அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்
1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான் (குர்ஆன் 76:3) --மனிதனுடைய ஆத்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக் கொடுத்துள்ளான். அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர் வெற்றிபெற்றவர்-குர்ஆன் 91:7-10 -இறைவன் ஒரு கூட்டத்தையும் அவர்களுக்கு நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை தெளிவாக்காமல் வழிதவறச்செய்வதில்லை (குர்ஆன் 9:115) இதன்படி அனைவருக்கும் நேர்வழி தெளிவாக்கப்பட்டே உள்ளது. 2.அல்லாஹ் வழி தவற செய்வதன் விளக்கம் -அவர்கள் சத்தியத்தை அறிந்துகொண்டே சறுகியபோது அல்லாஹ் அவர்களது இதயங்களை சறுக செய்தான் (குர்ஆன் 61:5) -நேர்வழி இன்னதென்று தெளிவான பின்பு இத்தூதருடன் முரண்பட்டு விசுவாசிகளின் வழியல்லாததை எவர் பின்பற்றுகிறாரோ அவனை அவன் திரும்பிய வழியிலேயே திருப்பி விட்டு நரகத்தில் நுழைவிப்போம் (குர்ஆன் 4:115) -ஸமூது கூட்டத்தினருக்கு நல்வழி காட்டினோம். ஆனாலும் அவர்கள் குருட்டுத்தன்மையை விரும்பினார்கள் (குர்ஆன் 41:17) இப்படி இறைவன் நேர்வழியை காட்டிய பின்பு, வழி கேட்டை தெரிவு செ...
