இடுகைகள்

சூரியனுக்கு முன் மரங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதியாகமம்-தொடர் 3

தொடர்2  இன் தொடர்ச்சி  உள்ளடக்கம் 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம் 8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம். 9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம். 10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா? 11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!) 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம்  தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""   - ஆதி 1:3,5  பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம் . ¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்." ¹⁸ "பகலையும் இரவையு...