சனி, 26 நவம்பர், 2022

பழைய ஏற்பாடு தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது பாகம் 1 (ஆதி-யாத்தி)

 *பைபிள் தேவனை எவ்வாறு சித்தரிக்கிறது*


1.ஆதியாகமம் - யாத்திராகமம்




1.எதிர்கால அறிவு இல்லாதவர் - மனிதன் கொடுமை செய்தபோது அவனை படைத்ததற்காக மனஸ்தாபப் பட்டார்- ஆதி 6:5-7




2.சாதாரண இயற்கை அறிவும் இல்லாதவர்- வானவில்லை குறித்து அதை நோவா காலத்தில் அடையாளமாக தன் வில்லை மேகத்தில் வைத்தேன் என்றும் மேகத்தை பூமிக்கு மேலால் கொண்டுவருகையில் அது தெரியும் என்கிறார் - ஆதி 9:13-14


ஆனால் உண்மையில் அது வில் கிடையாது.. ஒளி முறிவினால் உண்டாவதாகும். அதன் வடிவமும் முழு வட்ட வடிவம் ஆகும்.




3.அவர் மனிதன் நன்மை தீமை அறிவதை விரும்பாதவர். நன்மை தீமை அறிந்ததால் அவனை நிலையாக வாழ விட கூடாது என நினைப்பவர்- ஆதி 3:22-24




4.பொறுப்பு இல்லாதவர். ஆதாமைஏதேனில் விட்டு பொல்லாத பேசும் பாம்பையும் உள்ளே விட்டவர்.(ஆதி 3:1)


 அந்த பாம்பினால் தான் இயேசு சாக வேண்டி வந்தது. அதாவது இயேசுவை சாவடிப்பதற்காகவே ஆதாமோடு பாம்பை அனுப்பி திட்டம் போட்டுள்ளார் என தெரிகிறது




5.மிருகத்துக்கும் மனிதனுக்கும் பகைமையை உண்டாக்குபவர். பேசும் பாம்பு ஏவாளை வஞ்சித்ததற்காக ஏவாளுக்கும் பாம்புக்கும் ஏவாளது வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் பகையை மூட்டினாராம்- ஆதி 3:15



6.கொடூர சிந்தனையுள்ளவர். ஒரு பழத்தை தின்றதற்காக பெண்ணின் கர்ப்ப வேதனையை அதிகப்படுத்துவாராம். (ஆதி 3:16)



ஒரு தாய் பிள்ளை பெறும்போது எவ்வளவு செத்து பிழைக்கிறாள். அதையும் பெருக பண்ணுவாராம்.


காரணம் ஒரே ஒரு பழத்தை தின்றதற்காக.


பிறகு இவர் தன் மகனை கொன்றார் என கிறிஸ்தவம் சொல்கிறது


அந்த படி பார்த்தால், தன் மகனை கொல்ல போட்ட திட்டம் என புரிகிறது


இவ்வளவு சாபங்களையும் கொடுத்துவிட்டு ஒரு மிருகத்தை கொன்று ஆடை அணிவித்ததை (3:21) பேரன்பு என இந்த பாமரர்கள் கூறுவர்



ஆனால் அதன் பின் ஜீவ விருட்சத்தை அடையும் வழியை அடையாதிருக்க தூரத்தியதை இருட்டடிப்பு செய்துவிடுவார்கள்




7.தேவனுக்கு மறதியும் சிறிதளவு உண்டு. ஒளி முறிவால் ஏற்படும் வட்டவடிவத்தை வில் என கூறுவது மட்டுமின்றி, தன் உடன்படிக்கையை நினைவுகூற அதை பார்ப்பாராம் தேவன். (ஆதி 9:16)


இவருக்கு மறக்காது எனின் , ஏன் அதை பார்த்து நினைவுகூற வேண்டும்?


இவ்வாறு தாவீதையும் ஏன் மறந்தீர் என தாவீது கேட்கிறார்-சங் 42:9




8.கேடுள்ளவன் முழுசாக கேடுள்ளவனாக ஆகும்வரை காத்திருப்பவர். இப்போது எமோரியரின் அக்கிரமம் பெரிதாக இல்லை என்பதால் இஸ்ரேலியர் எகிப்திலிருந்து வரும்வரை அக்கிரமத்தை முழுமைப்படுத்த டைம் கொடுக்கிறார். (ஆதி 15:16)


ஆனால் விந்து விசயம் பற்றி பின்னர் வரும்போது அவரது அவசரத்தை கூறுகிறேன்




9.அவர் கடுங்கோபி. லோத்தின் மனைவி திரும்பி பார்த்ததற்காக உப்புத்தூணாக அவளை ஆக்கிவிட்டார். (சத்தம் கேட்டால் மறந்து திரும்பி பார்ப்பதெல்லாம் சகஜம் தானே) -ஆதி 19:26



10.அநீதியான தேவன்


தந்தையை கற்பழித்த பிள்ளைகளை ஒன்றும் செய்யாதவர் திரும்பி பார்த்ததற்காக அழித்த தேவன், தன் தகப்பனோடு விபச்சாரம் செய்தபோது ஒரு சிக்னல் கூட கொடுக்கவில்லை. லோத்திடம் சொல்லி தண்டிக்கவுமில்லை.(ஆதி 19:31-36)


ஆகவே இதில் பாரிய அநீதி உள்ளது




இஸ்ரேலியர் தன் எதிரிகளை இழிவு படுத்த புகுத்தியதாக இருக்கவும் கூடும்



அபிமெலேக் சாராவை கடத்தி சேர பார்த்தபோது , அவனது கனவில் போய் எச்சரித்தவர், லோத்திற்கு இதை வாய்திறக்க வில்லை என்பது என்ன சொல்ல




11.மீண்டும் அநீதி செய்யும் தேவன்.

சாரா தன் மகனை இஸ்மவேல் பரியாசம் செய்ததால் , அவனையும் அவன் தாயையும் வெளியே போட சொல்கிறார்.. தேவனும் அப்படியே செய் என சாரா பேச்சை கேட்கிறார்-ஆதி 21:9-12


பக்கச்சார்பு தேவனாக உள்ளார்




12.அவசரக்கார தேவன் -

தேவன் புத்தியோடு ஜெபத்துக்கு பதில் கொடுக்காமல், அறிவீனமாக செய்யும் ஜெபத்துக்கு பதில் கொடுத்து அநியாயமாக இன்னொருவனை பாதிக்கப்பட செய்கிறவர். (ஆதி 27:22-35)


இப்படி ஏசா வேசம் போட்டு வந்த யாக்கோபை ஈசாக்கு ஆசீர்வதிக்க, பொய் சொல்லி ஆசீர்வாதத்தை யாக்கோபு பெறுகிறார். தேவனும் அவசரப்பட்டு அதை ஏற்கிறது வேடிக்கை.


ஏனென்றால் அவர் அவன் கர்ப்பத்தில் இருக்கும்போதே தேவன் அதை தீர்மானித்திருந்தார்-ஆதி 25:23-25


அதாவது தேவன் ப்ளான் பண்ணி தான் அவசரப்பட்டிருக்கிறார் என இது காட்டுகிறது.


(அவர் நீடிய பொறுமையுள்ளவர் என இதே பைபிள் சொல்கிறது)




13.தேவன் மிக பயங்கரமானவராக பைபிள் காட்டுகிறது. பொறுமையற்றவர்.


 , ஓனான் உடலுறவில் விந்தை கீழே சிந்தியதற்காக அவனை கொலை பண்ணினார்- ஆதி 38:8-10


விந்து சிந்தியதற்காக கொன்றவர், மதுபானத்தை ஊற்றி தகப்பனை கற்பழித்த போது ஒன்றும் செய்யவில்லை.


இதற்கு பின் மறுமகள் வேசி போல வேடமணிந்து மாமனாரோடு விபச்சாரம் செய்தபோதும் எதுவும் செய்யவில்லை. .


விந்து கீழே சிந்தியது தான் இவருக்கு பிரச்சினையாக காட்டப்படுகிறது. இது தேவனை கேவலப்படுத்துகிறது




14.சிறிதளவு மறதியும் அவருக்கு உண்டு.

யாக்கோபிடம் உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. மாறாக இஸ்ரேல் எனப்படும் என பெயரை மாற்றினார்- ஆதி 32:28


பிறகு இதை மறந்து, மீண்டும் "யாக்கோபே யாக்கோபே " என்று அவரே கூப்பிடுகிறார்- 46:2


இதை எழுதியவர் கூட சற்று ஞாபகத்தோடு "யாக்கோபோடு பேசினார்" என சொல்லாமல் "இஸ்ரேலோடு பேசினார் " என கரக்டாக சொல்றார்... ஆனால் தேவன் மட்டும் மறந்துவிட்டார்




15.பார்வோனை கெடுத்து அழிப்பதற்காக, அவனது இருதயத்தை கடினப் படுத்தியவர் - யாத்திராகமம் 4:21


அதாவது அவனை அழிப்பதற்கு, இவரே அவனை பாவம் செய்ய வைக்கிறார்.


(இது தெரியாமல் கிறிஸ்தவர்கள் கதைவிடுவர்)



16.பார்வோனின் (எகிப்தியரின்) மூத்த மகன்களை கொலைசெய்ய திட்டம் போட்ட தேவன்.


அவன் இஸ்ரேலியரை போகவிடாவிட்டால், அவனது மூத்த பிள்ளைகளை கொல்வேன் என சொல்ல சொல்கிறார் - யாத்திராகமம் 4:22-23


ஆனால் அவனது இதயத்தை இவர் தான் கடினப்படுத்துவாராம். அதனால் அவன் போக விடமாட்டானாம். (யாத்திராகமம் 4:21)


பச்சையாக தெரிகிறது இவர் நோக்கமே எகிப்தியரின் தலைப்பிள்ளைகளை கொல்லுவது என்று




17.தேவன் அற்ப காரியத்துக்காகவும் கோபப்படுவார்.


மோசே தன் பையனின் ஆணுறுப்புத்தோலை வெட்டி சுன்னத் செய்யாததால் , மோசேயையே கொல்ல பார்த்தார். உடனே அவரது மனைவி பிள்ளையின் ஆணுறுப்புத்தோலை சுன்னத் செய்து "நீ என் புருஷன்" என சொன்னாள். அப்போது தான் கர்த்தர் சமாதானமாகி விலகினார் - யாத்திராகமம் 4:24-26


தேவனை நோக்கி நீ என் புருசன் என்றாளா அல்லது மோசேயை பார்த்து சொன்னாரா தெரியாது




18.பொய் பேசும் தேவன்.


ஆப்ரகாம் ஈசாக்கு யாக்கோபு ஆகியோருக்கு "யெகோவா" எனும் பெயரில் அறிமுகமாகவில்லை என்கிறார் -யாத்திராகமம் 6:3


ஆப்ரகாம் ஈசாக்கை பலிகொடுக்க போன மலைக்கு யெஹோவாயீரே என பெயரிட்டார்- ஆதி 22:14 


அதாவது தேவன் பெயர் யெஹோவா என அறிந்திருக்கிறார்.. 


இது ஒன்றும் ஆப்ரகாம் சொன்னதன் எபிரேய மொழியாக்கம் அல்ல. ஆப்ரகாம் எபிரேயன் என்றே பைபிள் சொல்கிறது



ஆப்ரகாமுக்கு யெகோவா என பெயர் தெரிந்திருந்தால், நிச்சயம் அந்த பெயரில் தேவன் அறியப்பட்டிருக்கிறார் என புரிகிறது.





19.புரியாத புதிரான கர்த்தர்


பார்வோனின் இருதயத்தை கடினப் படுத்துவேன் என்றார்-யாத்தி 7:3


அவனது இருதயம் கடினப்பட்டது- யாத்தி 7:13


பிறகு கர்த்தரே அவனது இருதயம் கடினமானதற்காக நதியையும் பாத்திரத்திலுள்ள நீரையும் இரத்தமாக மாற்றுமாறு சொல்கிறார் -யாத்தி 7:14-21



அதாவது குழந்தையை கிள்ளி குழந்தை அழுததும் மூச்சை அடக்கி சாவடிப்பது போன்றே இது உள்ளது.



20.தேவன் பார்வோனின் இருதயத்தை தான் அற்புதம் செய்ய கடினப்படுத்தியிருக்கிறார்


 அவனது இருதயத்தை கடினப்படுத்தியது, தேவன் அற்புதம் செய்வதற்கும், தேவன் செய்த அற்புதத்தை இஸ்ரேலியர் தம் பிள்ளைகளுக்கு சொல்வதற்கும் , கர்த்தர் நானே என அறிவதற்குமாம். - யாத்திராகமம் 10:1-2



அதாவது ஒருத்தருக்கு புத்தி சொல்ல , மற்றவரின் இதயத்தை கடினப் படுத்திவிட்டு, அவன் இதயம் கடினப்பட்டதற்காக அவனையே தண்டிக்கிறார்.



