இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 2

  பாகம் 1 தொடர்ச்சி உள்ளடக்கம் 4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்? 5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை 6.ஞானஸ்நானம் நடந்த பின் நிகழ்ந்த நிகழ்வு 7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாள்களிலா? நாப்பது நாள் முடிந்த பின்பா? 8.பேதுரு சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும் 4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்? மத்தேயு -  இயேசு மகா ஏரோதின் காலத்தில் பிறந்ததால், பெற்றோர் அவனுக்கு பயந்து அவன் சாகும்வரை எகிப்துக்கு போய் வாழ்ந்தனர். ஏரோது செத்த பின் அவனது மகன் ஆட்சிக்கு வந்ததால், அவனுக்கும் பயந்து நாசரேத்துக்கு வந்தார்கள். ¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான் ; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்." ¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்," ¹⁵ " ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான் . எகிப்திலிருந்து என்னுடைய கும...

1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல

முந்தைய பதிவு: 1&2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுளல்ல 1 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல —————————- இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது 1.தேவன் வேறு , இயேசு வேறு ன பிரித்து கூறுகிறார் பவுல்.. அதாவது பிதாவே தேவன், இயேசு கர்த்தர் ¹ “நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,” ² விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. (1 தீமோத்தேயு 1:1-2) இயேசுவுக்கும் பிதாவே தேவன் – எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை. இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ————— 2.என்றென்றும் காணப்படாதவரான ஒருவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை ¹⁷ “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தே...

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 1

படம்
 நான்கு சுவிசேச முரண்பாடுகள். ---------------------------------------------------- புதிய ஏற்பாட்டில் நிறைய முரண்பாடுகள் காணக்கூடியதாக இருக்கும். காரணம் கேள்விப்பட்ட கதைகளை சுவிசேசங்களும் நான்கு முரண்பட்டுக்கொண்டு எழுதப்பட்டிருப்பதோடு, ஒரே சுவிசேசத்துக்குள்ளேயும் முரண்பட்டுக்கொள்வதாக இருக்கிறது. நாம் ஒவ்வொன்றாக காண்போம். இந்த பதிவில் உள்ளடங்கும் முரண்பாடுகள் 1.யோசேப்பின் தந்தை யார்? வம்சாவளி எது? 2.இயேசு எப்போது பிறந்தார்? 3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார் ? 1.சிறந்த தாயான மரியாளின் புருஷனின் தகப்பன் யார்? ஐ.மத்தேயு- யோசேப்பின் தகப்பன் யாக்கோபு “ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் ; அவளிடம் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.”   — மத்தேயு 1:16 (TBSI) II.லூக்கா- யோசேப்பின் தகப்பன் ஏலி “அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரனார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;”   — லூக்கா 3:23 (TBSI) மாற்கு யோசேப்பு என்ற இந்த நபரை பற்றி வாயே திறக்கவில்லை. யோவான் யோசேப்பை கடந்து பரம்பரை சொல்லவில்லை. மத்தேயு யோசேப்பின் வம்ச...

ஆதியாகமம் தொடர்-5

 ஆதியாகமம் தொடர்-5 தொடர்4 இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 14.தேவன் பறவைகளை எதனால் படைத்தார்? எப்போது படைத்தார்?-முரண்பாடு 15.ஆடையின்றி நிர்வாணமாக இருந்த மனிதன் 16.ஏதேன் தொட்ட வாழ்க்கை தற்காலிக பயிற்சியே 17.பாம்பு சொன்னது உண்மையானதாம். தேவன் சொன்னது பொய்யானதாம்  18.பெண்ணின் வித்தும் கிறிஸ்தவமும் 14.தேவன் பறவைகளை மண்ணினால் படைத்தாரா தண்ணீர் உண்டாக்கியதா? பறவைகளும் மிருகங்களும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டனவா? மனிதனுக்கு பின்பு படைக்கப்பட்டனவா?   “"தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி , ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று."”   — ஆதி 2:19 (TBSI) ஆனால் பறவைகள் தண்ணீர் மூலமாகவும், மிருகங்கள் தான் மண் மூலமாகவும் படைக்கப்பட்டதாக முதலாம் அதிகாரம் சொல்கிறது. ²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ...

ஆதியாகமம் தொடர்- 4

 ஆதியாகமம் பாகம் 4 பாகம்3 இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார். 13.சரீர மரணமா ஆத்ம மரணமா? 12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார் என கூறும் ஆதியாகமம்.  இதன்மூலம் ஆதாமின் பாவத்தினால் மரணம் பூமியில் நுழைந்ததாக கூறும் கிறிஸ்தவம் பொய்யாக்கப்படுகிறது. ¹⁷ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார் . ஆதி 2:17 -இந்த பழத்தை சாப்பிட்டால் சாப்பிடும் நாளிலேயே மரணம் ஏற்படும் என தேவன் எச்சரிப்பதன் மூலம், மரணம் என்றால் என்ன என்று ஆதாம் அறிந்திருக்க வேண்டும்.  -அத்தோடு , மரணிக்கக்கூடியவனாக ஆதாம் படைக்கப்பட்டிருக்கிறார். அதனால் மரணத்தை குறித்து எச்சரிக்கப்படுகிறது. . மரணமற்றவனாக படைக்கப்பட்டிருந்தால், பழத்தை சாப்பிடுவதால் மரணம் ஏற்படப்போவதில்லை. (உதாரணமாக சாவே இல்லாதவன் விசத்தை சாப்பிட்டால் இறப்பானா? நீ விசத்தை சாப்பிட்டால் இறப்பாய் என்று சொன்னால் அவன் மரணமற்றவனாக இல்லை என்று புரிகிறது.) - மேலும் இதை தெளிவாக்கும் விதமாக, ஆதாம் மரணமற்ற வாழ்வை பெற வேண்டுமானால், ஜீவ மரத்தில...

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 2

குர்ஆன் பைபிள் ஒப்பீடு பாகம் 2 பாக ம்1 இன் தொடர்ச்சி  உள்ளடக்கம்- ஆபேல் காயின் கதை குர்ஆன் மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக வைத்த சமயத்தில் அவ்விருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பயபக்தியுடையவர்களிடம் இருந்துதான்” என்று கூறினார். ( அல்குர்ஆன் : 5:27) (மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னைக் கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.)  ( அல்குர்ஆன் : 5:28) “என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்)...

ஆதியாகமம்-தொடர் 3

தொடர்2  இன் தொடர்ச்சி  உள்ளடக்கம் 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம் 8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம். 9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம். 10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா? 11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!) 7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம்  தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""   - ஆதி 1:3,5  பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம் . ¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்." ¹⁸ "பகலையும் இரவையு...

ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2 தொடர்1  இன் தொடர்ச்சி உள்ளடக்கம் 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? ஆவியின் வகைகள் 6.தேவனுடை வார்த்தை என்பது நபரா? 5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா? 2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”   — 1:2  இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது.  திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது. ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா? உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல. மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த கா...