மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 மத்தேயுவின்படி இயேசு ஏன் கடவுள் அல்ல?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


சுருக்கம்: மத்தேயு , மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சுவிசேசங்களும் இயேசுவை கடவுளுக்கு நெருக்கமான நல்லடியாராக காட்டுகின்றன. கடவுளாக அல்ல!

இயேசுவை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் கொடுத்துவிட்டு ஓரமாக இருக்கிறார் என்பதே இவற்றின் சுருக்கம்! இதற்காக பல பொய்களை கலந்து எழுதியிருக்கிறார்கள்.



இவற்றில் குர்ஆனையோ ஹதீசையோ உள்நுழைக்காமல், ஒரு கிறிஸ்தவருக்கு இதில் கூறப்பட்டதை அவர் மத்தேயுவை படித்தால் புரிந்துவிடும்!



1.அவர் ஆப்ரகாமின் குமாரனும் தாவீதின் குமாரனுமானவர்- மத்தேயு 1:1 

இவர்களின் பிள்ளை கடவுளாக முடியாது.



2.இவரது பரம்பரையிலேயே விபச்சாரம் செய்தவர்களும் வேசிகளும் இடம் பெறுகிறார்கள். இதில் கூறப்படும் நான்கு பெண்களில் மூவரும் ஒழுக்கத்தில் குறையுள்ளவர்கள். (மத் 1:3,5,6)

விபச்சார சந்ததி மட்டுமல்ல.. எந்த சந்ததியிலும் இறைவன் வர இயலாது.



3.இவர் ஒரு பெண்ணுக்கு பிறந்தார். அவரது பெயர் மரியாள்.(மத் 1:16)

ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி கடவுளோ அவதாரமாகவோ முடியவே முடியாது.



4.சாஸ்திரிகள் குழந்தையை கடவுளாக எண்ணி வணங்க வரவில்லை. மாறாக யூதரின் ராஜா என எண்ணியே வணங்க வந்தனர். (மத் 2:1-2,11) 

ராஜாவை தொழுவது யூதருடையதும் ஏனையோரிடனதும் மரபாக இருந்தது. 1 நாளாகமம் 29:20




5.அவர் பெதலகேமில் பிறப்பார். (மத் 2:5,6)

பிறந்தவர் ஒரு படைப்பே அன்றி படைத்தவராக முடியாது.



6.குழந்தையை காப்பாற்ற எகிப்துக்கு தூக்கிக்கொண்டு போ என யோசேப்புக்கு கர்த்தரின் தூதன் கட்டளையிடுகிறான். (மத் 2:13-15)


ஏனெனில் அந்த குழந்தை வெறும் படைப்பு. தனக்கே நன்மையை ஏற்படுத்திக்கொள்ள இயலாதவர்



7.யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றார். அதுவே நீதி என சொன்னார். (மத் 3:15)


8.இயேசு தேவனின் நேச குமாரன் என வானத்திலிருந்து சத்தம் வந்ததாம் அவரிடம் பரிசுத்த ஆவி இறங்கி வந்ததாம்..(மத் 3:16-17)

தேவகுமாரன் என்பது ஏன் என யோவான் 10:34-36 இல் இயேசு சொல்கிறார். தேவன் அவரை அனுப்பியதாலும், பரிசுத்தப்படுத்தியதாலுமே தவிர, தேவன் பெற்றெடுத்ததால் அல்ல.


இதே போல இஸ்ராயீலும் (இஸ்ராயீலின் பிள்ளைகள்) என் குமாரன் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். (யாத்தி 4:22, ஓசியா 11:1)


சமாதானம் பண்ணுகிறவர்களும் தேவனது புத்திரர் எனப்படுவர்-மத் 5:9


குமாரன் என்றாலே பிற்காலத்தில் பிறந்தவர் என புரிகிறது.. பிறந்தவர் ஒருநாளும் கடவுளல்ல




9.இயேசு மேல் இறங்கிய பரிசுத்த ஆவி, இயேசுவை சாத்தானால் சோதிப்பதற்கு அழைத்து போனாராம்.(மத் 4:1)

சாத்தானால் சோதிக்க படுபவர் கடவுளாக இயலாது. படைப்பே



10.உபவாசம் இருந்ததால் , இயேசுவுக்கு பசி உண்டாகிவிட்டது. (மத் 4:2)

உண்டு மலம் கழித்து வாழ்பவர் பலவீனமான படைப்பே அன்றி கடவுளல்ல.




11.சாத்தான் அவருக்கு சகல ராஜ்யங்களையும் காட்டி, என்னை (கடவுளாக) பணிந்துகொண்டால் சகலதையும் தருவேன் என்றான். அதற்கு இயேசு , "உன் தேவனாகிய கர்த்தரை பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என வேதம் சொல்லுதே என கூறி, தான் ஒரு கடவுளல்ல.. வேதத்தை பின்பற்றும் நபர் என்றும், அந்த வேதத்தில் தேவனுக்கு மட்டுமே ஆராதனை செய்ய வேண்டும் என உள்ளது என கூறினார். மத் 4:9-10



12.இயேசு வியாதிகளை சுகப்படுத்தினார். மத் 4:23-24

இவ்வாறு இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான் என அப்போஸ்தலர் 2:22 கூறுகிறது.

விசுவாசமிருந்தால் மலையை அகன்று போக சொன்னாலும் நிகழுமாம்-மத்தேயு17:20

அந்த மலையை கடலில் போய் விழ கட்டளையிட்டாலும் அப்படியே ஆகுமாம்- மத்தேயு 21:21

சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் தேவன் ஹெல்ப் பண்ணியிருக்கிறார். அவர் தேவன் என்பதால் அல்ல



13.ஜெபம் செய்யும்போது பிதாவிடமே ஜெபம் செய்ய வேண்டும் என போதித்து தன்னை கடவுளல்ல என நிரூபித்தார்

 (மத் 6:9)



14.பரலோகராஜ்யத்தில் நுழைபவன பிதாவின் சித்தப்படி செய்பவனே . இயேசுவை நோக்கி கர்த்தாவே (ஆண்டவரே) என அழைப்பதாலோ, அற்புதம் செய்தாலோ அல்ல. (மத் 7:21-23)

இயேசுவின் சித்தப்படி அல்ல!

பிதாவின் சித்தம், பிதாவை ஆவியோடு தொழ வேண்டும்-யோவான் 4:24

அவரை தவிர வேறு யாரையும் கடவுளாக தொழ கூடாது. யாத்திராகமம் 20:3-5

இதன் மூலம் இயேசு கடவுளல்ல என தெளிவாக்குகிறது



15.குஷ்டரோகியை சுத்தமாக்கினார்,, நோயாளிகளை பிசாசு பிடித்தவங்களை சுகப்படுத்தினார் (மத் 8:2,13-17).

இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார். அப்போஸ்தலர் 2:22.

இயேசுவின் திறமையால் அல்ல!


16.கொந்தளித்த கடலையும், காற்றையும் அதட்டினாராம். அவை அமைதியாகிவிட்டனவாம்.இதை பார்த்த சீடர்கள் இவரை கடவுள் என சொல்லவில்லை.(மத் 8:26-27)

இதே சீடர்கள் தான் இஸ்ரேலியர் மத்தியில் தேவன் இயேசு என்ற மனிதன் மூலம் அற்புதங்கள் செய்தார் என போதித்தார்கள்- அப்போஸ்தலர் 2:22

மேலும் விசுவாசம் இருந்தால் மலையையே கட்டளை மூலம் நகர்த்தலாம்- மத்தேயு 21:21, 17:20

அப்படியிருக்க கடலை அதட்டுவது அதைவிட பெரிய காரியம் அல்லவே! 



17.பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என்றனவாம். இயேசு அவற்றை பன்றிக்கூட்டத்தினுள் போகவிட்டாராம்-மத் 8:29-32

இயேசு எப்படி தேவகுமாரன் என இயேசுவே சொல்லியுள்ளார். குறிப்பு 8 இல் கூறப்பட்டுவிட்டது.



