இடுகைகள்

வார்த்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஈஸா இறைவனது வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்)

 ஈஸா நபி இறைவனுடைய வார்த்தை (இஸ்லாமும் கிறிஸ்தவமும் முரண்படும் இடம்) -------------------------------------------------------------------------------- "கிறிஸ்தவத்தில் வார்த்தையானவர்" ----------- ஈஸா நபி அவர்கள் காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களால் வழிதவறிய யூதரான ஃபைலோ என்ற அறிஞர் இருந்தார்.   அவர் ஏக இறைவனுக்கு வார்த்தை ( லோகோஸ் ) என்ற பையன் இருப்பதாகவும், அவர் மூலமாக தான் சகல படைப்புகளையும் ஏக இறைவன் படைத்தார் என்றும் அந்த பையன் கடவுளுக்கும் படைப்புகளுக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறார் என்று நம்பினார். ஈஸா நபியிற்கு பின் பவுல் போதித்த கிறிஸ்தவத்தால் ஈர்க்கப்பட்ட யோவான் சுவிசேஷ ஆசிரியர் (பைபிளில் பவுலுடைய கடிதங்களாக்கு முன்பாக இவரது நூலை இணைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் பவுல் தான் முதலில் எழுதியவர்.) இவ்வாறு எழுதினார்: ஆதியிலே வார்த்தை ( லோகோஸ் ) இருந்தார். அந்த வார்த்தை கடவுளிடம் இருந்தார். (கடவுள் பையனும் கடவுள் தானே அதனால்) அவர் கடவுளாக இருந்தார். அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார். சகலமும் அவர் மூலமாகவே உண்டாகின. (யோவான் 1:1-3) என்று எழுதினார். இவர் எழுதியதை வேத...

ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2 தொடர்1  இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? ஆவியின் வகைகள் 6.தேவனுடை வார்த்தை என்பது நபரா? 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? 2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”   — 1:2  இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது.  திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது. ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா? உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல. மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த கா...