இடுகைகள்

நவம்பர் 10, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானே -I AM எஹ்யே கடவுளின் பெயரா?

படம்
 எஹ்யே (I AM) என்பது கடவுளின் பெயரா? -------------------------------------------------------------------------------- பொதுவாக கிறிஸ்தவர்கள் மொழியறிவின்றி கற்பனையிலேயே திளைத்தவர்களாக இருப்பார்கள். உதாரணமாக "எத்" என்று ஆதியாகமம் 1:1 இல் வருவது இயேசுவை குறிக்கும் என்றது போல.. அவ்வார்த்தை இலக்கணத்தில் நேரடி செயற்படுபொருளை அடையாளப்படுத்த வரும் வேற்றுமை உருபு (தமிழில் "ஐ") என்பதை அறியாமல் கற்பனையாக பேசுவார்கள். அந்த வகையில் வந்ததே "எஹ்யே" என்பதும்... கிறிஸ்தவ போதகர்கள் "ஹயா" என்று இதை சொல்வார்கள். இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், எபிரேய த்தில் "நான் I AM" என்பதை குறிக்க இரு வார்த்தைகள் உள்ளன. 1.அனோகி  2.எஹ்யே (ஹயா என்று இவர்கள் சொல்வார்கள்) இந்த எஹ்யே (ஹயா) என்பது கடவுள் மட்டுமே பாவிப்பதாகும்.. இதை தான் இயேசு யோவான் 8:58இல் "நான் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறேன்" என்று சொல்ல இதே எபிரேய வார்த்தையை பாவித்தார்.. அதனால் அவர் தன்னை கடவுளென சொன்னதாக அர்த்தம் அமைகிறது. ஆகவே தான் யூதர்கள் கல்லெறிந்தனர் என்பர். வேறு சில போதகர்கள் ஆங்கிலத்...