இயேசு தான் பரிசுத்தமான தேவனா?? ஒரு மாறுபட்ட அலசல்


இயேசுவானவர் தான் பரிசுத்தமான தேவனா??
ஒரு மாறுபட்ட அலசல்
--------------------------------------------------------

இயேசு தான் பிதாவாகிய தேவன் அவரும் இவரும் ஒன்று, இவர்களுடன் பரிசுத்த ஆவியும் சேர்ந்து மூன்றுமே ஒன்று என்று பல கிறிஸ்தவ சகோதரர்கள் நம்பி ஏமாந்துபோயுள்ளனர்.

நாம் ஒவ்வொன்றாக அலசுவோம்:

யேசுவும் பிதாவும் ஒன்றா?? ஒரே நபரின் இரு நிலைகளா??
-----------------

¶யேசுவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் வேறுவேறானவர்கள் என்று உணர்த்தும் வசனம்:

16  இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.
17  அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
(மத்தேயு Matthew 3:17-18)

இதன்படி, யேசுவானவர் பூமியில் இருக்கிறார். ஆவியானவரோ வானத்திலிருந்து இறங்கி வந்துகொண்டு இருக்கிறார். பிதாவாகிய தேவனோ வானத்தில் இருக்கிறார்.

எனவே, மூன்று பேரும் தனித்தனியானவர்கள் என்று தெளிவாக புரிகிறது.

¶பரிசுத்த ஆவியை விட யேசு கொஞ்சம் தாழ்ந்தவர்:

31  ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப்பாவமும் எந்தத் தூஷணமும் மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
32  எவனாகிலும் மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
(மத்தேயு Matthew 12:31-32)

இதன்படி, யேசு பரிசுத்த ஆவியை விட கீழ்மட்டத்திலேயே உள்ளார் என்று தெளிவாகிறது.

¶பிதாவை விட தாழ்ந்தவரே யேசு:

28  நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.
(யோவான் John 14:28)

இதன்படி யேசுவானவர் பிதாவை விட சின்னவர் என்று தெளிவாகிறது.

இந்த மூன்று கருத்துக்களிலிருந்தும், யேசுவானவர், பிதா, பரிசுத்த ஆவி ஆகிய மூன்றும் வெவ்வேறானவர்கள் என்பதுடன், யேசு,பரிசுத்த ஆவி, பிதா ஆகிய மூன்று பேரும் சமமற்றவர்கள். அதாவது பிதாவே பெரியவர் என்று தெளிவாக புரிகிறது.
---

¶ யேசுவானவர் பிதாவிடம் ஜெபம் பண்ணினார்:

36  அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
39  சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
42  அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
44  அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
(மத்தேயு Matthew 26:36,39,42,44)

11  அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள்.
12  அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
(லூக்கா Luke 6:11-12)

இதன்படி யேசு தேவனிடம் ஜெபம் பண்ணியுள்ளார்.  எனவே அவருக்கே தேவன் இருக்கிறார் என்று சந்தேகம் வருகிறதா??

அது தான் உண்மை இதோ:

17  இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
(யோவான் John 20:17)

எனவே, யேசுவானவருக்கே தேவனாக ஒருவர் இருக்கிறார், அவரையே யேசுவானவர் தொழுது பிரார்த்தித்தார் என்று தெளிவாகிறது.

எனவே, பிதாவும் அவரும் ஒன்றாக முடியாது.
---

¶யேசுவானவருக்கு சகல அறிவும் இல்லை:

36 "அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.
மத்தேயு நற்செய்தி 24 :36
Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com

இதன்படி , யேசுவுக்கு அந்த நாளைப்பற்றிய அறிவு கிடையாது.

இது உண்மையானால் அவர் கடவுளல்ல.

மேலும், யேசுவுக்கு கண்பார்வை கூட சக்திமிக்கதாக இல்லை.  கனி இல்லாத மரத்திடம் கனி இருப்பதாக நினைத்து போய் ஏமாந்துள்ளார்.

19  அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
(மத்தேயு Matthew 21:19)

எனவே, இப்படிப்பட்ட பலவீனர் கடவுளாவாரா??

¶யேசு செய்த அற்புதமும், தேவன் யேசுவுக்கு செவிகொடுத்ததால் தான் நிகழந்தது:

41  அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
42  நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
43  இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.
44  அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
(யோவான் John 11:41-44)

இதன்படி, யேசு செத்தவனை உயிர்ப்பிக்க காரணமே, பிதா இயேசுவின் ஜெபத்திற்கு செவிகொடுத்தார் என்பதே.

¶யேசுவானவருக்கு அறிவு கிடைத்ததும் பிதாவால் தான்

25  அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
26  ஆம் பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
(மத்தேயு Matthew 11:25-26)

¶யேசுவானவர் தேவனின் தாசன் (ஊழியகாரர் அல்லது அடிமை) என்கிறது பைபிள்:

17  ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது:
18  இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்.
(மத்தேயு Matthew 12:16-17)

13 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்;துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
திருத்தூதர் பணிகள்  Acts 3 :13

Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com

தேவனின் ஊழியர் கடவுளா?!

¶யேசுவுக்கு தேவன் இருப்பதாக பவுளே சொல்கிறார்:

17  நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தௌpவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
(எபேசியர் Ephesians 1:17)

கடவுளுக்கே கடவுளா?? என்ன கொடுமை??

இதுவும் யேசுவானவர் கடவுளல்ல என்று தெளிவாக புரிகிறது.

மேலும், யேசுவானவருக்கு தலைவராகவும் தேவனே இருக்கிறார் என்றும் பவுள் சொல்கிறார்:

3  ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்.
(1 கொரிந்தியர் I Corinthians 11:3)

¶ யேசுவானவர் தேவன் மீது பயபக்தி உள்ளவர் என்கிறது வேதகாமம்:

7  அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,
(எபிரேயர் Hebrews 5:7)

¶ மேலும் யேசு தான் சாகும் போது அவர் கூறிய வார்த்தை:

என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவிட்டீர்
(மத்தேயு Matthew 27:46 மாற்கு Mark 15:34)

இதுவும் யேசு வேறு தேவன் வேறு என்று தெளிவாக புரிகிறது.
-----------------------

இது போன்று இன்னும் பல வசனங்கள் இருந்தும் அவற்றை தவிர்க்கிறோம்.

இவற்றின்படி, யேசுவானவர் , பிதாவாகிய தேவன், ஆவி ஆகிய மூன்றும் வெவ்வேறானவர்களே என்றும், யேசுவே மிகவும் தாழ்வானவர் என்றும் தெளிவாக புரிகிறது.

மேலும் யேசு தேவனின் ஊழியர் என்றும், யேசுவுக்கே தேவன் இருப்பதாகவும், அவரிடமே யேசு ஜெபம் பண்ணினார் என்றும் பைபிள் சொல்கிறது.

மேலும், யேசுவானவரோ பலவீனம் கொண்ட மனிதர் என்றும் பைபிள் சொல்கிறது.

எனவே அவர் கடவுளாக முடியாது
--------

இவற்றை நாம் சொன்னால், உடனே கிறிச்தவர்கள், யேசு இந்த உலகத்திற்கு கடவுளாக வரவில்லை மாறாக மனிதராகவே வந்தார். இந்த உலகத்தில் வாழ்ந்த போது கடவுளாக இருக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இவர்கள் இக்கருத்தில் உண்மையாளர்களானால், உலகில் வாழ்ந்த போது யேசு செய்தவற்றை கடவுள் தன்மைக்கு ஆதாரமாக வைக்க கூடாது.

