இயேசு 100% கடவுளா? வார்த்தை , ஆவி என்போர் கடவுளா? கடவுள் மூன்றுநிலைகளில் செயற்படுகிறாரா?
இயேசு 100% மனிதராகவும் 100%கடவுளாகவும் உள்ளாரா??
------------------------------------------------------------------------திரித்துவ கிறிஸ்தவர்களும் இயேசுவை ஒரே கடவுள் என கூறும் கிறிஸ்தவர்களும் இயேசுவை 100% மனிதராகவும் 100%கடவுளாகவும் இருந்தார் என்று வாதிடுகிறார்கள்.
இந்த வாதம் மிகவும் தவறானதொன்றாகும்.
ஏனெனில் முதலில் இந்நிலைப்பாட்டை இயேசு சொல்லவில்லை.. புதிய ஏற்பாட்டை எழுதிய யாரும் சொல்லவுமில்லை..
சாதாரண லாஜிக் அடிப்படையில் கூட இது மிக மிக மட்டமான ஒரு கருத்தாகும்.
ஏனெனில், ஒரு பொருளின் வடிவத்தை சொல்லும்போது 100% வட்டமாகவும், 100% சதுரமாகவும் இருந்தது என யாராவது கூறினால், இதை ஏற்போமா??
இரண்டும் ஒரே நேரத்தில் சாத்தியமா?? நிச்சயமாக இல்லை.
அதேபோல ஒருவர் கடவுளாக இருந்தால் அவருக்கு மரணமோ பலவீனமோ அறிவீனமோ இருக்காது..
மனிதனை பொருத்தமட்டில் மரணமும் பலவீனமும் அறிவீனமும் உண்டு.
இந்த இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியுமா?
நிச்சயமாக முடியாது.
வைராக்கியத்தாலும் பிடிவாதத்தாலும் யார் குருடராகவும் செவிடராகவும் ஆகிவட்டாரோ , அவரை தவிர மற்ற அனைவராலும் இதை புரிந்திகொள்ள முடியும்.
*********************
இயேசு உடல் ரீதியாக மனிதராகவும் உயிர் ரீதியாக கடவுளாகவும் இருக்க முடியுமா?
**********************இயேசுவின் உடலை பொருத்தமட்டில், அது மரமரியாளின் கர்ப்பத்தில் இரத்தத்தை உறிஞ்சு வளர்ந்து பிறப்புறுப்பினூடாக வெளியே வந்து முலைப்பால் அருந்தி , ஆய் ,சிறுநீர் கழித்து , உறங்கி ,சாப்பிட்டு குடித்து வாழ்ந்தவர் என எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.
அதனால் அவர் 100% மனிதர் என ஆகிவிடுகிறது.
இப்போது அவரது உயிரை பற்றி பார்ப்போமானால்,,
உயிர் உடலுடன் சேர்ந்து தான் மனிதனாக இருந்தார்.
உயிரில்லைனா அதை இயேசு என கூற முடியாது.. மாறாக பிணம் என்று தான் கூறவேண்டும்.
உயிர்+உடல் இரண்டும் சேர்ந்ததால் இயேசு என்ற பூரண மனிதன் இருந்தார்.
ஒரு பேச்சுக்காக,,, உயிர் ரீதியாக அவர் கடவுளாக இருந்திருந்தால்,, அவர் உடலுடன் சேர்ந்த பின் அவர் அத்தன்மையை முற்றாக இழந்துவிட்டதாக தான் ஆகிவிடும்..
ஏனெனில் அவர் இயேசுவாக இருந்தபோது பூரண மனிதராக தான் காணப்பட்டாரே தவிர, வேறு ஒன்றாக அவர் இருக்கவில்லை.. அதாவது கடவுள் தன்மை அவரிடம் இருக்கவில்லை...
பலவீனம்,கலக்கம்,அச்சம், கவலை ,மரணம் என பூரண மனித தன்மையை உடையவராக இருந்தாரே அன்றி கடவுளாக இருக்கவில்லை..