எவ்வளவு நீதி




21.தான் மகிமைப்பட பார்வோனின் இருதயத்தை கடினப் படுத்தி அவனை சாகடித்தார் - யாத்திராகமம் 14:17




22.தன் மக்களை நாசமாக்க தப்பான தீர்க்கதரிசியை தெரிவு செய்தார்.


தேவன் முன்னறிவின்றி தீர்க்கதரிசியை தெரிவு செய்தாரா அல்லது மக்களை கெடுத்துக் போட தீர்க்கதரிசியை தெரிவு செய்தாரா?


ஆரோனிடம் தம்மை எகிப்திலிருந்து கொண்டுவந்த மோசேக்கு என்ன நடந்ததோ தெரியாது. அதனால் நமக்கு கடவுள்களை உண்டாக்க மக்கள் சொல்ல, ஆரோன் ஆபரணங்களை கேட்டெடுத்து மாட்டு குலதெய்வத்தை செய்வித்தாராம். (யாத்திராகமம் 32:1-6)


மக்களை வழிகெடுக்கும் ஒருவரை தெரிவு செய்யும் அளவுக்கு அறிவில்லாத தேவனா இவர்?


பிறகு இதற்காக மக்களை அழிக்கவும் பார்க்கிறார்-(யாத்திராகமம் 32:10)


இதற்காக ஒரு சிலரை வைத்து மறுசிலரை கொலைபண்ணுவிக்க தேவன் கட்டளையிட்டார் -யாத்திராகமம் 32:26-27


இவ்வாறு 3000 பேரை கொலை செய்தனர் -யாத்திராகமம் 32:28



அதாவது 3000 பேரை கொல்லுவதற்கு திட்டம் போட்டு ஆரோனை தெரிவுசெய்தாரோ??




23.மக்களை அழிக்க நினைத்த தேவனும், அழித்தால் எகிப்தியர் தப்பாக பேசுவர் என ஞானத்தை தூண்டிய மோசேயும்


மாட்டை வணங்கியதற்காக தேவன் அவசரப்பட்டு மக்களை அழிக்க பார்த்தார். உடனே மோசே, அப்படி செய்தால் ,



மலைகளில் கொன்று போடவும், பூமியின் மேல் இல்லாமல் அழிக்கவுமே எகிப்திலிருந்து கொண்டு போனார் என எகிப்தியர் சொல்வர் என தேவனுக்கு புத்தி சொல்கிறார் - யாத்திராகமம் 32:12




24.தன்னை கட்டுப்படுத்த இயலாது அளவு கோபமுள்ள தேவன்


அவர் இஸ்ரேல் மக்கள் நடுவே போகாமல், தன் தூதனை அனுப்புவாராம். அவர் போனால் கடுப்பாகி இவர்களை கொன்று போட்டாலும் கொன்றுபோட்டுவிடுவார் என தன்னை குறித்து சொல்கிறார் - யாத்திராகமம் 33:2-3




25.தேவன் எல்லோரோடும் அன்பானவரல்ல.


அவர் யாருடன் இரக்கமாக சித்தமாயிருக்கிறாரோ , அவர்களோடு தான் இரக்கமாயிருப்பார் -யாத்திராகமம் 33:19



இவை குர்ஆனை அரைகுறையாக திரிப்போருக்கு சமர்ப்பணம்


அடுத்த பாகம்

தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?



செவ்வாய், 22 நவம்பர், 2022

எலோஹிமும் திரித்துவமும்

 "எலோஹிம்" என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா? 

--------------------------------------------------------------------------------



பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பொய்யிற்கே பிதாவாக ஆகும்விதமாக பொய்களை கூறுவர். அதில் முக்கியமான பொய் தான் எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரம் என கூறுவதாகும்.



இதை பிரித்து அலசுவோம்


1.திரித்துவம் என்றால் என்ன?


2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?


3.எலோஹிம் என்றாலே பன்மையா?


**************************************************


1.திரித்துவம் என்றால் என்ன?

.......


பிதா ,மகன், பரிசுத்த ஆவி ஆகிய வெவ்வேறான மூவரும் ஒரே கடவுளாக உள்ளார்கள் என்பதே திரித்துவம் ஆகும்.



**************************************************


2.எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமா?




எலோஹிம் என்றால் நேரடி அர்த்தம் கடவுள்கள் என்பதாகும்.. அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்பதே மொழிரீதியான அர்த்தம்.




திரித்துவ நம்பிக்கை படி ஒரு கடவுள் தானே மூன்று நபர்களாக உள்ளார்.. ஆகவே எலோஹிம் என்பது எப்படி திரித்துவத்திற்கு ஆதாரமாகும்?


ஏனெனில் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்பதே திரித்துவம்.. கடவுளின் எண்ணிக்கை மூன்று என்பதல்ல..


அப்படியாயின், "கடவுள்கள்" என்பதை வைத்து ஒரு கடவுள் மூன்று நபர்களாக உள்ளார் என்றும் கடவுளின் எண்ணிக்கை ஒன்று என்றும் சொல்ல முடியுமா?



அதாவது இவர்களது வாயினாலேயே தாங்கள் பல தெய்வ கொள்கையுடையோர் என்பதை தம்மை அறியாமலேயே சாட்சி கொடுக்கிறார்கள்.



இவர்களது திரித்துவத்திற்கு ஆதாரமாக வரவேண்டுமானால், "ஒரு கடவுள்" என்று கூறி, "அவர் வெவ்வேறான மூன்று நபர்களாக செயற்படுகிறார்" என்று நேரடியாக வரவேண்டும்... "கடவுள்கள்" என்பது ஒருநாளும் இவர்களது திரித்துவத்திற்கு ஆதாரமல்ல.. மாறாக தம்மை பலதெய்வ வணங்கிகள் என்பதற்கு தான் அவ்வாறு கூறுவது ஆதாரமாக அமையும்!!!





**************************************************


3.எலோஹிம் என்றாலே பன்மையா??



எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமாக அமையாது என பார்த்தோம். இனி இவ்வார்த்தையின் அர்த்தமே பன்மையானதா என பார்ப்போம்!




பழைய ஏற்பாட்டில் எபிரேயத்தில் பல தேவர்களை குறிக்கவும், தேவதூதர்களை குறிக்கவும், நியாயதிபதிகளை குறிக்கவும், ஒரே இறைவனை குறிக்கவும், வேறு மதத்தவரது ஒரே கடவுளை குறிக்கவும், ஒரு வல்லமை மிக்க நபரை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.




1.பல தேவர்கள்

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம் (யாத்தி 20:3) 


தேவர்கள் எனுமிடத்தில் எலோஹிம் என்றே உள்ளது.



2.தேவதூதர்கள்

"நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்" (சங்கீதம் 8:5)


இங்கே தேவதூதர்கள் என்பதிலுள்ள எபிரேய வார்த்தை "எலோஹிம்" என்பதாகும்.  


(இதேபோல் ஆதியாகமம் 3:5 உம் தேவதூதர்கள் என்றே வரவேண்டும்.. தேவர்கள் என மொழிபெயர்த்துள்ளனர்)



3.ஒரே இறைவன்


"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார்" -ஆதி 1:1


இப்படி இந்த ஒரே தேவனுக்கு பொதுவாக எபிரேயத்தில் எலோஹிம் என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது.





4.வேறு மதத்தவரின் ஒரு தேவனை குறிக்க


“"கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்."”

  நியாயாதிபதிகள் 8:33 


பால்பேரீத் என்ற ஒரு கடவுளை "எலோஹிம்" என்றே எழுதப்பட்டுள்ளது.


“"மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்."”

  — 1 இராஜாக்கள் 18:27 



இங்கேயும் ஒரு போலி கடவுளை எலோஹிம் என்று பன்மையிலேயே கூறப்பட்டுள்ளது







5.நியாயதிபதிகளை குறிக்க


“"அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினால் குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்."”

  — யாத்திராகமம் 21:6 


இங்கே நியாயாதிபதிகள் எனுமிடத்தில் "எலோஹிம்" என்றே உள்ளது.





6.மோசே எனும் தீர்க்கதரிசி


“"கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்."”

  — யாத்திராகமம் 7:1 


இங்கே உன்னை தேவனாக்கினேன் என்பதிலுள்ள தேவன் எனுமிடத்திலுள்ள எபிரேய வார்த்தை"எலோஹிம்" என்பதாகும்.



ஆகவே எலோகிம் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் என்ற அர்த்தம் அல்ல என்று இதிலிருந்து தெளிவாகிறது.




**************************************************



ஆகவே எலோஹிம் என்பது திரித்துவத்திற்கு ஆதாரமென கூறுவது மடமை ஆகும்.. வேண்டுமானால் பலதெய்வ கொள்கைக்கே ஆதாரமாக அமைய இயலும். ஆனாலும் எலோஹிம் என்பது கடவுள் அல்லாத நபர்களுக்கும், ஒருவரான தனி நபருக்கும் , தனி போலி கடவுளுக்கும் கூட இதை பாவிக்கப்பட்டிருப்பதை காணலாம். அதாவது ஒரு போலிக் கடவுளை குறிக்கவும் எலோஹிம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. 


ஆகவே போதிய அறிவின்றி தம்மை பெரிய ஞானிகள் போல் உயர்த்துவோர் நிச்சயம் தாழ்த்தப்படுவர்!!!




வெள்ளி, 18 நவம்பர், 2022

தவ்ராத் தான் பழைய ஏற்பாடாக?

 தவ்ராத் தான் பழைய ஏற்பாடா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக பாமர கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டை காட்டி இது தான் தவ்ராத் என்றும் புதிய ஏற்பாட்டை காட்டி இது தான் இன்ஜீல் என்றும் கதைவிடுவார்கள்.. பாமர முஸ்லிம்கள் கூட அவ்வாறு நம்பும் நிலையில் தான் உள்ளார்கள் . 


இதில் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவர்கள் , முகம்மது நபியும் நாமும் தவ்ராத்தை பின்பற்றாதிருக்கிறார்கள் என்று மடத்தனமான வாதத்தையும் சிலபோது முன்வைக்கிறார்கள். உதாரணமாக ஒட்டக இறைச்சி விசயத்தில் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர். ஏனெனில் முஸ்லிம்கள் ஒட்டக இறைச்சி சாப்பிடுவர். ஆனால் யூதர்களுக்கு அது ஹராம் ஆகும். ஆகவே இவற்றை விரிவாக ஆராய்வதற்கு சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம்.


உப பிரிவுகள்

அ.தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி என்ன?

ஆ.இஸ்லாமிய நம்பிக்கை படி தவ்ராத் என்பது என்ன?

இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தோரா என்பது என்ன?

ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா என்ன?

உ.தற்போதுள்ள தோராவின் நிலை.

ஊ.தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்ப வேண்டும்?

எ.தவ்ராத்தை நாம் பின்பற்ற வேண்டுமா?


ஒவ்வொன்றாக பார்ப்போம்:


*****************************************






அ. தவ்ராத் என்பது யூத நம்பிக்கை படி எது?



யூத நம்பிக்கை பிரகாரம் அவர்கள் தம் வேதத்தை "தநாக் " என கூறுவார்கள்.


அதிலுள்ள "த" என்பது தவ்ராத்தையும், "ந" என்பது நவியீம் (தீர்க்கதரிசிகள்/நபிமார்கள். உதாரணமாக ஏசாயா, எசேக்கியேல்,எரேமியா, சகரியா போன்ற புத்தகங்கள்), "க" என்பது கித்வீம் என்பதை குறிக்கும். அதாவது ஏனைய எழுதப்பட்ட புத்தகங்களை இது குறிக்கும்.




தவ்ராத் என இவர்கள் கூறுவது பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களை ஆகும்.


அதாவது- ஆதியாகமம் (Genesis) , யாத்திராகமம் (Exodus) , லேவியராகமம் (Leviticus), எண்ணாகமம் (Numbers), உபாகமம் (Deuteronomy) ஆகிய ஐந்து புத்தகங்களை சேர்த்து தவ்ராத் என்கிறார்கள்.


ஆதியாகமம் என்பது உலக படைப்பு முதல் யோசேப்பு வரையான காலம் வரைக்கும் கூறுகிறது. அதாவது இஸ்ரேலியர் எகிப்தில் குடியேறும் வரையான கதையை கூறுகிறது.


