுக்கள் இருந்த இரட்டை குழந்தைகள் சண்டை பிடித்த கதையை கூற மறக்கவில்லை.
Genesis ஆதிகாமம் 25:22
***
19. சகரியா இறைத்தூதர் தனக்கு வாரிசு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்த வரலாறை கூறுகிறது.
(3:38-41 19:2-11)
இது பற்றியும் வேதகாமம் கூறவில்லை .
மாறாக, காதலியின் முலைகளுக்கு நடுவே படுக்கும் கதையை கூற மறக்கவில்லை.
Song of Solomon உன்னதபாட்டு 1:13
****
20. இப்றாஹீம் நபி சிலைகளை உடைத்ததையும், அவர் நெருப்பில் உயிருடன் எறியப்பட்டதையும், இறைவன் காப்பாற்றியதையும் குர்ஆன் கூறுகிறது.
(21:51-70)
இதவும் இல்லை வேதகாமத்தில்.
ஆனால், காதலியை இடது கையால் பிடித்து வலது கையால் அணைத்து திராட்சை ரசம் (முலை- திராட்சை குலை) சுவைக்கும் கதையை வேத காமம் கூற மறக்கவில்லை.
Song of Solomon உன்னதபாட்டு 8:1-3
***
21. இப்றாஹீம் நபி தன் சமூகத்திறகு சிலைகள் கடவுள் அல்ல என்று உணர்த்துவதற்கு, நட்சத்திரம,சந்திரன்,சூரியன் இவை என் கடவுள் என்று கூறி, அவை மறையும் போது இவைகளும் கடவுளாக இருக்கமுடியாது என்று கூறி செய்த வரலாறை குர்ஆன் கூறுகிறது.
6:74-80)
இதுவும் வேத காமத்தில் இல்லை .
ஆனால், தம்பியின் விந்தால் அண்ணனுக்கு சந்ததி உண்டாக்க முடியும் என்று கூறுவதற்கு மறக்கவில்லை.
Genesis ஆதிகாமம் 38:8-9
***
22. இபறாஹீம் நபி தன் தந்தைக்கு செய்த அழகான உபதேசம் பற்றிய வரலாற்றை கூறுகிறது.
(19:41-48)
வேதகாமம் இதுபற்றியும் கூறவில்லை .
மாறாக, எருசலேமை பெண்ணாக உருவகித்து, அவளிடம் முலையை சூப்பி முலைப்பால் குடிக்குமாறு வேதகாமம் கூறுகிறது. இது அந்நிய பெண்களிடம் முலைப்பால் குடிக்க சொல்லும் காமப்போதனையாக தெரிகிறது.
ஏசாய Isaiah 66:10-11
இன்னொரு இடத்தில், ராஜாக்களின் முலைப்பாலை குடி என்று போதிக்கவும் மறக்கவில்லை.
ஏசாயா Isaiah 60:16
***
23. மூஸா நபியுடன் போட்டியிட்ட சூனிய காரர்கள் விசுவாசித்த வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(7:113-126 20:60-73 இன்னும் சில)
இதுபற்றியும் வேதகாமம் கூறவில்லை .
ஆனால், பெத்த மகளை அடிமையாக விற்று போட முடியும் என்று கூற மறக்கவில்லை.
யாத்திரகாமம Exodus 21:7-10
***
24. ஈஸா நபி குழந்தை பருவத்தில் பேசிய வரலாறை குர்ஆன் கூறுகிறது.
(19:26-34)
இது பற்றியும் வேதகாமம் கூறவில்லை .
ஆனால், கன்னி பெண்ணை கற்பழித்தால், 50 சேக்கலை கொடுத்தால் போதுமானது என்ற அழகிய போதனையை கூறி கற்பழிப்பை ஊக்குவிக்க மறக்கவில்லை.
உபகாமம் Deuteronomy 22:28-29)
***
25. சுலைமான் நபிக்கு காற்றையும், ஜின்களையும் வசப்படுத்தி கொடுத்ததாக குரான் கூறுகிறது.
(21:81-82 இன்னும் பல)
இதுபற்றியும் வேதகாமம் கூறவில்லை
மாறாக, வீட்டுக்கு குஷ்ட நோய் வருவதாக கூற மறக்கவில்லை.
லேவியராகமம் Leviticus 14 :34-50
***
இது போன்று இன்னும் பல விசயங்களை குர்ஆன் கூறியுள்ளது. ஆனால் வேதகாமம் அவற்றை கூறவில்லை.
வேதகாமத்தை காப்பி அடித்தால் இந்த நிலை வருமா??
மேலும், வேதகாமம் ஏசாயா, எரேமியா, நெகேமியா, மிகா, மலாக்கி, எபக்கூக், யோவேல், ஆகாய், ஆமோஸ் என்று பல தீர்க்கதரிசிகள் பற்றியும் இவர்களது காமிடி கதைகளையும் கூறுகிறது
ஆனால் குர்ஆன் இந்த தீர்க்கதரிசிகள் பற்றியோ , அவர்களது வரலாற்றுக்கு ஒப்பான வரலாற்றையோ கூறவில்லை
எனவே வேதகாமத்திலிருந்து, காப்பி அடிக்கபட்டதே குர்ஆன் என்ற வாதம் மிகவும் அபத்தமாகவே இருக்கிறது.
இது தவிர இன்னும் பல வரலாறுகள் இருந்தாலும், பதிவு மிக நீண்டு விட கூடாது என்பதற்காக தவிர்க்கிறோம்.
இவற்றில் வரலாறுகள் மட்டுமே கருத்தில் கொல்லபட்டன.
முன்னறிவிப்புகள், அறிவியல் உண்மைகள், சட்ட தீர்ப்புகள் கருத்தில் கொள்ளபடவில்லை .
4 சுவிசேசங்களில் இருக்கும் சிலுவை பலி பற்றிய கருத்துற்கு நேர் எதிரான கருத்தையே குர்ஆன் கூறுகிறது என்பதையும் நினைவில் வைக்கவும்.
இனி அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்
--------------------------------------------------------
3. ஒரே வரலாற்றிலும் நேர்மாற்றமாக இருக்கும் குர்ஆனும் வேதகாமமும்
----
சில வரலாறுகள் பைபிளில் உள்ளது போன்று இருப்பதை குர்ஆனில் காணலாம். குறிப்பாக இவை மோசேயின் புத்தகங்களில் காணப்படுவது போலவே காணப்படுகிறது.
எனவே, ஆதிகாமம், யாத்திரகாமம், என்ற இரண்டு புத்தகங்களையும் குர்ஆனையும் சிறிது அலசுவோம்:
1. உலகின் படைப்பு விசயத்தில் குர்ஆனும் பைபிளும்:
பைபிள்- பூமி, வானம், அதிலுள்ள படைப்புகள் 6 இரவு பகல்களில் படைக்கபட்டுவிட்டதாக கூறுகிறது.
(ஆதிகாமம் Genesis 1:1-31)
குர்ஆன்- வானம் பூமியை 6 அய்யாம் இல் படைத்ததாக கூறுகிறது.
(7:54 25:59 32:4 57:4 இன்னும் சில)
அய்யாம் என்பது "யவ்ம்" என்பதன் பன்மை. இது பல நீண்ட காலங்களை குறிக்கவும் பயன்படும்.
இது விஞ்ஞானத்திற்கு முறணில்லை.
ஏனெனில் விஞ்ஞானம், பூமி உண்டாக 460 கோடி வருடங்கள் எடுத்துள்ளதாக கூறுகிறது.
ஆனால் வேதகாமமோ, 144 மணித்தியாலம் என்று காமிடி பண்ணி பொய்யாகிறது.
***
பைபிள்- கர்த்தர் 7வது நாள் ஓய்வெடுத்தார்.
(ஆதி 2:2)
குர்ஆன்- அல்லாஹ் வானம் பூமியை படைத்தான். ஆனாலும் களைப்பு அவனை தீண்டவில்லை.
(50:38)
மேலும் வேதகாமம் படைப்பு விசயத்தில் வேறு சில முறண்பாடுகளை கொண்டுள்ளது. அவற்றை சற்று பாருங்க:
1.பூமியில் மரம் முளைத்தது எப்போது?
¤மூன்றாம் நாளில் (சூரியன் செயற்பாட்டுக்கு கொண்டுவர ஒரு நாளைக்கு முன்பு) தேவன் பூமிக்கு சகல கனிதரும் மரங்களையும் புல்லையும் பூமி முளைப்பிக்க தேவன் கட்டளையிட அது முளைத்தது. கர்தருக்கு இது சூப்பராக விங்கியதாம்.(Genesis 1:11-12)
¤மரம் மூன்றாம் நாளில் முளைக்கவில்லை. காரணம் மழையை பெய்விக்க கர்தர் மறந்துட்டார். 6ம் நாளுக்கு பின்பே மரம் முளைத்தது.(Genesis 2:5)
2.மனுசன் எப்போ படைக்க பட்டான்? மரங்களுக்கு முன்பா பின்பா?
¤மனுசன் 6 ம் நாளில் படைக்க பட்டான். மரங்கள் 3 ம் நாளில்.(Genesis 1:26-29)
¤மனுசன் படைக்கபடும் வரை மரங்கள் படைக்கபடல.(Genesis 2:5)
3.மனிதன் எப்படி படைக்கபட்டான்? ஆணையும் பெண்ணையும் ஒரே நேரத்திலா? ஆணுக்கு பின்பா பெண்?
¤6 ம் நாளில் கர்தர் மனிதனை ஆணும் பெண்ணுமாக ஒரே நேரத்தில் படைத்தார்.(Gen 1:26-27)
¤ஆண் படைக்க பட்டு அவன் தனிமையாக இருந்து நீண்ட நேரத்திற்கு பின்பே பெண் படைக்க பட்டாள்.(Genesis 2:18-23)
4.பறவைகள் எதனால் படைக்கபட்டன? தண்ணீர் OR மண்?
¤பறவைகளை தண்ணீரே உண்டாக்கியது.(Gen 1:20)
¤கர்தர் பறவைகளை மண்ணால் படைத்தார்.(Gen 2:19)
மேலும் சூரியன் படைக்கபட முன்பே 3 இரவு பகல்கள் உண்டாகியுள்ளது.
(ஆதி 1:3-14)
பூமி உண்டாகு முன்பே, 2 இரவு பகல்கள் ஏற்பட்டுள்ளன.
(ஆதி 1:6-10)
இப்படி அபத்தங்களை குர்ஆன் கூறவில்லை.
------
2. ஆதாம் ஏவாள் சாத்தான் கதை
--
பைபிள்- கர்த்தர் ஆதாமை படைத்து ஏதேனில் வேலை வாங்க வைத்தார்.
காட்டு மிருகங்களில் தந்திரமான மிருகமாகிய பாம்பு (??) ஏவாளை வஞ்சிக்க, அவள் பழத்தை சாப்பிட்டு ஆதாமுக்கும் கொடுத்தாள். ஆதாமும் சாப்பிட்டார். பின்பு அவர்கள் அம்மணமாக இருப்பதை அப்போது தான் அறிந்தார்கள்.
அப்போது, கர்த்தர் பாம்பு செய்த இந்த வேலைக்காக, காட்டு, நாட்டு மிருகங்களில் சபிக்க பட்டதாக ஆக்கினார்.
அது சாகும் வரை மண்ணை திண்ணுவதோடு, வயிற்றாலே ஊர்ந்து போவதை சாபமாக்கினார்.
(அதற்கு முன்பு, அந்த பாம்புக்கு கால் இருந்ததா?? அல்லது, வாலால் குந்தி குந்தி பாய்ந்து திரிந்ததா தெரியவில்லை)
ஏவாள் செய்ததற்காக, அவளுக்கு பிரசவ வேதனையை கொடுத்து பெண்களை சபித்தார் (மலடிகளுக்கு இது கடத்தபடவில்லை. கர்த்தருக்கு சாபமிடவும் தெரியாது.)
ஆதாம் செய்ததற்காக கர்த்தர், பூமியை சபித்து முற்களை முளைப்பித்தார். ஆண்கள் கடுமையாக பூமியில் பயிரிட்டு கஷ்டபட்டு சாப்பிடுவது ஆண்களுக்குரிய சாபம்.
(இதுவும் விவசாயிகளுக்கு மட்டுமே கடத்தபட்டுள்ளது. யாராவது கர்த்தருக்கு, எப்படி சாபமிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கவும்)
மேலும், அந்த பழத்தை சாப்பிடும் நாளிலே ஆதாம் சாவான் என்றும் கர்த்தர் சொன்னார்
மாறாக அது நடக்காமல் போய்விட்டது
(ஆதிகாமம் 2:7- 3:19)
இதிலே பல சந்தேகங்களை இவை ஏற்படுத்துகின்றன.
*மனிதனை படைத்த கர்த்தர் அவர்களை ஆசிர்வதித்து, இனத்தை பூமியில் பெருக்குங்கள் என்றார்
(ஆதி 1:27-29)
காமிடி என்னவென்றால், ஆதாமும், ஏவாளும் அம்மணமாக இருந்தும் வெக்கத்தை உணரவில்லையாம். தாம் அம்மணமாக இருப்பதையும் அறியவில்லை.
