சனி, 27 செப்டம்பர், 2025

ஆயிஷா (ர) அவர்களுடனான நபிகளாரின் திருமணம்

 நபி(ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா அவர்களை முடித்தது பற்றி மிசநரிகளும் ஏனைய நிராகரிப்பாளர்களும் இஸ்லாத்தையும் உயர்வான நபிகளாரையும் கேலி செய்வதை வழமையாக கொண்டிருக்கிறார்கள். அத்தோடு கேலிச்சித்திரங்களையும் வரைந்து தம் மனதை சந்தோசப் படுத்திக் கொள்கிறார்கள்.


குர்ஆனின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் நபிகளாரின் போதனைகளிலே நியாயமாக குறைகாண முடியாமலும் இருப்பதால், இதுபோன்றவற்றை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள்

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தற்குரித்தனமானவை என்பதை வரலாற்றை ஆராய்ந்தால் புலனாகும்.

அதற்கேற்ப இதை சில பகுதிகளாக பிரித்து பார்ப்போம் 

1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்படும் காலத்திலேயே நபிகளாருக்கு பேசப்பட்டார்கள்


2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது 

3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள் .


4.இத்திருமணத்தால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவில்லை 


5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார் 


6.படித்த யூதர்கள் இவ்விசயத்தில் கப்சிப்


7.உலகளாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன 


8.இஸ்லாம் பருவ வயதை அடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?


9.இறுதியாக

1.ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே நபிகளாருக்கு திருமணம் பேசப்பட்டது.


கதீஜா (ர) மரணித்த பின்னால் , உஸ்மான் இப்னு மழ்ஊனின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் திருமணம் செய்யக்கூடாதா?" என்றார். "யாரை?" என்றார் நபிகளார்.  "நீங்கள் விரும்பினால் கன்னியையும், நீங்கள் விரும்பினால் விதவையையும் " என்றார். அதற்கு நபிகளார் "கன்னி யார்?"  என்றார். அதற்கு கவ்லா,"உங்களுக்கு அல்லாஹ்வின் படைப்புகளிலேயே நேசத்திற்குரியவரின் மகளான ஆயிஷா பின்த் அபீபக்ர்" என்றார். அதற்கு நபிகளார் "விதவை  யார்"   என கேட்டார். அதற்கு கவ்லா, "உம்மை விசுவாசித்து நீர் கூறியவற்றில் உம்மை பின்பற்றிய ஸவ்தா பின்த் ஸம்ஆ " என்றார். அதற்கு நபிகளார்,"நீ போய் இருவரிடமும் என்னைப்பற்றி பேசு" என்றார். கவ்லா அபூபக்ரின் வீட்டில் நுழைந்து "உம்முரூமானே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார்.  அதற்கு உம்முரூமான் , "எதை?" என்றார்.  அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார்.  அதற்கு உம்முரூமான் "அபூபக்ர் வரும்வரை காத்திரு" என்றார். அப்போது அபூபக்ர் வந்ததும் கவ்லா," அபூபக்ரே! உங்கள் (குடும்பத்தின்)மீது அல்லாஹ் எத்தகைய நலவையும் சுபீட்சத்தையும் அளித்துள்ளான்? என்றார்.  அதற்கு அபூபக்ர் , "எதை?" என்றார்.  அதற்கு கவ்லா,"ஆயிஷாவை தனக்கு பெண் பேசி அல்லாஹ்வின் தூதர் என்னை அனுப்பினார்" என்றார்.  அதற்கு அபூபக்ர், "அவருக்கு அவள் பொருத்தமாவாரா?" அவள் அவரது சகோதரரின் மகள் தானே" என்றார். கவ்லா திரும்பி நபிகளாரிடம் சென்று அதை நபிகளாரிடம் கூறினார். அதற்கு நபிகளார்,"நீ அவரிடம் திரும்பிச்சென்று , "இஸ்லாத்தில் நான் உம்முடைய சகோதரனும் நீர் என்னுடைய சகோதரனும் ஆவோம். உம்முடைய மகள் எனக்கு பொருத்தமானவரே!" என்று கூறுமாறு சொன்னார். கவ்லாவும் அபூபக்ரிடம் சென்று அதை கூறினார். அதற்கு அபூபக்ர் காத்திருக்குமாறு கூறி வெளியேறினார். உம்மூரூமான் கவ்லாவிடம், "முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்காக ஆயிஷாவை பெண்கேட்டிருந்தார்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் எதை வாக்குக் கொடுத்தாலும் அதற்கு மாறு செய்யமாட்டார்அபூபக்ர் முத்யிம் இப்னு அதீயிடம் அவரது மனைவியான இளைஞனின் தாய் உள்ளபோது சென்றார்.  அப்போது அவள், "அபூகுஹாஃபாவின் மகனே!  நீர் எமது தோழரை (மகனை) உமக்கு திருமணம் முடித்து தந்தால் நீர் இருக்கும் உம் மார்க்கத்தில் அவரை புகுத்திவிடுவாய் " என்றார். அப்போது அபூபக்ர் முத்யிமிடம், "உமது கூற்றும் இது தானா?" என்றார். அவரும் அவ்வாறு தான் என்றதும், அபூபக்ர் அவரிடமிருந்து தன் மீதுருந்த வாக்குறுதியை  அல்லாஹ் நீக்கிய நிலையில் வெளியேறி திரும்பி வந்து கவ்லாவிடம், "அல்லாஹ்வின் தூதரை கூப்பிடு" என்றார். அவரும் கூப்பிடவே அவருக்கு திருமணம் முடித்து வைத்தார். அப்போது ஆயிஷா ஆறு வயதுடையவராக இருந்தார். பிறகு ஸவ்தாவிடம் கவ்லா சென்றார்..... (முஸ்னத் அஹ்மத் 25769)



*இதன்படி அன்னை ஆயிஷாவுக்கு திருமணம் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் நபிகளாருக்கு பேசப்பட்டது (முஸ்னத் அஹ்மத் 25769)


*நபிகளாருக்கு முன்பே அல்முத்யிம் இப்னு அதீ தன் மகனுக்கு பேசியிருந்தார். பிறகு தன் மகனை அபூபக்ர் மதமாற்றிவிடுவார் என கருதி மறுத்துவிட்டார் (முஸ்னத் அஹ்மத் 25769)


2.அக்காலத்திலேயே இளவயது திருமணம் நடைமுறையில் இருந்தது 

 இத்தகைய திருமணம் அந்த காலத்தில் சர்வசாதாரணமாக இருந்ததொன்றே.  21 வயதில் பாட்டியாகிய பெண்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர் (புகாரி 2664 இற்கு முந்திய தலைப்பு)


3.இல்லறவாழ்க்கைக்கான உடல் தகுதியை அடைந்த பின்பே நபிகளாருடன் வாழ்ந்தார்கள்

*நபிகளார் ஆறு வயதில் அன்னை ஆயிஷாவை மணந்தது திருமணம் உடன்படிக்கை மட்டுமே. ஒன்பது வயதில் தான் இல்லறத்தில் ஈடுபட்டார்கள்.(புகாரி 5133, 5158)


*இல்லற வாழ்க்கை ஏற்ற உடல் தகுதியை அடைய வைப்பதற்காக அதாவது நபியிடம் அனுப்பிவைப்பதற்கு அவரது தாயார் உணவுகளை நன்றாக கொடுத்து தயார் படுத்தினார் என்றும் அது பயனளித்தது என்றும் அன்னை ஆயிஷா அவர்களே கூறுகிறார் (அபூதாவூத் 3903, இப்னுமாஜா 3324) 

இதன்படி உடல் தகுதியை அடையும்வரை அவரது தாயிடம் தான் இருந்தார்கள் 




*அதன் பின்பே அவரது தாய் அவரை நபிகளாரிடம் அனுப்பிவைத்தார். அப்போது யாரும் இதை தவறாக பார்க்கவும் இல்லை, பரிதாபப்படவுமில்லை..  மாறாக ஆயிஷாவுக்கு நல்வாழ்த்து தான் சொன்னார்கள் ( புகாரி 5156) - காரணம் அது அவர்கள் மத்தியில் சர்வசாதாரணமாக இருந்ததோடு, அதற்கேற்ற தகுதியடைந்த பெண்ணாக ஆயிஷா இருந்தார் என்பதால் தான்.



4.இதனால் ஆயிஷா (ர) பாதிக்கப்படவோ அநீதியிழைக்கப்படவோ இல்லை

*இதனால் அன்னை ஆயிஷா பாதிக்கப்படவோ உரிமை மறுக்கப்படவோ இல்லை


-மாறாக தன் நண்பிகளுடன் திருமணத்திற்கு பின்பும் விளையாடுபவராக இருந்தார் (புகாரி 6130)


-தான் விரும்பும் அளவு விளையாட்டுக்களை ரசிப்பதற்கு சுதந்திரமாக நடாத்தப்பட்டார் (புகாரி 5236)


-நபிகளாரும் அன்னையின் வயதிற்கேற்பவே நடந்து கொண்டார்கள். அவருடன் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்வார்கள் விளையாட்டாக நடந்துகொள்வார்கள் (அபூதாவூத் 2578, இப்னுமாஜா 1979)


-அவரையோ வேறு எந்தபெண்ணையோ நபிகளார் ஒருபோதும் அடித்ததில்லை என அன்னையே கூறுகிறார்கள் ( ,இப்னுமாஜா 1984, அபூதாவூத் 4786)


-நபியவர்களை விட இச்சைகளை கட்டுப்படுத்துபவர் வேறு யாரும் இருக்க முடியாது என சொல்வதும் அன்னை ஆயிஷா அவர்களே (புகாரி 302&1927). அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் தான் நபிகளார் வாழ்ந்தார்கள்.


