யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல பகுதி 1

 யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல?

¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯ ¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯¯





யோவான் சுவிசேஷம் மற்ற மூன்று சுவிசேஷங்களைவிட வித்தியாசமானது.


இது இயேசுவை பற்றி கூறும் கருத்து என்னவென்றால், இயேசு பூமியில் பிறக்க முன்பே வார்த்தையாக அவர் தேவனிடம் இருந்தார். அந்த வார்த்தை மூலமே சகலதையும் தேவன் படைத்தார். அந்த வார்த்தை மனிதனாக மாறியது. ஆனாலும் ஒரே மெய்யான தேவன் பிதா மட்டும் தான். அந்த பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும். அந்த பிதா தான் இயேசுவை (வார்த்தையை) பூமிக்கு அனுப்பினார். அந்த வார்த்தை முன்பே ஒரு நபராக இருந்தது. ஆனாலும் ஒரே மெய்யான தேவனாக அவர் இருக்கவில்லை . மெய்யான தேவன் இவருக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு ஓரமாய் இருக்கிறார் என்பதே சுருக்கம்!


(யோவானுடைய கருத்து தவறானது என்றும் இடையிடையே இதில் பதிகிறேன்.)




1.ஆதியிலே வார்த்தை இருந்ததாம். அது தேவனாயிருந்ததாம். அவர் மூலமே சகலதும் உண்டானதாம்.




¹ "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது."

² அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

³ சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. (யோவான் 1:1-3)




மை கமெண்ட்: 


இது யோவானின் அறிவீனம் ஆகும்.

வார்த்தை என்பது முதலில் ஒரு நபரே கிடையாது. அது "ஆகக்கடவது" என தேவன் மொழிந்த கட்டளை ஆகும். அதன் மூலமே சகலதும் உண்டாக்கப்பட்டது.




³ தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.


⁶ "பின்பு தேவன்; ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்டவது என்றும் சொன்னார்."


⁹ "பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."


¹¹ "அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."


¹⁴ "பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்."

¹⁵ அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.


²⁰ "பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்."


²⁴ "பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று."

(ஆதியாகமம் 1:3,6,9,11,14,15,20,24)

இதை சுருக்கமாக சங்கீத புத்தகத்தில் இவ்வாறு காணலாம்:



⁸ பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

⁹ "அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்."(சங்கீதம் 33:8-9)



“அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.”

  — சங்கீதம் 148:5




அதாவது தேவன் ஒவ்வொரு விசயத்தையும் தனித்தனியாக கட்டளையிட அவைகள் உண்டாக்கப்பட்டன.


ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாகவே கட்டளையிட்டு படைத்திருக்கிறார்

இந்த கட்டளைகளை வார்த்தை என்றும் சொல்லலாம். ஆனால் அது நபர் அல்ல!


 இறைவன் இட்ட கட்டளை ஆகும்.



இயேசுவை குறித்து வார்த்தை மாம்சமானார் என்கிறார். (1:14). 



இதில் இயேசு மாம்சமாக முன்பு, இயேசு என்ற பொருளே இருக்கவில்லை என தெளிவாகிறது.



இவர் கூறுவது போல தேவன் ஒட்டுமொத்த வார்த்தையும் மாம்சமாகவில்லை!! மாறாக அதில் ஒரு வார்த்தையே மாம்சமானது.



அடுத்து, அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார் என்கிறார் யோவான். (1:2).



இந்த வார்த்தை தேவனோடு இருந்ததாம்..


 இது உண்மை தான்.. இங்கே தெளிவாக இந்த வார்த்தை தேவனோடிருந்தது என கூறி, தேவன் என்பவர் ஏற்கனவே உள்ளார் என தெளிவாக கூறுகிறார்.



அந்த தேவன் யார் என இயேசு கூறியதாக இவர் எழுதியது என்னவென்றால்,



பிதா ஒருவரே மெய்யான தேவன் என்று -யோவான் 17:3



இங்கே வார்த்தை தேவனாயிருந்தது என்பது இந்த ஒரே மெய்யான தேவன் என்பதல்ல! அந்த உண்மையான தேவனோடு அது இருந்தது என்று சொல்கிறார்.



ஏனெனில் தேவனுடைய வார்த்தைகளை பெற்றுக்கொண்டவர்களையே தேவர்கள் என சொல்லியிருக்கிறீர்கள் (யோவான் 10:35), இந்த வார்த்தையை தேவன் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லையே!



ஆகவே, இதன்படி, ஒரே மெய்யான தேவன் பிதா மட்டுமே.. (யோவான் 17:3), அவர் இடும் கட்டளைகளும் தெய்வீகமானவை.. ஆனால் அது தனியான வேறொரு நபரோ தேவனோ அல்ல! அந்த வார்த்தையை இயேசுவுடன் கன்ஃபீஸாகி 

எழுதியுள்ளார்.

----------------------------




2.மேலும் தேவனுடைய வார்த்தையில் ஜீவனுண்டு. அவை வெளிச்சமானவை!

இயேசுவை தேவனின் ஒட்டுமொத்த வார்த்தையாக நினைத்து இயேசுவுக்குள் ஜீவனிருந்தது. மெய்யான ஒளி என்றெல்லாம் கதை விடுகிறார் யோவான்



⁴ "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது."

⁵ அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

⁶ "தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்."

⁷ அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.

⁸ "அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்."

⁹ உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

(யோவான் 1:4-9)



“"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது."”

  — Psalms 119:105 (TBSI)“


"உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்."”

  — Psalms 119:130 (TBSI)



இதே யோவான் தேவனது கட்டளை நித்தியஜீவனாயிருக்கிறது என இயேசு சொன்னதாக யோவான் 12:50 கூறுகிறது.

தேவனது வார்த்தையில் ஒளியும் நித்தியஜீவனும் இருப்பதால், இயேசுவை தேவனது மொத்த வார்த்தை என கருதி இவ்வாறு எழுதியுள்ளார்.


------------------




3.இயேசு பூமியில் இருந்ததை குறித்து, அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாகிற்று என்கிறார்.



¹⁰ "அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை."

¹¹ "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை."

(யோவான் 1:10-11)



ஆனால் தேவன் கட்டளை மூலமே சகலமும் படைக்கப்பட்டது. இயேசுவும் தேவனுடைய வார்த்தையால் மாம்சமாகி பிறந்ததால், இயேசுவே அந்த வார்த்தை என்று கருதி, இயேசு மூலமே சகலதும் உண்டானதாகத் திரும்பவும் சொல்கிறார்.



ஆனால் இயேசுவோ, தேவன் தான் உலகத்தை படைத்தார் என்றார்.மாற்கு 13:19. 



தேவன் ஒருவரே.. அவரை தவிர வேறொரு தேவன் இல்லை வேதபாரகன் ஏகத்துவத்தை கூறியபோது இயேசு அதை சரிகண்டார். மாற்கு 12:32-34



இயேசு அந்த ஒரே தேவன் பிதா தான் என்கிறார்-யோவான் 17:3


இங்கே யோவான் தன் ஞானத்தை காட்ட முற்பட்டு தவறாக சித்தரிக்கிறார். அதாவது வார்த்தையை (ஆக கடவது) என்ற கட்டளையை இயேசு என கூறி அதற்கு தனி கதையே கட்டிவிட்டார்.


-------------------



4.இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களை தேவனுடைய பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தாராம்! அவர்களெல்லாம் தேவனால் பிறந்தவர்களாம்



¹² "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்."

¹³ "அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்."

(யோவான் 1:12-13)




இயேசு தேவனை பிதா என்று அழைத்ததாகவும் மற்றோருக்கும் அவர் பிதா என சொன்னதாலும் , இயேசு அவர்களை தேவனுக்கு பிள்ளையாக அதிகாரம் கொடுத்ததாக நினைத்து விட்டார் ஆசிரியர்.




பழைய ஏற்பாட்டில் மக்களை இரண்டு விதமாக அழைக்கப்பட்டுள்ளது.



1.தேவனுடைய பிள்ளை/குமாரன். (உபாகமம் 14:1)


"நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்." உபா 14:1


தேவனுக்கு சித்தமில்லாததை செய்தால், அவர்களின் பிள்ளைகள் அல்லவாம்!


"அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல.-உபாகமம் 32:5


2.தேவனுடைய ஒய்ஃப் (மனைவி). 



ஜெரேமியா 3 (TBSI)

¯¯¯¯¯¯¯¯¯

⁸ "சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்."

⁹ பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம்பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.

¹⁰ "இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்."

¹¹ பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.


“"உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள்."”

  — Hosea 2:2 (TBSI)


இவையெல்லாம் உவமைகள்.. இதே போல தான் இயேசு தேவனை அழைத்ததும்.. அழைக்க கற்றுக்கொடுத்ததும்.

இதனால் இவர்கள் தேவனது தத்து பிள்ளைகள் அல்ல! (புதிய ஏற்பாடு தத்துப்பிள்ளையாக தான் சித்தரிக்கிறது)

----------------




5.அந்த வார்த்தை மாம்சமானதாம்! அதாவது மனிதனானதாம்!





¹⁴ "அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது."(யோவான் 1:14)




வார்த்தை என்பது நபரல்ல.. வார்த்தை மாம்சமாக முன்பு, இயேசு என்ற ஒன்றே இருக்கவில்லை!! 

அடுத்து தேவனது வார்த்தை என்பது அவர் பேசிய கட்டளை.. அது எப்படி தேவனுக்கு பிள்ளை ஆகும்?? அதுவும் ஒரே பிள்ளையாக ஆகும்??

தேவனது ஒரு வார்த்தை மூலம் மரியாள் கர்ப்பமானதால், வார்த்தை தான் மனிதனாக பிறந்தது என நினைத்துவிட்டார்கள்!

இறைவன் இட்ட கட்டளை பிள்ளையாக வில்லை! அந்த கட்டளை மூலமே பிள்ளை உண்டானது! பிறந்தவர் கடவுளல்ல!




----------





6.யோவான் இயேசுவுக்கு முன்பே வந்தாலும், இயேசு அவருக்கு முன்பே இருந்தாராம்!




¹⁵ "யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்."

(யோவான் 1:15)


வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு இருக்கவே இல்லையே! பிறகு எப்படி யோவானுக்கு முன்பே அவர் இருந்திருப்பார்??



தேவனது சித்தத்தில் வேண்டுமானால் இருந்திருக்கலாம்.. ஆனால் நிஜத்தில் இருக்கவில்லை!! காரணம் யோவானுக்கு பின்பே இயேசு பிறந்தார்



 அதாவது இந்த சுவிசேஷ நம்பிக்கை பிரகாரம், அதன் பின்னர் தான் வார்த்தை மாம்சமானது!!

வார்த்தை மாம்சமாக முன்பு.. இயேசு இருக்கவில்லை! வார்த்தையே இருந்தது! வார்த்தை என்பது தேவனது கட்டளை.. அது நபர் அல்ல!!

----





7.தேவனை ஒருவரும் கண்டதில்லையாம்! பிதாவின் மடியிலிருக்கிற குமாரன் தான் அவரை (தேவனை) வெளிப்படுத்தினாராம்!




¹⁸ "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்."

(யோவான் 1:18)




இயேசுவை தேவன் தன் மடியில் வைத்து கொஞ்சிக்கொண்டிருந்தாரா?? இயேசு குழந்தையாக பிறந்ததால், தேவனிடத்தில் இயேசு குழந்தையாக மடியில் உக்கார்ந்து கொண்டிருந்தார் என நினைத்திருக்கிறார் இதன் ஆசிரியர்.. 


முதலில் வார்த்தை மாம்சமாக முன்பு இயேசுவே இருக்கவில்லையே.. தன் கட்டளையை மடியில் வைத்து விளையாடினாரா?? 


இது இவர்களது அறிவீனத்தை வெளிப்படுத்துகிறது!!


பெரிய பையனை யாராவது மடியில் வைத்து விளையாடுவார்களா என்ன??

-------------------&





8.யோவான் தன்னை எலியா அல்ல என்றாராம்..


²¹ அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். (யோவான் 1:21)



ஆனால் இயேசுவோ, இந்த யோவான் தான் எலியா என தவறாக கூறிவிட்டார் போலும்.. மூன்று சுவிசேஷங்களும் அவரை எலியா என்கின்றன.. (மத்தேயு 11:14)


இவர் எலியா அல்ல என தெரியாமல், இயேசு இவரை எலியா என்று, இயேசு இவரை பற்றி அறிந்திருக்கவில்லை எனக் காட்டுகிறது.

-------------



9.யோவான் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுபவராம்!



²² "அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படி, உம்மைக்குறித்து என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள்."


²³ "அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்."

(யோவான் 1:22-23)


இதிலுள்ள கர்த்தர் என்பது இயேசுவை குறிக்கும் என வாதிட்டாலும், இதே போல ஏசாயா தீர்க்கதரிசி யாவே என அழைக்கப்படிருக்கிறார்.-ஏசாயா 7:10



தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவே என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதி 18 & 19 32:25-30


தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் வருவார்கள்.


தாவீது ராஜா “நான் கர்த்தரின் (யாவேயின்) நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் ” என சொன்னார்- 1 சாமுவேல் 17:45




தீர்க்கதரிசி காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான்- 1 நாளாகமம் 21:19


இவ்வாறே இயேசுவும் தீர்க்கதரிசி என்பதால் , கர்த்தரின் நாமத்தில் வருவதால் அவ்வாறு கூறப்படுகிறது.


இயேசு சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.


மாறாக தேவன் தான் இயேசு மூலமாக அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22



 -------------------------




10.இயேசு யோவானுக்கு பின் இயேசு வந்தாலும் , இயேசு யோவானைவிட மிக மிக மேன்மையானவர் என யோவான் சொன்னாராம்.



²⁷ அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். (யோவான் 1:27)


ஆனால் இயேசுவோ, ஸ்திரீயிடம் பிறந்தவர்களில் யோவானைவிட பெரியவன் எவரும் எழும்பவில்லை என்கிறார்-மத்தேயு 11:11



இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர்.... அப்படிப்பார்த்தால் இயேசுவின் வார்த்தைப் படி யோவான் மிக சிறந்தவர்.. 


யோவானின் வார்த்தைப் படி இயேசுவே மிக சிறந்தவர்.. 

சரி இருந்துட்டு போகட்டும்!

-------


..

11.யோவான் இயேசுவை பார்த்து தேவ ஆட்டுக்குட்டி என்றானாம்.. 


அதாவது தேவனுடைய ஆட்டுக்குட்டி என்றானாம். (Lamb of God.. not God lamb)


²⁹ "மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி." (யோவான் 1:29 & 36)


தேவனுடைய ஆடு எப்படி அதே தேவனாக ஆகும்??

ஆக இயேசு தேவனாக ஆக இயலாது!

பாவத்தை சுமக்க தேவனுடைய ஆடு தான் சரி என்றால், தேவன் ஒரு ஒழுங்கான ஆட்டையே இயேசுவோடு அனுப்பியிருக்கலாமே!! ஏன் மனிதனை பலி கொடுத்து, அந்த மனிதனை ஆடு என பெயரிடுவதற்கு பதிலாக,


ஆட்டை பலிகொடுத்து, அதை மனிதன் என்றோ தேவன் என்றோ பெயரிட்டிருக்கலாம்!!

----------



12.இயேசு யோவானுக்கு முன்பே இருந்தாராம்.



³⁰ "எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடி என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர்தான்."



திரும்பவும் வார்த்தையை இயேசுவோடு கன்ஃபீஸாக்கி, அதை யோவான் சொன்னதாக இந்த யோவான் எழுதியுள்ளார்..


வார்த்தை மாம்சமாக முன்பு இயேசு இருக்கவே இல்லையே!! இல்லாத இயேசு எப்படி முன்பே இருந்திருப்பார்??


வேண்டுமானால் தேவனுடைய சித்தத்தில் இருந்திருக்கலாம்!!

----------




13.பரிசுத்த ஆவியை இயேசு உடையவரல்ல!! மாறாக அவர் வளர்ந்த பின்பு தான் பரிசுத்த ஆவியானவர் அவர் மேல் இறங்கினார்.



³² "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."


³³ "நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்."