இதை கொஞ்சம் அலசுவோம்:

யேசு மரணித்து உயிர்த்தெழுந்த பின்பும் மனிதராகவே இருந்தார் என்கிறது பைபிள் (பவுளை தவிர)

39  நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,
40  தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
(லூக்கா Luke 24:39-40)

இது , யேசு உயிர்த்தெழுந்த பின்பும் உடலுடனே இருந்தார், மனிதனாகவே இருந்தார் என்று தெளிவாகிறது.

யேசு பரலோகத்திலும் சாப்பிடக்கூடியவராக தான் இருப்பார் என்கிறது வேதகாமம்:

29  இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(மத்தேயு Matthew 26:29)

16  தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
18  தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
(லூக்கா Luke 22:16,18)

இதன்படி, யேசுவானவர் பரலோகத்திலும்,  சாப்பாடு திண்ணக்கூடியவராக தான் இருப்பார் என்கிறது.

மேலும், யேசு நம் பாவத்தை மன்னிக்கும் படி பிதாவிடம் பரிந்துரை செய்கிறாராம். அப்படியென்றால், அவரால் அதை மன்னிக்க முடியாது என்று தெளிவாக புரிகிறது.

1  என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
(1 யோவான் I John 2:1)

இதன்படி, யேசு தன் மரணத்திற்கு பின்னரும் சுயமாக மன்னிக்க முடியாதவராகவே இருக்கிறார்.

எனவே அவர் மறுமையிலும் கடவுளாக இல்லை என்று தெளிவாக புரிகிறது!!

எனவே கிறிச்தவர்களின் வாதம் பச்ச பொய்யாகிறது.!!

----

இதை சொன்னால், தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று பவுல் சொல்கிறாரே என்று புரட்டஸ்டாண்ட் கிறிச்தவர்கள் கூறுவார்கள்.

இதுவும் பச்ச பொய் ஆகும்.

1 திமொத்தேயு 3:16  ஐ ஆதாரமாக வைப்பார்கள். இந்த வசனத்தில் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று பழைய மூலப்பிரதிகளில் இல்லை.
கிறிச்து மாம்சத்தில் வந்தார் என்று தான் உள்ளது.

இதை சரியாக RC பைபிள் இப்படி கூறுகிறது:

16 நமது சமயத்தின் மறை உண்மை உயர்வானது என்பதில் ஐயமேயில்லை. அது பின்வருமாறு; "மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார்; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார்; உலகினரால் நம்பிக்கையோடு ஏற்கப்பெற்றார்; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார். 1 திமொத்தேயு 3 :16

Shared from https://play.google.com/store/apps/details?id=com.softcraft.tamilbiblerc&hl=en Tamil Bible(RC) Offline 3.1 www.bible2all.com

யேசு தான் மனிதராக பிறந்தார் என்கிறார் பவுள் தேவனை அல்ல.

ஏனெனில் யேசு போன பின்பு சில கிறிச்தவர்கள் " யேசு மனிதராக இருக்கவில்லை. அவர் சதையுல் இருக்கவில்லை மாறாக ஆவியாக தேவ தூதராக இருந்தார்" என்று நம்பினார்கள்.

இவற்றை மறுக்கவே பவுள், யேசு மாமிசத்தில் தான் வந்தார் ஆவியாகவல்ல என்பதை கூறுகிறார்.

எனவே இது யேசுவை கடவுளாக்காது.

