இயேசு இறைமகனா??
இயேசு இறைமகனா?? ------------------------------------------------ இயேசுவை கடவுளின் மகன் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இது பழைய ஏற்பாட்டில் கடவுளை வணங்கிய இறையடியார்களுக்கு வழங்கப்பட்ட பெயரே ஆகும். மற்றபடி வேறு எதுவும் இல்லை. பல கிறிஸ்தவர்கள் , இயேசு ஆரம்பமே இல்லாமல் இருக்கிறார் என்றும் கடவுள் என்றும் நம்புகிறார்கள். ஆனால் இயேசு தன்னை எங்குமே கடவுள் என்றோ கடவுளின் அவதாரம் என்றோ சொல்லவில்லை. மேலும் இயேசு கி.மு. 4வது வருடத்தில் கன்னி மரியாளிடம் பிறந்தார். இதைப்பற்றி யோவான் சொல்லும்போது, "வார்த்தை மாம்சமானது/மனிதரானது" (யோவான் 1:14) அதாவது இயேசு கி.மு. 4 வரை பூமியிலோ வானத்திலோ எங்குமே இருக்கவில்லை அதாவது வார்த்தை மாம்சமாக முனஆகும் யேசு என்ற நபரே இல்லை!! சரி... வார்த்தை என்பது யாது?? இதைப்பற்றி ( http://answeringchristian.blogspot.com/2020/01/blog-post.html ) இல் பார்வையிடவும்! தேவன் தன் கட்டளையான "ஆக-கடவது" என்ற வார்த்தைமூலம் சகலதையும் படைத்தார். அதாவது அவர் படைக்க நாடினால், "ஆக கடவது" என்று கட்டளையி...