இடுகைகள்

பிப்ரவரி 1, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயேசுவை ஏன் கடவுள் அல்ல என்கிறோம்?

 இயேசு கடவுள் இல்லை என்று ஏன் சொல்கிறோம்? 1.அவர் மர்யமின் மகனான ஒரு மனிதர். பிறந்தவர் எப்போதும் ஒரு படைப்பேயன்றி படைத்தவராக முடியாது .  2.அவர் கடவுள் என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ வாதிடவில்லை. மாறாக தன்னை கடவுள் இல்லை என்று நிரூபித்தார். இதற்கான சான்றாக அ- பிதா மட்டுமே மெய்யான ஒரே தேவன் என்றார்-யோவான் 17:3 பிதா மட்டுமே மெய்யான ஒரே தேவன் எனின், வேறொரு நபருக்கு இங்கு இடமில்லை! ஆ- உண்மையாக தொழுது கொள்வோர் பிதாவையே தொழுதுகொள்வர் என்று கூறினார். -யோவான் 4:23 இ- தன்னை நல்ல போதகர் என்று ஒருவர் சொன்னபோது, தேவனை தவிர நல்லவன் இல்லையே என கூறி மறுத்தார்- மத் 19:16-17, மாற் 10:17-18, லூக்கா 18:18-19 ஈ- தேவனிடம் ஜெபம் செய்து பிரார்த்தித்து தன்னை தேவன் இல்லை என நிரூபித்தார்.- மத்தேயு 26:36,39,41,42,44 ; மாற்கு 1:35 ,6:46 , 14:32,39 ; லூக்கா 5:16, 6:12, 9:18,28-29, 11:1, 22:42,44-46 உ- சீடர்களுக்கு பிதாவிடமே ஜெபம் பண்ணுமாறு கற்பித்து , கடவுள் அவர் அல்ல என நிரூபித்தார்.- மத்தேயு 6:9, லூக்கா 11:2 ஊ- பரலோகராஜ்யத்தில் நுழைய பிதாவின் சித்தப்படியே நடக்க வேண்டும் என போதித்து தன்னை கடவுள் இல்லை என ப...