5.ஆயிஷா(ர) நபிகளாரை அதிகம் நேசிப்பவராகவே இருந்தார். 

-அத்தோடு நபிகளாரை மிகவும் நேசிப்பவராகவே இருந்தார். அவரை யாருக்கும் விட்டுக்கொடுக்காதவராகவும் (4789), அவர்விசயத்தில் அதிகம் ரோசம் கொள்பவராகவும் அன்னை ஆயிஷா இருந்தார் (புகாரி 6024&6030, 4789, 6004)


ஆக அன்னை ஆயிஷா அவர்களுக்கோ, அவருடைய தாய் தந்தையருக்கோ, அக்கால மக்களுக்கோ  இதில் எந்த பிரச்சினை இருக்கவில்லை என்று இருக்க இந்த தற்குறிகள் ஏன் கதற வேண்டும்?


எல்லாம் வெறுமனே காழ்ப்புணர்ச்சிகளே!


6.தற்குறிகள் இந்த விமர்சனத்தை வைக்கும்போது யூதர்கள் கப்சிப்- காரணம் அவர்களது மூன்று வயது ரிஃப்கா பாட்டியை சேர்ந்த 40 வயது ஈசாக் தாத்தா- கத்தோலிக்கர்களுக்கு பேரிடியான மரியாளின் வயதும்


வேடிக்கையாக அசுத்த ஆவியால் அபிசேகம் பண்ணப்பட்ட முட்டாள் தற்குறிகள் இதை குற்றச்சாட்டாக வைக்கும்போது, யூதர்களோ இந்த விசயத்தில் வாயை திறக்கவே மாட்டார்கள். காரணம் அவர்களது பாட்டியான ரிப்கா (ரெபேக்கா) அவர்களை பாட்டனார் 40 வயது ஈஸாக்கு மணந்தபோது ரிப்கா பாட்டியிற்கு வெறும் மூன்று வயதே என அவர்களது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர்.


ரிப்கா பாட்டியிற்கு மூன்று வயது  ( Seder olam rabbah அத்தியாயம் 1, Genesis Rabbah 57:1, ஆதியாகமம் 25:20இற்குரிய Rabbi Rashi அவர்களின் விளக்கம் ,Tosafot on Yevamot 61b)


அத்தோடு மரியாள் கர்ப்பமானபோது அவரது வயது 13or14 என கத்தோலிக் என்சைக்லோபீடியா சொல்கிறது (heading: Mary's Pregnancy becomes known to Joseph (last Paragraph)



7.உலகலாவிய ரீதியில் இத்தகைய திருமணங்கள் சர்வசாதாரணமாக இருந்தன.


அ. உலகளாவிய ரீதியில் திருமண வயதுகள் 7,8,10 ஆக கூட 1880களில் இருந்துள்ளது.


https://cyh.rrchnm.org/primary-sources/24.html#:~:text=By%201880%2C%20the%20first%20date,of%2012%20or%2013%20years



ஆ.ஜப்பானில் 2023வரை 13 வயதிலே உறவு வைக்கமுடியும். பிறகு 16ஆக உயர்த்தப்பட்டது


https://www.asahi.com/sp/ajw/articles/14934890


இ.ஸ்பெய்னில் கூட 14 வயதிலிருந்து 16ஆக 2013இல் தான் உயர்த்தினார்கள்


https://www.theguardian.com/world/2013/sep/04/spain-raises-age-of-consent


ஆக உலகிலே அண்மை காலங்களிலேயே நடைமுறையில் இருந்த விடயத்தை 1400 வருடங்கள் முன்பு எந்த சட்டத்தையும் மீறாமல் அந்த பெண்ணும் பாதிக்கப்படாமல் வாழ்ந்த நிகழ்வை கொச்சைப்படுத்துவது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?



8.இஸ்லாம் பருவமடையாத பெண்களோடு உறவு கொள்ள அனுமதிக்கிறதா?


குர்ஆன் 65:4 இலே விவாகரத்தான பெண்களுக்கு காத்திருப்புக்காலமாக மூன்று மாதவிடாய்காலமும் மாதவிடாய் நின்றுவிட்டவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதவர்களுக்கும் காத்திருப்புக்காலம் மூன்று மாதம் என்கிறது.


இதை வைத்து பருவமடையாதவர்களுடன் குழந்தைகளுடன் உறவுகொள்ள அனுமதிப்பதாக தற்குறித்தனமாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.


அவர்களின் கலாச்சாரத்தில் திருமண வயதாக நிர்ணயித்த காலமாகியும் மாதவிடாய் ஏற்படாத பெண்களுக்கு அவர்கள் விருப்பத்துடன் திருமணம் நடந்து அதன் பின் தாம்பத்யத்தில் ஈடுபடுவதையே இது குறிக்கும்.


ஏனெனில் -கன்னியோ விதவையோ யாராக இருந்தாலும் அவர்களின் சம்மதமின்றி திருமணம் செல்லாது என்பதே இஸ்லாத்தின் திருமணச்சட்டம் (5136,6946,6948)


சம்மதம் தெரிவிப்பதற்கு தாம்பத்யம் பற்றி அறிவும் சுயபுத்தியும் இருக்க வேண்டும்.


அத்தகைய பெண்ணுடன் அப்பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் முடித்து தாம்பத்யத்தில் ஈடுபடுவது கூடும். மாதவிடாய் ஏற்படுவது தாமதமான பெண்ணானாலும் மாதவிடாய் ஏற்படாமலே போன பெண்ணானாலும் அவர்களையும் திருமணம் முடித்து வாழலாம்.



குறிப்பு: இத்தகைய இளவயது திருமணம் இஸ்லாத்தில் வரவேற்கப்படவோ கண்டிக்கப்படவோ இல்லை.. அது அன்றைய அரேபியரதும் ஏனைய மக்களினதும் கலாச்சாரத்தில் இருந்தவொன்றே. இஸ்லாம் அதை பெண் தரப்பு பாதிக்கப்படாத விதத்தில் மட்டும் அனுமதித்தது.



அவை தற்காலத்தில் நம் கலாச்சாரத்தில் இல்லை!!!!


ஆனாலும் பைபிளோ தகப்பனுக்கு தன் மகளை இதற்காக விற்றுப் போடவும் முடியும் என்று அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10). இஸ்லாமோ பெண்ணின் சம்மதமின்றி திருமணமே செல்லுபடியற்றது என்கிறது (புகாரி 5136,6946,6948).



9.இறுதியாக

*ஆயிஷா (ர) அவர்களுக்கு திருமணம் பேசப்பட்டுக்கொண்டிருந்த காலத்திலேயே இத்திருமண ஒப்பந்தம் நிகழ்ந்தது 

*குடும்பவாழ்வுக்கு தகுதியான உடலமைப்பை அடைந்த பின்பே அவரது தாயார் அனுப்பிவைத்தார். 

*அக்காலத்திலே 21 வயதில் பாட்டியாக ஆகினவர்களும் இருந்தனர்.

*அண்மைக்காலம் வரை இத்தகைய திருமணங்கள் உலகலாவிய ரீதியில் இருந்தது தான்

*அத்தோடு இஸ்லாம் பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செல்லாது என்கிறது (புகாரி5136,6946,6948), சம்மதம் தெரிவிக்கும் அளவுக்கு புத்தியும் ,உடல் தகுதியும்  இருக்கும்போதே திருமணமே செல்லுபடியாகும். (ஆனால் பைபிளோ மகளை விற்பனை செய்து விடவும் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:7-10)

*ஏன் இத்திருமணம் என சிலர் கேட்பர்.  குடும்பவாழ்வு என்பதோடு சேர்த்து நண்பர்களிடையே உறவை பேணிக்கொள்ளவும்  திருமணங்கள் செய்தனர். உதாரணமாக சிஙார் எனும் வகையான திருமணமும் இருந்து வந்தது. அதாவது இரண்டு நபர்கள் ஒருவர் மற்றவரது மகளை மஹரின்றி மாற்றி திருமணம் செய்தும் ஒருவர் மற்றவரது சகோதரியை மஹரின்றி மாற்றி திருமணம் செய்வதும் வந்தனர்.  இஸ்லாம் இதிலே பெண்ணின் மஹர் கொடுக்கப்படாமையால் தடுத்துவிட்டது.(புகாரி 5112, 6960).  இதே போன்று நபியின் மகளை அபூபக்ர் (ர), உமர் (ர) இருவரும் ஒருவர் பின் ஒருவராக பெண் கேட்டார்கள். நபியின் பேத்தியை உமர் (ர) திருமணம் முடித்தார்கள். 


