ஏசாயா 9:6 நபர் கடவுளாக?
ஏசாயா 9:6 இல் கூறப்படுபவர் கடவுளா??
------------------------------------------------- ---------------------------------------------------- -------------------------------------------
⁶ "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தாத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கார்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்."
⁷ "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றும் நியாயத்தீர்ப்பு நீதியினாலும் நிலைப்படுத்தும்படி, அவருடைய கர்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவடையவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்கிறது."
(ஏசாயா 9:6-7)
இதில் கூறப்பட்டவர் கடவுளா என்றால்,
1.ஒரு பாலகன் பிறந்தார். பிறந்த பாலகன் எப்படி கடவுளாகவோ அவதாரமாகவோ முடியும்?
ஏனெனில் பிறப்பவரை தேவனே கர்ப்பத்தில் படைக்கிறார். தேவனால் படைக்கப்பட்டவரோ அல்லது வேறொருவரால் படைக்கப்பட்டவரோ கடவுளல்ல!
2.குமாரன் கொடுக்கப்பட்டார்.. குமாரன் என்பவர் ஆண். இரு பாலினத்தையும் படைத்த இறைவனை பாலினத்தினுள் நுழைவிப்பது அபத்தம்.
3.அடுத்து, அந்த பிள்ளைக்கு நான்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பெயரை யாராவது மொழிபெயர்த்து அதற்கேற்ப, அதற்குரிய நபர் என வாதிடுவாங்களா?
பைபிளில் "எலீ" என்ற பெயருடையவன் வருகிறார். "எலீ" என்றால் "என்னுடைய கடவுள்" என அர்த்தம்.
ஃகெஸ்கியேல் (எசேக்கியேல்) வல்லமை மிகுந்த தேவன், எலியா-என் தேவன் யாவே. எலியாப்-தேவனே தகப்பன்.. இப்படி பெயருள்ள பலர் உள்ளனர்
பெயர் மொழிபெயர்த்து கடவுள் என வாதிடுவது அபத்தம்!
4.இக்குமரனின் " வல்லமைமிகு தேவன் ", " நித்திய பிதா " ஆகிய பெயர்கள் மட்டும் நோக்கத்தக்கது. அதை பார்ப்போம்.
அ.வல்லமையுள்ள தேவன்- எல்கிப்போர்.
*ஏசாயாவை யாஹ்வே என்றே பைபிளில் ஒரு இடத்தில் கூறினார்-ஏசாயா 7:10
*மோசேயை பார்வோனின் எலோஹிம் (தேவன்) -யாத் 7:1 என தேவன் கூறுகிறார்.
*எல் என்பது தலைவர்களான ஹீரோக்கள், வல்லமையானவர்கள் போன்றோரை குறிக்கும். உதாரணமாக எசேக்கியேல் 31:11
*இந்த எல்கிப்போரின் பன்மை "எலே கிப்போரிம்" என பராக்கிரமசாலிகளில் வல்லவர்களுக்கு பாவிக்கப்பட்டுள்ளது.
.
""பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும் (ஏலே கிப்போரிம்- אלי גברים), அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடு பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.""
- எசேக்கியேல் 32:21 (TBSI)
இதன்படி இந்த பாலகன் வல்லவனான பராக்கிரமசாலி என்று தான் வருவான் பண்பாக கூறப்படுவதென்றால்...
மற்றபடி எதுவுமில்லை
ஆ.நித்தியபிதா-
இவனுக்கு சந்ததிகள் இருந்துகொண்டே இருப்பார்கள்.இவனது சிம்மாசனத்தில் இவனது பிள்ளைகளே அமர்வார்கள் என்பதை தான் குறிக்கும் இயலும்.
இராஜாக்களை பிதா என அழைப்பார்கள்.
-தாவீது சவுலை பிதா என அழைக்கிறார்.- 1 சாமுவேல் 24:11
-நாகமானை ஊழியக்காரன் தகப்பன் பிதா என்கிறான்- 2 இராஜாக்கள் 5:13
ஆசாரியனை கூட இவ்வாறு கூறப்படுகிறது
²⁰ அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:
²¹ "உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்." (ஏசாயா 22:20-21)
இவ்வாறு தான் அந்த நபரும் தகப்பனாக மட்டுமில்லாமல் என்றென்றும் தகப்பனாக இருப்பான். அவனது ஆட்சிக்காலம் நீண்டிருக்கும் என்பதே இதன் அர்த்தம். அவன் சாகாமல் இருப்பான் என்பதல்ல.
நீண்ட காலம் என்பதை நித்தியமாக பைபிள் கூறும் வழமையுடையது. அதன் அடிப்படையில் தான் இதுவும் அமையும்.
உதாரணமாக
“ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.”
— நீதிமொழிகள் 29:14 (TBSI)
நித்தியபிதா என்பதிலுள்ள "நித்திய" என்பதை குறிக்கும் "עד" அத் (ad) என்ற அதே வார்த்தை தான் இங்கும் உள்ளது.
இதேபோல் தாவீதின் குமாரர்களை குறித்து,
“"உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்."”
— சங்கீதம் 132:12 (TBSI)
இதன் அர்த்தம் சாவின்றி இருப்பார்கள் என்பதல்ல. ஆயுள் உள்ள வரை அதாவது சாகும்வரை ஆட்சிக்கட்டிலிலே இருப்பார்கள். அவர்களது ஆட்சி புடுங்கப்படாது என்பது தான்.
அதே போன்றே இந்த நபரும் ஆயுளுள்ள வரை பிதாவாக ராஜாவாக இருப்பான் என்பதாகும்.
இது எசேக்கியா ராஜாவையே குறிக்கும்.
காரணம், அவனே இது சொல்லப்பட்ட காலத்தின் அருகில் பிறந்தவர். அத்தோடு ஏனையோரைப்போல் அல்லாமல், மரண நேரம் வாக்களிக்கப்பட்ட பின்பும் , தேவனால் 15 வருடங்கள் ஆயுளில் கூட்டப்பட்ட ஒரே நபர் இவராவார். (ஏசாயா 38:1-5)
அதுமட்டுமின்றி வல்லமை மிகுந்த ராஜாவாகவும் இருந்தார். இவரது காலத்தில் எதிரிகளை தோற்கடித்து, இரட்சிப்பும் கிட்டியது.அதை தேவன் முன்னறிவித்தார்- (ஏசாயா 37:33-35, 2 நாளாகமம் 32:20-22)
அது கூட பெயர் மட்டுமே.. இதை வைத்து கடவுள் என கூறுவது அபத்தம்!!!
கருத்துகள்
கருத்துரையிடுக