யாத்திராகமம் என்பது , இஸ்ரேலியர் எகிப்தில் ஒடுக்கப்பட்டதையும் அங்கே மோசே தோன்றி இஸ்ரேலியர்களை இரட்சித்து எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டு சென்றபோது நடந்த நிகழ்வுகளையும் கூறுகிறது. இடையிடையே சட்டங்கள் கூறப்படுகின்றன.


லேவியராகமம் இதில் பெரும்பாலும் பலிகள் பற்றி கூறப்படுகின்றது. இடையிடையே சட்டங்கள் அதிகமாக கூறப்படுகின்றதோடு சில நிகழ்வுகளும் கூறப்படுகின்றன. அவை கூட சட்டங்களோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.



அடுத்து, எண்ணாகமம், இதில் இவர்களது எண்ணிக்கை தொடர்பாக கூறப்பட்டிருக்கிறது. யாத்திராகமம் புத்தகத்தில் சொல்லப்பட்ட அதே நிகழ்வுகள் சிறு மாற்றங்களோடும் முரண்பாடுகளோடும் இதிலும் எழுதப்பட்டுள்ளது. யாத்திராகமத்தில் சொல்லப்படாத நிகழ்வுகளும் இதில் எழுதப்பட்டுள்ளன.


உபாகமம்- இதுவே தோராவின் கடைசி புத்தகம். இதில் மோசே மரணித்து அடக்கம் செய்யப்பட்டது வரை கூறப்பட்டுள்ளது. இது யாத்திராகமம் , எண்ணாகமம் கூறிய நிகழ்வுகளை சுருக்கமாக கூறுவதோடு முரண்பட்டும் கூறுகிறது. இதிலும் அதிக சட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

*****************************************


ஆ. இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் தவ்ராத் என்பது என்ன?




தவ்ராத் என்பது மூஸா நபி அவர்களுக்கு இறைவனால் எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும். (புகாரி 4476,6614, 4736,

அதாவது தவ்ராத் என்பது இறைவனால் மூசா நபியிற்கு எழுதிக்கொடுக்கப்பட்ட வேதம் ஆகும்.

அதில் நேர்வழியும் ஒளியும் உண்டு.(5:44)

*****************************************




இ.பழைய ஏற்பாட்டு பிரகாரம் தவ்ராத் 



இதை நியாயப்பிரமாணம் என சொல்வார்கள்.. எபிரேய பாசையில் தோரா எனப்படும்.



1.தேவன் எழுதி கொடுத்தது


“"அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."”

  — 2 இராஜாக்கள் 17:37 (TBSI)


இதன்படியும் தோரா என்பது தேவன் எழுதி கொடுத்தது ஆகும்.



2.மோசே மூலமாக தேவன் இஸ்ரேலுக்கு கொடுக்கப்பட்டதாகும்.


“"நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான்."”

  — 2 நாளாகமம் 33:8 (TBSI) மேலும் 34:14

நெகேமியா 8:1, 1:29


3.அது கர்த்தருடைய தோரா -எஸ்றா 7:6, நெகேமியா 8:8



4.முதலில் மோசே இதை எழுதினார். பிறகு அதை யோசுவா பேர்த்து எழுதினார்.


“இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.”

  — Joshua 8:32 மேலும் 24:26




இதன்படி தேவன் எழுதிக் கொடுத்ததை, மோசே பேர்த்து எழுத பிறகு யோசுவா பேர்த்தெழுதினார் என்று தெளிவாகிறது.


*****************************************


ஈ.புதிய ஏற்பாட்டின்படி தோரா 


பவுல் இதை தேவன் நேரடியாக கொடுத்ததாக நம்பவில்லை.. தேவதூதன் மூலமாக மத்தியஸ்தனாகிய மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்கிறார்.


“"அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது."”

  — கலாத்தியர் 3:19 (TBSI)


ஸ்தேவானும் ஆவி தூண்டி இவ்வாறு சொன்னதாகவே அப்போஸ்தலர் சொல்கிறது


“"தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்."”

  — அப்போஸ்தலர் 7:53 (TBSI)



இதன்படி நியாயப்பிரமாணமாகிய தோரா என்பது தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டது என்பதே புதிய ஏற்பாட்டு நம்பிக்கை



உ. தற்போதுள்ளது தோராவின் நிலைப்பாடு





 மோசேயிற்கு தேவன் எழுதிக் கொடுத்த அல்லது புதிய ஏற்பாட்டு பிரகாரம் தேவதூதன் மூலமாக மோசேயிடம் கொடுக்கப்பட்டதாக இது இருக்கிறதா?



நிச்சயமாக இல்லை.. மாறாக மோசேயை சம்பந்தமில்லாத நபர் போல் படர்க்கையிலேயே அதிகமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மோசேயின் மரணமும் அவர் அடக்கம்ஜபண்ணப்பட்டதும், மக்கள் துக்கம் கொண்டாடியதும் கூட எழுதப்பட்டுள்ளது (உபாகமம் 34)


ஆக அநேகமானவை மோசே அல்லாத நபர் மூலமாக மோசேயோடு சம்பந்தப்பட்ட வரலாறே இதில் எழுதப்பட்டுள்ளது.



தோராவுக்கு விளக்கமாக எழுதப்பட்ட பகுதிகளும் தோராவில் இணைக்கப்பட்டுள்ளது என்பதே இதிலிருந்து தெளிவாகிறது.


யூத போதகர்களது விளக்கங்களும் அவர்கள் அறிந்துவைத்திருந்த கதைகளும் இதில் புகுந்துள்ளது.




ஆனாலும் உண்மைக்கு வழிகாட்டுவதாக அது உள்ளது.. அதாவது இறைவனது தவ்ஹீதை பேசக்கூடியதாக இன்றும் அது இருக்கிறது. இதிலுள்ள குறைபாடு இறைவன் மோசேயிற்கு கொடுத்து மோசே எழுதி பின் யேசுவா எழுதியதற்கும் பின் வேறு மக்கள் எழுதியதிலேயே அவரவர் தம் குறிப்புகளாக தமக்கு தெரிந்ததை விளக்கமாக தமது பிரதிகளில் எழுதியிருக்கலாம். 


அடிவாங்கி உதைவாங்கி திரிந்த இவர்கள் அதுவும் தேவன் மோசேயிற்கு சொன்னதாக நினைத்திருப்பார்கள்!!




உதாரணமாக,


1.தேவன் தான் மனிதனை பூமியில் படைத்தற்காக மனஸ்தாபப்பட்டார் -ஆதி 6:5-6 என்று சொல்கிறது.


தேவன் முக்காலமும் அறிந்தவர். அவர் படைக்க முன்பே மனிதன் அக்கிரமம் செய்வான் என்று அவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் தான் செய்ததை நினைத்து மனஸ்தாபப்படுவதற்காக படைத்தாரா என்ன?


நிச்சயம் இது பிற்காலத்தில் வந்த பேதமை கொண்ட ரபீகள் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும்..



2.விபச்சாரக்கதைகள் எழுதப்பட்டுள்ளது.


உதாரணமாக தந்தைக்கு மது கொடுத்து பிள்ளை பெற்ற புத்திரிகள் என்று லோத்தின் மகள்களை சித்தரிக்கிறது -ஆதி 19:30-36


இது லோத்தின் பிள்ளைகளோடு கொண்ட குரோதத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது தம் கற்பனை கதைகளை விளக்கமாக சொருகியிருக்கலாம்.


அதேபோல யூதாவின் மகன் ஓனான் என்பவர் தன் இறந்த சகோதரனின் மனைவியை சேர்ந்த போது விந்தை கீழே சிந்தியதற்காக தேவன் கொன்றார் என எழுதப்பட்டுள்ளது. (ஆதி 38:8-10)


இறந்த சகோதரனின் மனைவியை முடிக்கும் சட்டமே இதற்கு 400 வருடம் கழித்து தான் கொடுக்கப்பட்டது.


அதுவும் பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட சட்டத்திற்கமைய முற்காலத்திலேயே தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக எழுதியுள்ளார்கள்.


அதேபோல யூதா தன் மருமகளோடு அவளென அறியாமல் விபச்சாரம் செய்ததாகவும் அதற்கு மட்டும் தேவன் வாயே திறக்கவில்லை என்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது (அதே ஆதி 38)



3.தேவனது பெயரில் அநீதியான சட்டம்:


யூதன் தன் சகோதரனான சக யூதனிடம் வட்டி வாங்க கூடாது.. ஆனால் அந்நியனிடம் வட்டி வாங்கலாம் (உபாகமம் 23:19-20)


உன் சகோதரனிடம் வட்டி வாங்காதே என்ற போதனைக்கு விளக்கமாக அந்நியனிடம் நீ வாங்கினால் தப்பு கிடையாது என்பதை யாரோ புகுத்தியிருக்க வேண்டும்.



ஏனெனில் ஒட்டுமொத்தமாக வட்டிக்கு கொடுப்பதையே பாவமாக எசேக்கியேல் 18:8,13,17, 22:12 சொல்கிறது.


ஆகவே யாரோ இதில் விளக்கம் எனும் பெயரில் தம் மடத்தனமான கருத்தை எழுதியிருக்கிறார்.



4.மாட்டு கன்றின் சிலை செய்து வணங்குவித்த ஆரோன்:



ஆரோன் தான் மாட்டுக்கன்றின் சிலை செய்து வணங்குவித்த நபர் என்று இந்த தோரா சொல்கிறது. (யாத்திராகமம் 32:1-5, உபாகமம் 9:20)


ஆனால் சங்கீதம் 106:19, நெகேமியா 9:18 ஆகியவை மக்கள் தான் செய்தார்கள் என்கிறது. 


ஆரோன் அவர்களுக்கு பொறுப்பாக வைக்கப்பட்டிருந்ததால், ஆரோன் தான் இதை செய்வித்தார் என்று பேதமை கொண்ட ரபீகள் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அதுவும் இறுதியில் வேதத்தின் பகுதியாகிவிட்டது.




ஆகவே தோராவில் இவர்களது கற்பனைகளும் விளக்கங்களாக புகுத்தப்பட்டு அதுவும் வேதம் போன்றே காட்சியளிக்கின்றது.






ஊ. தோராவை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பவேண்டும்?



இறைவன் அருளிய தவ்றாத்தில் நேர்வழியும் பேரொளியும் உண்டு.


இறைவன் இறக்கிய தவ்றாத்தின் பகுதிகளும் இவர்கள் கூறும் தவ்ராத்தில் உண்டு.



ஆகவே இறைவன் அருளியதை நம்புகிறோம் என கூறி, இறைவன் மூஸா நபியிற்கு தவ்ராத்தை கொடுத்தான் என்றும் அதில் நேர்வழியும் பேரொளியும் உண்டு என நம்பினாலே போதுமானது,


 


"வேதக்காரர்கள் (யூதர்கள்) தவ்ராத்தை எபிரேய பாசையில் ஓதி , முஸ்லிம்களுக்கு அதை அரபுமொழியில் விளக்கம் கூறுவோராக இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேதக்காரர்களை உண்மைப் படுத்தி நம்பவும் வேண்டாம் மேலும் நிராகரிக்கவும் வேண்டாம்! மாறாக நாங்கள் அல்லாஹ்வையும் அவன் எங்களுக்கு இறக்கியதையும் உங்களுக்கு இறக்கியதையும் நம்பினோம் என்று கூறுங்கள் " என (முஸ்லிம்களுக்கு) சொன்னார்கள். (புகாரி 7362)




ஆகவே அதை அடிமட்டம் வரை அலச தேவையில்லை.. அல்லாஹ் தவ்ராத்தை இறக்கினான் என்பதை நம்பினாலே போதுமானது





எ.தவ்ராத்தை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமா?



நிச்சயமாக கிடையாது..


ஏனெனில் மூசா நபி உயிரோடிருந்தாலும் அவர் முகம்மது நபியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை.



அதுமட்டுமின்றி ஈசா நபி வந்தாலும் அவரும் முகம்மது நபியின் ஷரீஅத் படியே தீர்ப்பளிப்பார்.



وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏

மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

(அல்குர்ஆன் : 3:81)




ஆகவே தவ்றாத்தை நாம் பின்பற்ற தேவை இல்லை... குர்ஆன் போதுமானது.



மேலும் தவ்றாத் இஸ்ராயீலியர்களுக்காகவே கொடுக்கப்பட்டதேயன்றி , அனைவருக்குமானதாக அல்ல...


இதையே பழைய ஏற்பாடும் சொல்கிறது (2 நாளாகமம் 33:8 , 2 இராஜாக்கள் 17:37).