(ஆதி 2:25)
இப்படி பட்டவர்களிடம் எப்படி இனம் பெருக்க சொல்ல முடியும்?? இதுதான் கர்த்தரின் அறிவு??
இனம் பெருக்க வேண்டுமானால், குறைந்த பட்சமாக, அவர்கள் அம்மணமாக இருப்பதையாவது உணரவேண்டும்.
அந்த பழத்தை சாப்பிட்டால் தான் அம்மணமாக இருப்பதை அறிய முடியும் என்று கர்த்தர் ஆதாமிடம்
"நீ அம்மணமாக இருக்கிறாய் என்று உனக்கு சொன்னவன் யார்? நீ பழத்தை சாப்பிட்டாயோ?" என்று கேட்டதன் மூலம் அறியலாம்.
(ஆதி 3:11)
அப்படியானால்,
மனிதன் இனம் பெருக்க வேண்டுமென்ற கட்டளையை நிறைவேற்ற வேண்டுமானால் இதை சாப்பிட வேண்டும். இல்லையென்றால், அவர்களிருவரும் ஏதேனில் வயது போய் செத்திருப்பார்கள.
இதை எப்படி தவறாக பார்க்க முடியும்??
பாம்புக்கும் மனுதனுக்கும் என்ன பகை?? பாம்புக்கு எப்படி மனிதனை ஏமாற்ற அறிவு வந்தது?
இந்த பாம்பை பற்றி ஏன் ஆதாம் ஏவாளிடம் கர்த்தர் சொல்லவில்லை??
இந்த கேள்விகளுக்கு பைபிளில் இருந்து பதில் சொல்ல முடியாது!!
எசேக்கியேல் 28 படித்தால், அங்கே இருந்த பாம்பு வடிவில் இருந்தவன் தேவ குமாரனாகிய சாத்தான் என்று புரிகிறது.
காமிடி என்னவென்றால, ஒரு தேவ குமாரன் சாத்தான் செய்த பாவத்திற்கு, எப்படி பாம்பை சபிக்க முடியும்??
இது கட்டுக்கதை என்பதற்கு இதுவே போதும்.;!
**
குர்ஆன்-
மனிதனை பூமியிலே கலீபாவாக (தலைமுறை தலைமுறையாக இனம் பெருக்குபவர்களை) ஆக்க போவதாக இறைவன் கூறினான்.
(2:30)
மனிதனை படைத்தவுடன் ஸஜ்தாவில் விழுமாறும் சொன்னான்.
(15:29)
மலக்குகள் இறைவனிடம் பூமியில் குழப்பம் செய்பவர்களையா ஆக்க போகிறாய் என்று கேட்டார்கள.
(2:30)
பின்பு, இறைவன் ஆதாமுக்கு அறிவை கொடுத்து, அதனால் ஆதமுக்கு ஸஜ்தா செய்யும்படி கூறினான்.
(3:31-34)
ஆனால், இப்லீஸ் என்ற ஜின் இனத்தை சேர்ந்தவன் செய்யவில்லை. மறுத்து பெறுமையடித்தான்.
(2:34)
மலக்குகளுக்கு இட்ட கட்டளயில் இவன் எப்படி அடங்குவான் என்று சந்தேகம் வரலாம்.
அரபு மொழியில் தல்ஙீப் என்று ஒரு இலக்கண விதி உள்ளது. அதன் அடிப்படையில், ஒரு கூட்டத்தில் இருக்கும் Majority க்கு இடும் கட்டளைகள், அதிலுள்ள minority க்கும் உரியதாகவே கருதப்படும். இவர்களுக்கு தனியாக கூறவேண்டியதில்லை.
இதன்படி மலக்குபளுக்கு இட்ட கட்டளையில் இப்லீசும் அடங்குவான்.
இறைவன் , இவன் செய்ததற்காக அவனை கடிந்துகொண்டான்.
(7:12-13)
பின்பு, இப்லீஸ் தனக்கு மறுமை நாள்வரை மரணிக்க செய்யாமல் இருப்பாயாக. நான் மனிதர்களை வழிகெடுப்பேன் என்று கூறினான்.
அதற்கு இறைவன் உன்னையும், உன்னை பின்பற்றுவோரையும் நரகில் நிரப்புவேன் என்றான்.
(7:14-18)
மனிதனுக்கு, இந்த இப்லீசை பற்றி அடையாளப்படுத்த வேண்டும்.
எனவே இறைவன் அதை உணர்த்துவதற்காக, அவர்களை சுவர்க்கத்தில் விட்டான்.
மேலும், சாத்தானாகிய இப்லீசை காட்டி, இவன் தான் உனக்கும், உன் மனைவிக்கும் எதிரி. அவன் உங்களை ஏமாற்றி விடவேண்டாம் என்று சொன்னான்.
(20:117)
இறைவனின் கட்டளைக்கு மாற்றம் செய்து சாத்தானுக்கு கட்டுப்பட்டால் ஏற்படும் விளைவை அனுபவ ரீதியில் உணர்த்துவதற்கே இந்த நிலை.
இறைவன் ஆதமிடம், நீ சுவர்க்கத்தில் உன் இஷ்டப்படி சாப்பிட்டு , குடி ஆனால் இந்த மரத்தை மட்டும் நெருங்காதே என்றான்.
சாத்தான் சொன்னதை நம்பி அவர்கள் சாப்பிட்டதால், அவர்களின் வெட்கஸ்தலங்கள் பற்றி தெரிந்து கொண்டனர். மேலும் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றபட்டனர்.
(20:117-121 7:19-22)
இதன்படி,
1. மனிதனை பூமியில் இனம் பெருக்கி வாழவே படைத்தான்.
2.சுவர்க்கத்திற்கு போய் அந்த பழத்தை சாப்பிடும் வரை அவர்களது வெட்கத்தலங்கள் அறியப்படவில்லை. எனவே அவர்கள் உறவு வைத்திருக்க முடியாது.
எனவே சுவர்க்கத்தில் வாழவிட்டது, ஒரு பயிற்சிக்காகவே என்று தெளிவாக புரிகிறது.
3.இது சாத்தானை பற்றி அனுபவ ரீதியில் அறிந்துகொள்ளவே இறைவன் உள்ளே போட்டான்.
பின்பு, இறைவன் முன்பே கூறியபடி பூமியில் இனம் பெருக்கி வாழ வைக்கபட்டனர்.
எனவே இதக்கும் வேதகாமத்திற்கும் தொடர்பு இல்லை.
----
3. ஆபேல் காயீன் கதை:
Quran:
ஆதமுடைய இரு மகன்மார் இறைவனுக்கு குர்பானியை நெருக்கமாக்கி வைத்த போது, ஒருவரிடமிருந்து மட்டுமே ஏற்கபட்டது. மற்றவரிடமிருந்து ஏற்று கொள்ள படவில்லை. எனவே அங்கீகரிக்கபடாதவர், "நான் உன்னை கொலை செய்து விடுவேன் " என்றார். அதற்குகு அங்கீகரிக்கபட்டவர்,
"அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் பயபக்தியுடையவர்களில் இருந்து தான். நீ என்னை கொலை செய்ய உன் கையை என்பக்கம் நீட்டினாலும் நான் உன்னை கொல்ல என் கையை நீட்டமாட்டேன். நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன். . ." கூறினார்.
மற்றவர் தன் சகோதரனை கொலைசெய்தார். அதனால் அவரை நஷ்டம் அடைந்தோில் ஆகிவிட்டார்.!
பின்ர் பூமியை தோண்டக்கூடிய ஒரு காகத்தை, தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவருக்கு அது காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான்;
அவர் , "என்னுடைய கேடே! இந்த காகத்தைபோல ஆவதற்கு கூட நான் இயலாதவனாக ஆகிவிட்டேனா?" என்று கைசேத படக்கூடியவராக ஆகிவிட்டார்.
(5:27-31)
BIBLE:
¤ஆதாமுக்கு காயீன் என்று மூத்த மகன் விவசாயியாகவும் இரண்டாம் மகன் ஆபேல் ஆடு மேய்பவனாக இருந்தார்.
(Gen 4:1-2)
¤காயீன் நிலத்தின் கனிகளையும் ஆபேல் ஆடுகளில் தலை கன்றுகளில் கொழுத்ததை காணிக்கையாக கொணர்ந்தான். ஆபேலை ஏற்றார் கர்தர். காயீனை ஏற்கவில்லை. இதனால் காயின் எரிச்சல் பிடித்து தன் சகோதரரை கொண்றான்.
(Gen 4:3-8)
இதுவரை பிரச்சினை இல்லை!
¤கர்தர் காயினிடம் உன் சகோதரன் எங்கே என்று கேட்டார். அதற்கு அவன், "நான் அவனுக்கு காவல் காரனா" என்றான்.
(Gen 4:9)
இறைவனோடு நக்கலாக அவன் பேசுவானா நம்ப மிடியல!
