இடுகைகள்

மே 6, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்போஸ்தலர் நடபடிகளின் படி இயேசு ஏன் கடவுளல்ல

  யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2 அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ---------------------------------------------------------- இது லூக்காவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுடன் இது உடன்படுகிறது. யோவான் சுவிசேஷம் இயேசு தேவனிடம் ஏற்கனவே சொந்த பிள்ளையாக இருந்தவர்.. ஆனால் உண்மையான தேவன் பிதா தான் என கூறுகிறது . ஆனால் முதல் மூன்று சுவிசேசங்களும், இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மூலம் தேவன் அற்புதம் செய்தார். பிறகு அவரை தன் பிள்ளையாக தத்தெடுத்து கொண்டார் என போதிக்கின்றன. அதே வகையில் இந்த அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசு மூலம் தேவன் அற்புதங்கள் செய்ததாகவும், தேவன் அவரை உயர்த்தி உயர் அந்தஸ்த்தை கொடுத்ததாகவும் கூறுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான் என இது கூறுகிறது. ஒருபடி மேலே போய், இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ததாகவும், அவரிடம் நேரடியாக வேண்டுதல் செய்ததாகவும் இது கூறுகிறது. அத்தோடு தேவனிடமே ஜெபம் செய்ததாக இது கூறுகிறது.. இயேசு பிதாவை தொழுது கொள்ளவும் , பிதாவிடமே ஜெபம் செய்யவுமே...