இயேசு இறைதூதரான நபியேயன்றி வேறில்லை
இயேசு ஒரு நபியும் (தீர ககதரிசி) ரசூலுமே (அனுப்பபட்ட இறைதூதர்) அன்றி வேறு இல்லை ------------------------------------------------ இஸ்லாம் இயேசு எனும் ஈசாவை பற்றி அவர் ஒரு இறைதூதர் என்றும் அவரது தாய் உண்மையாளர் என்றும் சொல்கிறது. நாம் ஒவ்வொன்றாக காண்போம்: 1.(அ).இயேசு ஒரு தீர்க்கதரிசி (நபி) என இயேசுவின் சாட்சி: 56 இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57 அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார் . (மத்தேயு 13:56-57) இங்கே தன் இனத்தவர்களே தன்னை ஏற்றுக்கொள்ளாதபோது, ஒரு தீர்க்கதரிசி தன் ஊரிலும் வீட்டிலும் தான் கனவீனமடைகிறான் என கூறினார். இதே வசனம் மாற்கு 6:4 ,லூக்கா 4:24 இலும். இடம்பெற்றுள்ளது. மேலும், "இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக, நீங்கள் போய் அந்த நரிக்கு...