இடுகைகள்

திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்2 ------------------------------------------------- முதல் பாகத்தை காண: https://answeringchristian.blogspot.com/2019/01/1_17.html?m=1 ஸைனப் (ர) அவர்களுடன் நபியவர்களை சம்பந்தப்படுத்தி வரும் அறிவிப்புகளையும் அவற்றின் உண்மை தன்மையையும் காண்போம்: 1. முதலாவது அறிவிப்பு இப்னு சஅத் அவர்களின் தபகாத் (8/101), இப்னு ஜரீர் அத் தபரீ அவர்களின் தாரீக் (3/161) முஹம்மத் இப்னு யஹ்யா இப்னு ஹிப்பான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்-அஸ்லமி கூற அவரிடமிருந்து முஹம்மத் இப்னு உமர் அல் வாகிதி அறிவிக்கிறார்: "அல்லாஹ்வின் தூதர் ஸைதுடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள். அவர் முஹம்மதுடைய மகன் ஸைத் என சொல்லப்பட்டார்.ஸைதை காணாததால் அவர் எங்கே என கேட்பதற்கு அவருடைய வீட்டுக்கு அவரை தேடி வந்தார்கள் ஆனால் அவரை காணவில்லை. ஸைதுடைய மனைவியாகிய ஸைனப் அன்னாரை நோக்கி இரவுஆடையுடன் எழுந்துவந்தார். அல்லாஹ்வின் தூதர் தன் முகத்தை திருப்பிகொண்டார்கள். " அவர் இங்கு இல்லை அல்லாஹ்வின் தூதரே! உள்ளே வாருங்கள்" என ஸைனப் கூறினார். அல்லாஹ்வின் தூதர் நு...

அன்னை ஸைனப் உடனான நபிகளாரின் திருமணம் பாகம்1

அன்னை ஸைனப் அவர்களுடன் நபிகளாரின் திருமணம் பாகம்1 ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களுடனான முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருமணம் - ஒரு சிறு அலசல் ------------------------------------------------------------------------------- நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை திருமணம் செய்ததை பற்றி சில கருத்துக்கள் சில தஃப்சீர்களில் காணக்கிடைக்கின்றன. அந்த கதைகளை விரிவாக அடுத்த பாகத்தில் காணலாம் இந்த திருமணத்தின் உண்மை நிகழ்வு என்ன❓ என்று இதில் பார்ப்போம். 1.யார் ஸைத் (ர) ? : இவர் அடிமையாக இருந்து, முகம்மது நபியால் விடுவிக்கப்பட்டவர். வளர்ப்பு மகனாக முகம்மது நபி இவரை அறிவித்திருந்தார் . “வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்“ எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை “ஸைத் இப்னு முஹம்மத்“ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம். ஸஹீஹ் புகாரி (4782) 2. அன்னை ஸைனப் அவர்கள யார்? இவர் முகம்மது நபி(ஸல்) அ...

அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல

. ஆயிஷா (ர) அவர்களுடனான திருமணம்: அன்னை ஆயிஷா (ர) அவர்களுடன் நபிகள் நாயகத்தின் திருமணம்- ஒரு அலசல் ✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅ நபியவர்கள் ஆயிஷாவை 6 வயதில் திருமணம் முடித்து 9 வயதில் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். தபரி மற்றும் முஸ்னத் அஹ்மதில் வரும் செய்தியின்படி ஜாபிர் பின் முத்யிம் என்பவருக்கே ஆயிஷா முதலில் பேசப்பட்டார். அபூபக்ர் முஸ்லிமாகவும் ஜாபிர் முஸ்லிமல்லாதவராகவும் இருந்தபடியால் ஜாபிரின் பெற்றோர் தம் மகனையும் மதமாற்றிவிடுவார் என அஞ்சி அந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார்கள் பின்பு தான் நபியவர்களுக்கு பேசப்பட்டார். அன்றைய கால அரேபியாவில் .  இளவயதிலேயே திருமணம் பேசிவிடும் வழக்கமும் இருந்தது. அதன்படியே இந்த திருமணமும் நடந்தது! (இது அந்த காலத்தில் இருந்த எந்த சட்டத்தையும் மீறி நடந்ததும் அல்ல. அதனால் அன்னையவர்கள்பாதிக்கப்படவுமில்லை.. எந்த உரிமையும் பறிக்கப்படவுமில்லை) -- ✳ஆயிஷாவுடன் நபி இல்லறத்தில் ஈடுபட்ட போது அவர் பருவமடைந்திருந்தார்: 6 வது வயதில் முடிக்கபட்ட ஆயிஷா 9 வது வயதிலே இல்லறத்தில் ஈடுபட்டார். அன்றைய கால அரேபியாவில் பெண்கள் 9 வயதில் பருவமடைந்து...

பைபிளின் பார்வையில் பலதாரமணம்!

படம்
பைபிளில் பலதாரமணம் Polygamy in the bible உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள இயலாத யூத கிறிஸ்தவர்கள் எப்படியாவது இதன் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்ற நோக்கில் இஸ்லாத்தின் மீது அதிகமான அவதூறுகளையும் விஷம பிரச்சாரங்களையும் பரப்பிவருகின்றனர்.அதில் ஒன்று தான் கிறிஸ்தவர்களில் அதிகமானோர் விமர்சிக்கும் ஒரு விஷயம் இஸ்லாமிய மார்க்கம் ஆண்கள் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய அனுமதி அளித்துள்ளது,இது பாவம் என்கின்றனர்! முதலில் இவர்கள் தங்களின் வேதம் இதைப்பற்றி என்ன கூறுகிறது என்று விளங்கினால் இவ்வாறு கூறமாட்டார்கள் ! பலதாரமணம் குறித்து பைபிளின் கருத்து என்ன? இது பற்றி சற்று பார்க்கலாம் ! √ ஒட்டுமொத்த பைபிளிலும் ஒரேயொரு வசனம் கூட பலதாரமணத்தை கண்டிப்பதாக எங்குமே இல்லை ! இன்னும் சொல்லப்போனால் கர்த்தரே பல திருமணங்கள் செய்து வைத்ததாக பைபிள் கூறுகிறது: * கர்த்தர் ஆதரித்த பலதாரம் :  ¤கர்த்தர் தாவீதுக்கு பல பெண்களை தானே மணமுடித்து கொடுத்தேன் என்கிறார்.  II சாமுவேல் 12:8 "உன் ஆண்டவனின் வீட்டை உனக்கு தந்து, உன் ஆண்டவனின் மனைவிகளை உன் ம...