ஆதியாகமம் தொடர்- 4
ஆதியாகமம் பாகம் 4 பாகம்3 இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார். 13.சரீர மரணமா ஆத்ம மரணமா? 12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார் என கூறும் ஆதியாகமம். இதன்மூலம் ஆதாமின் பாவத்தினால் மரணம் பூமியில் நுழைந்ததாக கூறும் கிறிஸ்தவம் பொய்யாக்கப்படுகிறது. ¹⁷ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் . ஆதி 2:17 -இந்த பழத்தை சாப்பிட்டால் சாப்பிடும் நாளிலேயே மரணம் ஏற்படும் என தேவன் எச்சரிப்பதன் மூலம், மரணம் என்றால் என்ன என்று ஆதாம் அறிந்திருக்க வேண்டும். -அத்தோடு , மரணிக்கக்கூடியவனாக ஆதாம் படைக்கப்பட்டிருக்கிறார். அதனால் மரணத்தை குறித்து எச்சரிக்கப்படுகிறது. . மரணமற்றவனாக படைக்கப்பட்டிருந்தால், பழத்தை சாப்பிடுவதால் மரணம் ஏற்படப்போவதில்லை. (உதாரணமாக சாவே இல்லாதவன் விசத்தை சாப்பிட்டால் இறப்பானா? நீ விசத்தை சாப்பிட்டால் இறப்பாய் என்று சொன்னால் அவன் மரணமற்றவனாக இல்லை என்று புரிகிறது.) - மேலும் இதை தெளிவாக்கும் விதமாக, ஆதாம் மரணமற்ற வாழ்வை பெற வேண்டுமானால், ஜீவ மரத்தில...