அப்போஸ்தலர் நடபடிகள் செய்த திரிபுகள்
1.யூதாசை பற்றிய தீர்க்கதரிசனம் ¹⁶ "சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது." ¹⁷ "அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாயிருந்தான்." ¹⁸ "அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று." ²⁰ "சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது." (அப்போஸ்தலர் 1:16-20) முதலிலியே யூதாசு அநீதத்தின் கூலியால் ஒரு நிலத்தை சம்பாதித்தார் என்று 1:18 கூறுகிறது. ஆனால் உண்மையில் மத்தேயுவின் கூற்றுப்படி, யூதாசு நிலத்தை சம்பாதிக்கவில்லை! அவன் முப்பது காசை ஆலயத்தினுள் எறிந்துவிட, அந்நியனை அடக்கம் செய்வதற்கு யூத ஆசாரியர்கள் தான் நிலத்தை சம்பாதித்தனர்.(மத்தேயு 27:5-7) இனி தீர்க்கதரிசனம் பற்றி பார்ப்போம்: "அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது...