கர்த்தரைவிட யாக்கோபு பெரியவரா?

யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாயிருப்பாரோ??
------------------------------------------------



புதிய ஏற்பாட்டு புத்தகங்களின்/கடிதங்களின் ஆசிரியர்களுக்கு போதியளவு பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லை என்பதை இரண்டையும் படிப்போரால் இலகுவாக புரிந்துகொள்ளலாம்.



உதாரணமாக பாம்பை நோக்கி , உனக்கும் பெண்ணுக்கும் , உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை ஏற்படுத்துவேன்.(ஆதி 3:15)


இங்கே பெண் எனப்படுபவள் ஹவ்வா  என எபிரேய பெயர்கொண்ட தமிழ் ஏவாள் ஆவார்.

ஆரம்பத்தில் அவருக்கு பெயர் இடப்படவில்லை.. பிறகு தான் ஆதாம் அவரது வாழ்வே இவளாக இருப்பதால் "வாழ்வு" என பொருள்படும் ஹவ்வா (ஏவா) என்ற எபிரேய பெயரை இடுகிறார். (ஆதி 3:20)


பாம்பு ஏவாளை ஏமாத்தியதால் (?) , கர்த்தர் பெண்ணுக்கும் பாம்புக்கும் சண்டைய மூட்டிவிடுகிறார் (இதனால் ரெண்டுபேருக்கும் ஒத்துவராது!! நம்புங்க). அதனுடன் சேர்த்து பெண்ணான ஏவாளின் வித்துக்கும் பாம்பின் வித்துக்கும் சண்டைய மூட்டுறார்.

அதாவது பெரிய பாம்பும் பெரிய பெண்ணும் செஞ்சதுக்காக , பாம்பின் குட்டிகளும் பெண்ணின் குட்டிகளும் (பிள்ளைகளும்) பகையாக இருப்பாங்களாம்.

பாம்பின் தலையை பெண்ணின் குட்டி நசுக்குமாம். பெண்ணின் குட்டியின் குதிகாலை பாம்பு நசுக்குமாம் (கொட்டுமாம்!)!

இந்த கதையை அறைகுறையாக படித்த புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள், உடனே பெண்ணின் குட்டி தான் இயேசு என அடித்துவிட்டனர்.

அப்படி பார்த்தால் இயேசு மரியாவின் குட்டி.

ஆனா பிரச்சின ஏவாளுக்கும் பாம்புக்கும் என்பதையே மறந்து மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஏவாளின் குட்டிக்கு தான் பிரச்சினை.. ஆனா சம்பந்தமே இல்லாமல் மரியாளின் குட்டியை இங்கே செருகியிருக்கிறார்கள்.

அப்படிபார்த்தால், பாம்புக்கும் மரியாளுக்கும் தான் பகையை ஏற்படுத்தியிருக்கிறார் கர்த்தர்னு தான் வரும்.

இப்படி போதிய ஞானம் இன்றி பழைய கதைகளை இயேசுவை குறிப்பது அவரை குறிப்பது இவரை குறிப்பது என புதிய ஏற்பாட்டில் நிறைய காணலாம்.


ஆனால் நம் கிறிஸ்தவர்களோ, ஆதி அப்போஸ்தலர்கள் வேதத்தை தாய் மொழியில் படித்து ஆவிதூண்டி புதிய ஏற்பாட்டை எழுதினர் என்பார்கள்.

இவ்வாதத்தை புதிய ஏற்பாட்டையும் பழைய ஏற்பாட்டையும் ஒப்பிட்டு படிக்காத மக்களாலேயே கூற முடியும்.





இப்படி தப்பு தப்பாக பழைய ஏற்பாட்டை சொருகி தான் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதி உள்ளது.


அந்த வகையில் எபிரேய புத்தக ஆசிரியர்,




13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு,
எபிரேயர் 6:13


என்கிறார்.


அதாவது அவர் பழைய ஏற்பாட்டை அறைகுறையாக படித்துவிட்டு கருத்து கூறும்போது,

ஆப்ரகாமிடம் ஆணையிடும்போது, கர்த்தரைவிட பெரிய ஆள் யாரும் இருக்கவில்லை.


அதனால் தன்மேல் ஆணையிட்டார் என்கிறார் ஆசிரியர்.




இவர் பழைய ஏற்பாட்டை படித்திருந்தால் இவ்வாதத்தை வச்சிருக்கவே மாட்டார்.

இவர்கள் Septuagint என்ற கிரேக்க பழைய ஏற்பாட்டிலிருந்து தான் வசனங்களை மேற்கோள் காட்டுவார்கள். எபிரேய பைபிளுக்கு சம்பந்தமே இருக்காது.



கிரேக்க பிரதிகளை படித்துவிட்டு ஆசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.


எபிரேயத்தில் படித்திருந்தால், இவரது குட்டு அவருக்கே புரிந்திருக்கும்.



ஏனெனில் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டுள்ளார்.


🤣🤣🤣


"அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையில் ஆணையிட்டார்"
(ஆமோஸ் 8:7)



இதன்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆளாக இருப்பார் போல என்ற முடிவுக்கு தான் எபிரேய புத்தகத்தின் ஆசிரியர் வரவேண்டி இருக்கும்.




உடனே நம்ம விஞ்ஞானிகள், அங்கே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தரே தான் என்று போலியாக சமாளிக்க பார்ப்பார்கள்.

ஆனால் உண்மையில் அதற்கு செறுப்படியை பைபிளே கொடுத்துவிடும்.




"நான் யாக்கோபின் மேன்மை/மகிமையை வெறுத்து, அவனுடைய அரமனைகளை பகைக்கிறேன். நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புகொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்"
(ஆமோஸ் 6:8)


இதன்படி கர்த்தர் தன்னையையே வெறுக்கிறாரா?? இவர்கள் வாதப்படி கர்த்தர் தன்னை தானே வெறுத்துக்கொள்கிறார் என்ற காமடி தான் வரும்.


எபிரேய பைபிளில் ஆமோஸ் 6:8, 8:7 ஆகியவற்றில் பாவிக்கப்பட்ட "யாக்கோபின் மகிமை/மேன்மை" என்பதற்கு ஒரே வார்த்தைப்பிரயோகமே உள்ளது.


இதன்படி பார்த்தால், கர்த்தர் தன்னை தானே வெறுக்கிறார் என்று வரும்.


யாக்கோபின் மகிமை/மேன்மை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாகவே புரிந்துவிடும்.

யாக்கோபின் மேன்மை என்பது யாக்கோபின் பண்பு ஆகும்.

யாக்கோபின் பண்பாகிய மகிமை கர்த்தரைவிட பெரிய ஆள் போல..

இதற்கு காரணம் பழைய ஏற்பாட்டில் அறிவின்றி கருத்துச்சொல்ல வந்த எபிரேய புத்தகத்தின. ஆசிரியரே ஆவார்.



இதனோடு இன்னும்ஙசில வசனங்களும் உள்ளன.



"வெறுமையாக்குகறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளை கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையை திரும்பி வரப்பண்ணுவதுபோல்,  இஸ்ரேலின் மகிமையையும் திரும்பி வரப்பண்ணுவார்."
(நாகூம் 2:2)

இழந்த யாக்கோபின் மகிமை திரும்பி வரப்பண்ணுவது போல இஸ்ரேலின் மகிமையையும் வரபண்ணுவதாக சொல்லுது.

பார்த்தவுடனே புரிந்துவுடும், யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல... மாறாக யாக்கோபின் உயர்வு பண்பு என்று.



அதேபோல ,

"நம் உரிமைச்சொத்தை அவர் நமக்கு தேர்ந்து அளித்தார். அது அவர் அன்புகூறும் யாக்கோபின் மகிமை/பெருமை ஆகும் (சேலா)"
சங்கீதம் 47:4


இவற்றின் படி பார்த்தாலே யாக்கோபின் மகிமை என்பது கர்த்தர் அல்ல என தெளிவாக புரிந்துவிடிம்




பழைய ஏற்பாட்டில் போதிய ஞானமற்ற ஆசிரியர்களே புதிய ஏற்பாட்டை எழுதியதால் தான் இப்படி எழுதியுள்ளார்..

அவருடைய கூற்றுப்படி பார்த்தால், யாக்கோபு கர்த்தரைவிட பெரிய ஆள் என்று தான் முடிவெடுக்க வேண்டவரும்.


ஆப்ரகாமின் பேரனே யாக்கோபு... ஆப்ரகாம் காலத்தில் கர்த்தரைவிட பெரிய ஆள் இல்லாதிருந்திருக்கும். யாக்கோபின் காலத்தில் கர்த்தரைவிட யாக்கோபு பெரியவர் என்பதால் கர்த்தர் யாக்கோபின் மகிமையில் ஆணையிட்டார் என்று முடிவு எடுக்கவேண்டி வரும்.



(கர்த்தரோட சண்டையில் ஜெயிச்சதால் இந்த நிலை வந்திருக்கலாமோ தெரியல. ஆதி 32:24-30)


சிலர் சம்பந்தமே இன்றி உபாகமம் 32:29 ஐ ஆதாரம் காட்டி இதை திசைதிருப்ப பார்ப்பார்கள்.

அவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானம் இல்லாததே இவ்வாதத்தை வைக்க காரணம்.




ஏனெனில் அதில் கர்த்தரை யாக்கோபின் பட்டயம் (வெட்டுக்கத்தி) என்று தான் சொல்கிறது.


ஆமோஸ் 8:7 "யாக்கோபின் கத்தியின்மேல் ஆணையிடுகிறேன" என்று வந்திருந்தால் இவ்வாதம் நியாயம்.


ஆனால் அப்படி இல்லை.... இவர்களுக்கும் பழைய ஏற்பாட்டில் ஞானமில்லை... இவர்களது அப்போஸ்தலர்களுகும் ஞானமில்லை.


ஆனால் கதைமட்டும் எழுதுவர், யூதருக்கே டஃப் கொடுத்தார் இயேசு  யூதருக்கே டஃப் கொடுத்தார் பவுல் என்று..

ஆனால் கதைகளை படித்தால் காப்பியாகவே உள்ளது இயேசுவின் சில உபதேசங்களை தவிர

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்