லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல
மாற்குவின்படி இயேசு கடவுளல்ல லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்! லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது! 1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை! ³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31) 2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம். கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்! ³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமா...