புதன், 4 மே, 2016

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ? 1

ஏக இறைவனின் திருப்பெயரால்..!

படைப்புகள் அனைத்தையும் செவ்வையாய் படைத்து பரிபாலித்து போற்றக்கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்❕

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக❕

பலதாரமணம் செய்வது தவறு,பாவம்

முஹம்மது நபியவர்கள் பலதாரமணம் செய்தார்கள் எனவே அவர் கள்ளத்தீர்க்கதரிசி என அநேக கிறிஸ்தவர்கள் கூற கேட்டுள்ளேன்

அன்பிற்குரியவர்களே!

உங்கள் பைபிள் அப்படி போதிக்கிறதா ?

எது பாவம் ❔

4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான். நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
1 யோவான் 3 :4 

17 அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
1 யோவான் 5 :17

• பாவம் என்பது தேவன் விதித்த கட்டளைகளை மாம்ச ரீதியாகவோ ஆத்ம ரீதியாகவோ மீறுவதாகும்

∆ 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது,
→ நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.←
ரோமர் 5 :13

↑→ ஒன்றை குறித்த சட்டம் இல்லையேல் அது பாவமாக எடுத்துக்கொள்ளப்படாது.

√ பலதாரமணத்தை தேவன் தடை செய்ததாய் அல்லது பாவம் என குறிப்பிட்டதாய் சட்டமோ வசனமோ பைபிளில் உண்டா ⁉

அவ்வாறில்லாத பட்சத்தில் எதனடிப்படையினில் அதனை விமர்சிக்கிறீர்கள்❓ குற்றமென்கிறீர்கள்❓

16 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 3 :16-17 

இப்படி மனிதனுக்கு தேவையான அனைத்தும் அருளப்பட்ட தேவ ஆவியினால் வழங்கப்பட்ட வசனங்களை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ !?

இன்னும் பலதாரமணம் தவறு அப்படி செய்பவர் கள்ளத்தீர்க்கதரிசி⁉ அவரால் வரும் வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பீர்களேயானால் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் அவர்களின் வெளிப்பாடுகள் அவர்களால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என அனைத்தையும் நிராகரித்து விட்டு முஹம்மது நபியவர்களை விமர்சிக்க வாருங்கள்..!

பலதாரமணத்தை அனுமதிக்கும் சட்டங்கள் கீழ்காணும் வசனங்கள் 

பழைய ஏற்பாடு
உபாகமம் 21 : 15 , 15: 17
எண்ணாகமம் 31 : 18, 46

2 சாமுவேல் 12 : 8
1 ராஜாக்கள் 15: 5

நியாயபிரமாணத்தில் உள்ள சட்டங்கள் சரி என்று புதிய ஏற்பாட்டில் பார்க்க:

மத்தேயு 5:17

மத்தேயு 22 : 24 - 26

ரோமர் 7: 12, 16

காலாத்தியர் 3: 21 , 5: 3 , 4 .

முஹம்மது நபி கள்ளத்தீர்க்கதரிசியா ?

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ !

✴#முஹம்மது நபியவர்கள் கள்ளத்தீர்க்கதரிசியா❕❔❔

பகுதி - 2⃣

அல்குர்ஆன் மனைவியை அடிக்க அனுமதி அளிக்கிறது.மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் எப்படி இறைவனாவார் ?

இந்த வெளிப்பாட்டை கொண்டு வந்தவர் எப்படி தீர்க்கதரிசியாக இருக்க முடியும் ?