---------------------------------------------;---+--------

சில வாதங்களுக்கு பதில்கள்

1.யேசு தேவன் என அழைக்கப்பட்டார்.
(1 பேதுரு 1 peter 1:1)

#response:
தேவன் என்று பலரை Yahweh & Bible அழைக்கிறது

¤சாத்தான் இவ்வுலகின் தேவன்
(II Corinthians 4:4)

¤மோசே பாரோனுக்கு தேவன்
(Exodus 7:1)

¤பவுளை பாம்பு கடிச்சும் சாகாததால் (பல்லு புடுங்கபட்ட பாம்பை கொண்டுவந்து பவுள் நடிச்சிருப்பார்), அவரை மக்கள் தேவன் என்றனராம்.
(Acts 28:6)

¤எரோது மன்னனையும் தேவன் என்று அழைத்துள்ளனர்.
(Acts 12:22) 

¤வானத்திலும் பூமியிலும் தேவர்கள் எனப்படுவோர் உண்டு.
(I Corinthians 8:5)

¤நீங்கள் தேவர்கள் U R GODS என்று சிலரை நோக்கி சொல்றார்.
(Psalm 82:6 also 82:1)

மோசே ஆரோனுக்கு தேவன்.
(யாத்திரகாமம் Exodus 4:17)

அந்நியர் வணங்குவதையும் பைபிள் Gods என்று கூறுது!

இவர்கள் எப்படி அழைக்கபட்டனரோ, அது போன்றே பீட்டர் யேசுவை அழைக்குறார். இது இயேசுவை கடவுளாக்காது!
- -

2.யேசு YAHWEH SIDKENU என்று அழைக்கபட்டிருக்குறார்.(Jeremiah 22:8)

#response:

இதே YAHWEH SIDKENU என்று ஒரு இடம் (may be jerusalem) அழைக்கப்படுது
(Jeremiah 33:16)

ஈசாக்கை கொலைபண்ண போன மலையை YAHWEH JIREH என்று ஆப்ரஹாம் அழைக்குறார்
(Genesis 22:14)

இதிலிருந்து யேசு கடவுள்னா, மலையும் அந்த இடமும் கடவுளாகணும்!
- -

3.யேசு மூலமே சகலதும் உண்டானது.(John 1:2,3)

#response:
இதை நாம் கண்டுக்க வேண்டிய அவசியமே இல்லை bcoz இது யேசு சொன்னதல்ல!

Greek தெரியாத John, Greek ல எழுதின கருத்து தான் இது!
ஆனாலும் இதற்கு பைபிளில் இருந்து பதில் கூறுகிறோம்!

John 1:1 இல் ஆதியிலே வார்த்தை இருந்தது என்று தொடங்குகிறது

அதன் தொடர்ச்சியாகவே 2,3 இடம் பெறுகிறது

அதாவது, #வார்த்தை (Logos) மூலமே சகலதும் உண்டானது என்கிறார் ஜோன்!

அந்த வார்த்தை என்ன என்று நாம் பார்த்தால்,  அது தான் "ஆக கடவது" என்ற கட்டளையாகும்!

இதை ஆதியாகமம் (Genesis) 1 இல் காணலாம்

¤தேவன் வெளிச்சம் உண்டாக கடவது என்றார். அது உண்டாயிற்று.
(Gen 1:3)

¤ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக கடவது என்றும் அது ஜலத்திலிருந்து ஜலத்தை பிரிக்க கடவது என்றார்
(Gen 1:6)

இது போன்று Gen 1:9 1:11 1:14 இலும் காணலாம்.

மேலும்,
Psalm 148:5
"அவைகள் கர்தரின் நாமத்தை துதிக்க கடவது.  அவர் #கட்டளையிட அவைகள் படைக்கபட்டது"

Psalm 33:6 "கர்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வ சேனைகளும் உண்டாயின"

தேவன் இல்லாதவைகளை கூப்பிடுபவர்(Romans 4:17)
also psalm 147:15,18. எனவே இவற்றின்படி தேவனின் வார்த்தை என்பது , அவருடைய வாயிலிருந்து புறப்படும் அவருடைய கட்டளையே என்று தெளிவாக விளங்கலாம்!

இப்போது John 1:2,3 கு வருவோம்!

இங்கே "அவர்" என்று மொழிபெயர்த்தது தவறாகும்.

ஏனெனில், வார்த்தை என்பது அஃறினை சொல்.!

