கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல
2 கொரிந்தியரின்படி இயேசு கடவுள் அல்ல கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல ———— கலாத்தியா எனும் ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக இது கருதப்படுகிறது. 1.இயேசு என்பவர் தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவர். தேவன் என்பவரே பிதா.. சொ இயேசு வேறு தேவன் வேறு ¹ “மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,” (கலாத்தியர் 1:1) ——- 2.இயேசு வேறு தேவன் வேறு.. பிதா தான் தேவன். அந்த தேவனுடைய சித்தப்படி தான் இயேசு கிறிஸ்தவர்களின் பாவத்துக்காக தன்னை ஒப்புக்கொடுத்தாராம். … ³ “பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;” ⁴ அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (கலாத்தியர் 1:3-4) ———. 3.இயேசு என்பவர் தேவனுடைய குமாரன் என்பதே பவுலின் நிலைப்பாடு.. அதாவது தேவன் இயேசு அல்ல! … ¹⁶ “தம...