இதிலே அன்னை ஆயிஷா அவர்களுக்கு பிரச்சினை இருக்கவுமில்லை, அன்னை ஆயிஷாவை அதிகம் நேசித்த அவருடைய பெற்றோருக்கும் இதில் பிரச்சினை இருக்கவுமில்லை. , அக்கால மக்களுக்கும் இதிலே பிரச்சினை இருக்கவுமில்லை.. அண்மைக்காலம் வரை இத்திருமணத்தை இஸ்லாத்தை எதிர்க்கக் கூடியவர்கள் கூட விமர்சிக்கவில்லை... தற்காலத்தில் இருந்துகொண்டு விமர்சிப்பதென்பது இஸ்லாத்தின் பக்கம் மக்கள் செல்வதை தடுப்பதற்கான ஓர் உத்தி மட்டுமே... இத்தகையோர் ஈருலகிலும் இழிவடைவர்

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

பாவிகளை கடவுள் நேசிப்பாரா? - தற்குறிகளுக்கு மறுப்பு

 அல்லாஹ் பாவிகளை ,காஃபிர்களை நேசிப்பதில்லை . ஆனால் கர்த்தரோ அப்படி அல்ல.. பாவிகளை நேசிப்பவர் என  போதகர்கள் உருட்டுவார்கள்.


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்

2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்?

3.கர்த்தர் பாவிகளை நேசிக்கிறாரா?


1.அல்லாஹ் யாரை நேசிப்பதில்லை? ஏன்?

அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை (3:57,140) பாவிகளான காஃபிர்களை நேசிப்பதில்லை (2:276, 3:32), வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை (2:190),கர்வமுடையோரை வீண் பெருமையுடையோரை நேசிப்பதில்லை (4:36), கொடும்பாவியான சதிசெய்துகொண்டிருப்பவனை நேசிப்பதில்லை (4:107),குழப்பம் புரிவோரை நேசிப்பதில்லை (5:64), வீண்விரயம் செய்வோரை நேசிப்பதில்லை (6:141,7:31), துரோகம் செய்வோரை நேசிப்பதில்லை (8:58), பெருமையடிப்போரை நேசிப்பதில்லை (16:23) என குர்ஆன் கூறுகிறது.


இப்படி நேசிக்காமல் இருப்பதுவே நீதியானது. அத்தோடு அவ்வாறு நேசிப்பதில்லை என்று முன்பே அறிவித்து விடுவது தான் உண்மையான நேசம். 

காரணம் இத்தகையோர் நரகத்தில் புகுத்தப்படுவர்.. அதுவே குற்றவாளிகளுக்கான இறைவன் ஏற்படுத்திய தண்டனை எனும் நீதி..

 ஆகவே இறைவன் அவர்களை நேசிப்பதாக பொய் கூறிவிட்டு நரகத்தில் தள்ளுவது சரியானதா? அல்லது நேசிப்பதில்லை என முன்பே அறிவித்து, இறைவன் நேசிக்கும் விதமாக வாழுவதற்கு தூண்டுவது நேசமா?


2.அல்லாஹ் யாரை நேசிக்கிறான்? அவனது கருணையின் அளவு

இவ்வாறே இறைவன் யாரை நேசிப்பான் என்பதையும் குர்ஆன் கூறுகிறது.

நன்மை செய்வோரை நேசிக்கிறான் (2:195), பாவத்தை விட்டு மனந்திரும்புவோரையும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கிறான் (2:222), நபியை பின்பற்றுவோரை நேசிக்கிறான் (3:31), இறையச்சமுடையோரை நேசிக்கிறான் (3:76), பொறுமையாளர்களை நேசிக்கிறான் (3:146),இறைவன் மீது பொறுப்புச்சாட்டி முழு நம்பிக்கை வைப்போரை நேசிக்கிறான் (3:159), நீதமாக நடந்துகொள்வோரை நேசிக்கிறான் (5:42), பூமியில் உள்ளோருக்கு இரக்கம் காட்டுங்கள் , வானத்திலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான் (அபூதாவூத் 4941), கருணையுடையோருக்கு கருணையுள்ளவனான இறைவன் கருணை காட்டுவான் (திர்மிதீ 1924), இரக்கம் காட்டுங்கள் இரக்கம்காட்டப்படுவீர்கள். மன்னியுங்கள்.மன்னிக்கப்படுவீர்கள் (அதபுல் முஃப்ரத் ஹதீஸ் 380) 

இப்படி இறைவனது அன்பை பெறுவதற்கு தகுதியானவர்களாக ஆகுவதற்கு  இறைவன் யாரை நேசிப்பான் என கூறி வழிகாட்டவும்பட்டுள்ளது.

அத்தோடு பாவியானவன் திருந்தி வருவதை குறித்து , பாலைவனத்தில் தன் வாகனத்தை தொலைத்தவன் அதை மீண்டும் கண்டுபிடிக்கும்போது அடையும் மகிழ்ச்சியை விட அல்லாஹ் மிகவும் மகிழ்ச்சியடைகிறான் ( புகாரி 6309, முஸ்லிம் ).

கருணையுள்ள பாலூட்டும் பெண் தன் குழந்தையை நேசிப்பதை விட அல்லாஹ் தன் அடியார்களை நேசிக்கிறான் (புகாரி 5999)

தன் அடியார்களை மன்னிக்கவும் நேர்வழியில் செலுத்தவும் இலேசாக்கவும் விரும்புகிறான் (குர்ஆன் 4:26-28)

பாவம் செய்து தமக்கு தாமே அநீதம் இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அவன் எல்லா பாவங்களையும் மன்னித்துவிடுவான் (39:53)

இவ்வாறு பாவிகளை மனந்திரும்பி வர அழைக்கிறது இஸ்லாம்!

படைப்புகள் தமக்கிடையே அன்புகாட்டிக்கொள்வதற்கு காரணம் அல்லாஹ் படைத்த கருணையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே.(புகாரி 6000) அந்தளவுக்கு இறைவன் படைத்த கருணையும் விசாலமானது, கருணையையே படைத்த கருணையாளனின் கருணை விசாலமானது. இதனால் தான் அல்லாஹ்வின் கருணையை அறிந்த காஃபிர் கூட சுவர்க்கத்தில் அவநம்பிக்கை கொள்ளமாட்டான் (புகாரி 6469) அதாவது அவனையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நுழைவித்துவிடுவான் என்று எண்ணுமளவுக்கு கருணையுள்ளவன்.


3.இந்த தற்குரிகள் கூறுவது போல கர்த்தரோ இயேசுவோ பாவிகளை நேசிப்பார்களா?

1.புறஜாதிகள் பாவம் செய்ததாலும் தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினாலும் அவர்களை நேசிக்கவில்லை. அவர்களின் குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (1 சாமுவேல் 15:2-3, உபாகமம் 20:16-18)

2.தான் தேர்வுசெய்த மக்களில் எவராவது தன்னையல்லாமல் வேறு கடவுளை வணங்கினால் ஈவிரக்கமின்றி கொல்ல சொன்னார் (உபாகமம் 13:6-10,12-16, 17:2-5)

குறிப்பாக சாலமோன் தேவனின் கட்டளையை மீறியதாக பைபிள் கூறுகிறது. அத்தோடு தேவன் அவன்மீது கோபமானார் என 1 இராஜாக்கள் 11:10


3.இயேசு தன்னை ஏற்காதோரை தேவன் மன்னித்துவிடவும் கூடாது அவர்கள் திருந்திவிடவும் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.(மாற்கு 4:11-12)

4.சிலைவணங்கிளை நரகத்தில் போட்டு கொல்லுவார் (வெளி 21:8)

5.ஏசா பிறந்து தீமை செய்ய முன்பே அவனை தன் தம்பிக்கு ஊழியம் செய்வான் என தீர்மானித்து கர்த்தர் வெறுத்தார் என்கிறார் பவுல் (ரோமர் 9:11-13) 

6.அக்கிரமக்காரரை கர்த்தர் வெறுக்கிறார் (சங்கீதம் 5:5)

7.துன்மார்க்கரை கர்த்தரின் உள்ளம் வெறுக்கிறது (சங்கீதம் 11:5)

8.குடும்பத்திலுள்ள சிலைவணங்கிகள் மற்றும் பாவிகளோடு ஒன்றாக சாப்பிடவோ பழகவோ கூடாது. அவர்களை துரத்தி விட வேண்டும் (1 கொரிந்தியர் 5:11-13)

9.இயேசுவை மக்கள் நம்பாததற்கு காரணம், தேவன் அவர்களின் கண்களை குருடாக்கி இருதயத்தை கடினப்படுத்தியமையே (யோவான் 12:40)

10.அப்படி இயேசுவை நம்பாதோரின்மீது தேவனின் கோபம் இருக்கும் (யோவான் 3:36) அத்துடன் அவன்மீது ஆக்கினைத்தீர்ப்பு உண்டாகும் (யோவான் 3:18)

அதாவது அவிசுவாசிமீது தேவனுக்கு அன்பு கிடையாது... மாறாக கோபமே இருக்கும் என பைபிளே சொல்லிவிட்டது (யோவான் 3:36)

இயேசு பாவிகளை மனந்திரும்புவதற்கு அழைக்கவே வந்தார்.. மனந்திருந்தாதோரை நேசிக்கவில்லை. மாறாக அவர்கள் மன்னிக்கப்பட கூடாது என்ற கடுமையானவராக தான் இருந்தார் (மாற்கு 4:11-12)

ஆகவே இயேசு பாவிகளை நேசித்தார் என்பது மனந்திருந்தாத பாவிகளை அல்ல.. மனந்திருந்துவோரை மட்டுமே. 

