ஞாயிறு, 30 ஜூலை, 2023

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 2

 பாகம் 1 தொடர்ச்சி


உள்ளடக்கம்

4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை

6.ஞானஸ்நானம் நடந்த பின் நிகழ்ந்த நிகழ்வு

7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாள்களிலா? நாப்பது நாள் முடிந்த பின்பா?

8.பேதுரு சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்




4.இயேசு பிறந்த பின் பெற்றோர் எங்கே போனார்கள்?

மத்தேயு -

 இயேசு மகா ஏரோதின் காலத்தில் பிறந்ததால், பெற்றோர் அவனுக்கு பயந்து அவன் சாகும்வரை எகிப்துக்கு போய் வாழ்ந்தனர். ஏரோது செத்த பின் அவனது மகன் ஆட்சிக்கு வந்ததால், அவனுக்கும் பயந்து நாசரேத்துக்கு வந்தார்கள்.


¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:"

²⁰ "நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான்."

²¹ அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

 (மத்தேயு 2:13-15,21-23)


லூக்கா

இயேசு மகா ஏரோது இறந்த பின்பு பிறந்ததால் (சிரேனியு தேசாதிபதியாக இருந்தபோது), பெற்றோருக்கு பயம் கிடையாது. அவர்கள் எருசலேம் ஆலயத்திற்கு போனார்கள்.அங்கே நியாயப்பிரமாணப்படி செய்த பின்பு சொந்த ஊருக்கு திரும்பிப் போனார்கள்.

²¹ "பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்."

²² "மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது,"

²³ "முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும்,"

²⁴ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்."


³⁹ "கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:21-24,39)


அதாவது மத்தேயுவின்படி , பெத்லகேமிலிருந்து எகிப்துக்கு ஓட்டம். அங்கிருந்து நசரேத்தில் குடியமர்நதனர். இதன்படி அவர்கள் நாசரேத்தை சொந்த ஊராக கொண்டவர்கள் அல்ல என்று புரிகிறது.


லூக்காவின்படி பெத்லகேமிலிருந்து எருசலேம் ஆலயத்திற்கு போய் பிறகு சொந்த ஊரான நாசரேத்துக்கு திரும்பி போனார்கள்.


----

5.இயேசுவை சாத்தான் சோதித்த ஒழுங்கு வரிசை


மத்தேயு

எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு மலையின் மேல் ஏற்றி ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு சாத்தானுக்கு அப்பாலே போ சாத்தானே என்று கூறினார். சாத்தான் போய்விட்டான்.


⁵ "அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி:"

⁶ "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

⁷ அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

⁸ "மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:"

⁹ "நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்;"

¹⁰ "அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

¹¹ "அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்." (மத்தேயு 4:5-11)


லூக்கா

 முதலில் மலைக்கு மேல் ஏற்றி ராஜ்யத்தை காட்டினான். தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். அதற்கு இயேசு தனக்கு பின்னாக போ சாத்தானே என்றார். பிறகு எருசலேம் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான்.


⁵ "பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:"

⁶ "இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்."

⁷ நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.

⁸ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்."

⁹ "அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்."

¹⁰ "ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,"

¹¹ "உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்."

¹² அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.

¹³ "பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்."

(லூக்கா 4:5-13)


இதன்படி மத்தேயுவின்படி முதலில் ஆலயத்தின் கூரையின் மேலிருந்து குதிக்க சொன்னான் பிறகு மலைக்குமேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு அப்பாலே போ சாத்தானே என்று இதற்கு சொன்னபோது அவன் போய்விட்டான்.

லூக்காவின்படியோ முதலில் மலைக்கு மேல் ராஜ்யங்களை காண்பித்து தன்னை பணிந்து கொள்ளுமாறு கூறினான். இயேசு தனக்கு பின்னாக போகுமாறு சாத்தானுக்கு சொன்னார். சாத்தானோ மறுபடியும் ஆலயத்தின் கூரையின் மேல் இருந்து கீழே குதிக்க சொன்னான். பிறகு சோதனை முடிந்ததால் அவன் சென்றுவிட்டான். 

இங்கே ஒழுங்கு வரிசை முரண்படுவதோடு, இயேசு அப்பாலே போ என்று சொன்னதும் போனதாக மத்தேயுவும், பின்னாக போ என்று சொன்னபோது மீண்டும் கூரையிலிருந்து குதிக்க சொன்னதாக லூக்காவும் குறிப்பிடுகிறார்.


மாற்கு இந்த சோதனைகளை குறிப்பிடவில்லை. யோவானோ நடக்கவில்லை என்பதை நிரூபிக்கிறார். இது அடுத்த முரண்பாடாக பதிகிறேன்.


--------------------


6.ஞானஸ்நானம் நடந்த பின் நடந்த நிகழ்வு எது?

மாற்கு

ஞானஸ்நானம் பெற்று முடிந்ததும் உடனே ஆவியானவர் வனாந்தரத்துக்கு (காட்டுக்குள்) போக சொன்னார். அங்கே நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்

⁹ "அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்."

¹⁰ "அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்."

¹¹ "அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று."

¹² உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார்.

¹³ "அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."

(மாற்கு 1:9-13)


மத்தேயு

ஞானஸ்நானத்தை முடித்தார். பிறகு சாத்தானால் சோதிக்கப்பட ஆவியானவர் கொண்டு சென்றார்.

¹³ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார்.

¹⁷ "அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. "

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று." (மத்தேயு 3:13,17, 4:1-2)


லூக்கா-

ஞானஸ்நானம் முடிந்ததும் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராக ஆவியானவரால் வனாந்தரத்துக்கு கொண்டுபோகப்பட்டு நாப்பது நாள் சோதிக்கப்பட்டார்.

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. (லூக்கா 4:1-2)

யோவான்

யோவானின் படி இயேசு 40 நாட்கள் சாத்தானால் சோதிக்கப்படவில்லை. மூன்றாம் நாளிலேயே கானாவில் திருமணத்துக்கு போனார்.


²⁸ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.

²⁹ "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி."

³¹ "நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்."

³² "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."

³³ "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."

 …  

³⁵ "மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது," (யோவான் 1:28-29,31-33,35)

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.”

  — (யோவான் 2:1 )

யோவானிடம் இயேசு வந்த அடுத்த நாள் யோவானும் அவனது இரண்டு சீடரும் இருக்கும் போது ஒரு நிகழ்வு நிகழ்கிறது. மூன்றாம் நாள் கானாவுக்கு திருமணத்திற்காக போய்விட்டார்


ஆகவே மத்தேயு மாற்கு லூக்கா ஆகியோர் ஞானஸ்நானம் முடிந்ததும் 40 நாள் வனாந்தரத்தில் இருந்தார் என்கிறது. யோவானோ மூன்றாம் நாளே கானாவில் திருமணத்துக்கு போனார் என்கிறது.அதன்படி சாத்தானால் இயேசு சோதிக்கப்படவில்லை என்று யோவான் கருதுகிறார். ஞானஸ்நானம் கொடுத்ததாக கூட யோவான் குறிப்பிடவில்லை.


--------------------


7.சாத்தானால் சோதிக்கப்பட்டது நாப்பது நாட்கள் இருந்தபோதா? அல்லது நாப்பது நாள் முடிந்த பின்பா?

மாற்கு

நாப்பது நாட்களிலேயே அவர் சாத்தானால் சோதிக்கப்பட்டார்


“"அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள்."”

  — மாற்கு 1:13 (TBSI)


மத்தேயு

சோதிக்கப்படுவதற்காக அழைத்தசெல்லப்பட்டாலும் நாப்பது நாள் உபவாசத்தின் பின்பே சோதிக்கப்பட்டார்.

         

¹ அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.

² "அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று."

³ "அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்." (மத்தேயு 4:1-3)

லூக்கா-

 நாற்பது நாளுமே பிசாசால் சோதிக்கப்பட்டார். அது முடிந்ததும் பசி ஏற்பட மீண்டும் சோதிக்கப்பட்டார்

¹ "இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,"

² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.

³ "அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்." (லூக்கா 4:1-3)


யோவானோ இயேசுவை யாராலும் சோதிக்கப்பட இயலாத நபராக நம்புவதால் அவர் அவ்வாறு நடந்ததாக எழுதவில்லை.

ஆகவே மாற்கு நாப்பது நாள் சோதிக்கப்பட்டதாகவும், மத்தேயு நாப்பது நாள் முடிந்ததும் தான் சோதனைக்காரனே வருகிறான். லூக்காவின்படியோ நாப்பது நாள் சோதிக்கப்பட்டதோடு, அதன்பின்பும் சோதிக்கப்படுகிறார்.

---------

8.பேதுருவை சீடராக தெரிவு செய்த இடமும் தருணமும்


மத்தேயு, மாற்கு

இயேசு கலிலேயா கடலோரமாய் நடந்துபோகையில் ,பேதுருவும் அந்திரேயாவும் கடலில் வலை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தெரிவு செய்யப்பட்டார்


¹⁶ "அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்."

¹⁷ "இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

¹⁸ "உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மாற்கு 1:16-18)


¹⁸ "இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுகொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:"

¹⁹ "என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்."

²⁰ "உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(மத்தேயு 4:18-20)


லூக்கா

- கெனேசரேத்து கடலருகில் பேதுருவின் படகில் ஏறி போதகம் செய்த பின் பேதுரு தெரிவு செய்யப்பட்டார். அவரோடு அந்திரேயா இருக்கவில்லை மாறாக செபதேயுவின் குமாரரான யோவானும் யாக்கோபுமே இருந்தனர்.


¹ "பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்."

³ "அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்."

⁸ "சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்."


⁹ "அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்."

¹⁰ "சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்."

¹¹ "அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."

(லூக்கா 5:1,3,8-11)


யோவான்

அந்திரேயா என்ற பேதுருவின் சகோதரன் யோவான் ஸ்நானனின் பேச்சை கேட்டு இயேசுவிடம் போகிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்


⁴⁰ "யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்."

