முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ஆதாம் ஏவாள் கதையும் ஆதிபாவமும்
ஆதாம் அண்ணா, ஏவாள் அக்கா கதையும் ஆதிபாவமும்
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
இப்போதைக்கு 6131 வருடங்களுக்கு முன்பு (MSS hebrew version) , ஆண்டவரானவர் முதல் மனிதரை படைத்தாராம்.
அந்த மனிதன் முதல் மனிதன் என்பதால், மனிதன் என்ற அர்த்தம் தரக்கூடிய எபிரேய வார்த்தையான "ஆதாம்" என்பதை பெயரிடப்பட்டார்.
அவரை படைத்து ஏதேன் என்ற தோட்டத்தில் வேலை வாங்க வைத்தார்.
அங்கே அவரது விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை ஆண்டவர் உண்டாக்கி அப்பெண்ணை இவருக்கு கொடுத்தார்.
அப்பெண்ணே இவரின் வாழ்க்கை என்பதால், வாழ்க்கை என்று அர்த்தம் தரக்கூடிய எபிரேய வார்த்தையான "ஏவா" என்பதை பெயராக இடப்பட்டார்.
இந்த ரெண்டு பேரும் ஏதேனில் ஒரு மெஜிக் பழத்தை சாப்பிட்டதால், இவ்வுலகத்தில் மரணம் நுழைந்தது என்பதே கிறிஸ்தவ கொள்கை.
இப்பாவம் அவர்களுக்கு உடனடியாக மன்னிக்கப்படாமல், ஆண்டவர் தன் சொந்த மகனை கொலை பண்ணி அதன் மூலம் வடிந்த ரத்தத்தால் மன்னித்தார் என்பது கிறிஸ்தவ கொள்கையின் அடிப்படையான கொள்கையாகும்.
எனவே,
❤.இவை சரியானதா❓❓
❤.ஆதாம் அண்ணா ஏவா அக்கா செய்ததை பைபிளின் அடிப்படையில் பாவமாக கருத முடியுமா❓❓
❤.பவுலடியார் சொல்வது போல, இப்படி சாப்பிட்டதால் பாவம் செய்யாத மனிதர்களும் மரணிக்க வேண்டி ஏற்பட்டது என்பது உண்மையா❓❓
இவை தவறு என்று ஆகிவிட்டால் , 👉ஆதிபாவம்👈 என்பது க்ளீன் போல்ட் ஆகிவிடும்.
அது க்ளீன் போல்ட் ஆகிவிட்டால், I'm very sorry Christians!
தாய்மதம் திரும்பிவிடுங்கள்‼‼‼.
🤝🤝
💙💙💙💙💜💙💙💙💙💙💙💜💙💙💙💙💙💙💜💙💙
1⃣. ஆண்டவர் மனிதனை நிலையாக வாழ படைத்தாரா❓❓
மரணமற்ற வாழ்க்கையை கொடுக்க தீர்மானித்திருந்தாரா❓❓
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
இதற்கு பதில் வெறி சிம்பிள்.
ஆறாம் நாளில் மனிதனை படைத்ததை பைபிள் இவ்வாறு சொல்கிறது
👇👇👇👇👇👇
26 அப்பொழுது கடவுள், "மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்" என்றார்.
தொடக்கநூல் 1 :26
27 கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
தொடக்கநூல் 1 :27
28 கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்" என்றார்.
தொடக்கநூல் *(ஆதியாகமம்-Genesis)* 1 :28
Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com
👆👆👆👆👆
இந்த வசனங்களை தெளிவாக கவனித்தால்,
ஆதியாகமம் (Genesis) 1:28
படைக்கப்பட்ட அந்த ரெண்டு பேரையும் ஆசீர்வதித்து, பூமி முழுவதும் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்றார் ஆண்டவர்.
மரணமற்ற வாழ்க்கையை ஆண்டவர் கொடுக்க தீர்மானித்திருந்தால், அதைவிட ஆண்டவரின் அறிவை கேலிக்குறியதாக இதுவே ஆக்கிவிடும்.
ஏனெனில், இன்று உலகில் மனிதன் வாழ்வதற்காக காடுகளை அழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆதாம் அண்ணா இருந்திருந்தால், ஏவா அக்காவை வைத்து சும்மாவா இருந்திருப்பார்❓❓
👇👇
சங்கீதம் 127
4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
👆👆👆
இந்த வசனத்துக்காகவே பல லட்சம் பிள்ளைகளை பெத்து போட்டிருப்பார்.