(அதாவது கடவுள் மனிதனாக மாறினால், அவர் கடவுளாக பண்பிலோ செயற்பாட்டிலோ இருக்க மாட்டார்... மாறாக மனிதனாகவும் மனித பண்புடையவராகவும், மனித செயலை உடையவராகவுமே இருப்பார்.. )
இது சாதாரண லொஜிக் அறிவுள்ளவனுக்கு இது நிச்சயம் புரிந்துவிடும்..
உதாரணமாக பனிக்கட்டி தண்ணீராக மாறிவிட்டால்,,, அதை நாம் பனிக்கட்டி என்போமா?? நிச்சயமாக இல்லை.. ஏனெனில் பனிக்கட்டியின் பண்புகளையும் செயற்பாட்டையும் முற்றாக இழந்து , தண்ணீரின் பண்புகளையும் செயல்பாட்டையும் கொண்டதாகிவிட்டது..
கடவுள் மனிதனாக ஆனார் என்று சொன்னாலே, இயேசு என்பவர் கடவுள் அல்ல.. கடவுள் தன்மையை கொண்டவரல்ல என்பதாக ஆகிவிடுமே தவிர கடவுளாக முடியாது..
உயிர் உடல் ரீதியாக பிரித்து அவர்கள் கூறுவதே மடத்தனம் என இதன்மூலம் புரிந்துவிடுகிறது. அவை யாவும் அவர்களது கற்பனைக்கதைகளே ஆகும்.
************************
கடவுள் மூன்று நிலைகளாக செயற்பட்டாரா??
**************************கிறிஸ்தவர்கள் பிதா, வார்த்தை, ஆவி என்ற மூன்று நிலைகளில் கடவுள் உள்ளார் என்று நம்புகிறார்கள்.
இதற்கு இவர்களின் வேதத்தில் எங்கும் ஆதாரம் இல்லை.. தம் சொந்த மனோ இச்சை அடிப்படையிலேயே இதை நம்புகிறார்கள்.
இவர்களது நம்பிக்கை மிக வேடிக்கையாஐ உள்ளது.
வார்த்தை தேவ குமாரன் என்றுவேறு நம்புகிறார்கள்.. அந்த வார்த்தை தான் தேவனுக்கு ஒரே குமாரன் என்றும் நம்புகிறார்கள்.
உண்மையில்,,
வார்த்தை என்பது கடவுளின் பேச்சு ஆகும். அதாவது பிதாவின் பேச்சு ஆகும்.
பேச்சு என்பது ஒரு தேவனின் பண்பு ஆகும்.
தேவனின் பண்பு எப்படி இன்னொரு தேவனாக முடியும்.???
உதாரணமாக யோவான் பேசுகிறார் என வைத்துக்கொள்வோம். இங்கே பேச்சு என்பது யோவானின் பண்பு ஆகும்.
அப்பண்பை இன்னொரு யோவான் என்றோ, அதுவும் யோவான் என்றோ கூறினால், உங்களை பைத்தியம் என கூறமாட்டார்களா?
அதே போன்று தான், கடவுளின் பேச்சு ஆகிய வார்த்தை கடவுளாக முடியாது.. அது வெறும் பண்பு மட்டுமே ஆகும்.
இப்போது இன்னொரு பிரச்சினை வருகிறது.
அத என்னவென்றால்,,,
*தேவனுக்கு பேச்சு /வார்த்தை என்ற பண்பு மட்டுமா உள்ளது??
*அவருக்கு கேள்வித்திறன் இருக்கும் அல்லவா?? இல்லாவிட்டால் அவர் செவிடர் என கூறவேண்டி வரும்!! அடியார்கள் ஜெபிப்பதை அவர் செவிமெடுக்கிறார் என்றால், அவருக்கு கேளவித்திறன் உள்ளது.
அப்படியானால் வார்த்தையை போல கேள்வித்தன்மையும் அவரது பண்பு அல்லவா??
அதேபோல, அவருக்கு பார்வை இருக்கிறது.. இல்லையென்றால் அவர் குருடர் ஆகிவிடுவார்.
அப்போது பார்வைத்திறன் என்பது இன்னொரு பண்பு!!
அதே போல அறிவு, வல்லமை என இப்படி பண்புகள் பட்டியல் நீண்டுகொண்டே போகும்...
அப்போது இவர்கள் சொல்வது போல கூறவேண்டுமானால்,
கடவுளானவர்,
வார்த்தை/பேச்சு, ஆவி, கேள்வி, பார்வை ,வல்லமை, அறிவு என்றவாறு பலதாக பிரிந்து செயற்படுகிறார் என்று தான் சொல்லவேண்டி வரும்.
அதாவது பிதா என்பவர் ஊமை,செவிடு,குருடு, அறிவில்லாதவர் ஆவார். அவருடைய பேச்சு திறன் வார்த்தையாக பிரிந்து செயற்படுகிறது. அவரது பார்வை அவரைவிட்டு பிரிந்து செயற்படுகிறது.. அவரது அறிவு அவரைவிட்டு பிரிந்து தனியாக செயற்படுகிறது என இறைவனை தூசிக்கும் மடத்தனமான கருத்தே உருவாகிறது.
கடவுள் தன்னை மூன்றாக பிரித்து, தன்னிலிருந்து பேச்சுத்திறனாகிய வார்த்தையை தன்னிடமிருந்தே பிரித்து தனியாக செயற்பட வைத்தார். தன் ஆவியை, அறிவை, பார்வையை அப்படி பிரித்து செயற்பட வைத்தார் என வாதிடுவது எவ்வளவு மடத்தனமாக இருக்கும்??
யோவானின் அறிவு , பேச்சு, பலம், பார்வை, கேள்வி என்பன தனித்தனியான யோவான்கள் என்று சொன்னால் எவ்வளவு மடத்தனம் வெளிப்பட்டு நிற்கும்??
அதே போன்று தான் கடவுளுக்கு இந்த மடத்தனமான வாதத்தை பாவிக்கும்போது தம் மூடத்தனத்தை உணரமறுக்கின்றனர்..
எனவே பிதா என அறியப்படும் ஒரு நபரே இறைவன் ஆவார். அவரது பண்புகள் அவரது கண்ணியத்திற்கு தகுந்த பண்புகளே அன்றி அவையும் இறைவன் அல்ல.
பேச்சு என்பது இறைவன் பேசக்கூடியவை அனைத்தும் அடங்கும்.. அதில் இறைவனது கட்டளைகள் அடங்கும்.. வேதங்கள் அடங்கும்..
தவ்றாத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன் என அனைத்தும் அவரது வார்த்தைகளே.. அதாவது அவரது பேச்சு என்ற பண்பை சேர்ந்தவை ஆகும்.
அவை கடவுள் அல்ல..
ஆவி என்பது வானதூதுவரும், வானதூதுவர் மூலமாக வரும் தூண்டுதல்களும் ஆகும்.
இவர்கள் சொல்வதை விட்டும் கண்ணியத்திற்குரிய இறைவன் மேலானவன்
வார்த்தையை அவரது குமாரன் என சொல்வதானால்,
அறிவு, கேள்வி, பார்வை ,வல்லமை என அனைத்தையும் குமாரர்கள் என சொல்லவேண்டி வரும்.
பண்பை யாராவது குமாரன்/மகன் என சொல்லுவார்களா??
இது எவ்வளவு மடத்தனமானது..
இறைவன் தன் கட்டளை மூலமாக படைத்தான் என்றால், அவனது கட்டளை படைப்பாளி அல்ல.. இறைவனே படைப்பாளி ஆவான். அவனது கட்டளை அவனது பண்பை சேர்ந்தது ஆகும்.
அதுமட்டுமன்றி
படைக்கும் தன்மை அதுவும் ஒரு பண்பு ஆகும்.. அழிக்கும் தன்மை அதுவும் கடவுளின் ஒரு பண்பு ஆகும்..
இவற்றையெல்லாம் சேர்த்து பார்த்தால் திரித்துவம் என்ற வார்த்தையே பொருந்தாது..
முடிவிலித்துவம் என்று தான் சொல்லவேண்டி வரும்.
இறைவனது பண்புகளை இறைவனது குமாரர்கள் என்றோ அல்லது தனியாக இறைவன் என்றோ கூறுவது மடத்தனத்திலும் உச்சம் ஆகும்.
எனவே கடவுள் மூன்று நிலைகளில் செயற்படுகிறார் என்பது மிகப்பெரிய மடத்தனம் ஆகும்.
************************
வார்த்தை மாம்சமாகியதா??
************************வார்த்தை மாம்சமாகியது/மனிதரனாது என யோவான் 1:14 சொல்கிறது.
அவ்வார்த்தை எது என்றும் யோவான் 1:1-2 சொல்கிறது..
இவ்வசனங்கள் தான் இவர்களால் மிக அதிகமாகவே தவறாக புரியப்படுகின்ற வசனங்கள் ஆகும்.
அதிலே கூறப்பட்ட வார்த்தை என்பது தேவனின் ஒட்டுமொத்த பேச்சு அல்ல..
மாறாக, "ஆக கடவது" என்ற கட்டளை ஆகும்.
¤தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார். அது உண்டாயிற்று.
(ஆதி 1:3)
¤ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக கடவது என்றும் அது ஜலத்திலிருந்து ஜலத்தை பிரிக்க கடவது என்றார்
(ஆதி 1:6)
இது போன்று ஆதி 1:9 1:11 1:14 இலும் காணலாம்.
மேலும்,
சங்கீதம் 148:5
"அவைகள் கர்தரின் நாமத்தை துதிக்க கடவது. அவர் #கட்டளையிட அவைகள் படைக்கபட்டது"
சங்கீதம் 33:6 "கர்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாயின"
ஆகக்கடவது என்பது மட்டுமே இறைவனுடைய வார்த்தை அல்ல.. அது இறைவனது வார்த்தையில் உள்ளடங்கும்.
இந்த வார்த்தையை தான் யோவான் 1:1-2,14 இல் கூறப்படுகிறது.
கிரேக்க மொழியில் வார்த்தை என்ற logos என்பது ஆண்பால் என்பதால் தான் அதை ஆண்பாலில் எழுதப்பட்டுள்ளது..
இறைவன் மரியாள் கர்ப்பமாக செய்யவேண்டியம காரியத்தை பூர்த்தி செய்து கர்ப்பமடைய "ஆக கடவது" என்று கட்டளையிட்டதால் மரியாள் கர்ப்பம் தரித்து இயேசுவை பெற்றார்.
இங்கே "ஆக கடவது" என்ற கட்டளை மூலம் இயேசு பிறந்ததை தான் "வார்த்தை மாம்சமானது/மனிதரானது" என யோவான் 1:14 சொல்கிறது.
இதனால் தான் இயேசுவை இறைவனின் வார்த்தை என சொல்லப்படுகிறது...
அதாவது இயேசு இறை கட்டளை மூலம் உண்டாக்கப்பட்டார்..
இதன் அர்த்தம் இயேசு இறைவனின் பண்பு என்பதல்ல...
இயேசு இறைவனின் படைப்பு ஆவார். இறைவன் கட்டளையிடுவதன்மூலம் அவர் உண்டாக்கப்பட்டார்.
இவை அவரை 100% மனிதன் மட்டுமே என்பதை தான் காட்டுகிறது.
********************************
கிறிஸ்தவர்களின் தந்திரமான பேச்சு: கடவுள் சர்வ வல்லமையுடையவர். அவர் ஒருவராக இருந்தாலும் பல இடங்களில் காட்சியளிக்க அவரால் இயலும். ஆக அவர் பரலோகத்தில் பிதாவாகவும் வானம் பூமி இடையில் ஆவியாகவும் பூமியில் குமாரனாகவும் இருந்தார். இவற்றை மூன்று என பார்க்க முடியாது! - இது அவர்களின் தந்திரமான பேச்சு
**********************************இதற்கு இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.. வெறும் சுய கற்பனையே ஆகும்.
இதே கதையை எல்லோராலும் வாதிட முடியும்.
உதாரணமாக, நித்தியானந்தா சுவாமி தன்னை கடவுள் என சொல்கிறார். கடவுள் வானத்திலேயும் இருக்கிறார் அதே நேரம் பூமியில் என்னுருவத்திலும் இருக்கிறார் என பிதற்றுகிறார்.
இதேபோன்று அத்வைதிகள் (எல்லாமே கடவுள் என்போர்) "கடவுள் கடவுளாகவும் இருக்கிறார் அதே நேரம் படைப்புகளாகவும் இருக்கிறான். எல்லாம் அவனே" என கூறுகிறார்கள்.
அதேபோல சிலை வணங்கிகள் கூட இதே கற்பனையை சொல்லலாம். அதாவது சிலைகளில் கடவுள் வெளிப்படுகிறார்... அவர் பரலோகத்திலுமிருப்பார்.. அதேநேரத்தில் சிலைகளிலும் இருப்பார் என சொல்கிறார்கள்.
இதெல்லாம் எப்படி சாத்தியம் என கேட்டால், எல்லாம் கடவுளால் முடியும் என்று வேறு சொல்கிறார்கள்.
இதை எப்படி மறுப்போம்??
முதலில் இவ்வாதங்களுக்கான ஆதாரத்தை கேட்போம். அதை அவர்களால் கொடுக்க முடியாது.
உதாரணமாக
இவர்கள் சொல்வதைபோல், கடவுள் வேறு ஒரு ரூபம் எடுத்தால்,
உதாரணமாக மனிதனாக மாறினால்,, 100% மனித தன்மைகளை பெறுவதுடன் கடவுள் தன்மையை இழந்துவிடுவார்.
அதாவது மனிதனாக இருக்கும்போது மரணம் பலவீனம் அறிவீனம் என்பன ஏற்படுவதோடு, கடவுள் தன்மையான பொருள் நிலைத்திருத்தல், மரணமற்றிருத்தல் ,பூரண அறிவு, பூரண பலம் என்பன முற்றாக இழந்துவிடுவார்.
அதாவது அவர் மனித ரூபமெடுத்தால், அவர் மனித படைப்பாக ஆவாரே தவிர கடவுளாக தொடர்ந்திருக்க மாட்டார்.
அதேபோல சிலையாக மாறினால், சிலைக்கிருக்கும் பண்புகளை பெறுவதோடு, கடவுளுக்கிருக்கும் பண்புகளை இழந்துவிடுவார்.
இப்படி அவர் வெவ்வேறு தோற்றமளிக்கும்போது அந்தந்த தோற்றங்கள் கடவுளாக ஆவதில்லை.. அத்தோற்றங்களுக்குரிய இயல்புகளை மட்டுமே பெறும்.
இது சாதாரண புத்தியுள்ளவனும் புரிந்து கொள்வான்.
கடவுள் ஒரே நேரத்தில் அப்படி பல இடங்களில் இருக்க வேண்டுமானால்,,,
வானத்திலும் பிதாவாக இருக்க வேண்டும், பூமியிலும் பிதாவாக இருக்க வேண்டும்... ஆனால் அப்படி இருப்பதாக இவர்கள் சொல்வதுமில்லை நம்புவதுமில்லை.
எனவே இந்த நம்பிக்கையே மூட நம்பிக்கை ஆகும்.
அப்படி கடவுள் மனிதனாக மாறுவதென்பது, பூரண அறிவற்ற நிலையாகும்.
இதில் கடவுளின் வல்லமை இல்லை..
இறைவன் விபச்சாரம் செய்வானா? தற்கொலை செய்துகொள்வானா??
இல்லை தானே?? அவற்றை செய்யாதிருத்தல் என்பது அவனது பலவீனத்தால் அல்ல... பூரண அறிவினால் ஆகும் , ஏனெனில் அவை இறைதகுதிக்கு பங்கம் விளைவிக்கும் இழிநிகழ்வு ஆகும்
அதே போன்று தான் கடவுள் மனித ரூபமெடுத்தார் என்பதும் அவரது தகுதிக்கே கேவலமான இழிநிலை ஆகும்.
(இது சம்பந்தமாக முந்தைய பதிவுகளில் காணலாம்)
இயேசு ஏன் கடவுள் அல்ல
கருத்துகள்
கருத்துரையிடுக