இங்கே பல மொழிபெயர்ப்பாளர்கள் "அவர்" என்று மொழிபெயர்க்க காரணம், Greek இல்  "Logos" என்பது ஆண்பால் ஆகும்!

இதனை வைத்து தான் அப்படி செய்துள்ளனர்.

#இது போன்று ஓர் உதாரணத்தை பார்ப்போம்:

Anemos என்றால் Greek ல காற்று என்று அர்த்தம்

இதுவும் ஆண்பால் தான்!

Greek ல இது பற்றி கூறும்போது, "காற்று பலமாக வீசினான்.  அவனால் பல கூரைகள் பறந்தன" என்று சொல்லலாம்!

ஆனால் இதை தமிழில் சரியான Grammer படி , காற்றை ஆண்பாலாக கொண்டு மொழிபெயர்க முடியாது!

அதுபோல தான் John 1:2,3 தவறாக உள்ளது!

*இங்கே கூறப்படும் வார்த்தை தேவனின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையே ISAIAH 55:11

John 1:2,3 ஐ Grammer படி FRENCH TRANSLATIONS ல காணலாம். மேலும் Jehova's witness இன் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் காணலாம்!

ஆனால் பவுள் Hebrew , colossians 1:17 இது போன்ற இடங்களில் யேசு மூலம் தேவன் படைத்ததாக பிதற்றுகிறார். 

அதற்கு O/T  & 4 GOSPELS இல் ஆதாரம் இல்லை!

JOHN 1:14 NIV இன்படி யேசுவும் வார்த்தை மூலமே மாம்சமானார்!

வேதங்களும் தேவனுடைய வார்த்தைகளே (Hebrew1:1).

தேவனின் அத்தனை வார்த்தைகளும் யேசுவாக முடியாது! 

note: john 1:14 யேசு மனித சாயலானார் என்பதன் விளக்கம்-

யேசு போன பின்பு,  பலர் யேசுவை ஒரு ஆவி என்றும், வேறு சிலர் அவரை மனிதரல்ல அவர் ஒரு Angel என்றும் நம்ப ஆரம்பித்தனர் (இது தான் ANGELIC CHRISTOLOGY)

இதற்கு மறுப்பாக தான் ஜோன் அப்படி சொல்றார்!.

யேசு மாம்சத்திலே வந்ததாக கூறும் ஆவியே தேவ ஆவி (i John 4:2) இது தான் அங்கே கூறபட்டது!
-

4.யேசு வல்லமையுள்ள தேவன் (EL-GIBBOR MIGHTY GOD) என்ற பெயரை உடையவர்.(ISAIAH 9:6)

#Response:
பெயர் ஒருவனை கடவுளாக்காது.  பெயர் வெறும் பெயர் தான்.  அது உண்மையாக இருக்க வண்டிய அவசியமில்லை!

Eg:

#Gabriel= strong God
#Isreal= challenge God
#Joshua= yahweh saves
#ELI=MY GOD
#ELIAB= GOD IS FATHER
#ELIJAH= MY GOD JAH(JEHOVA)
#ELIHU=GOD IS HE. 

இப்படி பெயருடைய Angel, prophets, some people உள்ளனர்!

யேசுவை தேவன் னு சொன்னால் இவங்களையும் சொல்லனும்!!

-----

5.யேசு செத்த பின்பு சாவை வென்றெழுந்தார்.
நானே ஜீவனும் உயிர்தெழுதலும் என்றார்.(John 11)

#response:
பைபிள்படி, யேசு தானாக உயிர்த்தெழவில்லை.  தேவனே எழுப்பினார்
(Acts 2:24 4:10 5:30 Romans 4:24 8:11 10:9)

இதன்படி யேசு தானாக எழவே இல்லை

எனவே அவர் எப்படி "உயிர்த்தெழல்" ஆக முடியும்?

அவர் செத்திருக்க எப்படி வாழ்க்கையாக முடியும்?

¤மோசே செத்தபின் உயிர்த்தெழுந்து யேசுவை MEET பண்ணினார்.
(Luke 9:29,30)

¤செத்த பொனங்கள் ஊருக்குள் எழுந்து போயின.
(Matthew 27:52,53)

வேணும்னா இவங்களை "உயிர்த்தெழல்" எனலாம்!

¤Elijah சாகாமல் வானத்துக்கு போனார்.
(II Kings 2:11)

¤Enoch சாகாமல் வானத்திற்கு போனார்.(Genesis 5)

¤Melchizedek கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.
(Hebrew 7:3)

வேணும்னா இவங்களை "ஜீவியம் & நித்திய ஜீவன்" என்று சொல்லலாம்!

but யேசுவுக்கு இது பொருந்தாது.
---

6.யேசுவானவருக்கு பூமியில் பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் உள்ளது.
(Matthew 9: Luke 7:38-46)

#response:

இதுவும் யேசுவை கடவுளாக்காது. ஏனெனில் இந்த அதிகாரங்களை பிதாவே தமக்கு கொடுத்தார் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த மன்னிப்பானது சகலருக்கும் உரியது அல்ல. யேசுவுக்கு சகல பாவங்களையும் மன்னிக்க முடியாது.

அதை வேதகாமம் இப்படி தெளிவு படுத்துகிறது:

* யேசுவை சிலுவையில் அறைந்தவர்களை அவரால் மன்னிக்க முடியவில்லை. இதனால் பிதாவிடம் "அவர்களை மன்னியும்" என்றார்.

34  அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
(லூக்கா Luke 23:34)

அவரால் மன்னிக்க முடியுமாக இருந்தால், ஏன் பிதாவிடம் மன்னிக்க சொன்னார்.

மேலும், பிதா இவர்களை மன்னித்ததாக வேதகாமத்தில் காண முடியாது.

எனவே இது பூரண அதிகாரம் கிடையாது என்று தெளிவாக புரிகிறது.

*மேலும் பாவம் செய்கிறவர்களையும் யேசுவால் மன்னிக்க முடியாது. இதனால் பிதாவிடம் பரிந்து பேசுகிறார் என்கிறது வேதாகமம்:

1  என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
(1 யோவான் I John 2:1)

அவரால் மன்னிக்க முடியும் என்றால், ஏன் பிதாவிடம் பரிந்து பேசவேண்டும்?!

மேலும் யேசு இப்படி பரிந்து பேசினாலும், பல பாவிகள் நரகமே போவார்கள் என்கிறது வேதகாமம். (1 கொரிந்தியர் I Corinthians 6:9-11)

எனவே, அவரால் அனைவரையும் மன்னிக்க முடியாது என்பது மிக தெளிவாகிறது.

எனவே இது அவரை கடவுள் என்ற இடத்திற்கு உயர்த்திவிடாது!!

*இயேசுவின் சீடர்களுக்கும் பாவங்களை மன்னிக்க அதிகாரம் உள்ளதாம்!

23  எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
(யோவான் John 20:23)

இயேசுவின் சீடர்களுக்கு எப்படி அதிகாரம் கொடுக்கபட்டதோ, அது போன்றே யேசுவுக்கும் பிதாவால் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட சிலரை மன்னிக்க அதிகாரம் கொடுக்கபட்டது.

எனவே இது கடவுள் தன்மைக்கு ஆதாரமாகாது!!

*சாமுவேல் தீர்க்கதரிசிக்கும் பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உள்ளதா??

24  அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
25  இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
(1 சாமுவேல் I Samuel 15:24-25)

அப்படியானால், சாமுவேலும. கடவுளா??

இல்லை. இது தீர்க்கதரிசிகளுக்கு (பைபிளின்படி) கர்த்தரால் வழங்கப்படும் அதிகாரமே. அது போன்றே யேசுவுக்கும் வழங்கப்பட்டிருந்தது.