அது போதாது என்பதற்காக ஆபேல் காயீன் பற்றி சொல்லவா வேணும்❓❓
பூமியிலுள்ள ஒட்டுமொத்த காடுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும். பூமியில் ஒவ்வொருத்தனும் மற்றவன் மேல் மோதிய படி தான் நடக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கும்.
இடநெருக்கடியால், எல்லோரும் கர்த்தராகிய ஆண்டவரின் ஞானத்தை காரி துப்பியிருப்பார்கள்.
எனவே, ஆண்டவர் இப்படி முட்டாள் தனமான காரியத்தை கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்.‼‼.
⭕.ஆதாம் அண்ணாவும், ஏவா அக்காவும் மரணமற்ற வாழ்வை பெறுவதற்கு ஆண்டவர் ஏதாவது திட்டம் வைத்திருந்தாரா❓❓❓
ஏதேன் தோட்டத்தின் நடுவே இரு மெஜிக் மரங்களை தேவனாகிய ஆண்டவர் முளைப்பிக்க பண்ணியிருந்தார்.
1⃣.நன்மை தீமை அறிவதற்கான மெஜிக் மரம்
2⃣.மரணமற்ற வாழ்வை பெறுவதற்கான மரம்.
(பார்க்க ஆதியாகமம் 2:9)
இதில் முதலாவது மரத்திலிருந்து சாப்பிட்டால், நல்லது எது கெட்டது எது என்று அறிந்துகொள்ளும் அறிவை பெற்றுகொள்ளலாம்
(ஆதி 3:6-7,22)
இரண்டாவது மெஜிக்மரம் ஜீவ-விருட்சம். இதிலிருந்து சாப்பிட்டால் மரணமற்ற வாழ்வு கிடைத்துவிடும். கடவுளாலும் கொல்ல முடியாதாகிவிடுமாம்.
(பார்க்க ஆதி 3:22)
22 பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.
தொடக்கநூல் 3 :22
👆👆👆
இதில் இரண்டாவது மெஜிக் மரம் சாதாரண கண்ணுக்கு தெரியாது. அதன் வழியையும் அறிந்துகொள்ள முடியாது.
அதை அறிய வேண்டுமானால், நன்மை தீமையை அறியவேண்டும்.
நன்மை தீமையை அறியவேண்டுமானால், முதலாவது மெஜிக் மரத்திலிருந்து சாப்பிட வேண்டும்.
(பார்க்க ஆதி 3:7,22-23)
ஆனால் அந்த முதலாவது மெஜிக் மரத்திலிருந்து சாப்பிட்டால், சாப்பிட்ட உடனேயே செத்து போய்விடுவாய் என்று தேவன் ஆதாமிடம் பொய் சொல்லி பயமுறுத்தி வைத்திருந்தார்.
👇👇👇
9 ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். தொடக்கநூல் 2 :9
15 ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். தொடக்கநூல் 2 :15
16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், "தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். தொடக்கநூல் 2 :16
17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்"; என்று கட்டளையிட்டுச் சொன்னார். தொடக்கநூல் 2 :17
👆👆👆
நிலையான வாழ்க்கையை அடைவதற்கான முதல்படியாகிய நன்மை தீமை அறியும் கனியை சாப்பிட்டாலேயே செத்துபோவாய் என்று பொய் சொல்லி பயமுறுத்தி வைத்திருந்த தேவன், ஆதாமுக்கு மனமுவந்து அதை கொடுக்க முன்வந்திருபகார் என்று நினைப்பது மிக வேடிக்கை‼‼.
இப்படி ,ஆதாம் அண்ணாவும் ஏவா அக்காவும் ஆண்டவரின் பொய்யில் ஏமாறாமல் பழத்தை சாப்பிட்டதால் நன்மை தீமை அறிவோராக மாறினர்.
தேவனை போல அவர்களில் ஒருவராகவே மாறிவிட்டார் ஆதாம்.
இப்போது தான் தேவனுக்கு கலக்கம் வந்தது.
மனிதன் , ரெண்டாவது மெஜிக் மரத்தை கண்டுபிடித்து சாப்பிட்டு மரணமில்லாமல் ஆகிவிட கூடாது என்று சொல்லி,
ஆதாமையும் ஏவாவையும் ஏதேனிலிருந்து விரட்டினார்.
பிறகு கெரூபீன் என்ற நெருக்கமான தேவதூதர்களின் கையில் கத்தியை கொடுத்து , ஆதாம் திரும்ப வந்து சாப்பிட கூடாது என்பதற்காக காவல் வைத்தார்.
👇👇👇
22 பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார்.
தொடக்கநூல் 3 :22
23 எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
தொடக்கநூல் 3 :23
24 இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.
தொடக்கநூல் 3 :24
Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com
👆👆👆
இதன்படியும் தேவனாகிய ஆண்டவர், மனிதனுக்கு நிலையான வாழ்க்கையை கொடுக்க நினைக்கவுமில்லை.. அது அவருக்கு விருப்பமும் இல்லை என்பதை அவரின் இந்த திருவிளையாடலே காட்டிவிட்டது‼‼.
எனவே ஆதாம் பழத்தை சாப்பிட்டதால், மரணம் உலகில் நுழைந்தது என்ற பவுலடியார் போதித்த கிறிஸ்தவ கோட்பாடு இங்கே தவிடுபொடியாகிறது‼‼
[6:14PM, 24/06/2017] Safran: 2⃣.ஆதாம் அண்ணாவும் ஏவா அக்காவும் முதலாவது மெஜிக் மரத்திலிருந்து சாப்பிட்டதை பாவமாக கருத முடியுமா❓❓
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
:
இது கொஞ்சம் சிக்கலானது தான். கொஞ்சம் லேசாக இதை அலசினால், அதை பாவமாக கருத முடியவே முடியாது என்பதை புரிந்துகொள்ளலாம்‼.
ஏனெனில்,
⭕. ஆதாம் அண்ணாவும் ஏவா அக்காவும் நன்மை தீமை அறியாதவர்களாக இருந்தனர்.
எந்த அளவுக்கென்றால்,
ஆதாம் அண்ணாவும், ஏவா அக்காவும் ஆடையின்றி இருந்தார்கள். அதைக்கூட அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை‼. (ஆதி 2:25)
இப்படி சிறு குழந்தை போன்ற நிலையிலேயே அவர்களிருவரும் இருந்தனர்.
அது மட்டுமன்றி , ஹிப்ரு பாசை பேசக்கூடிய தந்திரமிக்க பாம்பு ஒன்று, ஏவாவிடம் போய் இந்த பழத்தை சாப்பிட்டால் ,
உங்களின் கண்கள் திறக்கப்படும், நன்மை தீமை அறிந்து தேவர்களை போல ஆகிவிடுவீர்கள் என்று சொல்லிக்கொடுத்தது.
இதை கேட்டு அவர்களிருவரும் நடந்ததால், பாம்பு சொன்னது போலவே தேவர்களை போல ஆகிவிட்டனர்.
(ஆதி 3:1-11,22)
❤.ஒரு பேசும் மிருகம் வந்து ஒரு குழந்தையிடம் பேசி ஏதாவது சொன்னால், அக்குழந்தைகள் அதை ஆச்சரியத்தோடு கேட்டு செயற்படுவது ஆச்சரியம் இல்லையே.
அவ்வாறு இரு பச்சை மண்ணுகளான ஆதாமும் ஏவாவும் ஏமாந்ததை எப்படி தப்பாக கருத முடியும்❓❓.
அடுத்ததாக, இவ்விருவரும் ஆடையின்றி இருப்பதை அறிந்துகொள்வதற்காக இருந்த ஒரே வழி, இந்த பழத்தை சாப்பிடுவது தான்.
இதை நான் சொல்லவில்லை.. தேவனே ஆதாமிடம் கேட்டதிலிருந்து உணர முடியும்.
👇👇👇
4 பாம்பு பெண்ணிடம், "நீங்கள் சாகவே மாட்டீர்கள்; தொடக்கநூல் 3 :4
5 ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்;" என்றது. தொடக்கநூல் 3 :5
6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்ட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். தொடக்கநூல் 3 :6
7 அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர். தொடக்கநூல் 3 :7
8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். தொடக்கநூல் 3 :8
9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, "நீ எங்கே இருக்கின்றாய்?" என்று கேட்டார். தொடக்கநூல் 3 :9
👉👉👉
10 ";உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்" என்றான் மனிதன்.
தொடக்கநூல் 3 :10
11 ";நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?" என்று கேட்டார். தொடக்கநூல் 3 :11
👈👈👈👈
எனவே அம்மணமாயிருப்பதை உணர்ந்துகொள்ள கூடிய ஒரே வழியை பாம்பு இவர்களுக்கு காட்டியது. இதை தப்பாக கருதமுடியுமா❓❓
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால்,❓❓
⭕.மனிதனை படைத்த தேவன் இனப்பெருக்கி பலுகி பூமியை நிரப்ப சொல்லியிருந்தாரில்லையா? (ஆதி 1:28)
இனப்பெருக்க வேண்டுமானால், அம்மணமாயிருப்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அம்மணமாயிருப்பதை அறியும் வழி, அப்பழத்தை சாப்பிடுவது.
எனவே தேவனின் கட்டளையாகிய "இனப்பெருக்கு!" என்பதை நிறைவேற்ற பழத்தை சாப்பிட்டாக வேண்டும். ஆனால் அப்பழத்தை சாப்பிட்டால் செத்துபோவாய் என்று பயமுறுத்தி வைத்திருந்தார்.
ஆனால் பாம்பு இதை சாப்பிட நல்ல புத்தியை சொல்லிகொடுத்தது.
இதன்படி
🔵. நன்மைதீமை அறியாத குழந்தைகள் ஏமாற்றப்பட்டதை அல்லது நல்ல புத்தியை கேட்டு நடந்ததை தப்பாக கருத முடியாது.
🔵.அடுத்தது, தேவனின் கட்டளையாகிய இனப்பெருக்கு என்பதை நிறைவேற்றுவதற்கான முதல்படிமுறையை செய்தது எப்படி தப்பாக பார்க்க முடியும்❓❓
எனவே இதை தப்பு பாவம் ஆதிபாவம் என்றெல்லாம் சொல்வது மிகப்பெரிய அறியாமை.
❌❌❌❌❌❌
ஒரு பேச்சுக்கு ஆதாமும் ஏவாளும் அந்த பழத்தை சாப்பிடாவிட்டிருந்தால்,
🛑.நிலையான வாழ்க்கையை தேவன் கொடுக்க தீர்மானிக்காததாலும், இனப்பெருக்கும் அறிவு இல்லாததாலும் அன்றே மனித இனம் அழிந்திருக்கும்.
இனி தேவனின் ஆறாம் நாளில் செய்யப்பட்ட முயற்சி வீணாக போய் முடிந்திருக்கும்.
🛑.ஒரு பேச்சுக்கு இனப்பெருக்கும் அறிவை மட்டும் தேவன் கொடுத்திருந்தால், எல்லா மனிதர்களும் ஆடு மாடுகள் போல ஆடையின்றி சுற்றிதிரிந்திருப்பார்கள்.
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌
எனவே
1⃣.நிலையான வாழ்க்கை திட்டமிடப்பட்டிருக்கவில்லை.. மனிதனுக்கு தேவன் தீர்மானித்திருக்கவுமில்லை.
2⃣.தேவனின் கட்டளையாகிய இனப்பெருக்கு என்பதை நிறைவேற்றியதை பாவமாக கருத முடியாது.
3⃣.ஆதாம் ஏவா நன்மை தீமை அறியாதோராக இருந்ததால் அதை பாவமாக கருதவே முடியாது.
எனவே ஆதிபாவம் க்ளீன் போல்ட்.
[8:07PM, 24/06/2017] Safran:
⭕.ஆதாம் ஏவா பழத்தை சாப்பிட்டதால், தேவ சாயலை இழந்தார்கள் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதுவும் தவறாகும்.
ஏனெனில், ஆதாம் ஏவாள் அம்மணமாயிருந்து நன்மை தீமையை அறியாமல் மாடுகள் போல இருப்பது தான் தேவசாயலா❓❓
இப்பழத்தை சாப்பிட்டபின்னால், நன்மை தீமை அறிந்து தேவர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார் என்று தேவன் சாட்சி கொடுத்தாரே (ஆதி 3:22).. அது தேவ சாயலா?
எனவே சாப்பிட்டபின்னாலே உண்மையான தேவ சாயல் இருந்தது.
அவர்கள் தேவசாயலை இழக்கவே இல்லை என்பதை ஆதி 9:5-6 இல் தெளிவாக காணலாம்.
எனவே இதுவும் சுத்த வேஸ்ட்.
https://m.facebook.com/story.php?story_fbid=145863552644497&id=100016625580214&refid=17&ref=dbl&_ft_=top_level_post_id.145863552644497%3Atl_objid.145863552644497%3Athid.100016625580214%3A306061129499414%3A2%3A0%3A1498892399%3A6942143227479059429
கருத்துகள்
கருத்துரையிடுக