ஈசா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ்
ஈஸா நபி பற்றி குர்ஆன் ஹதீஸ் ---------------------------------------------------------- ஈசா நபி குறித்து பைபிளே அவரை தேவனது தாசன் (ஊழியன்) (மத் 12:18) என்றும் , பிதா ஒருவரே மெய்யான தேவன் (யோவான் 17:3) என்றும் தன்னை தேவனுடைய பையன் என்று சொல்ல காரணம், தேவனால் அனுப்பப்பட்டும் பரிசுத்தம் பண்ணப்பட்டும் இருப்பதால் தான் என்றும் வேதத்தை பெற்றவர்களை தேவர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவரே சொல்வதாக (யோவான் 10:33-36) எழுதப்பட்டிருந்தாலும், தெளிவாக தேவன் வேறு இயேசு வேறு என்று சொல்லப்பட்டிருந்தாலும் (வெளி 3:12, யோவான் 20:16-17, 17:3) இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்று கிறிஸ்தவர்கள் கூறுவார்கள். அதற்கு சான்றாக மூடலான வசனங்களையும் , புதிய ஏற்பாட்டாசிரியர்களே குழம்பிப்போய் எழுதியதையும் காட்டுகிறார்கள். அதோடு நிறுத்தாமல் ஏகத்துவத்தை போதிக்கும் இஸ்லாத்தில் கூட அவரை கடவுளாக தான் கூறப்பட்டுள்ளது என்று வாய் கூசாமல் பேசுவதோடு அதை வைத்து கதைப்புத்தகங்கள் கூட எழுதியுள்ளார்கள். ஆகவே இந்நிலை குறித்து அலசுவோம்: 1.ஈசா நபி தன்னையும் தன் தாயையும் கடவுள்களாக கூறவில்லை. மறுமையில் இறைவன் அவரிடமே இது...