இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அல்லாஹ் வழிதவறச்செய்கிறான் என்பதன் விளக்கம்

1.மனிதனுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது  --மனிதனுக்கு இறைவன் வழி காட்டியுள்ளான். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கிறான் அல்லது காஃபிராக இருக்கிறான் (குர்ஆன் 76:3) --மனிதனுடைய ஆத்மாவுக்கு நன்மையையும் தீமையையும் அறிவித்துக் கொடுத்துள்ளான். அதை பரிசுத்தப்படுத்திக்கொள்பவர் வெற்றிபெற்றவர்-குர்ஆன் 91:7-10 -இறைவன் ஒரு கூட்டத்தையும் அவர்களுக்கு நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டியவற்றை தெளிவாக்காமல் வழிதவறச்செய்வதில்லை (குர்ஆன் 9:115) இதன்படி அனைவருக்கும் நேர்வழி தெளிவாக்கப்பட்டே உள்ளது. 2.அல்லாஹ் வழி தவற செய்வதன் விளக்கம்   -அவர்கள் சத்தியத்தை அறிந்துகொண்டே சறுகியபோது அல்லாஹ் அவர்களது இதயங்களை சறுக செய்தான் (குர்ஆன் 61:5) -நேர்வழி இன்னதென்று தெளிவான பின்பு இத்தூதருடன் முரண்பட்டு விசுவாசிகளின் வழியல்லாததை எவர் பின்பற்றுகிறாரோ அவனை அவன் திரும்பிய வழியிலேயே திருப்பி விட்டு நரகத்தில் நுழைவிப்போம் (குர்ஆன் 4:115) -ஸமூது கூட்டத்தினருக்கு நல்வழி காட்டினோம். ஆனாலும் அவர்கள் குருட்டுத்தன்மையை விரும்பினார்கள் (குர்ஆன் 41:17) இப்படி இறைவன் நேர்வழியை காட்டிய பின்பு, வழி கேட்டை தெரிவு செ...

யூதர்கள் யார்? -இஸ்லாமும் பைபிளும் கூறுவது என்ன

படம்
  இஸ்லாமும் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் யூதர்களை பற்றி என்ன கூறுகிறது   இஸ்லாம் : 1* முகம்மது நபியிற்கு முன்புள்ளவர்களின் மறுமை நிலை :   ஈமான்கொண்டவர்களிலும் ( முஸ்லிம்கள் ) , யூதர்களிலும் , கிறிஸ்தவர்களிலும் , ஸாபிஈனிலும் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமையையும் விசுவாசம் கொண்டு , நற்செயல் செய்தார்களோ , அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் நற்கூலி உண்டு . ( மறுமையில் ) அவர்கள் அச்சப்படவும் மாட்டார்கள் . கவலைப்படவும் மாட்டார்கள் (2:62&5:69) முஸ்லிம்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையான சுவர்க்கம் நுழைபவர்கள் மூஸாவின் சமூகம் ( யூதர்கள் ) தான் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள் . ( புகாரி 5705) 2* முகம்மது நபியிற்கு முன்பு , யூதர்கள் முழு மனிதர்களிலும் இறைவனால் மேன்மையாக்கப்பட்டிருந்தார்கள் : இஸ்ராயீலின் பிள்ளைகளே ! உங்கள் மீதான என் அருட்கொடைகளையும் , நான் உங்களை அகிலத்தார் அனைவரிலும் மேன்மையாக்கி வைத்தேன் என்பதையும் நினைவுகூர்ந்துபாருங்கள் (2:47) 3* யூதர்கள் தமக்கு விருப்பமில்லாததை இறைவனின் தூதர்கள் கொண...