⁴¹ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

⁴² "பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்." (யோவான் 1:40-42)


இதன்படி, மத்தேயுவும் மாற்கும் கலிலேயா கடலோரத்தில் அந்திரேயாவுடன் பேதுரு சீடனானதாகவும், லூக்கா கெனேசரேத் கடலோரத்தில் செபதேயுவின் குமாரரோடு பேதுரு சீடராகிறார். யோவானின்படியோ யோவான்ஸ்நானனின் பேச்சைக்கேட்டு அந்திரேயா இயேசுவிடம் செல்கிறார். பிறகு தன் சகோதரனான பேதுருவை அழைத்து செல்கிறார்..

ஆகவே இது தெளிவான முரண்பாடாகும்.


தொடரும்.

புதன், 26 ஜூலை, 2023

1 & 2 தீமோத்தேயு, தீத்து, பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல

முந்தைய பதிவு:

1&2 தெசலோனிக்கேயர் படி இயேசு கடவுளல்ல


1 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

—————————-

இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய கடிதமாக கருதப்படுகிறது


1.தேவன் வேறு , இயேசு வேறு ன பிரித்து கூறுகிறார் பவுல்.. அதாவது பிதாவே தேவன், இயேசு கர்த்தர்


¹ “நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,”

² விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.

(1 தீமோத்தேயு 1:1-2)


இயேசுவுக்கும் பிதாவே தேவன் – எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை.

இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

—————



2.என்றென்றும் காணப்படாதவரான ஒருவரே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை



¹⁷ “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 1:17)


—————-



3.தேவன் ஒருவரே. இயேசு என்பவர் மனிதர். அவர் தேவனுக்கும் மனிதனுக்குமான இடைத்தரகர் என்பதே பவுலின் நம்பிக்கை




⁵ "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே."


⁶ எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்குகிறது.“”

(1 தீமோத்தேயு 2 :5-6)

——————————



4.தேவன் மனுஷனாதாக பால் நம்பினாரா?



அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார். ""

— 1 தீமோத்தேயு 3:16 (TBSI)


இது பிற்கால பிரதிகளில் இடைச்செருகப்பட்டதாகும்.. பழைய பிரதிகளில் hos / ho (அவர்) என்றே இருந்தது. எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டு பிரதிகளில் தான் தியோஸ் (தேவன்) என காணப்படுகிறது. இது திரித்துவ கிறிஸ்தவ எழுத்தாளர்கள் தங்கள் வேலையை காட்டியுள்ளார்கள்.


பவுலின் நம்பிக்கை என்னவெனில்,


இயேசு என்பவர் தேவனல்ல.. அவரது பையன் என்றும் அந்த பையன் சகல படைப்புகளுக்கும் முன்பே இருந்தவர் என்பதாகும். அப்படியிருக்க பவுல் தேவன் மாம்சமானார் என சொன்னார் என இட்டுக்கட்டுவது அபத்தம் ஆகும்.



பவுலின் நம்பிக்கை பிரகாரம், தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17), இயேசுவுக்கு சகலத்தையும் கீழ்படுத்தி கொடுத்தவரே தேவன் என்றும், அவருக்கு யேசு இன்றும் அடிபணிவதாகவும், வலது பாரிசத்தில் இருந்து தேவனிடம் பரிந்து பேசுவது மாக இருக்கிறார் என்பதே.


ஆகவே இதில் பவுல் சொல்வது, தேவனை அல்ல!! இயேசு மனுசனானார் என்பதாகும்.


அதனால் தான் மகிமையிலே ஏறெடுத்துப் கொள்ளப்பட்டார் என சொல்கிறார்.. அதாவது வேறு ஒருவரால் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதாகும்.


————


5.இயேசு வேறு தேவன் வேறு என்பதை மீண்டும் வேறுபடுத்தி பவுல் எழுதுகிறார்



“”நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.””

— 1 தீமோத்தேயு 5:21

——–


6.தேவன் என்பவர் மனுசரால் காணப்படாதவரே.. அவர் ஒருவரே என்பதே.. பவுலின் நம்பிக்கை



¹⁵ “அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,”


¹⁶ “ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 6:15-16)


————————–






2 தீமோத்தேயு படி இயேசு கடவுள் அல்ல

——————–



இது பவுல் தீமோத்தேயு என்ற கிறிஸ்தவருக்கு எழுதிய இன்னொரு கடிதமாக கருதப்படுகிறது





1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக

— 2 தீமோத்தேயு 1:2


அதாவது இயேசுவுக்கும் பிதா தான் தேவன் -எபேசியர் 1:17 என்பதே பவுலின் நம்பிக்கை


———



2.தேவன் வேறு , நியாயந்தீர்க்க போகிற இயேசு வேறு என்பதே பவுலின் நம்பிக்கை


“”நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:””

— 2 தீமோத்தேயு 4:1


———-


3.இயேசு மரித்தோரிழுந்து எழுப்பப்பட்டவர் என்பதே பவுலின் நம்பிக்கை.. அதாவது தேவன் எழுப்பினார்


“தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.””

— 2 தீமோத்தேயு 2:8



———————




தீத்து படி இயேசு கடவுள் அல்ல

——————–


இது தீத்து என்ற கிறிஸ்தவருக்கு பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது



1.தேவன் வேறு இயேசு வேறு.. பிதா தான் தேவன் என்றும் , இயேசு என்பவர் கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை



¹ “தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது:”


² “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.” (தீத்து 1:1-2)



அதாவது இயேசுவுக்கு தேவனும் பிதா தான்-எபேசியர் 1:17

————————






2.இயேசுவை மகாதேவன் என பவுல்  சொல்கிறாரா?



¹³ “நாம் நம்பியிருக்கிற ஆனந்தபாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.” (தீத்து 2: 13)


இங்கே இயேசுவை மகாதேவன் என மொழிபெயர்த்துள்ளார்கள். இது பவுலுடைய கொள்கைக்கே முரணானதாகும்.


ஏனெனில் பவுலுடைய கொள்கை பிதாவே தேவன் என்பதும் (1:1), அவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் (எபேசியர் 1:17) என்பதோடு, இயேசு வேறு தேவன் வேறு என்பதாகும்.


அப்படியிருக்க பவுல் இயேசுவை தேவன் என எங்குமே அறிமுகப்படுத்தாதிருக்க, இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்ப்பது தவறாகும்.


பவுலுடைய நம்பிக்கைப் படி இயேசு என்பவர் தேவன் அல்ல! மாறாக தேவனுடைய கிருபை, தேவனுடைய மகிமை , தேவனது குமாரன் என்பதாகும்.


தீத்து 2:11 இல் , இயேசுவின் முதல் வருகையை குறித்து , தேவனது கிருபை பிரசன்னமானது என்கிறார்:


“”ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,””

— தீத்து 2:11 ,



அதே போன்றே இரண்டாம் வருகையை குறித்து , மகாதேவனதும் இரட்சகரதும் மகிமையான இயேசுவின் பிரசன்னமாதலுக்கு காத்திருக்கிறோம் என்றே அவர் கூறுகிறார்.


அதாவது appearing of the glory (doxes) of the great God and Our Saviour, Jesus Christ.


மகாதேவனும் இரட்சகருமானவருடைய மகிமையான இயேசு கிறிஸ்துவின் பிரசன்னமாதல் என்பதே இது குறிப்பதாகும்.


ஏனெனில் இயேசுவின் இரண்டாம் வருகையில் பிதாவுடைய மகிமையில் வருவதாகவே சுவிசேஷ கதைகள் கூறுகின்றன.


மேலும் இயேசுவை பவுல் இரட்சகர் என கூறுவது போல தேவனையும் பலதடவைகள் இரட்சகர் என குறிப்பிடுகிறார் (தீத்து 1:4, 2:9), அதாவது இவ்வசனங்களுக்கு சற்று முன்பு கூட தேவனை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

.


பவுலின் நம்பிக்கைப் படி, இயேசு தேவனால் இரட்சகராக எழுப்பப்பட்டவர் என்பதாகும். (அப்போஸ்தலர் 13:23).


சோ, தீத்து 2:13 இயேசுவை மகாதேவன் என பவுல் சொல்வதாக கூறுவது பவுலின் கருத்துகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகும்.


———-


3.தேவன் வேறு இயேசு வேறு.. பரிசுத்த ஆவி என்பவர் வேறு.. இயேசு மூலமாக பரிசுத்த ஆவியை தேவன் பவுலுக்கும் தீத்துவுக்கும் பொழிந்தாராம.


⁷ “அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். (தீத்து 3:7)

———-




———————


பிலோமோன் படி இயேசு கடவுள் அல்ல


——————-


இது பிலோமோன் என்ற கிறிஸ்தவருக்கும் அவரது சபையாருக்கும் ஒநேசிம் அடிமையை சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டி பவுல் எழுதிய கடிதமாக கருதப்படுகிறது.



1.பிதாவே தேவன், இயேசு கர்த்தர் என்பதே பவுலின் நம்பிக்கை


.”””நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.””

— பிலோமோன் 1:3 (TBSI)

அவரே இயேசுவுக்கும் தேவன் – எபேசியர் 1:17

அடுத்த பதிவு: எபிரேயர்படி இயேசு கடவுளா


செவ்வாய், 25 ஜூலை, 2023

புதிய ஏற்பாட்டு முரண்பாடுகள்- பாகம் 1

 நான்கு சுவிசேச முரண்பாடுகள்.

----------------------------------------------------

புதிய ஏற்பாட்டில் நிறைய முரண்பாடுகள் காணக்கூடியதாக இருக்கும். காரணம் கேள்விப்பட்ட கதைகளை சுவிசேசங்களும் நான்கு முரண்பட்டுக்கொண்டு எழுதப்பட்டிருப்பதோடு, ஒரே சுவிசேசத்துக்குள்ளேயும் முரண்பட்டுக்கொள்வதாக இருக்கிறது. நாம் ஒவ்வொன்றாக காண்போம்.


இந்த பதிவில் உள்ளடங்கும் முரண்பாடுகள்

1.யோசேப்பின் தந்தை யார்? வம்சாவளி எது?

2.இயேசு எப்போது பிறந்தார்?

3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார் ?



1.சிறந்த தாயான மரியாளின் புருஷனின் தகப்பன் யார்?

ஐ.மத்தேயு- யோசேப்பின் தகப்பன் யாக்கோபு

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான் ; அவளிடம் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.”

  — மத்தேயு 1:16 (TBSI)

II.லூக்கா- யோசேப்பின் தகப்பன் ஏலி

“அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரனார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார்.அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;”

  — லூக்கா 3:23 (TBSI)


மாற்கு யோசேப்பு என்ற இந்த நபரை பற்றி வாயே திறக்கவில்லை. யோவான் யோசேப்பை கடந்து பரம்பரை சொல்லவில்லை.


மத்தேயு யோசேப்பின் வம்சவரலாற்றை கூறுவதாகவும், லூக்கா மரியாளின் வம்சவரலாற்றை கூறுவதாகவும் கிறிஸ்தவர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் லூக்காவோ யோசேப்பு ஏலியின் மகன் என்று தான் கூறுகிறார். ஏலியின் மருமகன் என்று கூறவில்லை!


 எண்ணாகமம் 27:1-8, 36:1-9 ஆகிய ஒருவனுக்கு ஆண்மகன் இல்லாதபோது அவனது மகளுக்கு சொத்து போக வேண்டும், அவர்கள் தம் தந்தையின் கோத்திரத்திலேயே திருமணம் முடிக்க வேண்டும் என்றே சொல்கிறது.

பைபிளில் எங்குமே மறுமகனின் தந்தையாக மாமனாரை குறிப்பிடும் வழக்கம் கிடையாது. யூத வரலாற்றிலும் கிடையாது.

லூக்கா தனக்கு தெரிந்த வம்ச வரலாற்றையே எழுதியுள்ளார். அதில் ஏலியை யோசிப்பின் தந்தையாக தான் கூறுகிறார். முரண்பாட்டை சமாளிக்க இவர்களாக இட்டுக்கட்டிக்கூறும் விளக்கமே இது.


இதில் மேலதிகமாக மத்தேயு யோசேப்பை சொலமோனின் வம்சத்தில் வந்தவராகவும் (மத் 1:6), லூக்காவோ தாவீதின் அடுத்த மகனான நாத்தானின் வம்சத்தில் வருபவராக சித்தரிக்கிறார் (3:31)

அத்தோடு யோசேப்பு முதல் தாவீது வரை 42 தலைமுறைகளை லூக்கா குறிப்பிடுகிறார் -லூக்கா 3:23-31

மத்தேயுவோ 28 தலைமுறைகளை குறிப்பிடுகிறார்-மத்தேயு 1:6-16. மத்தேயு 14 , 14 பிரித்து கூறுவதற்காக மற்றவர்களை விட்டுவிட்டார் என்று கூறுவது ஏற்க முடியாது. 14 ,14 தலைமுறைகள் என்று அவர் அறிந்ததை தான் சொல்கிறார்.


லூக்கா, மத்தேயு இருவருமே இயேசுவை தாவீதின் பையன் என்று நிரூபிப்பதற்காகவே இவ்வாறு எழுதியுள்ளார். காரணம் மெசியா தாவீதின் குமாரன். ஆனால் இவர்கள் இருவருமே இயேசுவின் ரத்தம் அல்லாத யோசேப்புக்கே வம்சவரலாற்றை எழுதியுள்ளனர்.இது அவர்கள் எவ்வளவு யூத பாரம்பரியத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் .


இன்னும் சிலர் சவுல் தாவீதை என் மகனே என கூப்பிட்டதால் (1 சாமுவேல் 24:16), இந்த வழமை உண்டு என்கின்றனர். ஆனால் இது மடத்தனமான வாதமாகும் . தாவீதின் வம்சவரலாற்றை எழுதும்போது தாவீது சவுலின் குமாரன் என்று யாரும் சொல்லப்போவதில்லை. சொல்வதும் இல்லை.. வயதில் மூத்தவர் இளையவரை என் மகனே என்று கூப்பிடுவது வேறு. வம்சவரலாறு வேறு.

----------


2.இயேசு எப்போது பிறந்தார்? கி.மு. 6 இலா? கி.பி. 6 இலா?

மத்தேயு- மகா ஈரோடு ராஜாவின் காலத்தில் பிறந்தார் (கி.மு. 4 க்கு முன்)


¹ " ஈரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

² "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ளவந்தோம் என்றார்கள்."

³ "ஏரோது ராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுங்கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁹ "ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:" (மத்தேயு 2:1-3,13,19)

ஏரோது ராஜா கி.மு. 72 முதல் கி.மு. 4 வரை வாழ்ந்தவர் ஆவார். அவன் கி.மு. நான்கில் இறந்தான் என்பதால், இயேசு அக்காலத்தில் இரண்டு வயது பிள்ளையாக இருப்பதால், இயேசு குறைந்தது கி.மு. 6 இல் பிறந்திருக்க வேண்டும். இந்த ஏரோதின் மகனும் ஏரோது என அறிப்பட்டாலும் அவர்கள் கி.மு. நான்கு முதல் கி.பி 18வரை இருந்தார். இறந்து போகவில்லை . அவனை அர்கலேயு என்று மத்தேயு குறிப்பிடுகிறார் (மத்தேயு 2:22). இவனுக்கு பயந்து தான் நசரேத்தில் போய் வாழ்ந்ததாக இவர் கூறுகிறார்.

அதாவது கிறிஸ்த்துவானவர் கிறிஸ்துவுக்கு முன் 6 இல் பிறந்திருக்கிறார். (அவர் எந்த கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரோ?


லூக்கா- அகஸ்து சீசரின் தேசாதிபதியான சிரேனியுவின் முதலாம் குடிமதிப்பு எழுதும் காலத்தில் பிறந்தார் - கி.பி 6

¹ அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகஸ்துராயனால் கட்டளை பிறந்தது.

² சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று.

³ அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள்.

⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆட்டுத்தொழுவம்) கிடத்தினாள்." (லூக்கா 2:1-7)


வரலாற்றில் சிரேனியு சிரியாவின் கவர்னராக நியமிக்கப்பட்டது மத்தேயு குறிப்பிடும் ஏரோதின் மகனான அர்கலேயுவை கி.பி. 6 இல் பதவிநீக்கிய பின் ஆகும்.

குறைந்தது இந்த குடிமதிப்பு கி.பி. 6 நிகழ்ந்திருக்க வேண்டும்.. இதன்படி லூக்கா இயேசுவை கிறிஸ்துவுக்கு பின் 6 இல் பிறந்ததாக எழுதுகிறார்.

ஆகவே கிறிஸ்து கிறிஸ்துவுக்கு முன் பிறந்தாரா? கிறிஸ்துவுக்கு பின் பிறந்தாரா ? 10-12 வருட காலம் வித்தியாசம் உள்ளது.


மாற்குவும் யோவானும் இதுபற்றி கூறவில்லை.

(அறிவில்லாத விசயத்தில் லூக்கா மூக்கை நுழைவிக்க போனதால் இந்நிகழ்வு ஏற்பட்டது.)

----------


3.இயேசு பெத்லகேமில் எங்கே பிறந்தார்? வீட்டிலா? அறைகள் இல்லாததால் ஆட்டுத்தொழுவத்திலா?


மத்தேயு-மத்தேயுவின்படி இயேசுவின் பெற்றோர் ஏரோது ராஜாவின் காலத்திலேயே பெத்லகேமில் வீடொன்றில் இருந்துள்ளனர். ஏரோதின் மரணத்திற்கு பின்னரே கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் தங்கினர்.


¹ "ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,"

⁹ "ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது."

¹⁰ "அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்."

¹¹ "அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்."

¹³ "அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான்."

¹⁴ "அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய்,"

¹⁵ "ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது."


²² "ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,"

²³ "நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. "

(மத்தேயு 2:1,9-11,13-15,22-23)

இதன்படி ,பெத்லகேமில் வீட்டில் பிறந்துள்ளார் இயேசு. அங்கே சாஸ்திரிகள் வந்த பின் ஏரோதுக்கு பயந்து எகிப்துக்கு தப்பி ஓடினர். அவன் மரணித்தபின்பு நாசரேத்தில் வந்து தங்கியதாக புரிகிறது.


லூக்கா- இயேசுவின் பெற்றோர் நாசரேத்தில் வசித்து வந்தனர். சிரேனியுவின் (ஏரோதின் மகனை பதவிநீக்கிய பின்) குடிமதிப்பிற்காக பெத்லகேம் போனார்கள். அங்கே வீடு கிடைக்கவில்லை. பிள்ளை பெற்று ஆடுமாடு கட்டிப்போடும் இடத்தில் வைத்தனர்.


⁴ "அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி,"

கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

⁶ "அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது."

⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே (ஆடு மாட்டு தொழுவத்திலே) கிடத்தினாள்."

(லூக்கா 2:4-7)


மத்தேயுவின்படி பெத்லகேமில் வீட்டில் தங்கியிருந்தனர். அங்கே பிள்ளை பெற்றனர். சாஸ்திரிகள் அங்கே வந்தனர்.பின் எகிப்துக்கு போனார்கள். பிறகு ஈரோட்டின் மகனுக்கு பயந்து நாசரேத்தில் தங்கினர். (மத்தேயுவின்படி பெத்லகேம் சொந்த ஊர். பிறகு ஊரை நாசரேத்துக்கு மாற்றிக்கொண்டனர்)..

 லூக்காவின்படியோ, பெத்லகேமில் அவர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை. அதனால் ஆட்டுத்தொழுவத்தில் பிள்ளையை பெற்று துணியில் அங்கே வைத்தனர். இங்கே மேய்ப்பர்கள் வந்தனர்.(லூக்கா 2:8-18). அவர்களது சொந்த ஊர் நாசரேத்.(லூக்கா2:5)


இதை தனித்தனியாக முரண்பாடாக நான் கருத்தில் கொள்ளவில்லை. அப்படி எடுத்தால் பட்டியல் இன்னும் நீண்டு விடும்.