ஆகவே இதுவும் தற்குரித்தனமான குற்றச்சாட்டே.

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

இஸ்லாமும் பெண்களும் பைபிளும்

  1.பெண்களை ஒரு பொருட்டாகவும் மதிக்காதவர்களிடமே பெண்களின் உரிமைகளை குர்ஆன் கூறியது-(புகாரி 5843). ஆனால் பைபிள் பெண்ணோ விற்பனை பொருளாக பார்க்கிறது. அதாவது தகப்பனுக்கு தன் மகளை விற்பனை செய்யும் உரிமையும் உண்டு (யாத்திராகமம் 21:7-10)

2.பெண்குழந்தை பிறப்பதை இழிவாகவும், அவர்களை உயிரோடு புதைக்கும் மக்களிடையே (குர்ஆன் 16:58-59, ) , பெண் குழந்தைகளை உயிருடன் புகைப்பதை பெரும் பாவம் என்றும் (புகாரி 2408), பெண்குழந்தைகளால் சோதிக்கப்பட்டவர்களை அக்குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள் என்றும் (புகாரி 1418), இரண்டு பெண் குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பவரும் நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தன் இரு விரல்களை இணைத்து காட்டினார்கள் (முஸ்லிம் 5127 (2631))

ஆனால் பைபிளோ பெண் குழந்தையை பெற்றெடுத்தால் ஆண்குழந்தையை பெறுவதைவிட இருமடங்கு தீட்டு ஏற்படும் (லேவியராகமம் 12:1-5)


3.பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படாத காலத்தில், அவளது திருமணத்திற்கு அவளது சம்மதம் அவசியம் என்றும் அவளது விருப்பமின்றி திருமணம் செய்து வைக்க கூடாது என்றும் உரிமையை வழங்கியது (புகாரி 5136,5138, 6945,6946)

ஆனால் பைபிளில் தகப்பனுக்கு அவளை விற்றுப்போடும் உரிமையே உண்டு(யாத்திராகமம் 21:7-10)

அத்தோடு அவளை கற்பழித்தவனுக்கோ காலம் முழுதுமே மனைவியாக இருக்க வேண்டும் என அவளை பாழ் கிணற்றிலேயே தள்ளுகிறது (உபாகமம் 22:28-29)


4.விதவை பெண்ணை அவளது மரணித்த கணவனின் குடும்ப சொத்து போல கருதி தம் இஷ்டப்படி நடத்திய காலத்தில், அவளை நிர்ப்பந்தித்து அடைந்துகொள்வது அனுமதிக்கப்பட்டது அல்ல என்று குர்ஆன் கண்டித்தது-(குர்ஆன் 4:19, புகாரி 6948)

பைபிளோ விதவை பெண்ணை அவளது கணவனின் சகோதரன் தான் முடிக்க வேண்டும் என நிர்ப்பந்தமான சட்டத்தை போடுகிறது (உபாகமம் 25:5-6). இங்கே அவளும் மனுசி தானே அவளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டுதானே என பைபிள் பார்க்கவில்லை.


5.தான் பராமரிக்கும் அநாதைப்பெண்களின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அவர்களை திருமணம் முடிப்பதையும், அவர்களுக்கு குறைவான மணக்கொடையை கொடுத்து முடிப்பதையும் இஸ்லாம் தடுத்தது-புகாரி 2763.

பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. அவளை கற்பழித்ததற்கு நஷ்டயீடான ஐம்பது வெள்ளிக்காசுகளை கூட தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:29) . அவள் மீது விபச்சார அவதூறு கூறினால் கூட அபராதமாக நூறு வெள்ளிக்காசுகளை அவளது தகப்பனிடம் தான் கொடுக்க வேண்டும் (உபாகமம் 22:19)


6.பெண்குழந்தைகளுக்கும் மனைவிக்கும்,தாய்க்கும், சகோதரிகளுக்கும் என பெண்களுக்கு இறந்தவர் விட்டுச் செல்லும் செல்வத்தில் சொத்துரிமையை இஸ்லாம் வழங்கியது.(குர்ஆன் 4:7,11,12,176)

ஆனால் பைபிளில் பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. தகப்பனுக்கு ஆண்குழந்தை இல்லாது போனால் மட்டும் தான் அவர்களுக்கு சொத்து கிடைக்கும்.(எண்ணாகமம் 27:8)

(பெண்ணுக்கு ஆணின் சொத்தின் பாதி தானே இஸ்லாத்தில் கிடைக்கும் என நினைக்கலாம். காரணம் ஆண் மீதே குடும்பச் செலவை இறைவன் விதியாக்கியுள்ளதாலும் (குர்ஆன் 4:34), ஆணே தன் மனைவிக்கு மணக்கொடையை கொடுக்க வேண்டும் என்பதாலும் (குர்ஆன் 4:4), அவள் நஷ்டயீடு செலுத்தவேண்டி ஏற்பட்டாலும் அவளது தந்தைவழி உறவினரே (சகோதரன் போன்றோர்) அதை செலுத்தவேண்டும் என்பதாலும் (புகாரி 6730) இவ்வாறு இஸ்லாம் வழங்கியது நியாயமானதே!)


7.தன் மனைவியின் மீது விபச்சாரம் செய்துவிட்டாள் என குற்றச்சாட்டு வைத்தால், அவ்வாறு செய்யவில்லை என எதிர்த்து அவனுக்கு சமமாக சாட்சி கூறும் உரிமையை இஸ்லாம் வழங்கியது (குர்ஆன் 24:6-9).

ஆனால் பைபிளோ அவள் முதலிரவிலே கன்னியாக இல்லை என கூறினால், அதற்கு உடலுறவில் வரும் இரத்தம் தேய்ந்த துணியை ஆதாரமாக அவளது பெற்றோர் காட்டவேண்டும். இல்லாவிட்டால் அவள் விபச்சாரி என தற்குரித்தனமான சட்டம் கூறுகிறது (உபாகமம் 22:14-21). சில பெண்களுக்கு கன்னியாக இருந்தும் முதலிரவில் இரத்தம் வராது. இதுபோன்ற அப்பாவிகளை அவதூறு கூறும் தற்குரித்தனமான போதனையை பைபிள் கூறுகிறது.

அத்தோடு தன் மனைவி மீது சந்தேகம் வந்தால் கூட அவளை தான் மண்கலந்த கசப்பு நீரை குடிக்க வைத்து ஆசாமி கூறும் சாபவார்த்தைகளுக்கு ஆமென் மட்டுமே கூற முடியும்.மறுக்கும் உரிமை கிடையாது (எண்ணாகமம் 5:14-24)


8.இஸ்லாம் கர்ப்பிணி பெண்களை மதிக்கிறது. அவள் பிள்ளை பெற்றெடுக்கும் போது மரணித்தால் அவளை உயிர்த்தியாகி என்கிறது (நஸாயீ 1846,3194, அபூதாவூத் 3111)

ஆனால் பைபிளோ கர்ப்பவேதனையை கடவுள் அதிகரிப்பார் காரணம், பெண் பாம்பிடம் ஏமாந்ததற்காக கடவுள் கொடுத்த சாபம் என்கிறது (ஆதி 3:16)


9.மாதவிடாய் பெண்களை இஸ்லாம் மதிக்கிறது. அது அல்லாஹ் ஆதமின் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திய காரியம் (புகாரி 294) என்றும், அதன்போது உடலுறவை தவிர அனைத்து விசயங்களிலும் அவளை சேர்த்துக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம் (முஸ்லிம் 507 (302) புகாரி 295-297,299-303,) ஒரே போர்வைக்குள் தூங்கலாம் (புகாரி 298) 


ஆனால் பைபிளிலோ மாதவிடாய் பெண்ணின் முழு உடலுமே தீட்டு. அவளை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவள் படுக்கும் இடமும் அமரும் இடமும் தீட்டுப்படும். அவளது படுக்கையை ,அமரும் ஆசனத்தை தொடுபவனும் மாலைவரை தீட்டுப்படுவான். அவளது ரத்தம் ஒர்த்தன் மேல் பட்டால் அவன் ஏழுநாட்களுக்கு தீட்டுப்படுவான். எவ்வளவு காலம் ரத்தம் வந்துகொண்டிருந்தாலும் அத்தனை காலத்திற்கும் இப்படி அவள் தீட்டுப்படுவாள். இரத்தம் நின்று ஏழாம் நாள் தான் அவள் சுத்தமாவாள் (லேவியராகமம் 15:19-28) இப்படி அவளை ஒட்டுமொத்த அசுத்த பிராணியாக ஆக்கியுள்ளது பைபிள். பன்றி போன்ற அசுத்தமான பிராணிகளை தொட்டால் தோராவின்படி மாலைவரை தீட்டுள்ளது போல இந்த பெண்ணை தொட்டாலும் மாலைவரை தீட்டு.


