திரித்துவம் 1
திரித்துவம் உண்மையானதா? பாகம் 1 ------------------------ திரித்துவம் உண்மையானதா❓❓ -------------------------------------------- திரித்துவம் எனப்படுவது கிறித்தவ மதத்தில் அடிப்படைகொள்கை போல் ஆக்கப்பட்ட வேதாகமத்திற்கே முரணான ஒரு தவறான நம்பிக்கை! திரித்துவம் என்பது பிதா,பரிசுத்த ஆவி, குமாரன் ஆகிய மூன்றும் ஒரே தேவன். பிதா ஒரு தேவன். குமாரன் ஒரு தேவன். ஆவி ஒரு தேவன். மூன்றுபேரும் மூன்று தேவர்கள் அல்ல. ஒரே தேவன். பிதா ,குமாரன், ஆவி இந்த மூன்றும் சமமானவர்கள். சக்தி வல்லமை வயது எல்லாமே இம்மூவருக்கும் சமம் என்பதே இவர்களது நம்பிக்கை. இதற்காக பைபிளை எவ்வளவு திரித்துகூற முடியுமோ அவ்வளவுக்கு திரித்து கூறி திரித்துவத்தை நியாயப்படுத்த முற்படுவார்கள். கடவுள் எத்தனை? *.பைபிள் என்ன சொல்கிறது?? שְׁמַ֖ע יִשְׂרָאֵ֑ל יְהוָ֥ה אֱלֹהֵ֖ינוּ יְהוָ֥ה אֶחָֽד׃ שְׁמַ֖ע-சமா יִשְׂרָאֵ֑ל-இஸ்ராஏலொ יְהוָ֥ה-யாவே אֱלֹהֵ֖ינוּ-எலோஹைனொ יְהוָ֥ה -யாவே אֶחָֽד׃-எஹத் சமா இஸ்ராஏலு! யாவே எலோஹைனு யாவே எஹத் சமா-கேள் இஸ்ராஏலு- இஸ்ரவேலே ...