*தாவீது ராஜாவுக்கும் அதிகாரம் உள்ளதா??

28  உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக.
(1 சாமுவேல் I Samuel 25:28)

எனவே, அது போன்றே யேசுவும் மன்னித்தார்.

*எமக்கு யாராவது பாவம் செய்தால், அதை மன்னிக்க நமக்கும் அதிகாரம் உள்ளது தானே?

14  மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.
15  மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.
(மத்தேயு Matthew 6:14-15)

எனவே, இது யேசுவை கடவுளாக்காது என்று தெளிவாக புரிகிறது!!

இதுவும் யேசுவை கடவுளாக்காது!!
----------

7. நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று யேசு சொல்லியுள்ளார் (John 10:30)
எனவே அவர் தானே பிதா??

#response:
இது யேசு தான் பிதா என்று கூறவில்லை.

அதற்கு முந்தைய வசனத்தில் பிதா வேறு தான் வேறு என்பதை விளக்கிய பின்பே இப்படி சொன்னார்

யோவான் 10

29  அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
38  செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.

38வது வசனத்தின் படி, யேசுவுக்குள் பிதாவும், பிதாக்குள் யேசுவும் வசிப்பதை குறிக்கவே யேசு அதை கூறினார் என்று புரிகிறது.

மேலும் இது ஐக்கியத்தை குறிக்கவே யேசு சொன்னார் என்றும் புரிகிறது.

*யேசுவும் பிதாவும், சீடர்களும் ஒன்றா??

21  அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
22  நாம் ஒன்றாயிருக்கிறதுபோல: அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
(யோவான் John 17:21-22)

பிதாவிலும் யேசுவிலும் அவர்களும் ஒருவராக இருக்க பிதாவிடம் யேசு வேண்டி கொண்டார்.

பிதாவும் யேசுவும் ஒன்றாயின், ஏன் பிதாவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்??

10:30 ஐ வைத்து யேசுவை கடவுள் என்று வாதிடுவதானால், சீடர்களையும் 14+ ஒன்று என்று வாதிட வேண்டும்!!

*பிதா எல்லோருக்குள்ளும் இருக்கிறாராம்.
(எபேசியர் 4:6)

அப்படியானால், எல்லோருக்குள்ளும் பிதா இருக்கிறார் என்பதால் அவர்களும் பிதாவும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று புரிவதில்லையா??

எனவே அவர்களும் கடவுளா??

* தேவன் இன்னும் பலருக்குள்ளும், அவர்கள் ழேவனுக்குள்ளும் உள்ளார்களாம்.

1 யோவான் 4

13  அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
15  இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.

எனவே, இவர்களும் தேவனும் ஒன்று. எனவே அவர்களும் கடவுளா??

இது ஐக்கியத்தை கூற தான் பயன்படுத்த பட்டுள்ளது

இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த வசனங்களை படியுங்கள்:

20  நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
(யோவான் John 14:20)

இதன்படி சீடர்களில் யேசுவும், யேசுவில் சீடர்களும் உள்ளார்களாம். அப்படினா அவர்கள் அனைவரும் ஒன்றாக ஆகிறார்கள். எனவே  பிதா தான் யேசு, யேசு தான் இவர்கள் என்று வாதிட முடியுமா??

23  இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்É நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
(யோவான் John 14:23)

இதுவும் மேற்சொன்னதற்கு எடுத்துகாட்டு.

31  நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
(யோவான் John 14:31)

இதில் யேசு தானும் பிதாவும் ஒன்றல்ல என்பதை இன்னொருமுறை நிரூபிக்கிறார்.

யோவான் 10:30 ஐக்கியத்தையே குறிக்கிறது என்று மேலும் தெளிவாக புரிகிறது.