¤காயீன் சொன்னான்: நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து பூமியில் நிலையற்றவனாயிருப்பேன் என்னை கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னை கொன்று போடுவானே என்றான்.
(Gen 4:14)
பச்ச பொய்!
அந்த காலத்தில் ஆதாம் ஏவாள் காயின் ஆபேல் (+ அவ்விருவினதும் மனைவி பைபின் கூறவில்லை) ஆகிய வெறும் 4 பேர் தான் இருந்தனர்.
அதுல ஒரத்தரை போட்டு தள்ளியாச்சு. எனவே காயினும் அவனது பெற்றோர் மட்டுமே பூமியில் இருக்கும்போது, என்னை காணுபவன் எவனும் கொன்று போடுவான் என்று சொல்லுவானா??
கொல்றதுக்கு தான் ஆளே இல்லையே??
யோசிக்க மறந்துட்டாங்க
¤காயினை கண்டுபிடிக்கிறவன் கொண்று போடாத படிக்கு கர்தர் காயினின் நெற்றியில் ஒரு அடையாளத்தை போட்டார்.
(Gen 4:15)
இன்னொரு அபத்தம்!
காயீனை அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்காக அவனுடைய மூஞ்சி ஒரு அடையாளத்தை போட்டு change பண்ணினார்!
அன்றைய காலத்தில் இருந்த ஆண் ஆதாம் மட்டுமே (after the death of Abel).
2 ஆண்களில் ஒரத்தன் ஆதாம் என்றால் மற்றவனை கண்டுபிடிக்க முடியாதோ??
இதெல்லாம் போல்லாத அபத்தம்!!
Abel தான் முதலாவதாக செத்தார். அதனால் உடம்பை எப்படி புதைத்தனர்??
பூமியின் மேல் அவிய விடபட்டதா??
அடக்கம் செய்யபட்டதாயின் Cain எப்படி குழி தோண்டி புதைக்க கற்றான்?
எனவே வேதகாமத்திலிருந்து காப்பி அடித்திருக்க முடியாது.
----
4. நோவா கதை
குர்ஆன்- நூஹ் நபி தன் சமூதாயத்திற்கு தூதராக அனுப்பபட்டார். அவர்கள் அதை மறுத்து பெறுமை அடித்ததோடு, முடிந்தால் தண்டனையை கொண்டு வாரும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நூஹ் நபியின் ஆன்மீக குடும்பம் பாதுகாக்கபட்டதோடு,, அவரது சமூதாயத்தில் ஏனையோர் பெரு வெள்ளத்தால் அழிக்கபட்டனர்.
அவரது மகன் , அவரது ஆன்மீக குடும்பத்தில் அடங்க மாட்டான் என்றும் இறைவன் கூறினான்.
அவன் மூழ்கடிக்க பட்டான்.
மேலும், பூமியில் எஞ்சியோரை அவரது ஆன்மீக சந்ததிகளில் இருந்து உண்டாக்கினான்.
(7:59-64 11:25-48 இன்னும் பல)
வேதகாமம்- பூமியிலுள்ள அனைவரும் பொல்லாப்பு செய்தபடியால், மனிதனை பூமியில் படைத்த தற்காக கவலைப்பட்டார்.
பூமியிலுள்ள சகலரும் இந்த வெள்ளத்தின் மூலம் அழிக்கபட்டனர். பூமி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டதாம். மலைகள் எல்லாம் மூடப்பட்டதாம்.
இதுவிசயத்திலும் வேதகாமம் முறண்படுவதை விட்டுவிட்டு ஏனையவற்றை மட்டும் பார்ப்போம்.
இந்த வெள்ளம் ஏற்பட்டது, நோவாவின் 600வது வயதில்.. ஆதாம் படைக்கபட்டதிலிருந்து 1656 வது ஆண்டில்.
பூமியின் வயதோ வேதகாமத்தின்படி6129 வருடங்களே.
எனவே தற்போதைக்கு, 4473 ஆண்டுகளுக்கு முன்பு.
இந்த காலகட்டத்தில், பூமி முழுவதும்வெள்ளம் ஏற்பட்டு மிருகங்கள் அழிந்தன என்கிறது தானே வேதகாமம்.
ஆனால் அன்றையகாலத்தில் கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகளில் பல மிருகங்கள் பலியிடபட்டதாக வரலாறு கூறுகிறது. அப்படியானால் இது எப்படி சாத்தியம்??
பூமி முழுவது வெள்ளம் ஏற்பட வாய்ப்பும் இல்லை. எனவே இது பொய.
