ஏசாயா 9:6 நபர் கடவுளாக?
ஏசாயா 9:6 இல் கூறப்படுபவர் கடவுளா?? ------------------------------------------------- ---------------------------------------------------- ------------------------------------------- ⁶ "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தாத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கார்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்." ⁷ "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றும் நியாயத்தீர்ப்பு நீதியினாலும் நிலைப்படுத்தும்படி, அவருடைய கர்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவடையவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்கிறது." (ஏசாயா 9:6-7) இதில் கூறப்பட்டவர் கடவுளா என்றால், 1.ஒரு பாலகன் பிறந்தார். பிறந்த பாலகன் எப்படி கடவுளாகவோ அவதாரமாகவோ முடியும்? ஏனெனில் பிறப்பவரை தேவனே கர்ப்பத்தில் படைக்கிறார். தேவனால் படைக்கப்பட்டவரோ அல்லது வேறொருவரால் படைக்கப்பட்டவரோ கடவுளல்ல! 2.குமாரன் கொடுக்கப்பட்டார்.. குமாரன் என்பவர் ஆண். இரு ப...