யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல பகுதி 1
லூக்காவின்படி இயேசு கடவுளல்ல யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல? ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ யோவான் சுவிசேஷம் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட வித்தியாசமானது. இது இயேசுவை பற்றி கூறும் கருத்து என்னவென்றால், இயேசு பூமியில் பிறக்க முன்பே வார்த்தையாக அவர் தேவனிடம் இருந்தார். அந்த வார்த்தை மூலமே சகலதையும் தேவன் படைத்தார். அந்த வார்த்தை மனிதனாக மாறியது. ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா மட்டும் தான். அந்த பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும். அந்த பிதா தான் இயேசுவை (வார்த்தையை) பூமிக்கு அனுப்பினார். அந்த வார்த்தை முன்பே ஒரு நபராக இருந்தது. ஆனாலும் ஒரே மெய்யான தேவனாக அவர் இருக்கவில்லை . மெய்யான தேவன் இவருக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஓரமாய் இருக்கிறார் என்பதே சுருக்கம்! (யோவானுடைய கருத்து தவறானது என்றும் இடையிடையே இதில் பதிகிறேன்.) 1.ஆதியிலே வார்த்தை இருந்ததாம். அது தேவனாயிருந்ததாம். அவர் மூலமே சகலதும் உண்டானதாம். ¹ "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ² அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். ³ சகலமும் அ...