பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 2
குர்ஆன் பைபிள் ஒப்பீடு பாகம் 2 பாக ம்1 இன் தொடர்ச்சி உள்ளடக்கம்- ஆபேல் காயின் கதை குர்ஆன் மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக வைத்த சமயத்தில் அவ்விருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பயபக்தியுடையவர்களிடம் இருந்துதான்” என்று கூறினார். ( அல்குர்ஆன் : 5:27) (மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னைக் கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.) ( அல்குர்ஆன் : 5:28) “என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்)...