இடுகைகள்

את லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதியாகமம்- தொடர் 1

ஆதியாகமம் பாகம் 1 பழைய ஏற்பாட்டின் ஆதியாகம புத்தகத்தை நாம் சற்று அலசலாம் என்று உள்ளோம். அதில் முதல் வசனத்தையும் அதை திரித்து கிறிஸ்தவர்கள் வைக்கும் வாதங்களையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம். உள்ளடக்கம்: 1.எலோஹீம் என்பது திரித்துவமா? 2.எத் (את) என்பது திரித்துவத்திற்கு சாதகமாக அமையுமா? 3.எழுத்து விளையாட்டு 1 - பென் 4.எழுத்து விளையாட்டு 2- பாராவும் பாரும் 1.“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”   — 1:1  1.எலோஹீமும் கிறிஸ்தவ திரிபும் அ.இங்கே தேவன் என்பதை குறிக்க "எலோஹிம் (אלהים) " என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.  இது "எலோஹ்ஹ (אלוֹהַּ)"என்பதன் பன்மையாகும். இதன் நேரடி அர்த்தம் "கடவுள்கள்" என்பதாகும்.  இதனால் கிறிஸ்தவர்கள் , "இது திரித்துவத்தை குறிக்கிறது " என்கிறார்கள். இது அறிவீனமான வாதமாகும். ஏனெனில் திரித்துவம் என்பது ஒரே கடவுள் மூன்று நபர்களாக செயற்படுகிறார்கள் என்பதாகும். இவர்கள் கருதுவது போல் வரவேண்டுமாயின் பன்மையில் வரவே கூடாது. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கு தான் ஆதாரமாக கருதவேண்டும். இது இவர்களது அடிமனதில் இருந்தே , இவர்கள...