தொடர்ச்சி பாகம் 2 




ஞாயிறு, 16 ஜூலை, 2023

ஆதியாகமம் தொடர்-5

 ஆதியாகமம் தொடர்-5

தொடர்4 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

14.தேவன் பறவைகளை எதனால் படைத்தார்? எப்போது படைத்தார்?-முரண்பாடு

15.ஆடையின்றி நிர்வாணமாக இருந்த மனிதன்

16.ஏதேன் தொட்ட வாழ்க்கை தற்காலிக பயிற்சியே

17.பாம்பு சொன்னது உண்மையானதாம். தேவன் சொன்னது பொய்யானதாம் 

18.பெண்ணின் வித்தும் கிறிஸ்தவமும்



14.தேவன் பறவைகளை மண்ணினால் படைத்தாரா தண்ணீர் உண்டாக்கியதா? பறவைகளும் மிருகங்களும் மனிதனுக்கு முன்பே படைக்கப்பட்டனவா? மனிதனுக்கு பின்பு படைக்கப்பட்டனவா?  


“"தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று."”

  — ஆதி 2:19 (TBSI)


ஆனால் பறவைகள் தண்ணீர் மூலமாகவும், மிருகங்கள் தான் மண் மூலமாகவும் படைக்கப்பட்டதாக முதலாம் அதிகாரம் சொல்கிறது.


²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்."

 …  

²⁴ "பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று." (ஆதியாகமம் 1:20,24)


இதிலே இன்னொரு டவுட்டும் வருகிறது, அதாவது மிருகங்களை, பறவைகளை ஆதாமுக்கு முன்பே ஐந்தாம் நாளிலும் (ஆதி 1:20-23) , மிருகங்களை ஆறாம் நாளிலும் (ஆதி 1:24-25) படைத்தாரா? அல்லது ஆறாம் நாளில் ஆதாமை படைத்த பின்பு பெயரிடுவதற்காக சகலத்தையும் படைத்தாரா என்ற பிரச்சினையும் எழுகிறது.

ஏனெனில் முதலாம் நாளிலேயே சகல மரங்களை படைத்தாலும் அவை எதுவுமே முளைக்கவில்லை , காரணம் மனிதன் இருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

“"நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை."”

  — ஆதி 2:5 (TBSI)


மரங்கள் மனிதன் நிலத்தை பண்படுத்தும் வரை முளைக்கவில்லை என்றால், பறவைகள் , மிருகங்கள் ஒரு நாள் பட்டினி கிடந்திருக்க வேண்டும்.

ஏனெனில் தேவன் அவைகளுக்கும் மனிதனுக்கும் கனிமரங்களை புற்பூண்டுகளை தான் சாப்பாடாக கொடுத்திருந்தார்-ஆதி 1:29,30

--------

15.ஆரம்பத்திலேயே தேவன் மனிதனை ஆடையின்றி நிர்வாணமாக வைத்திருந்தாராம்.

“"ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள். "”

  — ஆதி 2:25 

ஆதாம் பழத்தை சாப்பிட்டால் எல்லோரும் மிருகங்களை போன்று ஆடையில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பார்களா? 

⁶ "அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்."

⁷ "அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்." (ஆதி 3:6-7)


-------


16.ஏதேன் தோட்ட வாழ்க்கை தற்காலிகமானதான பயிற்சிக்காக கொடுக்கப்பட்டது. என்றென்றும் இருப்பதற்கு அல்ல.


காரணம்,

1.தேவனது ஆசீர்வாதமானது பூமி முழுவதும் மனிதர்கள் பெருக வேண்டும் என்பதே- ஏதேனுக்குள் தோட்ட வேலை பார்ப்பதல்ல

“"பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்."”

  — ஆதி 1:28 (TBSI)


2.ஆதாம் இந்த மரத்திலிருந்து சாப்பிடுவார் என கடவுளுக்கு தெரியாதா?

இருந்தும் அவர் அதை படைக்க காரணம் ஏதேனில் இவர்களுக்கான சோதனைக்காக.

“"தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்."”

  — ஆதி 2:9 (TBSI)


3.பாம்பு தந்திரம் மிகுந்தது என்றும் அது தடுக்கப்பட்ட பழத்தை இவர்களை சாப்பிட வைக்கும் என்று தேவனுக்கு தெரியாதா? அப்படி இருந்தும் அதை அங்கே வைக்க காரணம் சுயமாக தேர்வு செய்யும்போது தேவனது கட்டளையை மீறினால் ஏற்படும் நட்டத்தை உணர்விக்கவே இது.


தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.”

  — ஆதி 3:1 (TBSI)


(ஆனாலும் பாம்பு ஏன் இவர்களை வஞ்சிக்க (?) நினைக்க வேண்டும் என்பதற்கோ விளக்கம் பைபிளில் இல்லை. குர்ஆனில் மட்டுமே உண்டு.)


இவ்வாறு அல்லாமல் , தேவன் மனிதனை நிரந்தரமாக வாழ படைத்திருந்தால், தான் எதிர்பார்த்தது போல் படைக்க தெரியாதவர் என்றே நிரூபனமாகும்..

மேலும் தேவனது சித்தமே அவன் நிரந்தரமாக பூமியில் என்றென்றும் இருக்கக்கூடாது என்பதுவே

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும்ன்று,"”

  — ஆதி 3:22 (TBSI)

------------


17.பாம்பு உண்மையாளராம். கடவுள் ஞானம் இருந்தும் பொய்யாய் போன தேவவாக்கும்.


பாம்பு சொன்னதாம்: பழத்தை சாப்பிட்டால் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆவீர்கள்


⁴ அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

⁵ "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." (ஆதி 3:4,5)


பாம்பு சொன்னது போல கண்கள் திறக்கப்பட்டன:


“"அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்."”

  — ஆதி 3:7 (TBSI)


பாம்பு சொன்னது போல நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆனார்கள்:

“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"”

  — ஆதி 3:22 (TBSI)


இங்கே பாம்பு எதுவும் பொய் சொன்னதாக இல்லை. உண்மையை மட்டுமே சொல்லியுள்ளது.


ஆனால் தேவன் என்ன சொன்னார்?:

“ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”

  — ஆதி 2:17 (TBSI)


அதாவது சாப்பிடும் நாளில் செத்துப்போவாய் என்றாராம்..

இது ஆன்மீக மரணமல்ல என்பதை முந்தைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

தேவன் கருணை காட்டி வாழ்வை நீடித்தாலும், தேவன் அறிந்துகொண்டே சொன்னதால் பொய் என்றே அது சித்தரிக்கப்படுகிறது .

(தேவனிடம் ஒரு நாள் 1000 வருடம். அது முடிய முன்பே 930 வயதில் ஆதாம் மரணித்துவிட்டாரே என்று சிலர் சிந்திக்கலாம். அது சரியாக இருந்தால் இரட்டை அர்த்தத்தில் தேவன் பேசியிருக்கிறார் என்று வரும்.)

-------

18.பெண்ணுடைய வித்தும் கிறிஸ்தவமும்.

பாம்பின் சொல்லை கேட்டு பெண் பழத்தை சாப்பிட்டு தன் கணவனையும் சாப்பிட வைத்ததால் , தேவன் அதை சபித்தார். அதன் தொடர்ச்சியாக:

“"உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்."”

  — ஆதி 3:15 (TBSI)

பாம்புக்கும் பெண்ணுக்கும் பகை இருக்குமாம். அதேபோல் பாம்பின் வித்துக்கும் பெண்ணின் வித்துக்கும் பகை இருக்குமாம்.

ஏதோ ஏதேனில் இருந்தது மரியாள் என்பது போல கிறிஸ்தவர்கள் கதை கட்டி, பெண்ணின் வித்து இயேசு. காரணம் அவர் மட்டுமே ஆண் துணையின்றி பிறந்தவர் என்கிறார்கள்.


இதற்கு நம் பதிலாக,


1.இங்கே மரியாளின் வித்து என்று சொல்லப்படவில்லை. மாறாக ஏதேனில் இருந்த பெண் ஏவாள். அவளுடைய வித்து என்பது ஏவாளுடைய பிள்ளைகளையே குறிக்கும்.


2.இங்கே வித்து என்பதை குறிக்க "ஸெரஃ" (זרע) என்பதே உள்ளது.பைபிள் பிரகாரம் இது பெண்ணுக்கும் ஆணுக்கும் பொதுவாக அவரவர் சந்ததியை குறிக்க பயன்படுவதாகும்.

உதாரணமாக இதே ஆதி 16:10 இல் இஸ்மவேலை குறித்து ஆகாரின் (ஸெரஃ-זרע) ஆக சித்தரிக்கப்படுகிறது.

“"பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை (ஸர்ஏக்- זרעך) மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்."”

  — ஆதி 16:10 (TBSI)


மேலும் இஸ்ரவேலரை ரெபெக்காவின் ஸெரஃ ஆக ஆதி 24:60 சித்தரிக்கிறது.

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் (ஸர்ஏக்- זרעך)  தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)


ஆகவே இங்கே ஆதி 3:15 ஏவாளின் வித்தையை சொல்கிறது. ஏவாள் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ அல்லது ஏவாளின் பிள்ளைகளில் ஒரு பெண் கன்னி கழியாமல் பிள்ளை பெறுவார் என்றோ சொல்லவில்லை.



3.ஏவாளுக்கு ஆபேலுக்கு பதிலாக வேறொரு ஸெரஃ கிடைத்ததாக அடுத்த அதிகாரமே சொல்கிறது

“"பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் (זרע אחר) கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள்."”

  — ஆதி 4:25 (TBSI)

சேத்தை தனக்கு ஆபேலுக்கு பதிலாக தேவன் கொடுத்த வித்து என்று ஏவாளே சொல்கிறார்.


4.ஆதி 3:15 ஒருமையில் அவர் என்று சொல்வதால் ஒரே நபராக இருக்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஸெரஃ என்று வரும்போது அது ஒருமையிலேயே எபிரேயத்தில் பாவிக்கப்படுகிறது. அதாவது "அவன்/அவர்" என்று ஒருமை ஆண்பாலிலேயே எபிரேயத்தில் வரும்.

உதாரணமாக ஆதி 24:60

“"ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்."”

  — ஆதி 24:60 (TBSI)

இங்கே எபிரேயத்தில்

வெயீரஷ் ( וירשׁ- மேலும் அவன் சுதந்தரித்துக்கொள்வான்)) ,ஸர்எக் (זרעך- உன் வித்து) , எத்ஷஅர் (את שׁער- வாசல்களை) , சொனெஆவ் (שׁנאו- அவனை பகைப்பவர்களின்)

இதன் நேரடி அர்த்தம்,

"உன் வித்து தன்னை பகைப்போரின் வாசல்களை சுதந்தரித்துக்கொள்வான்."

