எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல
கலாத்தியர் படி இயேசு கடவுள் அல்ல எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல —————– எபேசு பட்டணத்து கிறிஸ்தவ மக்களுக்கு பவுல் எழுதிய கடிதமாக இது கருதப்படுகிறது. 1.இயேசு வேறு தேவன் வேறு.. பிதாவே தேவன் என்பதே பவுலின் நம்பிக்கை. ² “நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.” ³ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 1:1-2) ————- 2 .எபேசியரும் இயேசு மூலமாக தேவனது வாரிசு பிள்ளைகளாம்.. இதன்படியும் யேசு வேறு தேவன் வேறு என்பதே தன் நிலைப்பாடென உறுதிபடுத்துகிறார் … ⁶ “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.” (எபேசியர் 1:6) ———– 3.தேவன் என்பவர் இயேசுவுக்கும் தேவனாக இருக்கிறார் என்பதே பவுலின் நம்பிக்கை (எபேசியர் 1:17) அவரே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாராம். ¹⁷ “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமை...