மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல
மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுள் அல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சுருக்கம்: மத்தேயு , மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேசங்களும் இயேசுவை கடவுளுக்கு நெருக்கமான நல்லடியாராக காட்டுகின்றன. கடவுளாக அல்ல! இயேசுவை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு ஓரமாக இருக்கிறார் என்பதே இவற்றின் சுருக்கம்! இதற்காக பல பொய்களை கலந்து எழுதியிருக்கிறார்கள். இவற்றில் குர்ஆனையோ ஹதீசையோ உள்நுழைக்காமல், ஒரு கிறிஸ்தவருக்கு இதில் கூறப்பட்டதை அவர் மத்தேயுவை படித்தால் புரிந்துவிடும்! 1.அவர் ஆப்ரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமானவர்- மத்தேயு 1:1 இவர்களின் பிள்ளை கடவுளாக முடியாது. 2.இவரது பரம்பரையிலேயே விபச்சாரம் செய்தவர்களும் வேசிகளும் இடம் பெறுகிறார்கள். இதில் கூறப்படும் நான்கு பெண்களில் மூவரும் ஒழுக்கத்தில் குறையுள்ளவர்கள். (மத் 1:3,5,6) விபச்சார சந்ததி மட்டுமல்ல.. எந்த சந்ததியிலும் இறைவன் வர இயலாது. 3.இவர் ஒரு பெண்ணுக்கு பிறந்தார். அவரது ப...