யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2
பாகம் 1 52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா? ²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்." (யோவான் 6:27) 53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார். ²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். ²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6:28-29) ------------- 54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்! ³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." ³³ வான...