10.ஆணோ பெண்ணோ அவர்களின் நற்செயலை வீணாக்க மாட்டான். ஒருவர் மற்றவரிலிருந்து உள்ளவர்களே (குர்ஆன் 3:195), ஆணோ பெண்ணோ விசுவாசம் கொண்டு நற்செயல் செய்தால் அவர்கள் சுவர்க்கம் நுழைவார்கள். சிறிதும் அநீதமிழைக்கப்பட மாட்டார்கள்.(குர்ஆன் 4:124 இதேபோல் 16:97, 40:40)


11..இஸ்லாம் திருமணமான பெண்களின் நிலையை சிறைக்கைதிகளுக்கு ஒப்பிடுகிறது. அதாவது திருமணத்தின் மூலம் அவர்களால் இன்னொரு ஆணை விரும்ப முடியாது கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள் போன்றவற்றினால். ஆகவே அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள் என்கிறது (இப்னுமாஜா 1851), அத்துடன் உங்களில் சிறந்தவர் தம் மனைவயரிடம் சிறந்தவரே ஆவார் (இப்னுமாஜா 1978,1977, திர்மிதீ 3895). அத்துடன் பெண்களுடன் நல்லவிதமாக நடந்துகொள்ளுங்கள் ஏனெனில் பெண்ணானவள் (மனிதகுல தாயான ஹவ்வா) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார். அதன் மேல் பகுதியே மிகவும் வளைந்தது. அதை நேராக்க நினைத்தால் உடைத்துவிடுவாய் (புகாரி 3331). அவர்களுடன் நல்ல முறையில் வாழுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் , நீங்கள் ஒன்றை வெறுக்க கூடும் ஆனால் அதிலே அநேக நலவுகளை இறைவன் ஏற்படுத்தக்கூடும் (குர்ஆன் 4:19)

இஸ்லாம் மனைவியர் கணவனுக்கு கட்டுப்படுவதற்கான காரணமாக பெண்களை குற்றப்படுத்தவில்லை . மாறாக ஆண்கள் மீதே செலவளிக்கும் பொறுப்பை இறைவன் வழங்கியதாலும் , சிலரைவிட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியதாலும் (உடலாலும் மனதாலும் வேறு விதமாகவும்) தான் (குர்ஆன் 4:34). அனைவரும் ஒரே நிலையில் இருந்தால் குடும்பம் இயங்காது.

ஆனால் பைபிளோ பெண் செய்த பாவத்தினாலே இந்த நிலைமை என்கிறது. அதனாலே அவள் ஆணுக்கு அடங்க வேண்டும் என்கிறது.:

"உன் ஆசை உன் புருஷன் மீதிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்வான்"-ஆதி 3:16) 

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

1 தீமோத்தேயு 2:11-14



12.மனைவியரை அடிப்பது குறித்து, குர்ஆன் 4:34 மனைவியரை அடிக்க அனுமதிக்கிறது என்பதை குறித்து இவர்கள் குற்றம்சாட்டுவர். இந்துக்களோ கிறிஸ்தவர்களோ வேறு மதத்தவர்களோ தம் மனைவியரை அடிப்பதில்லையா? இஸ்லாம் அடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.

*இஸ்லாம் பெண்களுக்கு உரிமைகளை சுதந்திரங்களை முன்பே வழங்கி விட்டதால், பெண்ணும் ஆண்களை எதிர்த்து நிற்பர். குடும்ப வாழ்வை கொண்டு செல்வதற்கு ஒருவர் மற்றவருக்கு நல்லவிசயங்களில் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு நடக்காத போது மனைவியை அடிக்க இஸ்லாம் அனுமதிக்கின்றது. எப்படி அடிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. அதாவது காயம் ஏற்படாமல் இலேசாக அடியுங்கள் என்றே சொல்கிறது. அதுவும் எப்போது என்றும் கூறுகிறது:

அவர்களுடன் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். அதுவல்லாத முறையில் நடந்துகொள்ள உரிமையில்லை. ஆனால் அவர்கள் தெளிவான ஒழுக்கக்கேட்டை கொண்டு வந்தாலே தவிர. அப்போது அவர்களை படுக்கையை விட்டு ஒதுக்கி வையுங்கள். இலேசாக காயமேற்படாமல் அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கீழ்படிந்து விட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் (இப்னுமாஜா 1851, திர்மிதீ 1163, வேறு வாசகங்களுடன் முஸ்லிம் 2334 (1218a), அபூதாவூத் 1905)

இலேசாக காயமேற்படாதவாறு அடிக்கலாம் என்று சொன்ன நபிகளார், மனைவியின் முகத்தில் அடிக்க கூடாது என்றும் தடைவிதிக்கிறார்கள்.

கணவனின் மீதுள்ள மனைவியின் உரிமையானது, நீ உண்ணும்போது அவளுக்கும் உணவளிப்பதும், நீ ஆடை அணியும்போது அவளுக்கும் ஆடை அணிவிப்பதும், (ஒழுக்கப்படுத்துவதற்காக ) நீ முகத்தில் அடிக்க வேண்டாம், அவளை கேவலப் படுத்த வேண்டாம் , வீட்டிலே தவிர அவளை ஒதுக்க வேண்டாம் (அபூதாவூத் 2142, 2143) (கேவலப்படுத்த வேண்டாம் என்பது, அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக என்று சொல்வது என இமாம் அபூதாவூத் கூறுகிறார்)

அத்தோடு மனைவியை அடிக்கிறவர்களை உங்களில் நல்லவர்கள் அல்லர் என்றும் நபிகளார் கூறினார்கள் (அபூதாவூத் 2146)..

 ஆக மனைவியை அடிப்பது காலங்காலமாக இருப்பதுவே. அதை இஸ்லாம் ஒழுங்குபடுத்தியதோடு , பெண்களோடு நல்லமுறையில் நடந்துகொள்ளவும் , அவர்களோடு நல்லமுறையில் நடந்துகொள்வர்களே உங்களில் சிறந்தவர் என்றும் மனைவியரை அவர்கள் முறையிடும்படி அடிக்கிறவர்களை உங்களில் சிறந்தவர் அல்ல என்றும் நல்வழிப்படுத்தியது.

பைபிளிலோ பெண் ஒரு அடக்கப்பட்டே இருப்பதாலும் உரிமைகள் இல்லாதவளாக இருப்பதாலும் அவள் கணவனை எதிர்ப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. காரணம் எஜமானுக்கு அடிமைப்பெண் எப்படி நடப்பாளோ அதுவே பைபிளில் அவளது நிலை.

இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.

1 பேதுரு 3:5-6

மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குக்கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.

எபேசியர் 5:22-24



அத்துடன் அவள் அமைதியாகவே அடக்கத்தோடு இருக்க வேண்டும் (1 பேதுரு 3:4, 1 தீமோத்தேயு 2:11-12, 1 கொரிந்தியர் 14:34). இப்படி உரிமை பறிக்கப்பட்ட பெண்ணாக இருப்பதால் அவள் மேலே வரவே மாட்டாள். அத்துடன் அவர்களை அடிக்க கூடாது என்று பைபிளில் எங்கேயும் குறிப்பிடவில்லை.... மனைவியரை அடிக்கும் காலத்தில் அதை பற்றி மௌனமாக இருப்பதென்பதே அதை அனுமதிப்பதாகிவிடும்.

ஆகவே இவர்களுக்கு இந்த நிலையில் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதியேயில்லை.


13.இஸ்லாம் பெண்களில் அதிகமானோர் நரகவாசிகளாக நபிகளார் கண்டதாக கூறும் ஹதீஸிலே அப்படி நரகம் போவதற்கான காரணம் கூறப்படுகின்றது 

எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர் ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர் என்று நபிகளார் சொன்னார்கள். "அல்லாஹ்வையா நிராகரிக்கிறார்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு, "கணவனை நிராகரிக்கிறார்கள், உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்கு நீ காலமெல்லாம் நன்மையே செய்து கொண்டிருந்து, பின்னர் (அவளுக்கு பிடிக்காத ஒன்றை) கண்டுவிட்டால், உன்னிடம் ஒருபோதும் எந்த நன்மையையும் கண்டதில்லை என்று பேசி விடுவாள்" என பதில் கூறினார்கள்.(புகாரி 29)

வேறொரு ஹதீஸில் அவர்கள் அதிகம் சபிப்பதும் கணவனை நிராகரிப்பதும் என கூறப்பட்டுள்ளது (புகாரி 304)

அதாவது இந்த செயல்களினால் நரகம் போகிறவர்களில் அதிகமானோராக பெண்கள் காட்டப்பட்டனர். அவர்கள் பெண்ணாக இருப்பதால் அல்ல.. மாறாக செயலினாலே அவ்வாறு நிகழுகிறது.