சோ தவ்ராத் துல்லியமான நிலையில் தற்போது இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை... காரணம் அது நாம் பின்பற்றுவதற்கு மோசேயிற்கு தேவன் கொடுக்க வில்லை.



ஆகவே தவ்றாத் என்பது கடவுள் எழுதிக் கொடுத்ததை மோசே எழுதி அதை மீண்டும் பிறகு யோசுவா எழுதியதாகும்.


அதனோடு பிற கருத்துக்களும் விளக்கங்களும் பொய்களும் கலந்தே தற்போது உள்ளது.


அது தூய்மையான நிலையில் இருந்தாலும் அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை!!!!




ஞாயிறு, 13 நவம்பர், 2022

சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்குமா

 சங்கீதம் 22:16 சிலுவையில் அறையப்படுவதை குறிக்கிறதா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக ஆதிமுதலே கிறிஸ்தவர்கள் தம் நிலைப்பாட்டை சரி என காட்டுவதற்கு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் என வசனங்களை திரித்து காட்டுவது வாடிக்கையாகவே இருந்துவந்தது. அந்த வகையில் மூன்றாம் நான்காம் நூற்றாண்டு கண்டுபிடிப்பே சங்கீதம் 22:16 சிலுவையில் கையும் காலும் உருவக்குத்தப்படுவதை குறித்த தீர்க்கதரிசனம் என்பதாகும்.



இதை உப பிரிவுகளாக பிரித்து ஆராய்வோம்.


1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை?




2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப் பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர்



3.இதன் சரியான அர்த்தம் என்ன?


4.சில பிரதிகளில் "யொத்" எழுத்துக்கு பதிலாக "வாவ் " எழுத்து எழுதப்பட்டுள்ளதா? அதனால் இவர்களுக்கு சார்பாக இது அமையுமா?



5.ஒரு பேச்சுக்கு இவர்கள் சொல்லுவது போன்றே இருந்தால் கூட இயேசுவுக்கு பொருந்துமா?






********




1.புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இவ்வசனம் ஏன் தென்படவில்லை? ஆவி ஏன் இவ்வசனத்தை மேற்கோள் காட்ட உந்தவில்லை?





புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பழைய ஏற்பாட்டை திரிப்பதில் வளைப்பதில் கைதேர்ந்தவர்கள். ஒரு வசனம் தம் கொள்கைக்கு சற்று பொருந்துவது போல் தோன்றினாலும் அதை மேற்கோள் காட்டிவிடுவார்கள்.



உதாரணமாக சிலுவையிலிருக்கும் இயேசுவை ரோம் சிப்பாயிகள் இருவர் பார்த்ததால், "அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கி பார்ப்பார்கள் என்று வேறோரு வேதவாக்கியம் சொல்கிறது " (யோ 19:37) என்று சொல்கிறார். ஆனால் சகரியா புத்தகமோ யூதர்களை குறித்து அவர்கள் கடைசிகால யுத்தத்தில் எதிரிகள் குத்தினவன் விசயத்தில் என்னை நோக்கி பார்ப்பார்கள், ஒரே பேரானவனுக்கு அழுவது போல் அழுவார்கள் என சொல்லப்பட்டிருப்பதை கூட விடாமல் இயேசுவை யார் பார்த்தார்கள் எப்போது பார்த்தார்கள் என்பதை கூட ஆராயாமல் தீர்க்கதரிசனம் என சொல்லிவிடுவார்கள்.


இவர்கள் தம் புதிய ஏற்பாட்டு நூல்களில் சங்கீதம் 22 இலிருந்து அநேக வசனங்களை இயேசுவின் விசயத்தில் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக மேற்கோள் காட்டியுள்ளார்கள்.


உதாரணமாக "என் தேவனே! என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்?" (சங் 22:1) ஐ இயேசு சொன்னதாக மத் 26:46, மாற் 15:34 கூறுகின்றன. ஆனால் சங்கீதம் 22:1 இல், கடைசி காலத்தில் மேசியா இவ்வாறு கத்துவார் என சொல்லப்படவுமில்லை. ஆனாலும் அதை கூட விடாமல் பதிந்துள்ளனர்.




அதே சங் 22:8 "இவன் கர்த்தர் மேல் நம்பிக்கையாய் இருந்தானே! அவர் இவனை விடுவிக்கட்டும். இவன் மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் இரட்சிக்கட்டும் என்கிறார்கள்" இதை கூட விடாமல் இயேசுவுக்கு நடந்ததாக மத் 27:43 எழுதப்பட்டுள்ளது. (ஆனால் இங்கு அது தீர்க்கதரிசனம் என கூறப்படவில்லை)



சங் 22:18 “"என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்."”


இதை கூட இயேசுவின் விசயத்தில் தீர்க்கதரிசனம் நிறைவேறியதாக மத் 27:35, மாற் 15:24,லூக் 23:34, யோ 19:24 கூறுகின்றன. அதாவது இவ்வசனத்தை பொருந்த செய்யும் விதமாக கதையையே எழுதியுள்ளனர்.



இதில் கூட மெசியாவின் ஆடை கடைசி காலத்தில் சீட்டுப்போட்டு பங்கு போடப்படும் என்று கூறப்படவே இல்லை. மாறாக என் ஆடைகளை பெற்றுக்கொள்ள சீட்டுப்போடுகிறார்கள் என்றே தாவீது சொல்கிறார். அவரது எதிரிகள் தனக்கு செய்யும் அநியாயங்களை கூறி ஜெபிப்பதை, ஏதோ இயேசு பாடுவது போல் எழுதியிருக்கிறார்கள்.



இப்பட்டவர்கள் இந்த 22:16 வசனத்தை கண்டால் விட்டுவிடுவார்களா என்ன?


"என் கால்களிலும் என் கைகளிலும் உருவ குத்தினார்கள் " என்பதை கண்டிருந்தால் அதை விட்டிருப்பார்களா?


என் கால்களையும் என் கைகளையும் உருவ குத்தினார்கள் என்று தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இது நடந்தது அல்லது நிறைவேறியது என கதை விட்டிருப்பார்களே.



ஆனால் வேடிக்கையாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவரும் தம் எழுத்துக்களில் இதை எழுதவில்லை..



ஆவியானவர் தூண்டி எழுதினார்கள் என இவர்களது நம்பிக்கை.. அப்படியிருந்தால் ஆவியானவர் இவ்வளவு முக்கியமான தீர்க்கதரிசன வசனத்தை விட்டுவிடுவாரா என்ன?


முந்திய பிந்திய வசனங்களை மேற்கோள் காட்ட தூண்டிய ஆவியானவர், 16வது வசனமான முக்கிய வசனத்தை விடுவாரா?


ஆகவே இதிலிருந்தே புரிகிறது இது பிற்கால கிறிஸ்தவர்களது திரிபு என்று.



*****"*"*



2.மூன்றாம் நான்காம் நூற்றாண்டு சபைப்பிதாக்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்? அல்லது உண்டாக்கினர்??




இது ஒன்றும் கண்டுபிடிப்பு அல்ல.. சங்கீத புஸ்தகத்தின் கிறிஸ்தவ கிரேக்க மொழியாக்கத்தில் "உருவக்குத்தினார்கள்" என மொழிபெயர்த்திருந்தார்கள். அதிலிருந்தே இந்த வசனத்தை மேற்கோள் காட்ட துவங்கினர். அல்லது இவர்களாக கிரேக்கத்தில் தவறாக மொழிபெயர்த்து விட்டு தீர்க்கதரிசனம் என வாதிட துவங்கினர் என்பதே உண்மையாகும்..



வேடிக்கையாக யூதர்கள் இயேசுவுக்கு முன்பே கிரேக்கத்தில் தோராவை மட்டும் மொழியாக்கம் (septuagint) செய்திருந்தனர்.. ஆனால் ஏனைய புத்தகங்களை கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யவில்லை.. பிற்காலத்திலேயே யூதர்கள் செய்தனர்.. அவர்களுடைய மொழிபெயர்ப்பு இன்றும் Googleஇல் பெற்றுக்கொள்ளலாம்.. அதில் இவ்வாறு உருவக்குத்தியதாக இல்லை!



*****


3. இதன் சரியான அர்த்தம் என்ன?


உருவக்குத்தினார்கள் என்பதற்குரிய எபிரேய வார்த்தை "காரூ" (כָר֥וּ) என்பதாகும். 


כָ-காஃப்

ר֥-ரா

וּ-வாவ்


ஆகிய மூன்று எழுத்துக்களின் சேர்க்கை ஆகும் .


இதே வார்த்தை எரேமியா 18:20 இல் இடம்பெறுகிறது.




ஆனால் சங்கீதம் 22:16 இல் இருப்பதுவோ க-அரீ (כָּ֝אֲרִ֗י) என்பதாகும். அதாவது ஒரு சாங்கத்தைப்போல (இருக்கிறார்கள்) என்பதாகும்.


இதிலுள்ள எழுத்துக்கள்:


כָּ- காஃப்

אֲ - அலிஃப்

רִ֗- ரா

י- யொத்




அதாவது இங்கே காரூ (காஃப்-ரா-வாவ்) கிடையாது. மாறாக க-அரீ (காஃப்-அலிஃப்-ரா-யொத் ) உள்ளது. 


இவ்வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு:


நாய்கள் என்னை சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துக்கொண்டது. ஒரு சிங்கத்தை போல என் கைகள் கால்களண்டையில் இருக்கிறார்கள்."


“For dogs have encompassed me; a company of evil-doers have inclosed me; like a lion, they are at my hands and my feet.”

  — Ps 22:16 (JPOT) (இது யூதர்களது ஆங்கில மொழிபெயர்ப்பு)


ஆச்சரியப்படும்விதமாக ERV திருவிவிலிய மோளியாக்கத்தில் 'சிங்கத்தை போல" என்று சரியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்


““நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன. தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன். சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித் தெறிந்தார்கள்.”

  — திருப் 22:16 (ERV-TA)


ஆகவே உருவக்குத்தினார்கள் என்பது தவறானதாகும்.. அதனால் தான் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இதை மேற்கோள் காட்டவில்லை!


*******


4.சில பிரதிகளில் யொத் (י ) எழுத்துக்கு பதிலாக வாவ் (ו) எழுதப்பட்டுள்ளதே?




 இதனால் "காரூ -உருவக்குத்தினார்கள்" என வருமா? 


நிச்சயமாக கிடையாது..


எபிரேயத்தில் வால் எழுத்தின் நடுப்புகுதியில நிக்குத் (புள்ளி) இருந்தால் மட்டுமே "ஊ" ஒலி வரும்.. அதே வாவ் எழுத்தில் புள்ளி இல்லாமல்  இருந்தால் அது யொத் (யா) உடைய உச்சரிப்பாகிய "ஈ" உச்சரிப்பையும் குறிக்க இடம் வரும். இது எபிரேய எழுத்துக்களை சற்று படித்தாலே அறியலாம்.


இதிலிருந்து வாவ் இருப்பதால் மட்டும் "ஊ" ஒலி வந்துவிடும் என சொல்வது ஏற்புடையதாகாது. அதற்கு "ஈ" உச்சரிப்பும் வர இடமுள்ளது.



ஏன் எங்கு "ஊ" உச்சரிப்பு வர இயலாது??


காரணம் "காரூ" என சொல் எபிரேயத்தில் உள்ளது. அதில் காஃப் எழுத்திற்கு அடுத்து அலிஃப் வராது. வந்தால் "க ஆரு" என்றே வரும்.. இப்படியொரு சொல் எபிரேய அகராதியிலேயே கிடையாது!!



ஆனாலும் வேடிக்கையாக வாவ் எழுத்து தான் உள்ளது என உறுதிப்படுத்த இயலாது. காரணம் யொத் எழுத்தை குறிக்க சிறு கோடு மேலிருந்து கீழ்நோக்கி இருக்கும்.. அந்த கோடு சற்று நீண்டிருந்தால் அது "வாவ்" எழுத்தாகும். எழுதப்பட்டிருப்பது வாவ் என உறுதிப்படுத்த அதே எழுத்தாளர் யொத் எழுத்தை எந்தளவு நீளமாக எழுதியிருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்!!



ஆகவே ஒரு பேச்சுக்கு யொத்க்கு பதிலாக வாவ் இருந்தாலும் இவர்கள் கூறிய அர்த்தம் வந்துவிடாது..


காரணம் இடையில் ஒரு அலிஃப் கூடுதலாக உள்ளது.. "கஅரூ" என்று எபிரேய சொல் இல்லாததால், அது நிச்சயம் "க அரீ" என்பதை தவிர வேறு எதுவாகவும் இருக்க இயலாது.