இதுபோன்று தான் ஆதி 3:15உம் ஒருமையில் பாவிக்கப்பட்டுள்ளது.. இதற்கும் இயேசுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை!


வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆதியாகமம் தொடர்- 4

 ஆதியாகமம் பாகம் 4

பாகம்3 இன் தொடர்ச்சி

உள்ளடக்கம்

12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார்.

13.சரீர மரணமா ஆத்ம மரணமா?



12.முதல் மனிதன் மரணத்தோடு படைக்கப்பட்டார் என கூறும் ஆதியாகமம். 

இதன்மூலம் ஆதாமின் பாவத்தினால் மரணம் பூமியில் நுழைந்ததாக கூறும் கிறிஸ்தவம் பொய்யாக்கப்படுகிறது.


¹⁷ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதி 2:17


-இந்த பழத்தை சாப்பிட்டால் சாப்பிடும் நாளிலேயே மரணம் ஏற்படும் என தேவன் எச்சரிப்பதன் மூலம், மரணம் என்றால் என்ன என்று ஆதாம் அறிந்திருக்க வேண்டும். 

-அத்தோடு , மரணிக்கக்கூடியவனாக ஆதாம் படைக்கப்பட்டிருக்கிறார். அதனால் மரணத்தை குறித்து எச்சரிக்கப்படுகிறது.. மரணமற்றவனாக படைக்கப்பட்டிருந்தால், பழத்தை சாப்பிடுவதால் மரணம் ஏற்படப்போவதில்லை.

(உதாரணமாக சாவே இல்லாதவன் விசத்தை சாப்பிட்டால் இறப்பானா? நீ விசத்தை சாப்பிட்டால் இறப்பாய் என்று சொன்னால் அவன் மரணமற்றவனாக இல்லை என்று புரிகிறது.)


-மேலும் இதை தெளிவாக்கும் விதமாக, ஆதாம் மரணமற்ற வாழ்வை பெற வேண்டுமானால், ஜீவ மரத்திலிருந்து சாப்பிடவேண்டும் என்று ஆதி 3:22 கூறுகிறது.


“"பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று,"” — ஆதி 3:22 


-உயிர்த்தெழுதலின்பின்பு கூட ஜீவ மரத்திலிருந்து சாப்பிட்டால் தான் , மரணமற்ற வாழ்வை பெற முடியும் என யோவான் எழுதின வெளிப்படுதல் கூறுகிறது. அதாவது ஜீவ மர கனியை இயேசு வாக்களிக்கிறாராம் -வெளி 2:7

ஆனால் பவுலோ ஆதாமின் பாவத்தினால் தான் சகலரும் மரணிக்கிறார்கள் என்று எழுதிவைத்திருக்கிறார்- ரோமர் 5:12-14


ஆகவே கிறிஸ்தவத்தின் அடிநாதமே தப்பாக இருக்கிறது.


13.ஆத்மீக மரணமா சரீர மரணமா?


ஆதாம் பழத்தை சாப்பிட்டார்-ஆதி 3:6

கர்த்தர் சொன்னது போல (ஆதி 2:17) அதே நாளில் சாகவில்லை. மாறாக 930 வருடங்கள் வாழ்ந்து மரணித்தார் ஆதாம்- ஆதி 5:5.


ஆத்மீக மரணம் என்பது தேவசாயலை இழப்பதை குறிக்கும் என கருதினால், நோவா காலத்திலும் தேவசாயலில் தான் இருந்துள்ளனர்.(ஆதி 9:6)

“"மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது."”-ஆதி 9:6

  முதல் மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்ட படியினால், பிறப்பவர்கள் அனைவரும் தேவசாயலிலேயே பிறப்பார்கள். அதனால் தான் பிற்காலத்தில் பிறந்த மனிதனை குறித்தும் இவ்வாறு சொல்லப்படுகிறது.



தேவனோடிருந்த உறவை இழப்பதை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட காயீனுடனும் கூட பேசிக்கொண்டிருந்தார்.(ஆதி 4:6-14)


பாவம் செய்யாத இயல்பை குறிக்கும் என்று கருதினால், அப்போது கூட அது தப்பாக தான் முடியும். தேவன் மனிதனை நன்மை, தீமை இரண்டையும் செய்யக்கூடியவிதமாக தான் படைத்திருந்தார். அதனால் தான் ஆதாம் தீமை செய்தார் . இல்லாவிட்டால் பாவம் செய்திருக்க மாட்டார்.


ஆதாமின் ஆத்துமா மரணமடைந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை!


அப்படியாயின் சரீரம் மரணமடைந்ததா?

தேவனிடம் தவறு செய்துவிட்டு திருந்தி ஜெபம் செய்தால், தான் செய்ய நினைத்ததை செய்யாமல் மனதை மாற்றிக்கொள்பவராகவே பைபிள் சித்தரிக்கிறது.


¹³ "உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்."

¹⁴ அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்ளுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். (யாத்திராகமம் 32:13-14)

⁷ "பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,"

⁸ "நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்." (எரேமியா 18:7-8)


இவ்வாறே எசேக்கியா ராஜாவிடமும், நீ பிழைக்கமாட்டாய் இறந்துவிடுவாய் என்று சொன்ன போது , அவரும் ஜெபம் செய்தபோது , மேலதிகமாக 15 வருட ஆயுளை நீடிப்பித்தார்.- 2 இராஜாக்கள் 20:1-6, ஏசாயா 38:1-5.


இதுபோன்று ஆதாமும் மனந்திருந்தி மன்னிப்பு கேட்டதால் தான் ஆதாமின் ஆயுளும் நீடிக்கப்பட்டிருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவில்லை.


-உதாரணமாக சர்ப்பத்திற்கும் மனிதனுக்கும் ஏன் பகை ஏன் அது மனிதனை வஞ்சிக்க நினைத்தது என்பதெல்லாம் எப்படி இடம்பெறவில்லையோ அது போன்றே இதுவும்.


தேவன் ஆதாமின் மேல் கோபத்தில் நிலைத்திருக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக , தேவன் அவர்களுக்கு தோல் ஆடைகளை அணிவித்ததை கூறலாம்-ஆதி 3:21


ஆகவே சரீர மரணத்தையே தேவன் எச்சரித்தார். ஆனாலும் அது அதே நாளில் நிகழவில்லை.


பாகம்5

வியாழன், 13 ஜூலை, 2023

பைபிளும் குர்ஆனும் ஓர் ஒப்பீடு பாகம் 2

குர்ஆன் பைபிள் ஒப்பீடு பாகம் 2


பாகம்1 இன் தொடர்ச்சி 

உள்ளடக்கம்- ஆபேல் காயின் கதை

குர்ஆன்




மேலும், (நபியே!) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு குமாரர்களின் செய்தியை உண்மையைக் கொண்டு அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பீராக! அவ்விருவரும் குர்பானி (பலி)யை (அல்லாஹ்வின் பால் சமர்ப்பித்து) நெருக்கமாக வைத்த சமயத்தில் அவ்விருவரில் இருந்து அது அங்கீகரிக்கப்பட்டது, மேலும், மற்றவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படவில்லை, ஆகவே, “நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று (அங்கீகரிக்கப்படாதவர்) கூறினார், (அதற்கு அங்கீகரிக்கப்பட்டவர்) அவர் “அல்லாஹ் அங்கீகரிப்பதெல்லாம் அங்கீகரிக்கப்பட்டது. பயபக்தியுடையவர்களிடம் இருந்துதான்” என்று கூறினார்.( அல்குர்ஆன் : 5:27)


(மேலும்) “நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்னளவில் நீட்டினாலும் நான் உன்னைக் கொலை செய்வதற்காக என்னுடைய கையை உன்னளவில் நீட்டுபவன் அல்ல, (ஏனென்றால்) நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” (என்றும் கூறினார்.) ( அல்குர்ஆன் : 5:28)


“என்னுடைய பாவத்தையும், உன்னுடைய பாவத்தையும் நீ சுமந்து கொண்டு (அல்லாஹ்விடம்) வருவதையே நிச்சயமாக நான் நாடுகிறேன், அவ்வாறாயின் நீ நரகவாசிகளில் உள்ளவனாகிவிடுவாய், இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்”, எனவும் கூறினார்.

(அல்குர்ஆன் : 5:29)


(இதன் பின்னரும்) அவர், தன் சகோதரரைக் கொலை செய்துவிடுவதையே அவருடைய மனம் அவரை எளிதாக்கியது, ஆகவே, அவரைக் கொலை செய்து விட்டார், அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் (உள்ளவராக) ஆகிவிட்டார்.  அல்குர்ஆன் : 5:30)


பின்னர், பூமியைத் தோண்டக்கூடிய ஒரு காக்கையை தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு மறைக்க வேண்டும் என்பதை அவருக்குக் காண்பிப்பதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்தான், (அது பூமியைத் தோன்றிற்று, இதனைக் கண்ட) அவர் “என்னுடைய கேட்டே இந்தக் காகத்தைப் போல் ஆவதற்குக் கூட இயலாதவனாக நான் ஆகிவிட்டேனா? அவ்வாறு (நான் இருந்திருந்தாலும்) என் சகோதரரின் சவத்தை நான் மறைத்திருப்பேன்” என்று (அழுது) கூறி கைசேதப்படக்கூடியவர்களில் ஒருவராக அவர் ஆகிவிட்டார்.

(அல்குர்ஆன் : 5:31)


இதன் காரணமாகவே “எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னைத் தடை செய்த)ற்காகவோ தவிர, (அநியாயமாக மற்றொருவரை) கொலை செய்கிறார்களோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலவர் என்றும் எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழவைக்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே வாழவைத்தவர் போவார். ” என்றும் இஸ்ரயீலின் மக்களின் மீது நாம் விதியாக்கப்பட்டு விட்டோம், மேலும், நமது தூதர்கள் பலர் நிச்சயமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள், அப்பால் நிச்சயமாக அவர்களால் பெரும்பாலோர், இதற்குப்பின்னரும் பூமியில் வரம்பு கடந்தவர்களாய் இருந்தனர்.

(அல்குர்ஆன் : 5:32)


இங்கு குர்ஆன் அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வையும் அதன்காரணமாக இஸ்ராயீலின் பிள்ளைகள் மீது விதிக்கப்பட்ட சட்டத்தையும் பேசுகிறது.


1.மகன்கள் இருவரும் இறைவனுக்கு பலி செலுத்தினர். ஒருவர் பயபக்தியாளராக இருந்தார். அதனால் அவரிடமிருந்து பலியை ஏற்றுக்கொண்டான்.

2.பலி ஏற்றுக்கொள்ளப்படாத நபர், பொறாமைப்பட்டு தன் சகோதரனை கொல்லப்போவதாக அவரிடமே சொன்னார்.

3.அதற்கு அவர், நான் என்னை கொல்ல முயற்சித்தாலும், நான் அவ்வாறு உனக்கு செய்யமாட்டேன் என்றும், இவ்வாறு நீ செய்தால் உன் பாவத்தோடும் என் பாவத்தோடும் வந்து நரகவாசியாகிவிடுவாய் என்று கூறினார்.

4.ஆனாலும் அவர் தன் நல்ல சகோதரனை கொன்று விட்டார். அவர் மூலமாக வரும் முழு சந்ததிகளுமே முடிவு கட்டிவிட்டார்.

5.அப்போது இரு ஆண்கள் மட்டுமே இருந்ததால் (சிறந்த ஆதமும் அவரது கொலைகார மகனும்), தன் சகோதரனின் உடலை புதைத்து ஒரு காகத்தை அனுப்பிவைத்து குழிதோண்டி புதைக்கும் விதத்தை கற்பித்தான் இறைவன். அந்த மனிதனும் கைசேதப்பட்டவனாக ஆகிவிட்டார்.

6.இதன்காரணமாக தான், இஸ்ராயீலின் பிள்ளைகளுக்கு ஒரு உயிரை அநியாயமாக கொல்பவன் முழு மனிதர்களையும் கொன்றவன் போலவான் என்றும் ஒரு உயிரை வாழவைத்தவன் முழு மனிதர்களையும் வாழவைத்தவன் போலவான் என்ற சட்டத்தையும் வழங்கினான்.


பைபிள்

காயீன் முதலாவதாக ஆதாமுக்கு பிறந்தார்-ஆதி 4:1

பிறகு ஆபேல் பிறந்தார். அவர் ஆட்டுடையார் ஆனார். காயீன் விவசாயி ஆனாரம்-ஆதி4:2

பிறகொருநாள் காயீன் கனிகளையும், ஆபேல் சிறந்த ஆடுகளையும் பலியாகக் கொண்டுவந்தனர்.ஆபேலையும் ஆபேலின் காணிக்கையையும் கடவுள் ஏற்றுக்கொண்டார்.-ஆதி 4:3-4.

காயீனையும் அவனது காணிக்கையையும் கடவுள் ஏற்கவில்லை. இதனால் அவன் எரிச்சலடைந்தார்-ஆதி 4:5

கடவுள் அவனுக்கு, நன்மை செய்தால் மேன்மை உண்டு. நன்மை செய்யாவிட்டால் பாவம் உன் வாசல்படியிலிருக்கும். பாவத்தின் ஆசை உனக்காக இருக்கும். அதையே நீ ஆண்டுகொள்ள வேண்டும் என அட்வைஸ் பண்ணினார்- ஆதி 4:7

காயீன் ஆபேலை கொன்றுவிட்டார்-ஆதி 4:8


கடவுள் காயீனிடம் உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்று கேட்க , அவன் கடவுளையே கலாய்க்குற விதமாக பேசுறார்.. அதாவது நான் அவனுடைய காவலாளியோ என கடவுளிடமே கேட்டாராம்- ஆதி 4:9


தன் சகோதரனை அவர் கொன்றதற்காக கடவுள் அவரை சபிக்கிறார்,விவசாயத்திலும் அடிவிழும் என்கிறார். அத்தோடு நாடோடியாக இருப்பாய் என்றும் சாபம் கொடுத்தார்-ஆதி 4:11-12


அதற்காக காயீன், தன்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் தன்னைக் கொன்றுபோடுவான் என்று பயந்தானாம்- கர்த்தரும் காயீனை கொல்பவனுக்கு ஏழு பழி விழும் என்றதோடு, காயீனை கண்டுபிடிக்கிற எவனும் கொன்றுபோடாதபடி அவனுக்கு அடையாளத்தை கொடுத்தாராம் -ஆதி 4:14-15


¹⁴ "இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் இருந்து அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்."

¹⁵ அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.

அடடே, இருந்ததே மூன்று ஆண்கள். ஆதாம் , காயீன், ஆபேல். இதில் ஆபேலை போட்டுத்தள்ளி விட்டார். இருக்குறது தகப்பனும் இவரும் மட்டும் தான். அப்படி இருக்க தன்னை இன்னொருத்தன் போட்டுத்தள்ளுவான் என்று பயந்தானாம். கடவுளும் அடையாளம் வேறு கொடுத்தாராம் அவனை கொல்லாதபடிக்கு. கொல்றதுக்கு தான் ஆளே கிடையாது.


அடுத்து கொலைக்கு கொலை செய்ய வேண்டும் என்ற சட்டம் வழங்கப்பட்டதே மோசேயிற்கு தான். பைபிள் பிரகாரம் இந்நிகழ்விற்கு 2600+ வருடங்களுக்கு பின்னால் தான் இத்தகைய சட்டமே கொடுக்கப்பட்டது..

தோராவின் பிரகாரம் அவனை கொல்வதற்கு தோராவே அப்போதிருக்கவில்லை. வரலாற்றை சரியாக படிக்காத ரபீ ஒருவரே இதை இவ்வாறு எழுதியிருக்க வேண்டும்.


¹⁶ "அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்."

¹⁷ "காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்." (ஆதி 4:16-17)

கர்த்தர், காயீன் பூமியில் நிலையற்றவனாக இருப்பான் என சாபமிட்டார். ஆனால் அவனோ நோத் தேசத்தில் குடியிருந்து, தன் மகனின் பெயரில் ஒரு பட்டணத்தையே உருவாக்கிவிட்டாராம்.


இதன்படி பைபிள் விழாவாரியாக கதைகூற முற்பட்டு, ஆளே இல்லாத இடத்தில் தன்னை இன்னொருத்தன் கொல்லுவான் என்றும் பழிவாங்கும் சட்டத்திற்கு இல்லாத 2600 வருடங்கள் முன்பே அது குறித்து பயப்பட்டாராம். அப்போது கர்த்தரும் ஆளே இல்லாத போது அவனை யாரும் கொல்லாதபடிக்கு அடையாளம் கொடுத்தாராம். ஆனால் வேடிக்கையாக அந்த சட்டம் வந்ததே எகிப்திலிருந்து மோசேயும் இஸ்ரவேலர்களும் புறப்பட்டபின்னால் தான்.


அத்தோடு, நாடோடியாக இருப்பாய் என்று சொன்னதும் நிறைவேறாமல் போனதாக இது சித்தரிக்கிறது .

இக்கதையிலே பைபிளில் நல்ல பாடங்கள் இருந்தாலும், இதே கதைவிசயத்தில் அறிவீனமும் கலந்திருக்கிறது. 

ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஆதியாகமம்-தொடர் 3


தொடர்2 இன் தொடர்ச்சி 


உள்ளடக்கம்

7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் பூமியில் உண்டாகிவிட்டதாம்

8.சூரியனை படைக்க முன்பே தாவரங்களை படைத்துவிட்டாராம்.

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலங்களும் மூன்று காலைப்பொழுதுகளும் ஏற்பட்டு முடிந்து விட்டதாம்.

10.நமது ரூபம், நமது சாயல் என்று தேவன் பன்மையில் பேசுவது திரித்துவத்திற்கு ஆதாரமா?

11.அனைத்து மிருகங்களும் மனிதனும் தாவரவுண்ணிகளாக படைக்கப்பட்டதாம்! (அதாவது 6000 வருடங்கள் முன்பு உணவு சங்கிலி கிடையாதாம்!)




7.சூரியனை படைக்க முன்பே பகல் வெளிச்சம் 


தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.

தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.""

  - ஆதி 1:3,5 


பகலானது முதலில் தேவனால் படைக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதற்கு ஒளி வழங்கும் சூரியனோ நான்காவது நாளில் படைக்கப்பட்டதாம்.


¹⁶ "தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்."

¹⁸ "பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்."(ஆதி 1:16,18)


பகலுக்கு காரணமே சூரியனாக தான் உள்ளது. சூரியன் மறைந்துவிடும்போது ஒளி போய்விடுகிறது. சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாகி விடுகிறது. சூரியன் வெறும் ஆளுகை தான் செய்கிறதென்றால், பூரண சூரிய கிரகணம் ஏற்படும் போது இருளாக கூடாது. ஆகவே இவ்வசனம் புரிதலற்ற மனித வார்த்தை என்று புரிகிறது.


இதை சமாளிக்க நவீன கிறிஸ்தவர்களோ, உண்டாக்கினார் என்பதிலுள்ள எபிரேய வார்த்தை "ஆசா- עשׂה" என்பதாகும். இது புதிதாக உண்டாக்குவதை குறிக்காது. ஏற்கனவே இருந்த ஒன்றை செயற்பாட்டுக்கு கொண்டுவருவதை குறிக்கும் என்று பொய்யாக பைபிள் மொழியறிவின்றி வாதிக்கிறார்கள்.


ஆனால் இவ்வார்த்தையும் புதிதாக உண்டாக்குவதையே குறிக்கிறது. ஏனெனில் 1:14இல் சுடர்கள் ஆகாய விரிவில் உண்டாகக்கடவது என்று சொல்கிறார். அதன்பின்பு தான் அவை உருவானது.

இதே ஆசா எனும் வார்த்தையை தான் மனிதனை உண்டாக்குவோம் (ஆதி 1:26) என்று சொல்வதற்கும் இதே வார்த்தை தான் பாவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மனிதன் இருந்து அவனை செயற்பாட்டுக்கு கொண்டுவருவோம் என்பதா இதன் அர்த்தம்? இதற்கு பின்பு தானே மனிதனை தேவன் படைக்கிறார்- ஆதி 1:27

ஆகவே இது தவறான சமாளிப்பாகவே உள்ளது.

---


8.சூரியனை படைக்க முன்பே கனிமரங்களை படைத்தாராம் 


¹¹ "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களின் விதையையுடைய கனிகளைத் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

¹² "பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் ஜாதியின்படியே தங்கள் விதையை கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைத்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்."

¹³ சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.(ஆதியாகமம் 1:11-13)


இதிலிருந்து மரங்களுக்கு சூரியன் அவசியமில்லை என்பதை தெரிவிக்கிறது. ஆனால் சூரிய ஒளி படாமல் இருக்கும்போது மரங்கள் வாடி போய்விடுகின்றன

.

சூரியனுக்கு முன்பே தேவன் ஒளியை படைத்துவிட்டார் தானே என்று இவர்கள் வாதிடலாம். அப்படி பூமியில் ஒரு ஒளி இருக்குமாயின் சூரிய கிரகணம் ஏற்படும் போது அந்த ஒளி எங்கே போகிறது? அதுகூட பகலை தான் குறிக்கிறது. (1:5). ஆகவே பூமியில் பகல் போன்ற வெளிச்சத்திற்கு சூரியனே காரணமாக அமைவதால், இதுகூட பேதமை கொண்ட ரபீக்களின் எழுத்தாக இருக்க வேண்டும்.


-----

9.சூரியனை படைக்க முன்பே மூன்று சாயங்காலம், மூன்று விடியற்காலை உண்டாகியிருக்கிறது- ஆதி 1:5,8,13


சூரியன் உதிப்பதால் தான் விடியற்காலையே தோன்றுகிறது. இது தெளிவாக இதை எழுதியவரின் அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது.


-----

10.நமது சாயல், நமது ரூபம், உண்டாக்குவோம் என்பன திரித்துவத்திற்கு ஆதாரமா?


""பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.""

  — ஆதி 1:26 


தேவன் தன் மகிமையை நிலைநாட்டும்விதமாக தான் இங்கே "நமது ரூபம், நமது சாயல்", "உண்டாக்குவோமாக" என்று கூறியவை அமைகின்றன.

ஏனெனில் அடுத்த வசனத்திலேயே,

""தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.""

  — ஆதி 1:27 


இதிலே தெளிவாக "தம்முடைய சாயலாக - அவனுடைய உருவத்தில்" "சிருஷ்டித்தார் - அவன் படைத்தான்" என்றும் தெளிவாக உள்ளது. தங்களுடைய சாயல் என்றோ சிருஷ்டித்தார்கள் என்று கூறப்படவில்லை. இதிலிருந்து தன் மகிமையை வெளிக்காட்டும் விதமாக தான் இது கூறப்பட்டுள்ளது என்று புரிகிறது.


அதுமட்டுமின்றி ஏசாயா 45:12இல் தெளிவாக,


"""நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதன்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்."”

  — ஏசாயா 45:12 


நான் தான் மனுஷனை படைத்தேன் என்கிறார். நாங்கள் படைத்தோம் என்று கூறவில்லை. காரணம் ஒரே நபரான தேவன் தானே படைத்தார்.


ஆகவே ஆதி 1:26 பன்மையை குறிக்கிறது என்று கூறுவது அதற்கு அடுத்த வசனத்திற்கும் முரணாகவே அமைகிறது.


இதேபோல் பன்மையில் ஏசாயா 6:8 இல் "நமது காரியம்" என்று கூறப்படுகிறது.


அப்படியென்றால் அவர் யாரிடம் அவ்வாறு சொன்னார்?


மனிதனை படைக்க முன்பே தன் தூதர்களை அவர் படைத்துவிட்டார். அதனால் தான் மனிதன் பழத்தை சாப்பிட்டவுடன், கெரூபீன் என்று அறியப்படுகிற தூதர்களை ஏதேன் தோட்டத்தில் காவலுக்கு வைத்தார் - ஆதி 3:24

தேவன் அனைத்தையும் தன் இஷ்டப்படி செய்தாலும் அதை தன் தீர்க்கதரிசிகளுக்கு தெரிவிக்காமல் செய்யமாட்டார் என்று ஆமோஸ் 3:7 சொல்கிறது.. 

தீர்க்கதரிசிகளுக்கே இந்த நிலைமை என்றால், முழுமையாக கட்டுப்பட்டு சுயவிருப்பு இன்றி இருக்கும் தன் வானதூதர்களுக்கு அறிவிக்காமல் இருப்பாரா?

அதையே ஏசாயா 6:1-8 கூறுகிறது. தேவ சபையில் தேவன் பேசுவதை அவை கூறுகிறது.

அதை தான் ஆதி 1:26 சொல்கிறது.

இந்நிகழ்வை தான் குர்ஆன்,

"உமது இறைவன் வானவர்களிடம், நான் பூமியில் ஒரு தலைமுறையை உண்டாக்க போகிறேன் என்று சொன்னபோது.." குர்ஆன் 2:30 நான் சொல்கிறது.

-------

11.அனைத்து மிருகங்களையும்,மனிதனையும் தாவரவுண்ணிகளாக தேவன் படைத்திருக்கிறார் போலும்


“"பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"”

  — ஆதி 1:29 


""பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன்; அது அப்படியே ஆயிற்று.""

  — ஆதி 1:30 


ஆரம்பத்தில் உணவுச்சங்கிலி இருக்கவில்லை போலும். இந்த காலம் 6000 வருடங்கள் முன்பானது என கூறப்படுகிறது. அதை ஆதியாகமம் 5ம் அதிகாரத்தில் வைத்து கூறுகிறேன்.

அதன்படி, 6000 வருடங்கள் முன்பு பூமியே வெஜிடேரியன்களால் நிறைந்திருந்தது. அனைத்தும் இயற்கை மரணத்தையே அடைந்துள்ளது போலும்.

தொடர்4

இது தெளிவான பிழையாகும்.

ஆதியாகமம்-தொடர் 2

 ஆதியாகமம்-தொடர் 2


தொடர்1 இன் தொடர்ச்சி


உள்ளடக்கம்

5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

ஆவியின் வகைகள்

6.தேவனுடை வார்த்தை என்பது நபரா?


5.ஆதியாகமம் 1:2 ஆவியானவர் என்ற நபரை குறிக்கிறதா?

2.“பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.”

  — 1:2 



இது பூமி படைக்கப்பட்ட போது இருந்த நிலையை சொல்கிறது. 

திரித்துவத்தின் மூன்றாம் நபராக பரிசுத்த ஆவி என்ப்படுபவர் கருதப்படுகிறார். அவர் ஆரம்பம் முதலே இருக்கிறார் என்பதற்கு இதை ஆதாரமாக பாமர கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர்.


உண்மையில் "தேவ ஆவியானவர்" என்று இருக்கும் வார்த்தை குழப்பமானதாக இருக்கலாம். ஆனால் இதன் அர்த்தம் "தேவனுடைய ஆவி" என்பதாகும். அதுவும் இங்கே பெண்பாலில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அதாவது (מְרַחֶ֖פֶת-மெரஹெபேத்")- அசைவாடிக்கொண்டிருந்தாள் என்று பெண்பால் ஒருமையிலேயே உள்ளது.

ஆவியானவர் என்ன ஒரு பெண்ணா?

உண்மையில் இது தேவனுடைய ஆவி எனும் நபரை பற்றி கூறும் வசனமே அல்ல.

மாறாக தண்ணீருக்கு மேல் அசைந்து வீசிக்கொண்டிருந்த காற்றை பற்றி தான் கூறுகிறது. அது தேவனுக்கே உரிய காற்றாக இருப்பதால் தேவனுடைய காற்று (רוּח אלהים- ருஆஹ் எலோஹீம்) என்று அழைக்கப்படுகிறது.


இதே போல கீழ் காற்றையும் கர்த்தருடைய காற்று (கர்த்தருடைய ஆவி - רוּח יהוה - ருஆஹ் யாஹ்வே) என பைபிள் கூறுகிறது .


".... கர்த்தருடைய காற்றாகிய (ருஆஹ் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) கீழ் காற்று வனாந்தரத்தில் எழும்பி வரும்;.." -ஓசியா 13:15


ஆதி 1:2 வசனம் தேவனது காற்று தண்ணீரின் மேல் அசைவாடியது என்பதையே குறிக்கிறது.


பரிசுத்த ஆவியை குறிக்க எந்த முகாந்திரமும் இல்லை. தண்ணீரின் மேல் அசைவாடி விளையாடுபவரா தேவன்? அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. அவர் அசைந்தாடும் சிறுமியா?


கீழ்காற்று எப்படி கர்த்தருடைய ருஆவாக இருக்கிறதோ அதுபோல ஒரு காற்றுதான் தண்ணீரின் மேல் அசைந்தாடியது.



பைபிளிலுள்ள ருஆக்களின் (ஆவிகளின்) வகைகள் 



1.காற்று. - காற்றை ருஆக் ( רוּח) என்றே எபிரேயத்தில் சொல்லப்படும்.(ஆதி 8:1)

தேவனுடைய காற்று 

( רוּח אלהים)

-ருஆஹ் எலோஹீம்- ஆதி 1:2 இது பெண்பால்


கர்த்தருடைய காற்று

 (רוּח יהוה)

ருஆஹ் யாஹ்வே- ஓசியா 13:15 



2.உயிர் எனும் மூச்சு காற்று.

(רוּח אלוֹה)

ருஆ எலோஆ

யோபு 27:3 (தமிழ் பைபிளில் 27:2)


தமிழில் 

"தேவன் தந்த ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்று போடப்பட்டிருக்கிறது.


ஆனால் மூல மொழியில் "தேவனது ஆவி என் நாசியில் இருக்குமட்டும்" என்றே வரும்.


3.தேவனது பிரசன்னம்


רוּחך

உம்முடைய ஆவி (ரூஹெகா) -சங்கீதம் 139:7


கடவுள் தன் ஞானத்தால் வியாபித்திருக்கிறார் என்பதை கூறும் வசனங்களே சங்கீதம் 139:6-8


அதேபோல் ஆகாய் 2:5 இலும் தேவனது ஆவி மக்கள் மத்தியில் நிலைகொண்டிருக்கும் என்றும் பயப்பட வேண்டாம் என்றும் கூறுகிறது


அதிலே

רוּחִי

ரூஹீ -என்னுடைய ஆவி என்று வருகிறது.