எனவே அவர் கடவுளாக மாட்டார்...
---

8. என்னை கண்டவன் பிதாவை கண்டான் என்று யேசு சொன்னார் (யோவான் 14:9).  எனவே அவர் தான் பிதாவா??

#response:
யேசு வேறு பிதா வேறு என்று பைபிளை படிக்கும் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வான்.

இதற்கு பல வசனங்களை ஆதாரமாக கொடுத்துள்ளோம்.

எனவே, யேசு இதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதை, அதற்கு முந்திய பிந்திய வசனங்களை படித்தால் புரிந்து விடும்.

இதோ அவ்வசனங்கள்:

யோவான் 14

7  என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்É இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
8  பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

9  அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

10  நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லைÉ என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்

11  நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

யேசுவினுள் பிதாவும் , பிதாவில் யேசுவும் இருக்கிறார்.   யேசு தான் சுயமாக எதுவும் சொல்லாமல் பிதாவே செய்கிறார்.

இதை தான் யேசு அப்படி சொன்னார் என்று 10வது வசனத்தில் தெளிவாக உள்ளது.

பிதாவாகிய தேவனை யாராலும் கண்ணால் பார்க்க முடியாது, யாரும் பார்க்கவும் இல்லை என்று பவுள், யேசு கூறுகின்றனர்.
(1 திமொத்தேயு I Timothy 6:16 , யோவான் John 5:37)

(இந்த இருவருக்கும் பழைய ஏற்பாட்டிலும் ஞானமில்லை. பிதா யாக்கோபுடன் சண்டை பிடித்து மர்மஸ்தானத்தை பிடித்தவர். அவரை யாக்கோபு முகம் முகமாக கண்டாராம். ஆதி 32:24-31

ஆபரஹாமிடம் பால் குடிக்க பூமிக்கு வந்தார். அவருடன் சாரா chat பண்ணினார். ஆதி 18

ஆனாலும் இஸ்ரவேலர் கர்த்தரை கண்டும், உருவத்தை காணவில்லையாம் {கர்த்தருக்கு உருவமில்லையா?}

ஆனாலும், மனிதன் படைக்கபட்டதே கர்த்தரின் சாயலில். ஆதி 1:26-27)


மேலும் பிதாவானவர் வானத்தில் (பரலோகத்தில்)  அவரது சிங்காசனத்தில் இருக்கிறார் என்கிறது வேதகாமம்.
(இந்த பிதாவின் வலது பக்கத்தில் தான் யேசு அமர்ந்தாராம். மாற்கு 16:19

இயேசுவின் வலது பக்கத்தில் ஜெயம் கொள்கிறவர்கள் அமர்வார்களாம். வெளி 3:21

ஆனால் இந்த அதிகாரத்தை கொடுப்பது தன்னால் முடியாது பிதாக்கே முடியும் என்கிறார் யேசு. மத்தேயு 20:20-23)

எனவே பரலோகத்தில் இருப்பவரை , காணப்பட முடியாதவரை பார்க்க முடியாது.

இதற்காக தான் யேசு, தன்னை காண்பவன் பிதாவை காண்கிறான் என்றார். மேலும் பிதா யேசுவினுள் இருக்கிறார் (நம்பிக்கையில்) என்பதாலும் தன்னை காண்பவன் பிதாவை காண்கிறான் என்றார்.

யேசுவுக்குள் மட்டுமா பிதாவாகிய தேவன் இருக்கிறார் என்று சந்தேகம் வந்தால் , முந்தைய பதிலை படிக்கவும்.

சீடர்களுக்குள்ளும் பிதாவானவர் இருக்கிறார்.

எனவே, இந்த வாதமும் யேசுவை தேவனாகிய பிதாவாக ஆக்கிவிடாது
--

கருத்துகள்

  1. Masa Allah
    உங்கள் முயற்சி க்கு இறைவன் நற் கூலி தரட்டும்...
    உங்கள் தொடர்பு எனக்கு வேன்டும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்