இதன்மூலம் அதிகமாக சபிப்பதையும் கணவனை நிராகரிப்பதையும் கைவிட்டு நரகம் போகாதிருப்பதற்கு நபிகளார் வழிகாட்டுகிறார்கள். 


14.இஸ்லாம் பெண்களின் நலன்கருதி வீட்டிலே இருக்கும்படி கட்டளையிடுகிறது. ஆனாலும் தேவைகளுக்காக அவர்கள் வெளியே செல்லலாம் (புகாரி 147), தன் கால்நடைகளை பராமரிப்பதற்காக உணவு கொண்டுவருவதற்காக தனியாகவும் வெளியே செல்லலாம் (புகாரி 5224), இதன்படி ஆண்-பெண் தனித்திருத்தல் நிலை இல்லாமலும் (புகாரி 3006, 5224) முறையாக ஆடை அணிந்த நிலையிலும் (குர்ஆன் 33:59, 24:31) ,ஆண்களோடு குளைந்து பேசாமலும் (குர்ஆன் 33:32) அனுமதிக்கப்பட்ட தொழில்களில் வேண்டியதை பெண் செய்யலாம்.. பெண் தன் குடும்பத்திற்கு செலவளிப்பதும் தர்மமே அதற்கு இறைவனிடம் கூலி உண்டு.(புகாரி 1466,5369). கணவன் செலவுக்கு தராத போதுகூட அவனது அனுமதியின்றி நியாயமான அளவை எடுத்துக்கொள்ளும் உரிமையும் மனைவிக்கு உண்டு (புகாரி 5359,5364,5370)

ஆனால் பைபிளின் படி வயோதிப பெண்கள் இளவயது பெண்களுக்கு போதிக்கலாம். எதை போதிக்க வேண்டும் என்றால் அவர்கள் வீட்டிலே இருக்கவேண்டும் என்றும் போதிக்க வேண்டும் என்கிறார் பவுல்:

தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.தீத்து 2:4-5


15.பெண்ணிடம் துர்ச்சகுனம் இருப்பதாக சொன்னதன் விளக்கம்:

இது இரண்டு விதமாக கூறப்பட்டுள்ளது,

1.துர்ச்சகுனம் ஒன்றில் இருப்பதாக இருந்தால், மனைவி வீடு குதிரை ஆகிய மூன்றிலுமே இருந்திருக்கும் (புகாரி2859, 5094,5095,)- இதன் அர்த்தம் எதிலுமே துர்ச்சகுனம் கிடையாது. அவ்வாறு இருப்பதென்றால் இந்த மூன்றிலும் தான் இருக்கும். ஏனெனில் ஒரு ஆணுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது அவனது மனைவியும் அவன் தங்கும் வீடும் அவன் ஏறிச்செல்லும் வாகனமும் தான்.

2.துர்ச்சகுனம் மூன்று விசயங்களிலேயே இருக்கும். மனைவி ,வீடு , குதிரை (புகாரி 2858,5093,..) இதன் அர்த்தம் ஒரு மனிதனுக்கு கெடுதி ஏற்படுவதெல்லாம் இவர்களால் என்பதல்ல.. ஏனெனில் அனைத்து நலவும் கெடுதியும் இறைவனிடமிருந்தே வரும் (குர்ஆன் 4:78) . மனிதனுக்கு வீடு குறுகலாகவும் அயலவர்கள் தீங்கிழைப்பவர்களாகவும் இருந்தாலோ, மனைவி அதிகம் சண்டைக்காரியாக தீங்கிழைப்பவளாக இருந்தாலோ, வாகனம் அதிக செலவை ஏற்படுத்துவதாகவும் பயனற்றதாகவும் இருந்தால் அதுவே துர்ச்சகுனமென கூறப்படுகிறது. இதற்காக அவற்றை விட்டு அவன் முறையாக பிரிந்துவிடலாம்.. வீட்டையும் வாகனத்தையும் விற்று வேறு வீடும் வாகனமும் வாங்கலாம். மனைவியை விவாகரத்து செய்து வேறு திருமணம் முடிக்கலாம். அம்மனிதனை நிர்ப்பந்தித்து துன்பத்திலேயே இரு என்று கூறுவது நியாயமல்லவே.    

இதுவல்லாமல் நல்ல மனைவி குறித்து, உலகம் பயனளிக்கும் செல்வங்களே. இப்பயனளிக்கும் செல்வங்களிலேயே மிகவும் மேலானது நல்ல மனைவியே (முஸ்லிம் 2911 (715k)), செல்வங்களிலேயே சிறந்தது இறைவனை நினைவுகூறும் நாவும், நன்றி செலுத்தும் உள்ளமும், ஈமான்விசயத்தில் உதவிசெய்யும் முஃமினான மனைவி (திர்மிதீ 3094). மனைவியாகிய அவர்கள் உங்களின் ஆடை. நீங்கள் அவர்களின் ஆடை (குர்ஆன் 2:187). ஆகவே இதிலே ந்லல மனைவி குறித்து விமர்சனம் எதுவுமில்லை.

பைபிளிலும் தீய மனைவி குறித்து,

9.சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.

19.சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.

நீதிமொழிகள் 21:9, 19


நீதிமொழி 27:15 TCV

[15] சண்டைக்கார மனைவி, மழைக்காலத்தில் தொடர்ச்சியான ஒழுக்கைப்போல் இருக்கிறாள்;

https://bible.com/bible/2730/pro.27.15.TCV

*பெண்களின் புத்திக்கூர்மையான ஆலோசனையை மதித்தல்- இஸ்லாத்தில் முகம்மது நபியே மனிதர்களில் ஞானத்தில் உயர்ந்தவராக கருதப்படுகிறார். ஆனாலும் அன்னவர்களே தன் மனைவியின் ஆலோசனைப்படி செயல்பட்டுள்ளார்கள்_ ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது (புகாரி 

2731,2732)

*அத்தோடு கணவனின் அருவருப்பான தோற்றம், பாலியல்ரீதியாக திருப்திப்படுத்த இயலாத நபர், ஒழுக்கமில்லாதவர், நியாயமின்றி அடிப்பவர், உணவும் உறையுளும் தராதவர் போன்று அல்லது நியாயமான காரணங்களுக்காக விவாகரத்தை கேட்டுப்பெறும் உரிமையை இஸ்லாம் அன்றே வழங்கியுள்ளது.  இன்றும் நடைமுறையில் உள்ளது... பைபிளில் கற்பழித்தவனுக்கே கழுத்தை நீட்ட வேண்டும் (உபாகமம் 22:28-29)

*கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்து, அதனால் அவன் கோபமுற்றவனாக இரவை கழித்தால், வானவர்கள் அவளை சபிக்கிறார்கள் என்ற ஹதீஸை குறித்து,  திருமணத்தின் நோக்கமே விபச்சாரத்தில் விழாமல் இருப்பதற்கு தான் என்றிருக்கும்போது அவள் வீம்புக்காக மறுத்தால் அதற்குரிய நிலையே இது. தகுந்த காரணங்களுக்காக அதை தெளிவு படுத்தி மறுப்பதற்குரிய தண்டனை அல்ல.. அது கூடும்

இதுபோன்று இன்னும் நிறையக் கூற முடியும். இவர்கள் எதை குற்றச்சாட்டாக வைப்பார்களோ அதுவே பைபிளில் கடுமையானதாக கூறப்பட்டிருக்கும்.

இஸ்லாம் அடிமைகளை நடத்தியவிதம்

 இஸ்லாம் அடிமைகளை கண்ணியப்படுத்துகிறதோடு அவர்களை நல்லமுறையில் நடத்துமாறு வழிகாட்டுகிறது 

*அடிமைகள் என்போர் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் தந்துள்ள உங்கள் சகோதரர்கள் என்றும் அத்தகையோருக்கு நீங்கள் உண்ணுவதிலிருந்து உணவளிக்க வேண்டும் என்றும் நீங்கள் அணிவதிலிருந்து அணியக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்களின் சக்திக்கு மீறிய பணியை கொடுத்து சிரமப்படுத்த கூடாது என்றும் அப்படி கொடுத்தால் அவருக்கு உதவி செய்யட்டும் என்றும் நபிகளார் வழிகாட்டினார்கள் (புகாரி 30,6050, முஸ்லிம் 3417 ,3419, 3420 (1661a,c,1662)

*அடிமைகள் விசயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுமாறு நபிகளார் கூறியுள்ளார்கள் (அபூதாவூத் 5156,இப்னுமாஜா 2698, அஹ்மத் 585)

*அடிமைக்கு அறைந்தாலோ நியாயமின்றி அடித்தாலோ அவரை விடுதலை செய்வதே அதன் பரிகாரம் (முஸ்லிம் 3408 ,3409 (1657a,b) -

ஆனால் பைபிளில் பல் உடைவதற்கு அடித்தால் தான் விடுதலை செய்யவேண்டும்.அல்லது கண்ணை கெடுத்தால் தான் விடுதலை செய்ய வேண்டும் (யாத்திராகமம் 21:26,27)

*அடிமைக்கு சாட்டையால் அடித்த நபித்தோழரை கண்ட நபிகளார், உமக்கு உம் அடிமை மீது உள்ள அதிகாரத்தை விட , அல்லாஹ்வுக்கு உம்மீது அதிகாரம் உள்ளது என எச்சரித்தார்கள். இதனால் அவர் இனிமேல் அடிமைகளை அடிக்க மாட்டேன் என உறுதி பூண்டார் (முஸ்லிம் 3413 (1659a)) இன்னொரு அறிவிப்பில், நபிகளாரின் எச்சரிப்பை கேட்ட தோழர் தான் அடித்த அடிமையை அல்லாஹ்வுக்காக விடுதலை செய்துவிட்டேன் என கூறினார். அப்போது நபிகளார் அவ்வாறு செய்யாதிருப்பின் உன்னை (மறுமையில்) நரகம் எரித்திருக்கும் என்றார்கள் (முஸ்லிம் 3414 (1659c)

ஆனால் பைபளோ அடிமையை கடுமையாக தாக்கி ஒரு நாளோ இருண்டு நாளோ கழித்து அவன் செத்தாலும் அவனுடைய சொத்து என்பதால் எந்த தண்டனையும் இல்லை. அதே நாளில் செத்தால் மட்டுமே தண்டனை உண்டு (யாத்திராகமம் 21:21-22)

*தன் அடிமை மீது அவதூறு சொன்னவருக்கு மறுமையில் கசையடி தண்டனை நிறைவேற்றப்படும் (புகாரி 6858) என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

*அடிமையை நியாயமின்றி அடித்தால் மறுமையில் அவர் பழிவாங்கப்படுவார் (அதபுல் முஃப்ரத் 181,182,185,186)

*அடிமையின் விசயத்தில் நல்லமுறையில் நடந்துகொள்ளுமாறும், நீங்கள் உண்ணுவதிலிருந்து அவர்களுக்கு உணவும் நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு ஆடையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை வேதனை செய்யக்கூடாது என்றும் இஸ்லாம் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 188, 199) அவர்களுக்கு இயலாத வேலையை அவர்கள்மீது சுமத்த கூடாது என்றும் கூறுகிறது (அதபுல் முஃப்ரத் 192)

*பெற்றோர் உறவினர் அயலவருக்கு நலவான உபகாரம் செய்யுமாறு குர்ஆன் கூறுவதில் அடிமைகளையும் இணைத்து அவர்களுக்கும் நல்லுபகாரம் செய்யுங்கள் என்கிறது (குர்ஆன் 4:36

*அடிமைப்பெண்களுக்கும் அடிமை ஆண்களுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு எஜமான்களுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது (குர்ஆன் 24:32)...  தோராவும் இந்தவிசயத்தை அனுமதிக்கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டுக்காலத்தில் காயடித்து விடுவார்கள்.  அத்தோடு எவருமே  திருமணம் செய்யாது துறவிகள் போல இருப்பதே நலம் என்கிறது (மத்தேயு 19:10-12, 1கொரிந்தியர் 7:26,28,37,38)

*அடிமைகளை விடுதலை செய்வதை சிறப்பித்து, அவ்வாறு விடுதலை செய்யுமாறும் (புகாரி 1054,2503,6715) ,சம்பாதித்து தன் பெறுமதியை செலுத்தி விடுதலை பெற விரும்பும் அடிமைகளுக்கு அதற்காக வாய்ப்பளிக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டுகிறது (புகாரி 2492)  ஆண் அடிமை பெண் அடிமை இருவருக்குமே இது பொதுவானது

.. அத்தோடு குற்றப் பரிகாரங்களில் ஒன்றாக அடிமைவிடுதலையை இஸ்லாம் ஆக்கியுள்ளது (உதாரணமாக குர்ஆன் 4:92)

இஸ்ரேலியரான ஆண் அடிமைகள் மட்டும் ஆறு வருடம் அடிமையாக இருந்துவிட்டு விடுதலை பெறலாம் என பைபிள் அனுமதிக்கிறது (யாத்திராகமம் 21:1-6)

*அடிமையாக இருப்பவர் இறைவனுக்குரியவற்றையும் தன் எஜமானுக்குரியவற்றையும் சரிவர நிறைவேற்றினால் அவருக்கு இரண்டு நற்கூலி உண்டு என்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். இதை அறிவிக்கும் நபித்தோழர் இதன் சிறப்பினால் ஜிகாது செய்வதும் தாயுக்கு உபகாரம் செய்வதும் இல்லையென்றால் நானும் அடிமையாக இருப்பதை விரும்பியிருப்பேன் என்கிறார் (புகாரி 2548)

*தன் அடிமைப்பெண்ணுக்கு கற்பித்து விடுதலை செய்து அவளை திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இறைவனிடம் இரு நன்மைகள் உள்ளன என ஊக்குவிக்கிறது (புகாரி 97)

ஆனால் பைபிளோ சொந்த மகளையே அடிமையாக விற்றுப் போடும் உரிமையை தகப்பனுக்கு வழங்கியுள்ளது (யாத்திராகமம் 21:7-10)

*ஆனாலும் அடிமைகள் எஜமானின் சொத்துக்கள் என்பதால், அவர்களை வாங்குவது விற்பது கூடும்.

பைபிளும் புறஜாதியார்களை காலம் காலமாக அடிமைகளாக வாங்கி விற்று அடிமையாக வைத்துக்கொள்ளலாம் என்கிறது (லேவியராகமம் 25:44-46)

ஆகவே பைபிளை விட இஸ்லாம் அடிமைகள் விசயத்தில் சிறப்பாகவே போதிக்கிறது.


மேலும் வாசிக்க இஸ்லாமும் அடிமைப்பெண்களும்

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம்

1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

4.முத்ஆ திருமணம்


1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம்


*இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32).

*விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க,,

 -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்பானதாக பார்க்கிறது (புகாரி 5232), அத்துடன் அந்நியச் பெண்ணை (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட உறவினரான பெண் அல்லாதோர் அல்லது மனைவி,தன் அடிமைப்பெண் அல்லாதோர்) தொடுவதை விட இரும்பு ஊசியால் தலை துளைக்கப்படுவது சிறந்தது என எச்சரித்துள்ளது (அல்ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா 226)

*அத்தோடு விபச்சாரம் செய்துவிட்டால், நிரூபிக்கப்படும் போது திருமணமானவராயின் கல்லெறிவதன் மூலம் மரண தண்டனையும், திருமணமாகாதவராயின் நூறு கசையடிகளும் ஒருவருட ஊர் நீக்கமும் தண்டனையாக கிடைக்கும் (புகாரி 6633,6634).

இவ்வாறு இஸ்லாம் விபச்சாரத்திலிருந்து தற்காத்துக்கொள்ள சகல வழிமுறைகளையும் வழங்கியுள்ளது

2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன?

இஸ்லாம் ஆண்களுக்கு இரண்டுவிதமான பெண்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட அனுமதிக்கிறது. 1.தன் சொந்த மனைவியர் 2.தன்னுடைய வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட அடிமைப்பெண்கள் (குர்ஆன் 23:5-7, 70:29-31).  இதுவல்லாதவை விபச்சாரமாக கருதப்படும்.

3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும்

தன்னுடைய அடிமைப்பெண் அல்லாத அடிமைப்பெண்ணோடு குடும்பம் நடாத்த வேண்டுமானால் அவர்களை மஹர் கொடுத்து திருமணம் முடித்தே வாழ முடியும் (குர்ஆன் 4:25), 

அவள் தன் மனைவியின் அடிமைப்பெண் என்பதால் திருமணம் செய்யாமல் உறவு கொண்டால் அதுவும் விபச்சாரமாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும் (புகாரி 2290) .. 

அத்தோடு தன் அடிமைப் பெண்ணை வேறொரு அடிமைக்கு திருமணம் செய்துகொடுத்தால், எஜமானுக்கு அவளது மறைவுறுப்புகளை பார்ப்பதை இஸ்லாம் தடுக்கிறது. அதாவது அவளோடு உடலுறவு கொள்ள முடியாது (அபூதாவூத் 496,, மிஷ்காத்துல் மஸாபீஹ் 3111). அவளை விவாகரத்து செய்யும் முழு உரிமையும் அவளது அந்த கணவனையே சாரும்.(முஅத்தா பாடம் 29 ஹதீஸ் 51) அதாவது எஜமானுக்கு அதை தீர்மானிக்க முடியாது. 

(பைபிளிலும் அடிமையானவனுக்கு எஜமான் திருமணம் செய்து வைத்திருந்தால், அவன் விடுதலைபெற்று போவதானால் தனியாக தான் போகவேண்டும். அவனது மனைவியும் பிள்ளைகளும் எஜமானையே சாரும் (யாத்திராகமம் 21:4).

அடிமைப் பெண்கள் என்போர் எஜமானின் சொத்து என்பதாலும் அக்கால நடைமுறையில் இருந்ததாலும் அவர்களுடன் வாழ்வது அனுமதிக்கப்பட்டது. 

இவ்வடிமைகள் போர்களில் கைதிகளாக பிடிக்கப்பட்டு வீரர்களுக்கு பங்காக கிடைப்பார்கள்.,. இதுவே அக்கால அரேபியர்களின் நடைமுறை....

அப்போது கூட இஸ்லாம் நல்லொழுக்கத்தை கற்பிக்கிறது அதாவது: அவ்வடிமை கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிரசவிக்கும்வரையும், கர்ப்பிணி அல்லாத பெண்ணாக இருந்தால் ஒருதடவை மாதவிடாய் ஏற்பட்டு சுத்தமடையும் வரை உடலுறவு வைக்க கூடாது (அபூதாவூத் 2157).

இதேபோல் அடிமையாக இருப்பவரை எஜமானரிடமிருந்து விலைக்கு வாங்கியும் அடிமைகளாக பெறப்பட்டனர். (ஆனால் பைபிளில் மகளையே அடிமையாக விற்றுப் போடலாம் -யாத்திராகமம் 21:7-10)

ஆனாலும்

*  தன் அடிமைப்பெண்ணுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து, விடுதலை செய்து திருமணமும் செய்துகொண்டால், அத்தகையவருக்கு இறைவனிடம் இருமடங்கு நற்கூலி உண்டு என்பதையும் நபிகளார் கூறியுள்ளார்கள் (புகாரி 97, 3446)

ஆகவே திருமணத்திற்கு வெளியே என்பது தன் சொந்த சொத்தாக உள்ள அடிமைப்பெண்ணை மட்டுமே குறிக்கும். காரணம் உரிமையாளருக்கு உரிமை உண்டே.

பைபிளும் வைப்பாட்டிகளும்

*பைபிள் திருமணத்திற்கு வெளியே வப்பாட்டி வைத்தவர்களை சிறப்பித்து பேசுவதோடு, வப்பாட்டி வைத்துக் கொள்வதை விபச்சாரம் என்றோ அது கூடாது என்றோ பைபிளில் ஒரு வசனம் கூட கிடையாது.

*தேவனின் நண்பரான ஆபிரகாமுக்கு (2நாளாகமம்20:7,ஏசாயா 41:8) மனைவிகள் அல்லாத பல வப்பாட்டிகள் இருந்தனர் (ஆதியாகமம் 25:6)- இந்த ஆபிரகாம் செய்தது தவறு அல்ல என்று அடுத்த அதிகாரமே சொல்கிறது, அவர் தேவனது சொல்லுக்கு கீழ்படிந்து ,அவரது கட்டளைகளையும் நியமங்களையும் பிரமானங்களையும் கைக்கொண்டார் (ஆதியாகமம் 26:4 (ஆங்கிலம் 26:5))

*உரியாவின் மேட்டரை தவிர தப்பே செய்யவில்லை என்றும் , தேவன் அவனுக்கு கட்டளையிட்டதில் ஒன்றையும் விட்டு விலகாமல் அவரது பார்வைக்கு செம்மையானதையே செய்தான் என பைபிள் கூறும் தாவீது (1 இராஜாக்கள் 15:5), பல வப்பாட்டிகளை திருமணத்திற்கு வெளியே வைத்திருந்தார் (2 சாமுவேல் 5:13)

இதேபோல் அநேக பரிசுத்தவான்கள் என கூறப்பட்டவர்கள் வப்பாட்டி வைத்திருப்பவர்களாக பழைய ஏற்பாடு கூறுகிறது. இப்படி வைப்பாட்டி வைப்பதை தவறு என்றோ விபச்சாரம் என்றோ பைபிள் எங்கேயும் சொன்னதில்லை என்பதோடு, தாவீது செய்தவற்றில் உரியாவின் மனைவியிடம் முதல் தடவை விபச்சாரம் செய்தது அவனை கொன்றதை தவிர வேறு பாவமே செய்யவில்லை என கூறி வப்பாட்டி வைத்ததையும் தப்பு அல்ல என்று பைபிளே காட்டிவிட்டது.

இந்த லட்சணத்தில் உரிமையாளன் தன் உரிமைச் சொத்தான அடிமைப்பெண்ணுடன் குடும்பம் நடாத்துவதை குறை சொல்லலாமா?

இஸ்லாம் அடிமைகளை நடாத்தும்விதம்

4.முத்ஆ விசயம்

முத்ஆ என்பது அரபுகள் தூர பயணங்களின் போது கடைபிடித்துவந்த திருமண முறையாகும். 

சொந்த ஊரல்லாத வேறு ஊரில் தற்காலிகமாக இருக்கும் காலத்தில் தற்காலிகமாக அங்கே குறித்த பெண்ணின் சம்மதத்தோடு மணக்கொடை கொடுத்து திருமணம் செய்து கொள்வர். பிறகு தன் தேவை முடிந்து ஊரிலிருந்து வெளியேறும்போது மனைவியிடமிருந்தும் பிரிந்து விடுவர்..

இதை நபிகளார் கைபர் யுத்தத்தின்போது தடை செய்தார்கள் (புகாரி 5115,5523,6961 முஸ்லிம் 2738,2739,2740-2741,3920). 

பிறகு அவ்தாஸ் போரின்போது மூன்று நாட்களுக்கு மட்டும் இத்திருமணத்தை அனுமதித்தார்கள் பிறகு அதை தடை செய்தார்கள்.(முஸ்லிம் 2727) மக்கா வெற்றியின் போது மக்காவிற்கு சென்றவர்களுக்கு சில நாட்களுக்கு அனுமதித்தார்கள். பிறகு தடை செய்துவிட்டார்கள் (முஸ்லிம் 2728,2729),

 குறிப்பாக அப்போது இத்திருமணத்தை மறுமைவரைக்கும் அல்லாஹ் தடைசெய்து விட்டான் என அறிவித்தார்கள் (முஸ்லிம் 2730 &2733-2735,2737)

சில நபித்தோழர்களுக்கு இறுதியாக தடைசெய்த தகவல் கிடைக்காததால், அது கூடும் என கருதி செய்துவந்தனர் (முஸ்லிம் 2724,2725.) 

அதுவும் நிர்ப்பந்தமான நிலையில் தான் என்றே கருதினர் (புகாரி 5116, முஸ்லிம் 2736 ) 

அதை உமர் (ர) தன் ஆட்சியில் மீண்டும் தடைசெய்தார்கள் (முஸ்லிம் 2725,2726 ).

 அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆட்சிக்காலத்தில், அவ்வாறு செய்தால் விபச்சாரமாக கருதப்பட்டு கல்லெறி தண்டனை வழங்குவேன் என அப்துல்லாஹ் கூறினார் (முஸ்லிம் 2736).

இதை நன்கு அறிந்த அபூஅம்ரா எனும் நபித்தோழர் இதுபற்றி கூறும்போது ,இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவர்களுக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம்,பன்றி இறைச்சி அனுமதிக்கப்பட்டது போன்று தான் முத்ஆவும் அனுமதிக்கப்பட்டது என்றும், பிறகு அல்லாஹ் இம்மார்க்கத்தை உறுதியாக்கியதும் தடைவிதித்து விட்டான் என்றார்கள் (முஸ்லிம் 2736).

அத்துடன் முத்ஆ சம்பந்தமான அறிவிப்பை பதித்துவிட்டு இமாம் புகாரி, இந்த திருமணத்திற்கு அனுமதி மாற்றப்பட்டு விட்டது என அலீ (ர) அவர்கள் நபிகளாரிடமிருந்து அறிவித்து தெளிவுபடுத்தியுள்ளார்கள் என புகாரி 5119 இலே இறுதியில் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது விபச்சாரம் செய்யாமலிருக்க குடும்பத்தவர்களை விட்டும் தூரமாக உள்ளவர்களுக்கு நிர்ப்பந்தமான சூழ்நிலையில் ஒரு மாற்று வழியாக தற்காலிக திருமணம் நடைமுறையில் இருந்தது. அதை நபிகளார் இறுதியில் தடைசெய்துவிட்டார்கள்

 பைபிள் வைப்பாட்டி வைத்தால் கொள்வதையே தடைசெய்யாதபோது, அதைவிபச்சாரமாக கருதாத போது , தற்காலிகமாக திருமணம் செய்ததை விமர்சிக்க தகுதி உண்டா?

அத்தோடு கன்னிப் பெண்ணோடு விபச்சாரம் செய்தால் கூட , தகப்பனுக்கு இஷ்டமில்லாதபோது கன்னியின் மஹரை கொடுத்துவிட்டு போக வேண்டும் என யாத்திராகமம் 22:16-17 சொல்கிறது. விபச்சாரம் செய்த கன்னிப் பெண்ணுக்கு தண்டனையும் கிடையாது. மாறாக உடலுறவுக்கான கூலியை பெற்றுக்கொள்ள சொல்லி , இந்தக்கால விலைமாதுகளின் நடத்தையான போதனையை வழங்கியுள்ளது பைபிள்.

ஆனால் இஸ்லாமோ விபச்சாரம் செய்தால் திருமணமாகாதவராக இருந்தால் நூறுகசையடிகளும் (குர்ஆன் 24:2) திருமணமானவராயின் கல்லெறி தண்டனையும் வழங்குகிறது (புகாரி 6633-6634). இதிலே எது ஒழுக்கமானது? குறைசொல்ல தகுதியுண்டா?

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான...