கர்த்தரைவிட யாக்கோபு பெரியவரா?
யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாயிருப்பாரோ?? ------------------------------------------------ புதிய ஏற்பாட்டு புத்தகங்களின்/கடிதங்களின் ஆசிரியர்களுக்கு போதியளவு பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லை என்பதை இரண்டையும் படிப்போரால் இலகுவாக புரிந்துகொள்ளலாம். உதாரணமாக பாம்பை நோக்கி , உனக்கும் பெண்ணுக்கும் , உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை ஏற்படுத்துவேன்.(ஆதி 3:15) இங்கே பெண் எனப்படுபவள் ஹவ்வா என எபிரேய பெயர்கொண்ட தமிழ் ஏவாள் ஆவார். ஆரம்பத்தில் அவருக்கு பெயர் இடப்படவில்லை.. பிறகு தான் ஆதாம் அவரது வாழ்வே இவளாக இருப்பதால் "வாழ்வு" என பொருள்படும் ஹவ்வா (ஏவா) என்ற எபிரேய பெயரை இடுகிறார். (ஆதி 3:20) பாம்பு ஏவாளை ஏமாத்தியதால் (?) , கர்த்தர் பெண்ணுக்கும் பாம்புக்கும் சண்டைய மூட்டிவிடுகிறார் (இதனால் ரெண்டுபேருக்கும் ஒத்துவராது!! நம்புங்க). அதனுடன் சேர்த்து பெண்ணான ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் சண்டைய மூட்டுறார். அதாவது பெரிய பாம்பும் பெரிய பெண்ணும் செஞ்சதுக்காக , பாம்பின் குட்டிகளும் பெண்ணின் குட்டிகளும் (பிள்ளைகளும்) பகையாக இருப்பாங்களாம். பாம்பின் தலையை...