என்ற மாபெரும் அறிவுப்பூர்வமான கேள்வியை முன் வைத்து ஈசாகுரான் போன்ற இனையமேதைகள் முஹம்மது நபியவர்கள் நபி கிடையாது என கூறி வருகின்றனர்.😜😄😂

என்னவென்று சொல்ல இவர்களின் அறியாமையை ❕

° மனைவியை அடிக்க அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி என பைபிலில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா ❔

• பைபிலில் இச்செயலை தேவனோ இயேசுவோ கண்டித்ததாக ஏதேனும் ஒரு வசனமாகிலும் உண்டா ❔

இல்லை, அவ்வாறிருக்க இதன் அடிப்படையில் ஒருவர் கள்ளத்தீர்க்கதரிசி என எங்கனம் தீர்ப்பு கொடுக்கின்றீர்கள் ❔

தேவனை காட்டிலும் நீங்கள் அறிவில் தேறினவர்களோ ❔

மேலும் வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,

2 தீமோத்தேயு 3 :16

• மனிதன் எல்லா நல்ல காரியங்களும் செய்யும்படியாகவும் வேத வசனங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டு விட்டது என பைபில் கூறுகிறது.அவ்வாறிருக்க ஒரு தீர்க்கதரிசியை நல்லவரா கள்ளரா என சொல்ல தேவ ஆவி மறந்து விட்டது என்கிறீர்களா ❔

ஆம் என்றுவிடாதீர் கிறிஸ்தவர்களே ஆவிக்கெதிரான தூஷனம் மன்னிக்கப்படாது.(லூக்கா 12:10)

சரி இவர்கள் வாதத்திற்கு இஸ்லாமிய நிலைபாட்டை பார்க்கும் முன் பைபில் நிலைபாட்டை பார்க்கலாம்😉

-- உன் ஆசை புருசனை பற்றியிருக்கும்.அவன் உன்னை ஆண்டு கொள்வான். ஆதி 3:16

∆ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
(எபேசியர் 5:22-23 )

பைபில் பெண்கள் ஆண்களுக்கு சேவை செய்யவே,மகிமைபடுத்தவே படைக்கப்பட்டனர் என்கிறது.
( 1 கொரிந்தியர் 11:6-7 )

மனைவி கணவனுக்கு கட்டுப்பட மறுத்தால்...?
அவள் பொல்லாதவள் தானே!

அவர்களை குறித்து பைபில் காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் #அடிகளும், பொல்லாதவனை #அழுக்கறத்_துடைக்கும்.
நீதிமொழிகள் 20 :30

மனைவி கொஞ்சம் சண்டைக்காரியா இருந்தா அவள் விட வீட்டின் ஒரு மூலை சிறந்தது என்கிறார் தேவ ஆவி

24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
நீதிமொழிகள் 25 :24 

அடப்பாவி 😀

இதாச்சும் பரவாயில்லை வீட்டு மூலை கூட வேணா காட்டுக்கு போனு சொல்றார் நீதிமொழிகள் 21:19

கொஞ்சம் டீப்பா போவோமா ❔

மனைவியை அடிப்பது குறித்து பைபில்:-

• மனைவி ஒருவேளை வேறு தேவனை சேவித்தால் அவளை கல்லால் அடித்து கொள்ளலாம்.
உபாகமம் 17:2-7;யாத் 22:20

• விபச்சாரத்தினிமித்தம் மனைவியை அடித்து கொள்ளலாம்.
உபா 22:22

மனைவியின் கையை கூட வெட்டலாம் அடுத்தவரின் ****யை கணவனை காப்பாற்ற பிடித்தால் உபா 25:11-12

➰முடிவுரை➰

• மனைவியை அடிக்க அனுமதி அளிப்பது தவரென பைபிலில் எங்கும் இல்லை

• அடிக்கலாம் கொல்லலாம் என பைபில் அனுமதி அளிக்கிறது

• அனுமதி அளிப்பவர் கள்ளத்தீர்க்கதரிசி எனில் அந்தோ பரிதாபம் தேவ ஆவி கள்ளத்தீர்க்கதரிசி❕

7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19 :7

இப்படி பைபில் சொல்ல அதற்கு மாற்றமாய் பிரசங்கிக்கும் ஊழியர்களே

மல்லாக்கப்படுத்து எச்சிலை துப்பினால் மூஞ்சியில் விழும் எனக்கூறி இப்பதிவு முடிக்கிறேன்..!

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...