*****


5.ஒருபேச்சுக்கு கஅரீ கிடையாது.. மாறாக காரூ என்றே உள்ளது என வைத்தால் அது சிலுவைப்பலிக்கு ஆதாரமாகுமா??




நிச்சயம் கிடையாது.. காரணம் மேசியாவுக்கு இது நடக்கும் என்று அந்த வசனத்தில் கூறப்படவில்லை! மாறாக எனக்கு நடந்ததாகவே தாவீது சொல்கிறார்.. அவருக்கு நடந்தது எப்படி மேசியா பற்றிய தீர்த்கதரிசனமாக அமையும்??




ஆகவே இவை அடிப்படையற்ற வாதங்களாகும்... அனைத்துமே திரிபுகளாகும்?!!!




தானியேல் 9:26-27 சிலுவை மரணத்தை குறிக்குமா?

 தானியேல் 9 மேசியா மற்றவர்களின் பாவத்திற்காக மரிப்பார் என்கிறதா?

--------------------------------------------------------------------------------




பொதுவாக கிறிஸ்தவ போதகர்கள் பழைய ஏற்பாட்டை திரித்து தமது கற்பனைக் கதைகளை பழைய ஏற்பாட்டில் சொருகுவதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டில் எவ்வாறெல்லாம் தோராவையும் நவியீமையும் திரித்தார்களோ அதைவிட தற்போது திரிபு மேலோங்கி விட்டது.



அந்த காலத்திலாவது இஸ்ரேலை என் மகன் என்றதை இயேசுவை என் மகன் என்றதாகவும், ராகேல் தன் பிள்ளைகளான எப்ராயீமியர் சிறைபிடிக்கப்பட்டதற்கு அழுததாக வருவதை , ராகேலின் அக்கா லேயாளின் பிள்ளைகளான யூதாவின குழந்தைகள் கொல்லப்பட்டதற்காக ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுததாக மத்தேயு சொல்கிறார்.(மத்2:15-18)


ஆனால் தற்போது உள்ளவராகளோ எழுத்துக்கு எழுத்து கதை கட்டுகிறார்கள். ஒருவர் சொல்கிறார் வினைச்சொல்லின் செயற்படுபொருளின் அடையாளப்படுத்தும் எபிரேய உரிச்சொல்லை (ஏத்) கூச்சமே இல்லாமல் இயேசுவை குறிப்பதாக சொல்கிறார். அதையும் மக்கள் நம்பி தம் மதம் எவ்வளவு உண்மையானது என ஆச்சரியப்படுகிறார்கள் !! (இதன் மூலம் இவர்களது நிலையை கண்டு நானும் ஆச்சரியப்படுகிறேன்!)




அந்த வகையில் வந்ததே தானியேல் 9:25-27 இயேசு சிலுவையில் மற்றவர் பாவத்திற்காக மரணிப்பதை குறிக்கிறது என பச்சையாக சொல்கிறார்கள்.


இனி இதை ஆராய்வோம்.



உப பிரிவுகள்

1.தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?

2.பரிசுத்த ஆவி புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களுக்கு இதை எழுத தூண்டாதது ஏன்?

3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?

4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?

5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!

***************************************

1.தானியேல் 9:25-27 ஐ இயேசுவை குறிப்பதாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கருதினார்களா?




புதிய ஏற்பாட்டில் இயேசுவுக்கு சம்பந்தமே இல்லாத வசனங்கள் கண்டுபிடித்து மேற்கோள் காட்டிய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் எவருமே தானியேல் 9:25-27 இயேசுவின் சிலுவை மரணத்தை குறிப்பதாக எங்குமே வாய்திறந்ததில்லை.




எந்தளவுக்கு என்றால், இயேசு நசரேத்தில் வாழ்ந்ததால் நசரேயன் எனப்படுவார் என தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறியது (மத் 2:23) என இல்லாத வசனத்தையே பழைய ஏற்பாட்டில் இயேசுவை குறித்து உள்ளதாக மத்தேயு சொல்கிறார்..


இவரது கண்ணுக்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக கண்ணில் படவில்லை.


பவுல் பழைய ஏற்பாட்டில் நுனிப்புல் மேய்ந்தவர். எங்கே தமக்கு சார்பாக வசனம் இருந்தாலும் அதை கொண்டுவந்து விடுவார். அவரது கண்ணிற்கும் இவ்வசனம் இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை .


இதெல்லாரையும் விட கற்பனைப் புயல் தான் எபிரேயர் (Hebrews) என்ற புதிய ஏற்பாட்டு கடிதத்தை எழுதியவர்.


இவர் தேவனை பற்றி நோயாளி பாடியதையும், ராஜாவை குறித்து பாடகர்கள் பாடியதையும் (எபி 1:5-13) இயேசுவை குறித்து தேவன் சொன்னதாக புகுத்தியவர். இவரது கண்ணிற்கு கூட இந்த தானியேல் 9:25-27 இயேசுவை குறிப்பதாக தெரியவில்லை!




பேதுரு இயேசுவின் சிலுவை மரணத்தை குறித்து, தாவீது தன்னை குறித்து சொன்னதை தாவீது மேசியாவை குறித்து சொன்னதாக (அப்போஸ்தலர் 2:25-31) சொல்கிறார். வேடிக்கையாக சங்கீத புத்தகத்தை அலசி, அதிலே யூதாசை பற்றியும் உள்ளதாக தாவீது தன் துரோகிகளை குறித்து சொன்னதை திரித்து கூறினார் (அப் 1:16-20).


இப்படிப்பட்ட அடிமட்டம் வரை இறங்கி அலசக்கூடிய இவர்களின் கண்களில் இவ்வசனம் படாமல் போனது ஏன்??


காரணம் அவர்கள் அதை அவ்வாறு காணவே இல்லை!!! இதை தவிர வேறு என்ன காரணம்?? கண்டிருந்தால் அதை விட்டிருப்பார்களா??


****************************************

----



2.பரிசுத்த ஆவி இதை ஏன் புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களுக்கு எழுத தூண்டவில்லை?




புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் தம் மனதுக்கு சரியென பட்டதை பொய் கலந்து அலங்கரித்தே எழுதினார்கள். 


உதாரணமாக நான் அவர்களுக்கு புருஷனாக (நாயகராக) இருந்தும் என் உடன்படிக்கையை அவமாக்கி போட்டார்கள் (எரேமியா 31:32) என உள்ளதை கூட திரித்து ஆவி தூண்டி "அந்த உடன்படிக்கையில் அவர்கள் நிலைநிற்கவில்லை. நானும் அவர்களை புறக்கணித்தேன்" (எபி 8:9) என எழுதியுள்ளார் எபிரேய ஆசிரியர்.



இப்படி "நான் அவர்களது நாயகராக (கணவனாக) இருந்தேன்" என்பதை "நான் அவர்களை புறக்கணித்தேன்" என மாற்றும் அளவுக்கு தூண்டிய ஆவியானவர் ஏன் இந்த தானியேல் 9:25-27 இயேசுவின் மரணத்தை குறிக்கிறதாக அவரது தியாகத்தை குறிக்கிறதாக சொல்லவில்லை??



ஆவியானவருக்கு கூட இது தெரியாமல் போனது ஏனோ?


ஆகவே ஆவியானவர் கூட இது இயேசுவை குறிப்பதாக பார்க்கவில்லை!



*****************************************



3.பிற்காலத்து (முதல் நூற்றாண்டிற்கு பின்னுள்ள) கிறிஸ்தவர்கள் எப்படி இதை கண்டுபிடித்தனர்?




முதல் நூற்றாண்டில் இயேசுவோடு கூட இருந்தவர்களாக கருதப்பட்டவர்களுக்கு கூட இது தெரியவில்லை.. அவர்கள் அதை அவ்வளவு முக்கியமாக கருதி மேற்கோள் காட்டவுமில்லை.. 


ஏன்?, பேதுரு இயேசுவை தனியே அழைத்து சென்று உமக்கு இதெல்லாம் நேரிடக்கூடாது என கடிந்து கொண்டார் அப்போது இயேசு சாத்தானே எனக்கு பின்னால் போ என அதட்டி, நீ தேவனுக்கேற்றவைகளை சிந்திக்காமல் , மனுசனுக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய் என கடிந்து கொண்டார். (மத் 16:22-23).


அப்போது கூட இயேசு, பேதுருவே! "மேசியா தன் பாவத்திற்கல்லாமல் சாகுவார் என தானியேல் சொல்லியிருக்கிறாரே! அதை படிக்கவில்லையா?" என கேட்கவில்லை! ஏசாயா புத்தகத்தை கரைத்துக் குடித்த இயேசுவுக்கு தானியேல் புத்தகத்தில் தன்னை குறித்து உள்ளது தெரியாமல் போகுமா? சுட்டிக்காட்டவேண்டிய இடத்தில் கூட இதை குறிப்பிடாமல் விட்டுவிட்டாரே! காரணம் அது அவரை குறித்ததாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் காணவில்லை! அதனால் இயேசுவின் வாயில் அதை போடவில்லை!



ஆனால் பிற்காலத்தவர்கள் இயேசுவை வரிக்கு வரி பழைய ஏற்பாட்டில் தேடினார்கள். எங்கெல்லாம் மெசியா என்று வருகிறதோ, அதை இயேசுவுக்கு மேட்ச் பண்ணுவதற்கு முயற்சித்தார்கள். அதில் சிக்கியது தான் தானியேல் 9:25-27 ஆகும்.




அதுவும் இவர்களது சொந்த கற்பனையே ஆகும்.. அங்கு இரண்டு மேசியாக்களை பற்றி கூறும்போது, அதை ஒரே மேசியாவாக மாற்றியே கதை அளந்துள்ளனர்.


*******************************************



4.மேசியா என்று வந்தாலே அது இயேசுவையா குறிக்கும்?





பழைய ஏற்பாட்டில் மேசியா என்பது அபிசேகம் பண்ணப்பட்ட அனைவரையும் குறிக்கும்... அபிசேகம் பண்ணப்பட்டதாக கருதப்படும் அரசர்களையும், ஆசாரியர்களையும் இது குறிக்கும். 



1.சவுலை கூட சாமுவேல் தீர்க்கதரிசி தேவனுடைய மேசியா என்கிறார். அதாவது "மசீஹூ- அவரது மசீஹ் (his Messiah)" என்கிறார்.


"இதோ இருக்கிறேன். கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிசேகம் பண்ணிவைத்தவருக்கு (மசீஹூ -"מְשִׁיח֗וֹ-"-அவரது மசீஹ் )முன்பாகவும் எனனை குறித்து சாட்சி சொல்லுங்கள்! (1 சாமுவேல் 12:3)


மேலும் 12:5, இல் மீண்டும் சவுலை சாமுவேல் அவரது (தேவனது ) மசீஹ் -messiah என்கிறார்.




2.-1 சாமுவேல் 24:6 இல் தாவீது தன் வாயால் சவுலை -"மசீஹ் யாஹ்வே" - Messiah of Yhwh " என்கிறார்..


 எபேரேய வாசகத்தை செக் பண்ணுங்கள்.


-அதைவிட ஒருபடி மேலே போய் சிலுவை தாவீது, "அதோனி, மசீஹ் யாஹ்வே" அதாவது என் ஆண்டவரும், யாஹ்வேயின் மெசியாவும் என்று சவுலை குறித்து சவுலிடமே சொல்கிறார் - 1 சாமுவேல் 24:10


இப்படி சவுலை மெசியா என்று பல வசனங்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் மொழிபெயர்த்து "அபிசேகம் பண்ணப்பட்டவர்" என்று எழுதியுள்ளார்கள்.





3.-தாவீதை அபிசாய் யாஹ்வேயின் மசியாஹ் (மசியாஹ் யாஹ்வே) என்கிறார். 2 சாமுவேல் 19:21


மேலும் 2 சாமுவேல் 22:51 இலும் தாவீது மசீஹு (அவருடைய மசீயாக்) என சொல்லப்பட்டுள்ளது.





4.-கோரேசு ராஜாவை "மசீஹு" அவரது மசீயஹ் என தேவன் சொன்னதாக ஏசாயா 45:1 கூறுகிறது.





5.-பாபிலோனியரால் பிடிபட்ட ராஜாவையும் யாஹ்வேயின் மெசியாஹ் என்று புலம்பல் 4:20 சொல்கிறது.