(யோவான் 1:32-33)


----



14.இயேசு தேவனுடைய குமாரன் என யோவான் சாட்சி கொடுத்தாராம்!


³⁴ "அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்." (யோவான் 1:34)


தேவனுடைய குமாரன் ஒன்றும் தேவனல்ல!! 


மாறாக பிதா மட்டுமே ஒரே மெய்யான தேவன்- என இயேசு சொன்னதாக யோவான் சொல்கிறார்.17:3



தேவனுடைய குமாரன் என பலரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்..



இஸ்ரேலை என் குமாரன் என தேவன் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது-யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2.. 


இதே போல பழைய ஏற்பாட்டில் நிறையவே காணலாம்!.


இயேசு குழந்தையாக பிறந்தார் என்பதால், தேவனிடம் அவர் ஒரு குழந்தையாக மடியில் இருந்தார் என இவர் நம்பியே இதை யோவான் ஸ்நானனின் வாயில் போட்டு இட்டுக்கட்டி யுள்ளார்..  


ஆனால் இயேசு பிறக்க முன் அவர் இருக்கவில்லை!!

மேலும் இயேசு தன்னை தேவகுமாரன் என சொன்னதாக வருவதில் கூட,


பிதா அவரை அனுப்பியதாலும் பரிசுத்தம் பண்ணியதாலும் தான் என்கிறார்.. யோவான் 10:34-36


மற்றபடி இந்த நூல் சொல்வது போல் இயேசு சொல்லவில்லை!


---------



15.இயேசுவை பார்த்த சீடன் அந்திரேயா, இயேசுவை தேவன் என்றோ தேவனது அவதாரம் என்றோ கூறவில்லை! மாறாக மெசியா என்றே சொன்னார்


⁴¹ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

(யோவான் 1:41)


இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36


-----------------


16.இயேசு சீமோனை அவன் வர முன்பே அறிந்திருந்தாராம்.


⁴² "பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்." யோவான் 1:42


இவ்வாறு தீர்க்கதரிசிகள் அறிந்திருப்பர் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.. லூக்கா 7:39.


இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்”-லூக்கா 7:39

----




17.பிலிப்பு என்ற சீடனோ, இயேசுவை யோசேப்பின் குமாரன் என்றானாம்


⁴⁵ பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். யோவான் 1:45



இதன்படி பார்த்தால், அக்கால மக்கள் இயேசுவை யோசேப்புக்கு பிறந்தவர் என தான் நம்பியுள்ளார்கள் என்பது போல சித்தரிக்கப்படுகிறது.

அப்படி இருப்பின், கன்னிப் பிறப்பு மரியாளுக்கும் யோசேப்புக்கும் மட்டுமான அடையாளமோ??

ஆனால் மத்தேயு கூறும் இம்மானுவேல் தீர்க்கதரிசனமோ , மக்களுக்கு கொடுக்கப்படும் அடையாளம்... இங்கே மக்கள் அறிந்திருக்கவே இல்லையே..


அடுத்து, யோசேப்பின் குமாரன் எப்படி தேவனாவார்??

--------



18.நாத்தான்வேலையும் இயேசு அறிந்திருந்தாராம்.. 



⁴⁷ "இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்."

⁴⁸ "அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்."

(யோவான் 1: 47-48)



தீர்க்கதரிசிகள் இப்படி அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.. லூக்கா 7:39 (குறிப்பு 16)


----




19.நாத்தான்வேலும் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றாராம்



⁴⁹ "அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்." (யோவான் 1:49)



இதற்கு குறிப்பு 14 இல் கூறப்பட்டுவிட்டது.

ஆனால் நாத்தான்வேல் சொன்னதுபோல் அவர் ராஜாவாக ஆகவில்லை.. 


இனி ஆகுவார் என பார்த்தால் கூட, அது இஸ்ரேலின் ராஜாவாக தான் ஆகுவார்..

----




20.வானம் திறந்து தேவதூதர்கள் இயேசுவிடம் ஏறுவதை யும் இறங்குவதையும் அதுமுதல் காண்பார்கள் என்றாராம் இயேசு..



⁵⁰ இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.



⁵¹ "பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் .என்றார். " (யோவான் 1:51-52)



ஆனால் கடைசிவரை யாரும் கண்டதாக இல்லை!! ஒருவேளை நிறைவேறாத தீர்க்கதரிசனமோ?


மேலும் இங்கே தன்னை மனுஷ குமாரன் என கூறி, தேவனல்ல.. மனிதனுக்கு பிறந்தவனே என நிரூபித்தார்.

---------------------------




21.இயேசு முதலாவதாக செய்த அற்புதம் தண்ணீரை ஒய்னாக மாற்றியது.



¹¹ "இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்."


இதன் மூலம் இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தினாராம்!


ஆனால் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்.-அப்போஸ்தலர் 2:22


இயேசு கூட, தான் சுயமாக எதுவும் செய்வதில்லை என கூறியுள்ளார்-யோவான் 5:30


---


22.இயேசுவுக்கு தாயும் சகோதரர்களும் உண்டு.


¹² "அதன் பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்."

(யோவான் 2:12) 


ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை இறைவனது படைப்பு மட்டுமே!!

----

 


23.இயேசு ஆலயத்தை இடியுங்கள்.. மூன்று நாளையில் எழுப்புவேன் என்றாராம். அது அவரது உடலை தான் குறிக்குமாம்!



¹⁸ "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்."


¹⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.


²⁰ "அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள்."


²¹ அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார்.


²² "அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்." (யோவான் 2:18-22)



ஆனால் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதே தேவன் தான் என்று சீடர்கள் சொன்னதாக எழுதியுள்ளார்கள்.அப்போஸ்தலர் 2:24.


இங்கே இவர் தான் தன் ஆலயமான உடலை இடித்துப் போடுங்கள் என சொன்னதாக எழுதிவிட்டு,

அந்த ஆலயத்தை இடிக்க முற்படுவோரை சாத்தானின் பிள்ளைகள் என்கிறார்.-யோவான் 8:40-44



பிறகு அந்த ஆலயமான உடலை இடிக்க ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவம் உண்டு என்கிறார்-யோவான் 19:11


இறைவன் சொன்னதையே மறந்துவிட்டு இப்படி பேசுவாரா??


குறிப்பாக யோவான் 8:40 இல் தன்னைக் குறித்து, தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனிதன் என்கிறார்... சோ கடவுளல்ல!


----


24.இயேசு செய்த அற்புதங்களை பார்த்து மக்கள் அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்களாம்.. ஆனாலும் அவர்களை பற்றி இயேசுவுக்கு தெரிந்திருந்தால், யாரையும் அவர் நம்பி இறங்கவில்லையாம்


²³ "பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்."


²⁴ "அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை."

²⁵ "மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை. " (யோவான் 2:23-25)


-முதலில் இயேசு சுயமாக எதுவும் செய்யவில்லை-யோவான் 5:30


இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22


-அடுத்து, மனுஷருடைய உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தாராம்.

தீர்க்கதரிசிகள் இவ்வாறு அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.


சமாரியப்பெண்ணுக்கு கணவன் இருந்த கதையை இயேசு சரியாக சொன்னபோது, அவளும் அவரை தீர்க்கதரிசி என்றே சொன்னாள். யோவான் 4:17-19

சோ இது தீர்க்கதரிசி என்பதற்கு ஆதாரமாக உள்ளது..

--------


.


25.இயேசுவை தவிர வேறு யாரும் பரலோகத்துக்கு ஏறினதில்லைனு இயேசு சொன்னாராம்!


¹³ பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.(யோவான் 3:13)


ஆனால் எலியா வானத்துக்கு ஏறிப்போனதாக 2 இராஜாக்கள் 2:10-11 சொல்கிறது.


இதே எலியா இயேசுவை சந்திக்க மோசேயுடன் இறங்கி வந்ததாக லூக்கா குறிப்பிடுகிறார்- லூக்கா 9:30


இதை இயேசு அறியாமல் சொல்லிவிட்டாரா?? 


இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்த வார்த்தை என்று நம்பியதாலும், வார்த்தை குழந்தையாக தேவனிடம் இருந்ததாக நம்பியதாலும் இயேசு பெயரில் இவ்வாறு எழுதியுள்ளார்.


ஆனால் ஒரே மெய்யான தேவனாக பிதாவே உள்ளதாக இயேசு சொன்னதாகவும் எழுதியுள்ளார்-17:3

--------




26.தேவனுக்கு ஒரே பேறான குமாரனாம் இயேசு


 ¹⁶ "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்."(யோவான் 3:16)


ஆனால் பழைய ஏற்பாட்டில் நிறைய தேவகுமாரர்கள் உள்ளனர்.


உதாரணமாக இஸ்ரேலை தன் குமாரன் என சொன்னதாக யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2



இயேசு தன்னை தேவனது ஒரே குமாரன் என சொல்லாமல்,, தேவனால் அனுப்பப்பட்டதாலும், பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே தன்னை தேவகுமாரன் என சொன்னதாக இதே யோவானே எழுதுகிறார்.யோவான் 10:34-36



இயேசேவை ஒரேபேறான குமாரன் என இவர்கள் கருத காரணம், இயேசு குழந்தையாக பிறக்க முன்பு, தேவனது மடியில் குமாரனாக குழந்தையாக இருந்தார் என நம்பியதால் ஆகும்.


மேலும் பழைய ஏற்பாட்டில் தேவகுமாரன் என வருவதெல்லாம் இயேசுவை குறிக்கும் என நம்பியதாலும் ஆகும்.



உதாரணமாக , தாவீதை குமாரன் என்றும், இன்று உம்மை ஜனிப்பித்தேன் என்றும் சங்கீதம் 2;7 கூறுவதை இயேசுவை குறிப்பதாகவும், சொலமோனை அவன் எனக்கு குமாரனாக இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன் என சொன்னதாக 2 சாமுவேல் 7:14-16 இல் கூறப்பட்டதை இயேசுவையே குறிப்பதாக எபிரேயர் 1 இல் எழுதப்பட்டுள்ளது.


இப்படி எல்லாத்தையும் தப்பு தப்பாகவே புரிந்ததால் இவ்வாறு எழுதியிருக்கிறார் யோவான்!

--------



27.இயேசு பரலோகத்தில் இருந்து வந்ததாக யோவான் சொன்னதாக இவர் சொல்கிறார்


.

³¹ "உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாய் இருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்." (யோவான் 3:31)


ஆனால், இயேசு மரியாள் பெற்றெடுத்தே உலகத்துக்கு வந்தார்.

இயேசு பிறக்க முன் அவர் இருக்கவில்லை!


வார்த்தை என்பது நபராக இருக்கவில்லை!


ஆனால் இவர்களோ வார்த்தை என்பது கடவுள் மடியில் இருந்த குழந்தை என நம்பியதால் , இவ்வாறு எழுதியுள்ளனர்!!

----




28.இயேசு தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுபவர்



³² தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்கிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளவில்லை.


³³ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.

(யோவான் 3:32-33


அதாவது இவர் தேவன் அல்ல!

தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனுசன்- யோவான் 8:40

-------------




29.இயேசு தேவனுடைய ஆவி கொடுக்கப்பட்டவர்

மேலும் குமாரனில் அவர் அன்பாக இருந்து எல்லாத்தையும் ஒப்புக்கொடுத்தாராம்!



³⁴ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.


³⁵ பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 3:34-35)


இயேசு தேவனால் ஆவி கொடுக்க பட்டவர்.. கொடுக்க பட்டவர் தேவனல்ல!!


! கொடுத்தவரே தேவன்..

அவருக்கு சகலத்தையும் ஒப்புக்கொடுத்தாராம்!! ஒப்புக்கொடுக்கப்பட்டவர் கடவுளல்ல!



பைபிள் படி சாத்தானும் பூமியின் ராஜ்ஜியங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டான் என லூக்கா 4:6 கூறுகிறது.!

அடுத்து குமாரன் பற்றி பலதடவை சொல்லி போரடிக்கிறது.

--------------




30.சமாரிய பெண்ணுக்கு கணவன் இல்லை என்பதை விளக்கமாக இயேசு சொன்னபோது, அவள் கூட அவரை தீர்க்கதரிசி என்றே சொன்னாள்.. தேவன் என்று அல்ல!


.

¹⁶ "இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார்."

¹⁷ அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான்.

¹⁸ "எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்."


¹⁹ "அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்."

(யோவான் 4:16-19)


தீர்க்கதரிசிகள் இவ்வாறு அறிவுகொடுக்கப்படுவர் என்பதே அவர்களின் நம்பிக்கை;!!


-------



31. தொழவேண்டியது பிதாவை தான்.. உண்மையாய் தொழுது கொள்வோர் பிதாவையே தொழுது கொள்வார்களாம்!

 


²¹ "அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது."


²² நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.


²³ "உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்."


²⁴ "தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்."

(யோவான் 4:21-24)


ஏனெனில் பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3..

--------



32.இயேசு மெசியா மட்டுமே.. தேவன் அல்ல!


²⁵ "அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள்."


²⁶ அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். (யோவான் 4:25-26)

------




33.இயேசு தேவனால் அனுப்பப்பட்டார்.. அவருடைய சித்தப்படி செய்து அவருடைய கிரியை முடிப்பதே இயேசுவின் போஜனம்!!



³⁴ இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)


அனுப்பப்பட்ட இயேசு கடவுளல்ல!!!; அனுப்பியவரே கடவுள்..

அதாவது பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----

----



 34.இயேசு தன்னை தீர்க்கதரிசி என்று அவரே சொல்கிறார்.


⁴³ "இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார்."


⁴⁴ ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். (யோவான் 4:43-44)



 -------

35. சாகப்போன பிள்ளையை இயேசு காப்பாற்றினாராம்.. இதுவே இயேசு செய்த இரண்டாம் அற்புதமாம். (யோவான் 4:47-54)


இயேசு சுயமாக ஒன்றும் செய்யவில்லை-யோவான் 5:30

இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

-------



36.தேவதூதன் குளத்தை கலக்கும்போது அதில் முதலாவது இறங்குபவனுக்கு எந்த வியாதி இருந்தாலும் குணமாகுமாம்! (யோவான் 5:3-4)


இயேசு செய்த அற்புதத்தை விட பயங்கரமாக இருக்கே!!

---


37.இயேசு நோயாளியை எழுந்து நட என்றாராம்.. அவன் சுகமாகிவிட்டாராம்.(



⁸ "இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்."


⁹ "உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது." (யோவான் 5:8-9)


இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22


இயேசு சுயமாக எதுவும் செய்வது இல்லை. -யோவான் 5:30


-------



38.இயேசு தேவனை பிதா என்றதால், இயேசு தேவனுக்கு தன்னை சமமாக்கினார் என யோவான் கருதுகிறார்..


 இதனால் யூதர்கள் அவரை கொல்ல பார்த்தாராம்!!



¹⁷ "இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார்."


¹⁸ "அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்று சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்."

(யோவான் 5:17-18)



தேவனை தன் பிதா என சொல்வது தேவனுக்கு தம்மை சமமாக்குவதல்ல என யோவான் அறியவில்லை!!


ஏனெனில், சொலமோனை குறித்து, 



""நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளாலும் தண்டிப்பேன்.""

  — 2 சாமுவேல் 7:14 (TBSI)



சொலமோனுக்கு தேவன் பிதாவாக இருப்பேன் என்றும் அவன் தேவனுக்கு குமாரனாக இருப்பான் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


இதன் அர்த்தம், சொலமோனை தேவன் தனக்கு சமமாக ஆக்கினார் என்பதா??



இதை எழுதிய யோவான் பழைய ஏற்பாட்டில் இயேசுவை தேடிய அளவுக்கு, உண்மையை தேடவில்லை என புரிகிறது.



மேலும் இதற்கு இயேசுவே விளக்கம் சொன்னதாக இதே யோவான் எழுதுகிறார்..



³³ "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."


³⁴ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?


³⁵ "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"


³⁶ "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?" (யோவான் 10:33-36)



இயேசு தேவனை பிதா என்றும் தன்னை தேவ குமாரன் என்றும் சொன்னதால் , தன்னை தேவன் என கூறிவிட்டான்.. தேவதூசணம் செய்துவிட்டான் என யூதர்கள் சொன்னார்கள்.



அதற்கு இயேசு,,,. வேதவசனங்களை பெற்ற தீர்க்கதரிசிகளையே தேவர்கள் என சொல்லியிருக்க, என்னை தேவ குமாரன் என்பது எப்படி தேவதூசணம் சொல்வதாகும் என கேட்கிறார்!! 



அதாவது தன்னை பிதா அனுப்பியதாலும், பிதாவால் பரிசுத்தம் பண்ணப்பட்டதாலுமே தேவகுமாரன் என சொன்னேன் என்பதாக தெளிவாக 10:36 கூறுகிறது..


இதை எழுதிய அதே யோவான் தான் புரிதலற்று அவ்வாறும் எழுதியுள்ளார்!!

-------



39.பிதா செய்வதை அப்படியே குமாரனும் செய்வாராம். பிதா தான் செய்வதை குமாரனுக்கு காட்டுகிறாராம். குமாரன் பிதா செய்ய கண்டதை அப்படியே காப்பி பண்ணி செய்வாராம்.. 



¹⁹ "அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்."


²⁰ "பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்." (யோவான் 5:19-29)


சுயமாக தன் சித்தப்படி செய்யாமல், பார்த்து அப்படியே செய்பவராக, அதாவது தேவனது மடியில் இயேசு அப்போதே குழந்தையாக இருந்தார் என 1:18 இல் எழுதியதை போல எழுதியுள்ளார்.


ஆனாலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22.


இயேசு சுயமாக இதை செய்யவுமில்லை.. தேவன் செய்வதை பார்த்து செய்வதாக சொல்கிறார்.. அவர் மூலம் அவ்வாறு செய்ததே தேவன் தான் என அதே புதிய ஏற்பாடு சொல்கிறது!!



இயேசு ஏன் தேவனல்ல எனின்,,,


அதே இயேசு சொல்கிறார்: பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3.


பிதாவையே ஆவியோடு தொழ வேண்டும்- யோவான் 4:22-23

______

_____




40.பிதா இறந்தவர்களை எழுப்பி உயிர்ப்பிப்பது போல குமாரனும் தமக்கு சித்தமானவர்களை உயிர்ப்பிப்பாராம்.



²¹ "பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்."

(யோவான் 5:21)



இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22


மேலும் இயேசு இறந்த லாசருவை உயிர்ப்பித்து விட்டு, தேவன் தனக்கு செவி கொடுத்ததற்காக தேவனை ஸ்தோத்திரம் செய்தார்..


⁴¹ "அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."


⁴² நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். (யோவான் 11:41-42)


தேவன் செவிகொடுத்ததால் தான் அவ்வாறு செய்தார் என அதே யோவானிலேயே பதில் உள்ளது!!

இயேசு சொந்த வல்லமையால் இஷ்டப்படி செய்யவில்லை என இது காட்டுகிறது!!

----------------


41.பிதாவை கனம் பண்ணுவது போல குமாரனை கனம் பண்ணும் படிக்கு , பிதா குமாரனுக்கு நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை கொடுத்தாராம்!



²² "அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்." (யோவான் 5:22)


அதிகாரம் கொடுக்கப்பட்டவர் கடவுளா? கொடுத்தவர் கடவுளா??


இயேசு சொல்கிறார் பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3


பிதாவுக்கு சரிசமமாக இயேசுவை கனம் பண்ண வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்!!!!


தேவனை கனம் பண்ணுவது கடமையோ, அதேபோல் தேவனால் அனுப்பப்பட்டவரையும் கனம் செய்ய வேண்டும்.. தேவனால் அனுப்பப்பட்ட நபரை ஒருவர் கனம் செய்யவில்லை எனில், அது தேவனை கனம் செய்யாதது போன்றதே.. 

இதுவே இதன் அர்த்தம்!!

அதையே அடுத்த வசனத்தில் கூறப்படுகிறது:



²³ குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்.(யோவான் 5:23)


சீடர்களை ஏற்காதவன் இயேசுவை ஏற்காதவன் என கூறப்பட்டது போலவே இதுவும்..(மத்தேயு 10:40)


-------




42.இயேசாவின் வசனத்தை கேட்டு அவரை அனுபிபினவரை விசுவாசித்து க்கு நித்தியஜீவன் உண்டாம்.. அவன் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறானாம்.



²⁴ "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்." (யோவான் 5:24)



இதன்படி தேவனை குறித்து கற்பிக்கவே இயேசு அனுப்பப்பட்டார் என தெளிவாகிறது.. அதுவும் தேவனால் அனுப்பப்பட்டார் என்பதாகும்.. தேவனால் அனுப்பப்பட்ட நபர் எப்படி அதே தேவன் ஆவார்??

----




43.இயேசு தம்மில் தாமே ஜீவனுடையவராக இருப்பதற்கு பிதா அருள் செய்திருக்கிறாராம்!



²⁶ "ஏனெனில் பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்."

(யோவான் 5:26)



ஜீவனுடையவராக இருப்பதற்கு இன்னொருவரால் அருள் செய்யப்பட வேண்டியிருக்கும் நபர் எப்படி தேவனாயிருப்பார்??


அவரே சொல்கிறார், பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----





44.நியாயதீர்ப்பு செய்வதற்கும் அதிகாரத்தையும் இயேசுவுக்கு பிதா கொடுத்திருக்கிறாராம்.



²⁷ "அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படி அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்." (யோவான் 5:27)



இதுக்கு கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறார் எனில் , அதிகாரம் கொடுத்தவர் தேவனா? கொடுக்கப்பட்டவர் தேவனா??


அதிகாரம் கொடுத்த நபரான பிதாவே ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3

-----




45.கல்லறைகளில் இருப்பவர்கள் கூட இயேசுவின் சத்தத்தை கேட்பார்களாம்.. அப்போது எல்லோரும் அவரவர் பலனை அடைய எழுந்திருப்பார்களாம்!



²⁸ இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்;


²⁹ "அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." (யோவான் 5:28-29)



இயேசுவை நியாயம் தீர்ப்பவராக இது சித்தரிக்கிறது.. அந்த அதிகாரத்தை தேவன் முழுமையாக இயேசுவுக்கு கொடுத்துவிட்டு, ஓரமாய் இருக்கிறார் என்பதே இது கூறும் கருத்து.. ஆனால் அந்த தேவன் இவர் அல்ல!


மாறாக பிதா மட்டுமே அந்த ஒரே மெய்யான தேவன்- யோவான் 17:3

--------

------




46.இயேசு சுயமாக ஒன்றும் செய்யாமல் கேட்கிறபடியே இந்த தீர்ப்பை செய்வாராம்!. மேலும் இயேசு தனக்கு சித்தமானதை தேடுபவர் அல்லாமல் பிதாவுக்கு சித்தமானதையே தேடுபவராம்..



³⁰ "நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது." (யோவான் 5:30)



அதாவது இயேசு நியாயத்தீர்ப்பு செய்யும் நீதிபதியாக தேவன் அதிகாரம் கொடுத்திருந்தும், இயேசு சுயமாய் தீர்ப்பு செய்யாமல், கேட்டபடியே செய்வதோடு , பிதாவுக்கு சித்தமானதையே தேடுபவர் என்பதால், இவர் அந்த தேவன் அல்ல!!


பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3.


யோவானின் கருத்துப்படி, இவர் தேவனது மடியிலிருந்த பிள்ளை என்றதே சொல்லும் மையக் கருத்து!

-------



 47.இயேசு எதை நிறைவேற்றவேண்டும் என்பதைக்கூட பிதா தான் கற்பித்து கொடுக்கிறாராம்.



³⁶ "யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது." (யோவான் 5:36)

---------




48.பிதாவுடைய சத்தத்தை யாரும் கேட்டதுமில்லை, அவரை யாரும் கண்டதுமில்லை 



³⁷ "என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சிகொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை."(யோவான் 5:37)


இந்த பிதா தான் ஒரே மெய்யான தேவன்-யோவான் 17:3

----



49.இயேசு பிதாவின் நாமத்தில் வந்தாராம்!



⁴³ "நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள்." (யோவான் 5:43)


தீர்க்கதரிசிகள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் கர்த்தரின் நாமத்தில் தான் வருவார்கள்..


தாவீது கர்த்தரின் நாமத்தில் உன்னிடம் வந்தேன் என்றார். 1 சாமுவேல் 17:45


காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான் -1 நாளாகமம் 21:19


சோ இதில் ஸ்பெஷல் எதுவுமே இல்லை!!

------

----------------




50.இயேசு நிறைய பேருக்கு கொஞ்சம் உணவால் அற்புதம் செய்ததை கண்ட மக்கள் கூட, அவரை தீர்க்கதரிசி என்றே எண்ணினார்கள்.. 


இவர்களை போல தேவன் மனுசனாக வந்தான் என்று அல்ல!!



⁶ "தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்."

⁷ "பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்."


 …  

¹⁰ இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.

¹¹ "இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்."


 …  

¹⁴ இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

(யோவான் 6:6,,7,10,11,14)



-------------





51.இயேசு தன்னை நான் தான் என சொன்னது தெய்வீகமா??



¹⁸ பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.

¹⁹ "அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மயில்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்."

²⁰ "அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்." (யோவான் 6:18-20)



அவர்கள் இயேசுவை அறிந்திருந்தால், தன்னை நான் என அடையாளப்படுத்துகிறார்.. 



தேவன் தன்னை பற்றி மக்கள் அறிந்திருந்ததால்"நான்" என தன்னை பற்றி சொன்னார்..


நான் என்பது தெய்வீக வார்த்தை அல்ல.

இதே வார்த்தையை குருடனும் பாவித்திருக்கிறார்.


⁸ "அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள்."

⁹ சிலர்: அவன்தான் என்றார்கள். வேறு சிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் (Ego Eimi) அவன் என்றான். (யோவான் 9:9)

எபிரேய பாசையில் எஹ்யே என்பது (நான் இருக்கிறேன்/இருப்பேன்) என்பது கூட பொதுவாக பாவிக்கப்படும் ஒன்று தான்.

உதாரணமாக ஊசாயும் தன்னைக்குறித்து, (אֶהְיֶ֖ה-எஹ்யே) என்று எபிரேயத்தில் கூறியிருக்கிறார்.

“"அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன் (אֶהְיֶ֖ה-எஹ்யே)."”

  — 2 Samuel 16:18 (TBSI)

1 சாமுவேல் 23:17 இலும் யோனத்தான் தன்னை தாவீதுக்கு அடுத்தவனாக இருப்பேன் என்று சொல்வதற்கு எஹ்யே என்று தான் பாவித்திருக்கிறார்

ஆகவே இதை வைத்து தெய்வீகம் என்று வாதிடுவது மடத்தனம்.


பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என இதே இயேசு சொன்னதாக யோவான் எழுதுகிறார்!!

விரிவாக இதை அறிய

பாகம் 2

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்