இடுகைகள்

ஆகஸ்ட் 2, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசு பற்றிய தீர்க்கதரிசனங்கள்-திரிபுகள் (சுவிசேசங்கள்) பகுதி 1

படம்
பழைய ஏற்பாட்டில் உள்ள அநேக வசனங்களை திரித்து புதிய ஏற்பாட்டில் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனங்கள் என எழுதப்பட்டிருக்கின்றன. அவை பற்றி பார்ப்போம் 1.இம்மானுவேல் முன்னறிவிப்பு இயேசு ஒரு கன்னியிடம் பிறப்பார் என்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக மத்தேயு எழுதுகிறார்: ²¹ “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.” ²² தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. ²³ “அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.” ²⁵ “அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான். (மத்தேயு 1:21-23,25) பழைய ஏற்பாட்டில் இதை போய் பார்க்காமலேயே இது இயேசுவுக்கு பொருந்தாததை திணித்து எழுதியுள்ளார் மத்தேயு என புரியும் . ஏனெனில் 1.தேவதூதன் இயேசு என பெயரிடுமாறே யோசேப்புக்கு சொல்கிறார் -(மத் 1:21) 2.யோசேப்பு ...