"கர்த்தரின் அபிசேகம் பண்ணப்பட்டவனும் (மெசியாஹ் யாவே) , எங்கள் நாசியின் சுவாசமுமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான். அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனை குறித்து சொல்லியிருந்தோமே!" (புலம்பல் 4:20)





இப்படி மெசியாஹ் என வருமிடங்களிலெல்லாம் அதை மொழிபெயர்த்து விட்டு, சம்பந்தமே இல்லாமல் தானியேல் 9இல் மட்டும் மொழிபெயர்க்காமல் விட்டுவிட்டு மக்களை குழப்புகின்றனர்.



ஆனாலும் இது தவறான திரிபு என புரியும் நல்லுள்ளம் கொண்ட கிறிஸ்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


அவர்கள் அது வேறு அரசனையே குறிக்கின்றது என உணர்ந்து மொழிபெயர்த்துள்ளார்கள்.




5.தானியேல் 9:25-27 சரியான மொழியாக்கமும் விளக்கமும்!



கீழே ரோமன் கத்தோலிக்க திருவிவிலிய தமிழாக்கம்:


தானி 9 (ERV-TA)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது ⁶² வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.

²⁶ ⁶² வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.

²⁷ பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.


NRSV மொழிபெயர்ப்பு

Dan 9 (NRSV)

¯¯¯¯¯¯¯¯¯¯

²⁵ Know therefore and understand: from the time that the word went out to restore and rebuild Jerusalem until the time of an anointed prince, there shall be seven weeks; and for sixty-two weeks it shall be built again with streets and moat, but in a troubled time.

²⁶ After the sixty-two weeks, an anointed one shall be cut off and shall have nothing, and the troops of the prince who is to come shall destroy the city and the sanctuary. Its end shall come with a flood, and to the end there shall be war. Desolations are decreed.

²⁷ He shall make a strong covenant with many for one week, and for half of the week he shall make sacrifice and offering cease; and in their place shall be an abomination that desolates, until the decreed end is poured out upon the desolator."


விளக்கம்

இவ்வசனங்கள் தானியேல் எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகத்தை பார்க்கிறார். அதில் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு 70 வருடங்கள் செல்லும் எனசொல்லப்பட்டிருப்பதை காண்கிறார். (தானியேல் 9:2).


எரேமியா 25:11, 29:10 இல் இது கூறப்பட்டிருக்கிறது.. இதை படித்து அறிந்துகொண்ட தானியேல் தேவனிடம் ஜெபிக்க துவங்குகிறார்.


அதன் இறுதியில் தான் காபிரியேல் தூதர் வந்து தானியேலுக்கு தெளிவுபடுத்துகிறார்.






1. 70 வாரங்களை தேவன் யூதர்களுக்கு நிர்ணயித்தார். அதாவது 490 வருடங்களை தேவன் நிர்ணயித்திருக்கிறார். அக்காலத்தினுள் அவர்கள் கொடிய பாவங்களை நிறுத்திக்கொண்டு தம்மை திருத்திக்கொள்ளுவதற்காக அதை நிர்ணயித்திருக்கிறார். அதனுள் அவர்களுக்கான தீர்க்கதரிசனம் முத்திரிக்கப்படும். (அதன்பின் அவர்களில் தேவனிடமிருந்து தீர்க்கதரிசி வரமாட்டான்!)



“தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.”

  — தானி 9:24 (ERV-TA)




*.இந்த 70 வாரங்களான 490 வருடங்களில் , முதல் 7 வாரத்தில் அதாவது 49 வருடத்தில் ஒரு மெசியா வருவார். . அவர் வந்து எருசலேமை கட்டுவார்.




இங்கே கூறப்பட்ட ராஜா தான் கோரேஸ் ராஜா ஆவான். இவரை "அவருடைய மெசியா" என்று தேவனே தன் வாயால் சொன்னதாக ஏசாயா 45:1 சொல்கிறது.


இவரே எருசலேமை கட்டுவதற்கு அனுப்பியவர். (2 நாளாகமம் 36:21-24)



இது கட்டப்பட்டு மீண்டும் 62 வாரங்களில் அதாவது (62+7 = 69 வாரங்களில் - 483 வருட முடிவில் மீண்டும் கட்டப்பட்டிருக்கும்.


 அப்போது அநேக துன்பங்கள் ஏற்படும்.





““தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும்.”

  — தானி 9:25 (ERV-TA)




அதாவது அப்போது எருசலேம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.





3.இந்த 62 வாரங்களெனும் (62+முதல் 7 வாரங்கள்) 483 வருடங்களின் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான். அவன் முற்றாகவே போய்விடுவான். இவனை கொன்றுவிட்டு பிறகு பரிசுத்த ஆலயத்தையும் எருசலேம் நகரத்தையும் அழிப்பார்கள்.


இந்த இடமான எருசலேம் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என தேவன் கட்டளையிட்டிருக்கிறார்.





“62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.”

  — தானி 9:26 (ERV-TA)



அதாவது 69 வாரம் முடிந்து 70வது வாரத்தில் தான் இது நிகழுகிறது.



கிறிஸ்தவ நம்பிக்கைப் பிரகாரம், இயேசு கொல்லப்பட்டு அடுத்த ஒரு வாரத்திற்குள் அதாவது ஏழு வருடங்களினுள் ஆலயமும் எருசலேமும் அழிக்கப்பட்டதா??


இல்லையே..






4.அடுத்து அதை அழிக்க போகும் ராஜா இந்த 62 +7 வாரமான 483 வருடம் முடிந்த பின்பு, கடைசி ஒரு வாரத்தில் அதாவது இறுதி ஏழுவருசமான 70வது வாரத்தில் , ஜனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்வான். அதாவது சமாதான உடன்படிக்கை செய்வான்.


பிறகு அந்த ஒரு வாரத்தில் அரைவாரம் முடியும்போது அதாவது 3.5 வருடம் முடியும்போது மொத்தமாக 486.5வது வருடத்தில் அவன் பலிகளையும் , காணிக்கைகளையும் ஒழியப்பண்ணுவான். அதன் பின் பாழாக்குபவன் வந்து முற்றாக அழிப்பான்.




“பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.”

  — தானி 9:27 (ERV-TA)



அதாவது 486.5 வது வருடத்தில் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான் அதாவது கி.பி. 66 இல் பிரதான ஆசாரியன் கொல்லப்பட்டான். அதன் மூலம் அப்போது பலிகளும் காணிக்கைகளும் முற்றாக ஒழிக்கப்பட்டன. அந்த கொல்லப்படும் இரண்டாவது மெசாயா இவனே.. இவன் போனதோடு அனைத்து பலிகளும் காணிக்கைகளும் முற்றாக போய்விட்டன. அந்த ராஜா செய்த உடன்படிக்கை 1 வாரம் இருக்கும். அதாவது ஆசாரியனான மெசியா 3.5 வருடத்தில் கொல்லப்பட்ட பின் அதாவது 69 வாரம் சென்றதன் பின்புள்ள வாரத்தில், மேலதிகமாக அரை வாரம் இருக்கிறது. அதாவது 3.5 வருடம் இருக்கிறது. அந்த மூன்றரை வாரம் முடிந்ததன் பின்பு   கி.பி. 70 இல்  எருசலேம் ஆலயம்  அழிக்கப்பட்டது. யூதர்களும் அடித்து துரத்தப்பட்டனர். பலர் கொல்லப்பட்டனர்.



இந்த 490 வருடங்களே தானியேலிடம் சொல்லப்பட்டது.



அதாவது முதல் 7 வார முடிவின் பின் 49 வருடங்களின் பின் ஒரு மெசியா வந்து எருசலேமை கட்டுவான். - கோரேஸ் வந்து கட்டினான்.(2 நாளாகமம் 36:21-23.)  அவனை மெசியா என்று ஏசாயா 45:1 சொல்கிறது.



பிறகுள்ள 62 வார முடிவில் மீண்டும் எருசலேம் கட்டப்படும். அதன் பின் அடுத்த மெசியா கொல்லப்படுவான்.


அவன் கொல்லப்பட முன்பே ஒரு வாரம் (7வருடம்) உடன்படிக்கை செய்யும் ராஜா , 3.5 வருடத்தில் இந்த மெசியாவை கொல்வதன் மூலம் பலிகளையும் காணிக்கைகளையும் ஒழிப்பான். பின்பு மிகுதி அரைவாரம் முடிந்த பின் அதாவது 70வது வாரமான 490 வருடம் முடிந்த பின் , பாழாக்குபவன் நகரத்தை முற்றாக அழிப்பான்!!!



இதுவே நடந்தது!! 



யூதர்களுக்கு திருந்துவதற்கும் பாவமன்னிப்புகளை பெற்றுக்கொள்ளவும், தீர்க்கதரிசனங்களை அவர்களிடையே முத்திரிப்பதன் மூலம் அவர்களிடையே தீர்க்கதரிசிகள் வராமலிருப்பதுமான நிகழ்வு பூரணப்படவே இது கொடுக்கப்பட்டது.



ஆனால் அவர்கள் தம் பாவத்தை ஒழிக்கவுமில்லை, நன்மையை கொண்டுவரவுமில்லை! 



இதை சம்பந்தமேயின்றி இயேசுவுக்கு பொருத்துவதென்பது வேடிக்கை..


இவர்கள் நம்பிக்கை பிரகாரம் இயேசு இரண்டு தடவை வரவுமில்லை.. முதல் தடவை எருசலேமை கட்டுவதற்கு அனுப்பவுமில்லை.. இரண்டாவது தடவையில் இவரது மரணத்தோடு பலிகள் ஒழிக்கப்படவுமில்லை.. மாறாக 33 வருடங்கள் பின்பே அது நடந்தது.


அதாவது கடைசி வாரத்தில் கொல்லப்படவேண்டிய மெசியா 5 வாரங்கள் முன்னதாகவே கொல்லப்பட்டு விட்டார். அதாவது 64வது வாரத்திலேயே கொல்லப்பட்டு விட்டார்.



ஆகவே அது அவரை குறிக்கும் என்பது ஏற்க முடியாது.




இதனால் தான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இதை மேற்கொள் காட்டவுமில்லை!!



ஆகவே கற்பனை கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்!





வெள்ளி, 11 நவம்பர், 2022

Echad-Yachid எகாத்- யகீத் கிறிஸ்தவ குழப்பம்

 ஏகத் vs யகீத் மற்றும் கிறிஸ்தவ போதகர்களின் அறியாமை திரிபும்!!

----------------------------------------------------------------------



கிறிஸ்தவ போதகர்கள் பொதுவாகவே கற்பனையையே நம்பிக்கையாகக் கொண்டிருப்பார்கள். நுனிப்புல் மேய்ந்துவிட்டு வாயில் வந்ததை அடித்துவிடுவார்கள். அதை அப்படியே வேதவாக்கு போலவும் கடவுள் அவர் வாயால் பேசுவது போலவும் பாமர மக்கள் கருதுவார்கள்.. சிறிதும் ஆராய்வதில்லை..


 அதனால் போதகர்கள், " யார் தான் எதிர்த்து கேட்பார்? மூளையை யார் தான் பாவிப்பார்கள்?" என்ற தைரியத்தில் தான் இவ்வாறு கதைகட்டுவர்.



அந்த வரிசையில் வந்ததுவே ஏகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களின் பிதற்றலாகும்.


உப பிரிவுகள்


1.எகாத் மற்றும் யகீத் பற்றி போதகர்களது கருத்து


2.எகாத் என்றால் உண்மையான அர்த்தம்


3 யகீத் என்றால் உண்மையான அர்த்தம்

 

4.எகாத் யகீத் பிரச்சினை ஏன்


5.தேவன் என்பவர் பன்மை கலந்த ஒருவரா?


6.ஒரே தேவன் மூன்றாக பிரிந்தாரா?


7.எலோஹீம் என்பது ஏன்?


*********

1.எகாத் (எஹத்) மற்றும் யகீத் (யஹீத்) பற்றி போதகர்கள் என்ன சொல்கிறார்கள்?




எகாத் (எஹத்) என்றால் ஒன்றுக்குமேற்பட்டவைகளினது கலவையான ஒன்று ஆகும்.


உதாரனமாக ஒரு நாள்.. இதில் இரவு பகல் என இரண்டு உள்ளது.


ஒரு குலை.. இதில் பல கனிகள் இருக்கலாம்.


ஆனால் யகீத் (யஹீத்) என்றால் வெறும் ஒன்றை மட்டுமே குறிக்கும். உதாரணமாக ஈசாக்கை ஒரே பையன் என்று சொல்வது போல்..


இது தான் இவர்கள் போலியாக கூறும் கருத்து!

****


2.எகத் என்றால் உண்மையாகவே என்ன அர்த்தம்?