(ஆதி 5-9)
எனவே இந்த லூசு புத்தகத்திலிருந்து காப்பி அடித்திருக்க முடியாது
இதற்கு பின்பு நடந்த காமிடி கதைகளையும் குர்ஆன் கூறவில்லை .
----
5.ஆப்ரஹாம் கதை-
ஆபரஹாம் செய்த உபதேசங்களை பைபிள் கூறவில்லை. குர்ஆன் தான் கூறுகிறது.
மேலும் வேதகாமம், 90 வயது கிழவியான சாராவுக்கு ஒருத்தன் ரூட்டு விட்டதாக (அந்த ஆள் கர்த்தரல்ல. அவர் சிப்போராவுக்கு தான் ரூட்டு விட்டார்) கதை விடுகிறது. இதை நம்ப முடியுமா மக்களே??
(ஆதி 17:17 -->> 20:2-4)
---
6. லோத்து கதை-
குர்ஆன் லோத் செய்த போதனைகளை குர்ஆன் கூறுது. ஆனால் வேதகாமம் கூறவில்லை.
லோத்தின் மனைவி பாதுகாக்க பட மாட்டாள் அவள் பாவி என்று குர்ஆன் கூறுகிறது. 11:81 இன்னும்பல
ஆனால் வேத காமம், அவள் திரும்பி பார்த்த காரணத்தால் உப்பு சிலையாக மாற்றி கொன்று போட்டார் கர்த்தர் என்கிறது.
ஆதி 19:26
மேலும் லோத்தின் மகள்கள் சாராயத்தை ஊத்தி கொடுத்து, அவனுடனே படுத்து, சந்ததி உண்டாக்கினர் என்ற காம கதையை வேதகாமம் கூறுகிறது.
ஆதி 19:30-36
ஆனால் இந்த காம கதையை குர்ஆன் கூறவில்லை.
மேலும், ஏசா பற்றி வேதகாமம் கூறுகிறது குர்ஆன் கூறவில்லை.
யாக்கோபுடன் கர்தர் சண்டைபிடித்து ஜாமானை பிடித்து ,
கசக்கிய கதையை வேதகாமம் சொல்கிறது.
ஆதி 32:24-30
ஆனால், குர்ஆன் இதை கூறவில்லை.
யாக்கோபின் மகன் யூதா, ரூபன் செய்த காம களியாட்டங்களையும், அவர்களது சகோதரியை சீகேம் என்பவன் கற்பழித்தான் என்ற கதைகளை வேதகாமம் கூறுகிறது.
(ஆதி 38:13-17 35:22 34:2-27)
ஆனால் இதை குர்ஆன் கூறவில்லை.
யாக்கோபு ஆட்டுகுட்டிகளுக்கு செய்த காமிடி Genetics பற்றியும் கூறவில்லை.
ஆதி 30:37-39,41-42
யூதாவின் மகன் விந்தை நிலத்தில் விட்டதற்காக கொலை பண்ணிய கர்தரின் கதையையும் வேதகாமம் கூறுது. குர்ஆன் கூறவில்லை.
(ஆதி 38:8-10)
எனவே காப்பி அடித்தல் என்ற வார்த்தைக்கே இடமில்லை .
---
8. யோசேப்பின் கதை
--
குர்ஆன்- யோசேப்பு கண்ட கனவு கடைசியில் பழித்தது.
(12:100)
ஆனால் வேதகாமத்தின்படி அந்த கனவு பழிக்கவில்லை. ஏனெனில் யோசேப்பின் தாய் ராகேல் கடைசி பிரசவத்துடன் மண்டையை போட்டுவிட்டார்.
ஆதி 35:16-17
குர்ஆன்- யூஸுப் எஜமானனின் மனைவியை தப்பான வழிக்கு அழைக்கவில்லை, அவர் தூயவர் என்று அவரது எஜமான் அறிந்துகொண்டார்.
12:25-30
ஆனால் வேதகாமம், யோசேப்பை தூயவர் என்று அவரது எஜமான் அறியவில்லை என்கிறது.
ஆதி 39:7-20
**
மேலும் வேதகாமம் அன்றைய கால எகிப்திய மன்னனை பார்வோன் என்று அழைத்ததாக கூறுகிறது.
வரலாற்றின்படி இது தவறு ஆகும்.
ஆனால் குர்ஆன் அப்படி அழைத்து அவமானபடவில்லை
மேலும் பல வேறுபாடுகளை எங்களால் காட்ட முடியும்.
-----
9.மோசே வரலாறு-
மோசேயை ஆற்றில் எறிந்த போது எடுத்தவர் யார்?
குர்ஆன்- பிர்அவ்னின் மனைவி 28:9
வேதகாமம்- பார்வோனின் மகள்.
யாத்திரகாமம் Exodus 2:5
--
மோசையை ஆற்றில் விட அல்லாஹ் வஹீ அறிவித்தான் என்கிறது குர்ஆன்.28:7
ஆனால் வேதகாமத்தின் கதையோ வேறு. யாத்திரகாமம Exodus 2:2-3
--
மூஸா நபியும் கொலையும்:
குர்ஆன்- மூஸா ஊரில் நுழைந்த போது, இருவர் சண்டைபிடித்துகொண்டிருந்தனர். ஒருவர் மூஸாவின் இனம். அடுத்தவன் எதிரி இனம். மூஸாவிடம் உதவி கேட்கவே, மூஸா ஒரு குத்து குத்தினார். அவன் தற்செயலாக செத்துவிட்டான். கொல்லும் நோக்கம் மூஸாவிடம் இருக்கவில்லை.
இதற்காக மூஸா மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு திருந்தினார்.
மறுநாளும், அதே நபரும், எதிரி இனத்தை சேர்ந்த இன்னொருவனும் சண்டைபிடித்தார். திரும்பவும் மூஸாவிடம் உதவி கேட்க,, மூஸா அவனை கண்டித்துவிட்டு, பொது எதிரியை பிடிக்க சென்றார். ஆனால் அவரது இனத்தவனோ தவறாக புரிந்து முன்தினம் நடந்ததை பகிரங்க படுத்திவிட்டான்.
(28:15-19)
வேதகாமம்- தன் சகோதரனாகிய எபிரேயனை, எகிப்தியன் அடிப்பதை கண்டு, அங்குமிங்கும் பார்த்துவிட்டு, ஒருவரும் இல்லையென்று, எகிப்தியனை வெட்டி கொலை பண்ணி மணலிலே புதைத்து போட்டான்.
மறுநாள் இரு எபிரேயர்கள் சண்டை பிடித்தார்கள். அப்போது மோசே கண்ட போது விசயத்தை பகிரங்க படுத்திவிட்டான் அடுத்தவன்.
யாத்திராகமம் Exodus 2:11-14
இதற்கு பின்பு நடந்த விசயத்தில் வேதகாமம் தனக்கே முரண்படுவதால் அவற்றை தவிர்க்கிறேன்.
--
மந்திரவாதிகள் மோசையை ஏற்கவில்லை. கடைசிவரை போட்டி போட்டதாக காமிடி பண்ணுது வேதகாமம். காமிடி கதைகளையும் கூறுகிறது.
அவற்றை குர்ஆன் கூறவில்லை.
--
மேலும் ஒரு காமிடியை மட்டும் கூறி முடிக்கிறேன்.
யுத்தம் நடக்கும் போது, மோசே தன் கையை உயர்த்தினால் இஸ்ரவேலர் வெல்லுவார்களாம். கையை பணித்தால் எதிரிகள் வெல்வார்களாம். ஆனாலும் மோசே களைப்படைந்த படியால் கையை தாங்கி பிடிக்க இருவர் தேவை பட்டதாம்.
அடச்சே
யாத்திரகமம் 17
இதை குர்ஆன் கூறி நம்மை சிரிக்க வைக்கவில்லை.
--------------------
இதே போன்றே இன்னும் பல நேர் முறண்களை வேதகாமமும், குர்ஆனும் கொண்டுள்ளது.
எனவே காப்பி அடிக்கபட்டது என்ற வாதப் மிகவும் அபத்தமானதாகவே இருக்கின்றன.
எனவே வாய்ப்பே இல்லை .
அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்
1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...
-
சிலுவைப்பலி ஒரு கட்டுக்கதை - - - - - - அநேக கிறிஸ்தவர்கள் யேசு சிலுவையில் இறந்ததை தியாகம் என்கினறர். இதன் உண்மை நிலை என்ன? முதலாவதா...
-
தேற்றவாளர் முகம்மது நபியே ஆவார் ---------------------- புதிய ஏற்பாட்டில் யோவான் 14:16-17,26 ; 15:26, 16:6-7,12-14 ஆகிய இடங்களில் தேற்றவாளர்...
-
இஸ்லாமும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் யூதர்களை பற்றி என்ன கூறுகிறது இஸ்லாம் : 1* முகம்மது நபியிற்கு முன்புள்ளவர்களின் ...