அது பெண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆவியானவர் என்ன பெண்ணா?


வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதென்றால்,


"என்னுடைய ஆவியானவளும் உங்கள் நடுவில் நிலைத்திருப்பாள் " என்று தான் வரும்.



உண்மையில் இது தேவனது பிரசன்னத்தையே குறிக்கிறது. தேவன் தன் ஞானத்தால் அவர்களுடன் இருக்கிறார். அவரது இருப்பிடமோ வானத்தின் மேலே ஆகும்.



4.வல்லமை/ஆற்றல்

யோபு 33:4

“தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.”

  இங்கே ஆவியானவர் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள். 

ஆனால் எபிரேயத்தில் பெண்பாலில் தான் இது உள்ளது

רוּח אל עשׂתני

ருஆஹ் எல் ஆசாதெனீ (பெண்பால் ஒருமை வினைச்சொல்)

இதன் நேரடி அர்த்தம்

"தேவனுடைய ஆவியானவள் என்னை உண்டாக்கினாள்" என்று தான் வரும். 


அதாவது இங்கே ஆவி என்பது நபராக இருந்தால், நிச்சயமாக பெண்ணாக தான் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் திரித்துவத்தில் பெண்தெய்வமும் வந்துவிடும். மாறாக இது தேவனது சக்தி ஆற்றல் என்பவற்றை குறிக்கிறது. தேவனது வல்லமை தான் உண்டாக்கியது. அது நபர் அல்ல. தேவனுடைய வல்லமை உண்டாக்கியது என்பது தேவன் உண்டாக்கியதை குறிக்கும். நபரை குறிக்காது.

மேலும் யோபு 26:13 இலும் அவருடைய ஆவி என்பது வல்லமையை குறிக்கும். நபரை அல்ல. 


5.தேவனுடைய ஒரு ஈவு/பரிசு/வரம், மற்றும் இறைத்தூண்டல் 


“"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; — சகரியா 12:10 

ஆவிகள் ஊற்றப்படும் என்று சொல்லப்படுகிறது. இதேபோல் பெந்தகோஸ்த்து ஆவியை பற்றிய தீர்க்கதரிசனமாக அப்போஸ்தலர் நடபடிகள் மேற்கோள்காட்டும் யோவேல் 2:28-29 இலும் கூறப்பட்டுள்ளது. நபரை எப்படி ஊற்றுவது?

இதேபோல் தாவீதின் மேல் ஆவி வந்திருக்கிறது.அங்கேயும் பெண்பாலில் தான் உள்ளது. ஆவியானவர் என மொழிபெயர்த்துள்ளனர். 1 சாமுவேல் 16:13-14

தீர்க்கதரிசிகள் மத்தியில் சவுல் போனபோது அவன் மீதும் ஆவி (பெண்பால்) இறங்கியது. அதனால் அவனும் தீர்க்கதரிசனம் சொன்னானாம்.-1 சாமுவேல் 10:10

இதேபோல் நியாயாதிபதிகள் 3:10, 6:34, 9:23, 11:29, 13:25,14:6,19, 15:14, எண் 11:25-27,24:2 இலும் காணப்படுகின்றன. இவை பெண்பாலில் தான் உள்ளன. தேவனுடைய தூண்டல், மற்றும் ஒருவித வரத்தையே (வரம்) இது குறிக்கிறது.

இதனால் தான் தாவீது ராஜா, "உமது பரிசுத்த ஆவியை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்"-சங்கீதம் 51:11 என வேண்டுகிறார். 


இது கடவுளல்ல. கடவுளால் கொடுக்கப்படுகிறது.

இந்த வரத்தினால் தூண்டல்களும், சக்தியும்,உள்ளுணர்வும் கொடுக்கப்படுகிறது. இதை தான் பரிசுத்த ஆவியினால் அபிசேகம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.


6.தேவதூதர்

தேவதூதர்களை ஆவிகள் என்று பைபிள் சொல்கிறது.

"அவர் தம்முடைய தூதர்களை காற்றுகளாகவும் (ரூஹோத்-ஆவிகள்), தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்- சங்கீதம் 104:4


இதேபோல் ஆகாபை வஞ்சிப்பதற்கு ஒரு ஆவி கர்த்தர் முன் வந்து நின்றதாக சொல்லபடுகிறது. அங்கே அது ஆண்பாலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது பேசக்கூடியதாகவும் இருக்கிறது. 1 இராஜாக்கள் 22:21-23 ,2 நாளாகமம் 18:20-22.


இதன்மூலம் தீர்க்கதரிசிகள் மூலமாக தேவதூதர்கள் பேசுவார்கள் என தெரிகிறது.

இதேபோல் தாவீது ராஜா தன்னை குறித்து கூறும்போது, 

கர்த்தருடைய ஆவியானவர் (ருஆக் யாஹ்வே- கர்த்தரின் ஆவி) என்னைக் கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.”

  — 2 சாமுவேல் 23:2 

இவர்களுக்கு எந்த தெய்வீகமும் கிடையாது.

7.தேவனுடைய பரிசுத்த உள்ளம் (மனது)

“"அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்."”

  — ஏசாயா          63:10 

இதேபோல் எஸ்போன் ராஜாவின் ஆவியை (ருஆஹ் என்று தான் எபிரேயத்தில் உள்ளது) கடினப்படுத்தியதாக உபாகமம் 2:30 இல் கூறப்படுகிறது.  இங்கே ஆவி என்பது மனதை குறிக்கிறது.

இதேபோல் ஏசாவின் மனைவிகள் ஈசாக்கிற்கும் ரெபேக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள் -ஆதி 26:35 இங்கும் ருஆஹ் -ஆவி என்பது மனதையே குறிக்கிறது.. இதுபோல் ஆதி 41:8, யாத்திராகமம் 6:9, 

இதன்படி ருஆஹ் கோதேஷ் (பரிசுத்த ஆவி) என்று ஏசாயா 63:10 கூறுவது தேவனது பரிசுத்த மனதையே குறிக்கிறது என புரிகிறது.


ஆனால் அதே ஏசாயா 63:11,14 ஆகியவற்றில் உள்ளதோ ஏற்கனவே கூறிய தேவனது ஈவு பற்றியதாகும். அதிலுள்ள பரிசுத்த ஆவியை தேவன் அவர்கள்மேல் கட்டளையிட்டார். 

63:14 இலோ அவரது ஆவி அவர்களை இளைப்பாற பண்ணியதாக கூறப்படுகிறது. அதுவும் பெண்பாலிலேயே உள்ளது. ஆவியானவர் ஒன்றும் பெண் அல்லவே.  தேவன் கொடுத்த ஈவாகிய பரிசுத்த ஆவி அவர்களை இளைப்பாறப்பண்ணியது.


முதலில் இவை நபரே கிடையாது.


தேவதூதர்களும் வரும் ஆவிகளே நபர்களாக இருப்பார்கள். அவர்களை ஆண்பாலில் பாவிக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு தெய்வீகம் கிடையாது. அவர்களில் உள்ள பரிசுத்த ஆவி என்பது கடவுளோ தெய்வீகம் பொருந்தியவரோ கிடையாது. அவருக்கு தெய்வீகம் உண்டு என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

--------------


6.தேவனுடைய வார்த்தை (ஆதி 1:3) ஒரு நபரா? 


3.தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்.வெளிச்சம் உண்டாயிற்று. ஆதியாகமம் 1:3

இதன் மூலம் வார்த்தையானவர் என்பவர் இருக்கிறார் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள். அவரே திரித்துவத்தின் ஒரு நபரான இயேசு என்கிறார்கள்.


பதில்: இது பார்த்தவுடனே மடத்தனமான வாதம் என்று புரிந்துவிடும். 

தேவன் "யஹீ-உண்டாகு" என்று பேசுகிறார். அதனால் படைப்புகள் உண்டாகின்றன.

தேவன் பேசுவது எப்படி ஒரு நபராக ஆகும்? 

தேவனது பேச்சு என்பது தேவனோ அல்லது இன்னொரு நபரோ அல்ல. மாறாக தேவனது பண்புகளில் ஒன்றாகும். தேவனது பார்வை, கேள்விப்புலம் எப்படி பண்போ அதுபோன்றே பேச்சு என்பதும் ஒரு பண்பே. அது நபர் கிடையாது.

இதேபோல் சங்கீதம் 33:6, 148:5 வசனங்களை விளக்கும் விதமாக ஆதி 1:3 முதல் வரும் வசனங்கள் அமைகின்றன.

இதை தவறாக புரிந்துகொண்ட யோவான், வார்த்தையை ஒரு நபராக கருதி, அவரே இயேசுவாக வந்ததாக யோவான் 1:1-14 இல் எழுதுகிறார்


தேவனது வார்த்தை மூலம் இயேசு தன் தாயின் வயிற்றில் கருவுற்றதால் இயேசு கடவுளுடைய ஒரு வார்த்தையாக கருதப்படுகிறார். 

தேவனது ஒரு வார்த்தை மூலம்  எப்படி ஒளி  உண்டானதோ, (அதை பகல் என்று தேவன் பெயரிட்டார்.) அதுபோன்றே மரியாளிடம் "ஆகு" என்ற கட்டளைப்படி கருவுற்றார். அதனால் வார்த்தை மனிதனாக  மாறியதாக இவர்கள் கருதிவிட்டனர். ஆனால் உண்மையில் வார்த்தை மூலமே அவர் மனிதனாக மாறினார்.. எப்படி ஒளி (பகல்) கடவுள் கிடையாதோ, அதே போன்று இயேசு கடவுளல்ல. ஒளி (பகல்) எப்படி ஒரு படைப்போ, அது போன்று இயேசுவும் ஒரு படைப்பாவார்.

ஏனெனின் ஒரு பெண்ணின் இரத்தத்தை உறிஞ்சு கர்ப்பத்தில் வளரும் ஒரு பூச்சு மனித படைப்பே அன்றி படைத்தவராக மாட்டார்.

இந்த வார்த்தை எனும் விசயத்திலேயே கிறிஸ்தவர்கள் மிகவும் குழம்பியே இருக்கிறார்கள். 

தேவனது பேச்சு, கட்டளை, வார்த்தை என்பது ஒரு நபரே கிடையாது. இவர்கள் சிந்திக்க வேண்டும்!

----------

தொடர்3


அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...