இடுகைகள்

இயேசு ஏன் கடவுள் அல்ல? லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அப்போஸ்தலர் நடபடிகளின் படி இயேசு ஏன் கடவுளல்ல

  யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2 அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு ஏன் கடவுளல்ல? ---------------------------------------------------------- இது லூக்காவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுடன் இது உடன்படுகிறது. யோவான் சுவிசேஷம் இயேசு தேவனிடம் ஏற்கனவே சொந்த பிள்ளையாக இருந்தவர்.. ஆனால் உண்மையான தேவன் பிதா தான் என கூறுகிறது . ஆனால் முதல் மூன்று சுவிசேசங்களும், இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மூலம் தேவன் அற்புதம் செய்தார். பிறகு அவரை தன் பிள்ளையாக தத்தெடுத்து கொண்டார் என போதிக்கின்றன. அதே வகையில் இந்த அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசு மூலம் தேவன் அற்புதங்கள் செய்ததாகவும், தேவன் அவரை உயர்த்தி உயர் அந்தஸ்த்தை கொடுத்ததாகவும் கூறுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான் என இது கூறுகிறது. ஒருபடி மேலே போய், இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ததாகவும், அவரிடம் நேரடியாக வேண்டுதல் செய்ததாகவும் இது கூறுகிறது. அத்தோடு தேவனிடமே ஜெபம் செய்ததாக இது கூறுகிறது.. இயேசு பிதாவை தொழுது கொள்ளவும் , பிதாவிடமே ஜெபம் செய்யவுமே...

யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல பகுதி 1

  லூக்காவின்படி இயேசு  கடவுளல்ல  யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல? ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ யோவான் சுவிசேஷம் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட வித்தியாசமானது. இது இயேசுவை பற்றி கூறும் கருத்து என்னவென்றால், இயேசு பூமியில் பிறக்க முன்பே வார்த்தையாக அவர் தேவனிடம் இருந்தார். அந்த வார்த்தை மூலமே சகலதையும் தேவன் படைத்தார். அந்த வார்த்தை மனிதனாக மாறியது. ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா மட்டும் தான். அந்த பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும். அந்த பிதா தான் இயேசுவை (வார்த்தையை) பூமிக்கு அனுப்பினார். அந்த வார்த்தை முன்பே ஒரு நபராக இருந்தது. ஆனாலும் ஒரே மெய்யான தேவனாக அவர் இருக்கவில்லை . மெய்யான தேவன் இவருக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஓரமாய் இருக்கிறார் என்பதே சுருக்கம்! (யோவானுடைய கருத்து தவறானது என்றும் இடையிடையே இதில் பதிகிறேன்.) 1.ஆதியிலே வார்த்தை இருந்ததாம். அது தேவனாயிருந்ததாம். அவர் மூலமே சகலதும் உண்டானதாம். ¹ "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது." ² அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். ³ சகலமும் அ...

மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல!! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மத்தேயுவின்படி இயேசு கடவுள் அல்ல மாற்குவின்படி இயேசு ஒரு சாதாரண நல்ல மனிதர். இவரை தேவன் தனது பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு பூமியில் சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு, ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்.. இயேசுவை மாற்குவின்படி கடவுளாக காட்ட கிறிஸ்தவர்களால் ஒருபோதும் இயலாது!! (மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல என ஏற்கனவே எழுதியிருந்தேன்.) 1.இயேசு தேவனுடைய குமாரனாம்! குமாரன் என்றாலே தேவனுக்கு பின்னால் தோன்றியவர். சோ கடவுளல்ல. ¹ தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1:1) தேவனுக்கு பல குமாரர்கள் உண்டென பைபிள் சொல்கிறது. இஸ்ரேல் தேவனுடைய குமாரன்-யாத்தி 4:22, ஓசியா 11:2 சொலமோன் தேவனுடைய குமாரன்- 2 சாமுவேல் 7:14-16 இயேசு தேவனால் அனுப்பப்பட்டதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என்றார் என இயேசு சொன்னதாக யோவான் 10:34-36 கூறுகிறது. 2.இ...