இடுகைகள்

முத்ஆ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அடிமைப்பெண்களும் முத்ஆ திருமணமும்

 உள்ளடக்கம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் 2.இஸ்லாமிய நம்பிக்கைப்படி விபச்சாரம் என்பது என்ன? 3.அடிமைப்பெண்களுடன் தாம்பத்திய வாழ்க்கையும் ஒழுங்குமுறையும் 4.முத்ஆ திருமணம் 1.விபச்சாரத்திலிருந்து தூரமாக வழிகாட்டும் இஸ்லாம் *இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவே வேண்டாம் என்று கூறுகிறது (குர்ஆன் 17:32). * விபச்சாரத்தில் விழுந்துவிடாதிருக்க ,,  -முதலில் ஆண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் (குர்ஆன் 24:30), பின் பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக்கொள்ளுமாறும் தம் அலங்காரங்களை அந்நிய ஆண்களுக்கு வெளிப்படுத்த கூடாது என்றும் மறைத்து வைத்துள்ள அலங்காரம் வெளிப்படுவதற்காக கால்களை தட்டி நடக்க வேண்டாம் என்றும் (குர்ஆன் 24:31), ஒரு பெண் அந்நிய ஆணுடன் பேசும்போது குளைந்து குளைந்து கவர்ச்சியாக பேசக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் , மனதில் நோயுள்ளவன் ஆசைப்படுவான் என்றும் (குர்ஆன் 33:32), ஒரு பெண்ணுடன் அந்நிய ஆண் (திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆண் அல்லது கணவன் அல்லாதவர்) தனித்திருக்க கூடாது (புகாரி 5233,3006), என்றும் தனியாக உள்ள பெண்ணிடம் கணவனின் சகோதரன் செல்வதை கூட மரணத்துக்கு ஒப்ப...