எகத் என்றால் "ஒன்று" என்று அர்த்தம் ஆகும். அதாவது இது ஒரு பெயர்ச்சொல் (noun) ஆகும்.




இது ஒன்றுக்கு மேற்பட்ட கலவையான ஒன்றை தான் குறிக்குமா என்றால், அது பொய்யான வாதம் ஆகும்.


இதற்கு பைபிளிலிருந்தே ஆதாரம் காண்போம்:



1.ஒரே இரவு

“"எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள்."”

  — ஆதியாகமம் 40:5 மேலும் 41:11


இங்கே உள்ள ஒரே இரவு என்பதிலுள்ள "ஒரே" என்பது "எஹத்" ஆகும்.


ஒரு இரவு என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட இரவுகளின் கலவை இருக்குமா?




2.ஒரே தகப்பன்


“நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.”

  — ஆதியாகமம் 42:11 மேலும் 42:13


ஒரே தகப்பன் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட தகப்பன் இருப்பார்களா? 



3 .ஒரு கெரூபீன்


“"ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய்."”

  — யாத்திராகமம் 25:19 


ஒரு கெரூப் என்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட கெரூபீன்களின் கலவை இல்லையே.



4.ஒரே சாட்சி


“"எவனாகிலும், ஒரு மனிதனைக்கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது."”

  — எண்ணாகமம் 35:30 



“சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலை செய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலை செய்யப்படலாகாது.”

  — உபாகமம் 17:6 


“"ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்."”

  — உபாகமம் 19:15



இங்கே உள்ள ஒரே சாட்சி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட பல சாட்சிகளா?



5.ஒரு தீர்க்கதரிசி


“"கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்."”

  — 1 இராஜாக்கள் 13:11 மேலும் 20:13


ஒரு தீர்க்கதரிசி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்க்கதரிசிகளின் கலவை அல்லவே




இப்படி எகத் என்பது வெறும் ஒன்று என்பதை குறிக்க பாவிக்கப்படும்.



அது ஒரு கலவையாகவும் இருக்கலாம்.. அதே நேரம் தனித்ததானதாகவும் இருக்கலாம்.


ஒரு கலவை என்று வரும்போதும் அந்த கலவை ஒன்றாகவே இருக்கும்.




உதாரணமாக ஒரு கை என்றால் அதில் ஐந்து விரல்கள், தோல் நரம்புகள் என பல சேர்ந்ததாக காணப்பட்டாலும், ஒரு கை எனும்போது கையின் எண்ணிக்கை ஒன்று என்பதே அதன் அர்த்தம் ஆகும்.



ஒரு நாள் என்பதில் இரவு பகல் இருந்தாலும், இரவு பகல் இரண்டையும் சேர்த்தும் நாளின் எண்ணிக்கை ஒன்று என்பதாகும்.



மேலே உள்ள வசனங்களில் தனிமையாக உள்ளவைகளை குறிக்க "எகத் " பாவிக்கப்பட்டுள்ளதை காண்பீர்கள்.


அதில் எந்த கலவையும் இல்லை!



ஆகவே எகத் என்பது கலவையான ஒன்றையே குறிக்கும் என்பது பச்சை பொய்யானதாகும்.



எண்ணிக்கை ஒன்று என்பதே அதன் அர்த்தம்!


*****


3.யகீத் (யஹீத்) என்றால் என்ன?


யஹீத் என்பது அடைமொழி (adjective) ஆகும். அது ஒரு பெயர்ச்சொல் (noun) அல்ல.


எகத் என்பதே பெயர்ச்சொல்.



இதன் அர்த்தம் ஒற்றை (only) என சொல்லலாம்.


இது யஹீதக-உன் யஹீத் , அல்லது வெறும் "யஹீத்" ஒரே பிள்ளை என்பதை குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது. (எரேமியா 6:26, ஆதியாகமம் 22:2, சகரியா 12:10)


அதேபோல தனித்திருப்பன் என்ற அர்த்தத்தில் சங்கீதம் 25:16 இல் பாவிக்கப்பட்டுள்ளது.


இது அடைமொழி ஆகும். அடைமொழியையும் பெயர்ச்சொல்லையும் வேறுபடுத்த தெரியாமல் அதை வைத்து ஒரு நம்பிக்கையையே உருவாக்கிவிட்டனர்.




ஒருவன் என்பதை குறிக்க யஹீத் என்று வராது.. எகத் என்றே வரும்.



*****



4.இந்த எகத் யகீத் பிரச்சினை ஏன்?



இது ஏன் என்றால் பழைய ஏற்பாட்டில் தேவன் ஒருவன் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் பிதா தேவன், குமார தேவன் ,ஆவி தேவன் என மூன்று நபர்கள் இருப்பதாக நம்புகின்றனர்.  


கடவுள் ஒருவர் என சொன்னால், மற்ற இரண்டு நபர்களையும் விட்டுவிட வேண்டி வருகிறது.


அதை சமாளிக்க தான், தேவன் ஒருவன் (எஹத்) என்றால், பன்மை கலந்த ஒன்று.. தனி ஒன்று என்றால் யஹீத் என வரவேண்டும் என வாதிட்டனர்.


ஆனால் யஹீத் என்பது அடைமொழி, அதை அவ்விடம் பயன்படுத்த முடியாது என்பதை கூட அறியாமல்!!!


*****


5.தேவன் என்பவர் பன்மை கலந்த ஒருவரா?



பழைய ஏற்பாட்டில் தேவன் என்பவர் ஒரு நபரே ஆவார். (தேவதூதனையும் அவன் தேவனது கட்டளைப்படி நடப்பதால், அவன் செய்வதையும் தேவன் செய்தார் என சொல்லப்படும்.. அதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்!)



1.தேவன் தன்னை "நாம்" என்று சொல்லாமல், "நான்" என்றே சொல்கிறார். 




² உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

³ என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.


 …  

⁵ "நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்."

⁶ "என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்." 

(யாத்திராகமம் 20:2,3,5,6)




⁶ "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."


 …  

²⁴ "உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்."

(ஏசாயா 44:6,24)






⁵ "நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிர தேவன் இல்லை."

⁶ "என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை."

⁷ "ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்."

⁸ "வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப் பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன்."


 …  

¹² "நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."

(ஏசாயா 45:5-8,12)



“"பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை."”

  — ஏசாயா 45:22 



இங்கே தன்னை தவிர வேறு தேவன் இல்லை என கூறும் போது, அங்கே ஒரே ஒரு நபரே உள்ளார்.. அந்த நபரை தவிர வேறு கடவுள் இல்லை என தெளிவாகிறது.



***


2.அவரை (ஹு) தவிர தேவன் இல்லை என மோசே சொல்கிறார்.. அவர்களை தவிர என்று ஒன்றுக்கு மேற்பட்டதை சொல்லவில்லை




³⁵ "கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது."


 …  

³⁹ "ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,"

(உபாகமம் 4:35,39) 





ஆகவே ஒரு தேவனே உள்ளார்.. அவருக்குள் மூன்று நபர்களெல்லாம் கிடையாது... அப்படி இருந்தால் மூன்று கடவுள்களாக தான் வரும்..

****



6.ஒரு தேவன் மூன்றாக பிரிந்துவிட்டாரோ?



ஒரு தேவன் மூன்றாக பிரிந்து விட்டால், அப்போதும் புதிதாக கடவுள் பிரிந்து தோன்றினார்.



*****

7.எலோஹீம் என்பது ஏன்?



எலோஹீம் என்பதன் நேரடி அர்த்தம் தேவர்கள் என இருந்தாலும், பழைய ஏற்பாட்டில் கண்ணியத்தின் நிமித்தமாக பன்மையில் பாவிக்கப்பட்டிருப்பதை படித்தாலே புரிந்து கொள்ளலாம்.



உதாரணமாக மோசேயை பார்வோனுக்கு தேவனாக ஆக்கியதாக தேவன் சொல்லுவதிலும் மோசேயை எலோஹீம் என்றே சொல்கிறார். (யாத்திராகமம் 7:1)



மோசே என்பவர் ஒன்றுக்கு மேற்பட்ட கலவை அல்ல.. ஒரு தனி மனிதன் ஆவார்..


அவரை எப்படி எலோஹீம் என சொன்னதோ அதுபோன்றே , தேவனை குறித்து கூறப்பட்டுள்ளது.



அந்த தேவன் கலவை அல்ல என்பதை 5இல் குறிப்பிடப்பட்ட வசனங்களே தெளிவாக்க போதுமானது




ஆகவே கற்பனை கதைகளை நம்பி ஏமாற வேண்டாம்

எலோஹீம் பற்றிய விரிவான அலசல்

பார்க்க ஆதியாகமம் தொடர்-1

*****



வியாழன், 10 நவம்பர், 2022

நானே -I AM எஹ்யே கடவுளின் பெயரா?

 எஹ்யே (I AM) என்பது கடவுளின் பெயரா?

--------------------------------------------------------------------------------



பொதுவாக கிறிஸ்தவர்கள் மொழியறிவின்றி கற்பனையிலேயே திளைத்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக "எத்" என்று ஆதியாகமம் 1:1 இல் வருவது இயேசுவை குறிக்கும் என்றது போல.. அவ்வார்த்தை இலக்கணத்தில் நேரடி செயற்படுபொருளை அடையாளப்படுத்த வரும் வேற்றுமை உருபு (தமிழில் "ஐ") என்பதை அறியாமல் கற்பனையாக பேசுவார்கள்.



அந்த வகையில் வந்ததே "எஹ்யே" என்பதும்... கிறிஸ்தவ போதகர்கள் "ஹயா" என்று இதை சொல்வார்கள்.



இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், எபிரேய த்தில் "நான் I AM" என்பதை குறிக்க இரு வார்த்தைகள் உள்ளன.


1.அனோகி 

2.எஹ்யே (ஹயா என்று இவர்கள் சொல்வார்கள்)


இந்த எஹ்யே (ஹயா) என்பது கடவுள் மட்டுமே பாவிப்பதாகும்..


இதை தான் இயேசு யோவான் 8:58இல் "நான் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறேன்" என்று சொல்ல இதே எபிரேய வார்த்தையை பாவித்தார்.. அதனால் அவர் தன்னை கடவுளென சொன்னதாக அர்த்தம் அமைகிறது. ஆகவே தான் யூதர்கள் கல்லெறிந்தனர் என்பர்.


வேறு சில போதகர்கள் ஆங்கிலத்தில் I am என்று இயேசு சொன்ன இடங்களை எல்லாம் இந்த "ஹயா" வை தான் பாவித்தார்.. சோ அவர் கடவுள் என்பார்கள்.


இவையெல்லாம் பச்சை மடத்தனமான வாதங்கள் ஆகும்.. மொழியறிவு இல்லாமையே இவ்வாதத்தின் அடிப்படை.



ஆங்கில மொழி எபிரேய மொழியிலிருந்து மிகவும் வித்தியாசமானது என்பதால், ஆங்கில போதகர்கள் இதை சொல்வதில் ஆச்சரியம் இல்லை.


ஆனால் தமிழ் பேசும் போதகர்கள் இதை சொல்வதென்பது, ஆங்கில போதகர்களை அப்படியே காப்பி அடிப்பதையே சித்தரிக்கிறது.



இனி நாம் இதை ஆராய்வோம்.



உப பிரிவுகள்

1.அனோகி vs எஹ்யே

2.இயேசு தன்னை எஹ்யே என்று சொன்னதால் யூதர்கள் கல்லெறிந்தனரா? (யோவான் 8:58)

3.இயேசு எஹ்யே என்று சொன்னதற்கு ஆதாரம் உண்டா?

4.யாத்தி 3:14 இல் தேவன் தன்னை எஹ்யே என சொன்னது ஏன்?

1.*அனோகி vs எஹ்யே*



எபிரேயத்தில் நான் என்பதை குறிக்க பழைய ஏற்பாட்டில் "அனோகி" என்பது பாவிக்கப்படுகிறது.


இதை ஆங்கிலத்தில் I or I am என்று இடத்திற்கேற்ப சொல்லலாம்.



எஹ்யே என்பது ஹயா என்ற வினைச்சொல்லில் இருந்து வந்த ஒரு வினைச்சொல் ஆகும்.


ஹயா என்றால் இருந்தான் (ஆண்பால்) என்று அர்த்தம் ஆகும். அதாவது ஆங்கிலத்தில் He Was என்று சொல்லலாம்.


ஆதியாகமம் 3:1 இல் "(மேஜிக்) பாம்பு காட்டுமிருகங்களிலேயே தந்திரமிகுந்ததாக இருந்தது"


வஹன்னாஹாஸ் (பாம்பு) ஹயா (இருந்தது/இருந்தான்) ஆரூம் (தந்திரமிக்கதாக) மின் கொல் ஹயாத் (எல்லா காட்டு மிருகங்களைவிடவும்)




இதன் பெண்பால் வார்த்தைகளும் ஆதியாகம புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.. அனைத்தையும் மேற்கோள் காட்ட இயலாது.



இதன் எதிர்கால வினைச்சொல் "யிஹ்யே" என்பதாகும்.


இதன் அர்த்தம் "இருப்பான் " என்பதாகும். ஆங்கிலத்தில் " he will be" ஆகும்.


இவ்வார்த்தை ஆதியாகமம் 16:12 இல் இஸ்மவேலை குறித்து பாவிக்கப்பட்டுள்ளது.


வஹு (அவன்) யிஹ்யே (இருப்பான்) பெரே ஆதாம் (ஒரு காட்டு மனிதனாக)


அவன் ஒரு காட்டு மனிதனாக இருப்பான். He shall be a wild man.



இந்த வகையில் தான் "எஹ்யே" என்பது "இருப்பேன்" என்பதாகும். அதாவது "I will be" .


யாத்திராகமம் 3:12 இல் மோசேயிடம்:


வயோமர் (அவர் கூறினார்) கி (நிச்சயமாக) எஹ்யே (இருப்பேன்) 'இம்மாக் (உன்னுடன்)


நான் நிச்சயமாக உன்னோடு கூட இருப்பேன் என்று (தேவன்) சொன்னார். He said "Surely I will be with you "






வேடிக்கையாக இதே எஹ்யே என்பது பாபிலோனை குறித்து பெண்ணாக உருவகித்து ஏசாயா புத்தகம் 47:7 கூறும்போது


வத்தோமரி (பெண்ணாகிய நீ சொன்னாய்!) லஓலம் (என்றென்றும்) எஹ்யே (இருப்பேன்) கபாரெத் (நாயகியாக)


"என்றென்றைக்கும் நாயகியாக இருப்பேன் என்று நீ சொல்லி..." ஏசாயா 47:7






அதேபோல யோனத்தான் , தான் தாவீதுக்கு அடுத்ததாக இருப்பேன் என்றதிலும் இதே எஹ்யே தான் உள்ளது.


வஅநோகி (நான்) எஹ்யே (இருப்பேன்) லக (உனக்கு) லமிஸ்நேஹ் (அடுத்தவனாக)


அந்த வசனம் முழுவதுமாக


"“நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான்.”

  — 1 Samuel 23:17 (TBSI)


இதேபோல் 2 சாமுவேல் 16:18  ஊசாயும் இதே வார்த்தையை பாவித்திருக்கிறார்.

இதுபோன்று இவ்வார்த்தையை மனிதர்கள் கூறுவதாக வரும் இடங்களிலுள்ள வசனங்கள்: ஏசாயா 3:7, 2 சாமுவேல் 22:24,16:18-19,15:34, 1 சாமுவேல் 18:18,23:17 நியாயதிபதிகள் 11:9,யோபு 17:6,12:4,10:19,7:20,3:16, உன்னதப்பாட்டு 1:7,  ரூத் 2:13,சங்கீதம் 102:7,  இதேபோல் உருவகங்களில் பாபிலோன் கூறுவதாக ஏசாயா 47:7 , ஞானம் கூறுவதாக நீதிமொழிகள் 8:30 இவ்வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பைபிளில் 18 இடங்களுக்கு குறையாமல் இவ்வார்த்தை கடவுள் அல்லாதவர்களுக்கு தான் பாவிக்கப்பட்டுள்ளது. இவ்வார்த்தையை மொழிவது தெய்வீகத்தை வாதிடுவதாக பிதற்றுவது அறிவீனம்.


ஆகவே எஹ்யே என்பது "இருப்பேன்" என்ற அர்த்தத்தை தரும் வினைச்சொல் வடிவமாகும்.




ஆங்கிலத்தில் அனோகி, எஹ்யே இரண்டையும் I am என்றே சொல்வதாலும், பைபிளை எபிரேய த்தில் படிப்பதில்லை என்பதாலும் ஆங்கில கிறிஸ்தவ போதகர்கள் இவ்வாறு கட்டிவிட்டனர்.






ஆகவே இவ்வாதம் அடிப்படையிலேயே தவறானதாகும்.. மொழியறிவின்மையின் வெளிப்பாடு ஆகும்.




2.இயேசு தன்னை எஹ்யே என சொன்னதால் யூதர்கள் கல்லெறிந்தார்களா?



இது அடிப்படையிலேயே அர்த்தமற்ற வாதமாகும்.. எஹ்யே என்றால் "இருப்பேன்" என்று அர்த்தமாகும்.


நான் இருப்பேன் என்று சொன்னதற்காக அவன் கல்லால் அடிப்பானா??


யோனத்தானும் தன்னை தாவீதுடன் இருப்பேன் என சொல்வதற்கு "எஹ்யே" என்று தான் சொன்னார். (1 சாமுவேல் 23'17)

ஊசாயும் நான் சேர்ந்து அவரோடே இருப்பேன் என்பதை கூறவும் "எஹ்யே" என்று தான் சொன்னாள்-(2 சாமுவேல் 16:18) அதேபோல் இதல்லாமல் 16 இடங்களிலும் கடவுள் அல்லாதவர்களுக்கு பாவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக யாரும் தேவ தூசனம் சொன்னதாக கருதவில்வையே.. காரணம் அவ்வாறு அது கிடையாது.


மொழியில் எஹ்யே என்று தான் அங்கு சொல்லவேண்டும்!!




பிறகு ஏன் கல்லெறிந்தனர்??



காரணம் தன்னை ஆப்ரகாமுக்கு முன்பு இருப்பதாக சொன்னதினால் தான் என்று அதே கட்டுக்கதை புத்தகம் சொல்கிறது.


யூதன் ஆப்ரகாமை தகப்பன் என சொல்லும்போது, அவரைவிட பெரிய ஆள் எனும் அர்த்தம் ஒருவரின் வாயிலிருந்து வந்தால், அவன் சும்மா இருப்பானா?



அதற்காக தான் கல்லெறிந்தான்.




3.. இயேசு எஹ்யே என்று தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா??


யோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. அங்கே இயேசு எஹ்யே என்று சொன்னதாக எப்படி இந்த கல்வியறிவற்ற போதகர்கள் கண்டுபிடித்தனர்??



 எஹ்யே என்றால் நான் இருப்பேன் என்பதாகும்.. ஆப்ராகமுக்கு முன்பே நான் இருப்பேன் என்பது அர்த்தமுள்ளதாக இருக்குமா?? இருந்தேன் என்று அல்லவா வரும்.அதாவது "ஹாயீதீ" என்று தான் சொல்லவேண்டும்.. எஹ்யே என வராது.




"ஹாயீதீ" என்பது கூட ஆதியாகமம் 31:40 இல் உள்ளது.



இதெல்லாம் அறியாமையின் உச்சம் ஆகும்..



ஆகவே எஹ்யே என்பது கடவுளை மட்டும் குறிப்பதல்ல... "நான் இருப்பேன்" என்பதை அவ்வாறு தான் சொல்வார்கள்!

இந்த வசனத்தை எபிரேயத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் கூட "எஹ்யே " என்று மொழிபெயர்க்கவில்லை.  மாறாக 

אני הוא- அனீ ஹூ (நானே அவன்) என்று தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள்

(அதே வார்த்தையை இயேசுவால் சுகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் குருடனும் தன்னை இதே வார்த்தையால் அறிமுகப்படுத்துகிறார். (யோவான் 9:9). அப்போது யாரும் கல்லெறியவில்லையே. )

இதைவைத்து ஒரு நம்பிக்கையையே கட்டுவதென்பது வெள்ளம் வரும் இடத்தில் மணலால் வீடு கட்டுவதாகும்!!!!


வேடிக்கையாக இயேசு தன்னை I am என்று சொன்னதாக கூறும் இடங்களில் வரும் கிரேக்க வார்த்தை "Ego Eimi" என்பதாகும்.

இதே வார்த்தையை இயேசுவால் சுகப்படுத்தப்பட்ட குருடனும் யோவான் 9:9 இல் "நானே அவன்" என்று கூறுவதற்கு பாவித்திருக்கிறார் 



4..யாத்திராகமம் 3:14 இல் தேவன் தன்னை எஹ்யே என்று அறிமுகப்படுத்தியது ஏன்?


அதை சுருக்கமாக காண்போம்!






¹¹ "அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்."

¹² "அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார்."

¹³ "அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்."

¹⁴ "அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்."

¹⁵ "மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்."



மோசேயிடம் தேவன் பேசியதாக வரும் நிகழ்வில்,


மோசேயோடு தேவன் இருப்பேன் என்று வாக்கு கொடுக்கிறார் (எஹ்யே இம்மாக்) -யாத் 3:12


கடவுள் தான் அனுப்பினார் என்பதற்கு ஆதாரமாக , எகிப்திலிருந்து வெளியேறி இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள் என்பதை கூறுகிறார்.


அப்போது மோசே தேவனிடம், இதை நான் அவர்களிடம் சொன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்பார்களே என்கிறார்..


அதாவது இஸ்ரேல் புத்திரரும் தேவனது பெயரை அறிந்திருந்தனர்.. மோசேயை சோதிக்க அவர்கள் கேட்டால் என்ன சொல்வது என்கிறார்.





பழைய ஏற்பாட்டில் தேவனது பெயர் என்பது தேவனையே குறிப்பதாகும். 


உதாரணமாக


 "உன் தேவனாகிய கர்த்தர்" எனும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்கு பயப்படும்படிக்கு" -உபாகமம் 28:58



தேவனாகிய கர்த்தர் எனும் பெயர் பயங்கரமானதா? அல்ல.. 


அது தேவனையே குறிக்கும்.. அதாவது உன் தேவன் பயங்கரமானவர் என்பதே அதன் அர்த்தம் ஆகும்.



அந்த அர்த்தத்தில் தான் மோசே தேவனிடம் கேட்கிறார்.. அதாவது தேவன் எப்படிப்பட்ட தேவன் உன்னை அனுப்பினார் என்று கேட்டால் என்ன சொல்வது?





அதற்கு தேவன் "எஹ்யே ஆசேர் எஹ்யே" - இருப்பவராகவே இருப்பேன் என்று சொன்னார். 



அதோடு நிறுத்தாமல், எஹ்யே என்னை அனுப்பினார் என்று சொல் என்றார்.


தன்னை குறித்து உன்னுடன் இருப்பேன் (எஹ்யே இம்மாக்) -3:12 என்று சொன்னவர் அனுப்பியதாக சொல்ல சொல்கிறார்.

பழைய ஏற்பாட்டில் பெயர்கள் வினைச்சொற்களாக அதிகம் பாவிக்கப்பட்டுள்ளது.  இப்பெயர்கள் தேவனை விபரிப்பதாக கூறப்படுவதாகும்.

தேவன் மோசேயுடன் இருப்பார் என்பதை விபரிக்கும் விதமாக தான் "எஹ்யே" நான் இருப்பேன் என்பதை பெயராக சொல்லப்பட்டுள்ளது.


அதன் பின்னரே 3:15 இல் தலைமுறை தலைமுறையாக தன் பெயர் என்ன என்று சொல்கிறார்.. அதாவது ஆப்ராகாமின் தேவன் இஸ்ஹாகின் தேவன் யாக்கூபின் தேவன் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் என்பதை அப்பெயராக சொல்கிறார்.



நான் என்றும் உன்னோடு இருப்பவர் என்பதை விபரிக்கும் பெயராகவே எஹ்யே என மோசேயிடம் சொன்னார்.


மற்றபடி எஹ்யே என்பது யாரும் உச்சரிக்க கூடாத வார்த்தை என்றெல்லாம் கிடையாது.


அதை தான் பைபிளில் 18 இடங்களில் தேவன் அல்லாதவர்கள் அவ்வார்த்தையை தம்மை குறித்து கூறும் வசனங்களை பட்டியலிட்டுள்ளேன்.



இதை இயேசு பயன்படுத்த இயலாது.. காரணம் அது அர்த்தமற்றது.. ஒருவேளை பயன்படுத்தினாலும் அது தெய்வீகத்திற்கு ஆதாரமாகாது.


அது பொதுவாக பயன்படுத்தும் வார்த்தை தான் பைபிளில்.



சோ இப்படி கட்டுக்கதைகளை நம்பி ஏமாறாதீர்!



அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...