பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல
எபேசியர் படி இயேசு கடவுள் அல்ல பிலிப்பியர் படி இயேசு கடவுள் அல்ல ———————- பிலிப்பி என்ற ஊரில் வாழ்ந்த இறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியதாக நம்பப்படுகிறது 1.பிலிப்பியரினதும் பவுலினதும் பிதாவே தேவனாம்.. இயேசு என்பவர் கர்த்தராம் ² நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (பிலிப்பியர் 1:2) இயேசுவை கர்த்தராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36 ——— 2.இயேசுவின் நீதியின் கரிகால் தேவனுக்கு மகிமை, துதி உண்டாகுமாம். அதாவது இயேசு வேறு தேவன் வேறு. ¹⁰ “தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி. (பிலிப்பியர் 1:10) ————- 3.இயேசு தேவனுடைய ரூபமாம். ஆனாலும் தன்னை தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தன்னை தாழ்த்தினாராம். அதனால், தேவன் அவரை உயர்ந்த அந்தஸ்த்துக்கு உயர்த்தினார் என்பதே பவுலின் நம்பிக்கை. அதாவது இயேசு கடவுளல்ல… கடவுளால் அந்தஸ்து உயர்த்தப்பட்டவர் என்கிறார். காரணம் அவர் தன்னை தாழ்த்தினாராம். ⁵ கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது...