இடுகைகள்

ஒரே இரவில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே இரவில் நபிகளார் தம் அனைத்து மனைவியரிடமும் சென்றதும் கர்த்தரின் செயலும்

 - ஒரே இரவில் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்களா? நபி(ஸல்) இரவில் அல்லது பகலில் தம் மனைவிகளிடம் வருபவர்களாக இருந்தார்கள். அப்போது 11 பேர் இருந்தனர் என அனஸ் (ர) கூறினார்கள் . அப்போது அதற்கு நபிகளார் சக்திபெருவார்களா? என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேருடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என நாம் பேசிக்கொள்வோம் என்றார்கள் -புகாரி 268 நபிகளாரிடம் 11 பெண்கள் இருந்த காலம் ஹிஜ்ரி 8-10 காலத்திலாகும். மாரியா ,ரைஹானா எனும் இரு வலக்கரம் சொந்தமானவர்களும் 9 மனைவியருமாக இருந்தனர். இது வழமையாக நடந்த ஒன்று அல்ல. மாறாக ஒரு நாள் நடந்ததொன்றே என அனஸ் (ர) அவர்களின் வேறொரு அறிவிப்பு கூறுகிறது: ஒரு நாள் நபிகளார் அனைத்து மனைவியரிடமும் ஒரே குளிப்பில் சென்று வந்தார்கள் என அனஸ்(ர) கூறினார்கள் (அபூதாவூத் 218) இது எப்போது நடந்தது என்றால் நபிகளார் இறுதி ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவதற்கு முந்திய இரவு நிகழ்ந்தது என்பதை அன்னை ஆயிஷா (ர) கூறுகிறார்கள் : " நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப்பொருட்களை பூசுவேன். அவர்கள் தம் மனைவியரிடம் சென்றுவிட்டு காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்...