18.பாரிஷவாதகாரனை (திமிர்வாதம்) பார்த்து உன் பாவம் மன்னிக்கப்பட்டது என்றார். (மத் 9:2)

மனுஷ குமாரனுக்கு பூமியில் பாவங்களை மன்னிக்க அதிகாரமுண்டு என்றார்.(மத் 9:6)

இதை பார்த்த மக்கள் மனிதர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை கொடுத்தவராகிய தேவனை மகிமை படுத்தினார்கள்.(மத் 9:8)


மை கமெண்ட்: 


*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.


*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.


*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.


ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:3


*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25

இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.



*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின், 


"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”

  — John 20:23 (TBSI)

சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.


*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(மத் 3:16-17)


*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1

சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.



19.வேதபாரகர்கள் மனதில் நினைத்ததை இயேசு அறிந்துகொண்டாராம். (மத் 9:3-4)

மை கமெண்ட்:

பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.


*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.

அப்போஸ்தலர் 5:1-3



*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட. 


"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39


* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26


சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!

ஆவியானவர் இவர்களூடாக பேசுவாராம் (சீடர்கள் குறித்து இயேசு சொன்னது) -மத் 10:19-20



20.மீண்டும் நோயாளிகளை சுகப்படுத்துவது, ஆவி விரட்டுவது இடம்பெற்றுள்ளது. (மத் 9:18-33)


இதெல்லாம் இயேசுவாக செயததல்ல. தேவன் தான் இயேசு என்ற மனுசன் மூலம் செய்வித்தார். அப்போஸ்தலர் 2:22



21.இயேசுவை தலைவன் ஒருவன் வந்து "ஆண்டவரே!" என அழைத்து பணிந்து கொண்டாராம். மத் 9:18

மை கமெண்ட்:

இயேசுவை மெசியாவாகவும், ஆண்டவராகவும் ஆக்கியதே தேவன் தான். அப்போஸ்தலர் 2:36


*ராஜாவை பணிந்து கொள்ளும் வழமை அம்மக்களின் வழமை. இது போன்றே தாவீதையும் பணிந்து கொண்டனர். 1 நாளாகமம் 29:20

யாக்கோபு ஏசாவை பணிந்து கொண்டான். ஆதி 33:3

சோ இதெல்லாம் இயேசுவுக்கு ஸ்பெஷல் அல்ல!





22.இயேசு சீடர்களுக்கு பேய் விரட்ட, நோய்களை சுகப்படுத்த அதிகாரம் கொடுத்தாராம். (மத் 10:1)


மை கமெண்ட்


இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே. மத் 28:18


இயேசு அதிகாரம் கொடுத்த பின்பு கூட, சில நோய்க்கு காரணமான பேய்களை சீடர்களால் விரட்ட முடியவில்லை. அதற்கு ஜெபம், உபவாசம் அதிகம் தேவையாம்.(மத் 17:15-21).


இறந்துபோன லாசருவை எழுப்பிவிட்டு இயேசு, தேவனை ஸ்தோத்திரித்தார் தனக்கு செவி கொடுத்ததற்காக..(யோவான் 11:41)


மேலும் தேவனே இயேசு மூலமாக இதெல்லாம் செய்தார். (அப்போஸ்தலர் 2:22)

இயேசு சுயமாக எதுவும் செய்வது மில்லை!(யோவான் 5:30)




23.ஆத்துமாவை நரகத்தில் தள்ளி அழிக்க வல்லவருக்கு பயப்படுங்கள் என கூறி,தேவனை பயப்பட சொல்லி தான் தேவனல்ல என நிரூபித்தார்-மத் 10:28



24.மனுஷர் முன்பாக இயேசுவை அறிக்கை பண்ணினால், இயேசு பரலோகத்தில் இருக்கிற பிதாவுக்கு முன்பாக அவனை அறிக்கை பண்ணுவாராம். மறுதலிப்பவரை இயேசுவும் பரலோகத்தில் இருக்கிற பிதாவின் முன்பு அவனை மறுதலிப்பாராம! -மத் 10:32-33

இதன் மூலம் இயேசு எப்போதுமே பிதாவுக்கு சமமாக இல்லை என நிறுவினார்.



25. சீடர்களை ஏற்றுக் கொள்பவன் இயேசுவை ஏற்றுக்கொள்கிறவன். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் இயேசுவை அனுப்பினவரை ஏற்றுக்கொள்பவனாம்- மத் 10:40


சீடர்கள் எப்படி இயேசுவால் அனுப்பப்பட்டார்களோ, அதே போன்றே இயேசுவும் அனுப்பப்பட்டார் என கூறி, தேவனல்ல.. இயேசுவைஸ அனுப்பினவரே தேவன் என இயேசு நிறுவினார்.



26.இயேசுவின் கிரியைகளை கேள்விப்பட்ட யோவான் ஸ்நானன் , வரவேண்டியவர் இயேசுவா அல்லது வேறொருத்தருக்காக காத்திருக்க வேண்டுமா என கேட்டு அனுப்பினார்.-மத் 11:2-3


யோவான் கூட இயேசு தேவன் என நம்பவில்லை என தெளிவாக இது காட்டுகிறது.. கடவுள் என தீர்க்கதரிசி ஒருத்தனுக்கு கூட தெரியலனா எப்படி??? இயேசு கடவுளல்ல என யோவான் ஸ்நானன் அறிந்திருந்தார். 


யோவான் தீர்க்கதரிசிகளை விட மேன்மை உள்ளவர் என இயேசு சொன்னது வேறு-மத் 11:9




27.யோவான் என்பவர் தேவனால் அனுப்பப்படும் நபருக்கு வழியை ஆயத்தம் பண்ண அனுப்பப்பட்டார் என இயேசு தெளிவாக்கி, அனுப்பும் தேவன் இயேசுவல்ல என நிரூபிக்கிறார்

"“"அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்."”

  — Matthew 11:10 (TBSI)



28.இயேசுவை விட பெரியவர் யோவான் ஸ்நானன்


“"ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவானஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்."”

  — Matthew 11:11 (TBSI)

காரணம் இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவரே! ஆனால் இயேசு யோவானை விட பெரியவர் என யோவான் சொன்னதாகவும் இதே மத்தேயு எழுதியுள்ளார்



29.இயேசுவுக்கு யோவான் யார் என்றே தெரியவில்லை.

யோவான் தான் வரவேண்டிய எலியா என இயேசு சொல்கிறார்-மத் 11:14

“"நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்."”

  — Matthew 11:14 (TBSI)


எலியாவின் ஆவி யோவானிடம் இருந்ததாக லூக்கா 1:16 எழுதப்பட்டுள்ளது



ஆனாலும் யோவானோ, நான் எலியாவுமில்லை, தீர்க்கதரிசியுமில்லை, மெசியாவுமில்லை என கூறி மறுத்து விட்டார்-யோவான் 1:21


இயேசு யோவான் எலியா அல்ல என தெரியாமல் சொல்லியுள்ளார்


இப்படி இறைவன் அறிவில் குறைபாடுள்ள வராக இருப்பாரா??




30.பிதா தான் வானம் பூமிக்கு ஆண்டவர். அவரை இயேசு தோத்திரம் பண்ணினார். (மத் 11:25)


இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36




31.சகலமும் இயேசுவுக்கு பிதாவினால் ஒப்புக் கொடுக்க பட்டிருக்கிறதாம். -மத் 11:27

கொடுத்தவரே கடவுள். கொடுக்கப்பட்டவர் அல்ல.

இயேசு அவை தனக்கே சொந்தம் என சொல்லாமல், பிதாவினால் கொடுக்க பட்டிருக்கிறது என சொல்லி, தான் கடவுள் அல்ல என புரிய வைக்கிறார்


மேலும் இயேசுவுக்கு தேவையான சகலதுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமானவையும் அல்ல.


.

சாத்தானுக்கும் பூமியின் ராஜ்ஜியங்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது- லூக்கா 4:6



32.மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார் என்றார்-மத் 12:8

நான் ஓய்வுநாளுக்கு ஆண்டவர் என சொல்லாமல், மனுஷகுமாரன் என கூறி, தான் ஒரு மனிதரே என நிரூபிக்கிறார். கடவுளால்ல.


அடுத்து இயேசுவை ஆண்டவராகவும் மெசியாவாகவும் ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

குறிப்பாக ஓய்வு நாளே மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது.  மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை!



33.ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவை குறித்து, "இதோ, நான் தெரிந்துகொண்ட என் தாசன் / ஊழியன் " என தேவன் சொன்னதாக கூறியிருக்கிறதாம்-மத் 12:18



அதாவது இயேசு தேவனின் ஊழியக்காரன். தேவனது ஊழியக்காரனை (எபிரேய த்தில் அடிமை என உள்ளது) போய் தேவன் என சொன்னால் எப்படி?? அநியாயம் இல்லையா?




34.இயேசு பரிசேயர்கள் சிந்தித்ததை அறிந்தாராம்-மத் 12:25

இதற்கு குறிப்பு 19இல் விளக்கம் தரப்பட்டுள்ளது.




35.இயேசு பிசாசு விரட்டுவது தேவனுடைய ஆவியால் தானாம். -மத் 12:28

இதன் மூலம் அவர் சுயமாக அவற்றை விரட்ட வில்லை என காட்டுகிறது.



36.இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்.


“எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.”

  — Matthew 12:32 (TBSI)


முதலாவது அவர் மனுஷ குமாரன். சோ கடவுளில்லை!

பரிசுத்த ஆவியை திட்டினால் மன்னிப்பில்லை. ஆனால் இயேசுவை திட்டினால் மன்னிப்பு உண்டு என கூறி, பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர் என கூறி தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.





37.அனைவரும் பிதாவின் சித்தப்படியே நடக்க வேண்டும்.. அப்படி நடப்போர் இயேசுவின் தாயும் சகோதரர்களும் ஆவர்.



“"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார். "”

  — Matthew 12:50 (TBSI)

கடவுளுக்கு சகோதரர்களோ தாயோ இல்லை! 




38.இயேசு தன்னை ஒரு தீர்க்கதரிசி என அடையாளப்படுத்துகிறார்.



“அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.”

  — Matthew 13:57 (TBSI)

கடவுள் என்றோ அவதாரம் என்றோ அல்ல!



39.தேவனிடம் ஜெபம் செய்து, தன்னை கடவுள் இல்லை என நிரூபித்தார்.


²³ "அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்."

(மத்தேயு 14:24)


 


40.இயேசு கடலின் மேல் நடந்தாராம்.(மத்தேயு 14:26).

தேவன் தான் இப்படி இயேசு என்ற மனிதன் மூலம் அற்புதங்கள் செய்தார்-அப்போஸ்தலர் 2:22

விசுவாசமிருந்தால் மலையை கடலில் விழ சொன்னாலும் நிகழும்- மத்தேயு 21:21..

இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.


எலியா தன் துணியால் நதியை அடித்ததும், அது அவர் நடந்து செல்ல வழிவிட்டதாம்-2 இராஜாக்கள் 2:8


இதேபோல் எலீஷாவும் அடித்தார். அப்போதும் நதி வழிவிட்டது-2 இராஜாக்கள் 2:14

ஆசாரியர்களின் உள்ளங்கால் பட்டவுடன் ஓடும் நதி அப்படியே நின்று குவியலாகிவிட்டதாம்-யோசுவா 3:13,15-17

சோ இதெல்லாம் தேவன் தீர்க்கதரிசி களுக்கு இப்படி அற்புதங்களை கொடுப்பார்



41. இயேசு தன்னை "நான் தான் பயப்படாதீர்கள்" என்றார். -மத் 14:27

"நான்" என சொல்வதை தெய்வீகத்தை வாதிடுவதாக நினைப்பதென்பது மடத்தனம். தன்னை "நான்" என சொல்லாமல், "அவன்" என்றா சொல்லமுடியும்??

பிதா மட்டுமே ஒரே மெய்யான தேவன்- யோவான் 17:3 என இயேசுவே சொல்லிவிட்டார்.


 


42.படகில் இருந்தவர்கள் இயேசுவை மெய்யாகவே ஒரு தேவகுமாரன் என சொல்லி பணிந்துகொண்டார்களாம்-மத்தேயு 14:33

தேவ குமாரன் என்பது என்ன அர்த்தம் என இயேசுவே சொல்லியுள்ளார்-யோவான் 10:34-36

இதேபோல் நன்மக்களை தேவ குமாரன் என சொல்வதுண்டு. கெட்டவர்களை பிசாசின் பிள்ளைகள் என சொல்வதுண்டு.


சொலமோனை குறித்து, அவன் எனக்கு குமாரனாக இருப்பான். நான் அவனுக்குப் பிதாவாக இருப்பேன் என சொல்லப்படுள்ளது-2 சாமுவேல் 7:14-16

இப்படி ராஜாக்களை பணிந்து கொள்வது போல (1 நாளாகமம் 29:20 ) , தீர்க்கதரிசிகளையும் பணிந்து வணங்குவார்கள்- 2 இராஜாக்கள் 2:15

சோ, இதில் எந்த விசேசமும் இல்லை!






43.காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடம் அனுப்பப்பட்டேன் என கூறி , தான் ஒரு அனுப்பப்பட்டவரே என்றும், அனுப்பியவர் ஒருவர் உள்ளார் என தெளிவாக்கினார். மத் 15:24


²⁴ "அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்லவென்றார்."


 



 

44.இயேசு அற்புதங்கள் செய்ததை கண்ட மக்கள், தேவனை மகிமைப்படுத்தினார்களே தவிர, மனுசனான இயேசுவை அல்ல! காரணம் தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் இப்படி செய்வார் என அறிந்திருந்தனர்


³¹ "ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்."

மத்தேயு 15:31




45. மனுசகுமாரனாகிய இயேசு மெசியாவே ஆவார். தேவன் அல்ல!


¹³ "பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."

¹⁴ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்."

¹⁵ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.

¹⁶ சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

¹⁷ "இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்."

(மத்தேயு 16:13-17)


இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

தேவனுடைய குமாரன் என்பது பற்றி ஏற்கனவே கூறிவிட்டேன்.


  



46.இயேசு தம் தூதரோடு பிதாவின் மகிமை பொருந்திய வருவாராம்.

²⁷ "மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்." (மத்தேயு 16:27)


இதே போல குழந்தைகளுக்கும் தேவதூதர்கள் உண்டு

-மத் 18:10


இங்கே கூட தன்னை மனுஷகுமாரன் என கூறி, தேவனல்லவென்று காட்டியுள்ளார்.




 


47.யோவானை குறித்து மீண்டும் எலியா என கூறுகிறார்.

இதன்மூலம் யோவானை பற்றி இவருக்கு சரியாக தெரியாது என நிரூபித்தார்.


¹⁰ "அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்."

¹¹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.

¹² "ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்."

¹³ அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

(மத்தேயு 17:10-12,13)


ஆனால் யோவானோ தன்னை எலியா அல்ல என கூறிவிட்டார்-யோவான் 1:21

அறிவில் பூரணமற்ற மனுஷகுமாரன் ஒருநாளும் தேவனாக இயலாது!


 



48.சில பிசாசுகளை ஜெபம் மூலமாகவும் உபவாசம் மூலமாகவுமே தவிர விரட்ட முடியாதாம்!

²¹ இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.(மத்தேயு 17:21)

இதன்மூலம் இயேசு அவற்றை விரட்ட, அதிக ஜெபமும், உபவாசமும் செய்திருக்க வேண்டும். சொ அவர் தேவனல்ல!




49.எந்த காரியத்தையும் பிதாவிடம் வேண்ட வேண்டும். பிதாவினாலே அது உண்டாகும்.


¹⁹ "அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மத்தேயு 18:19)




50.இயேசுவின் நாமத்தில் ஒன்று கூடினால், அதாவது இயேசுவுக்காக ஒன்று கூடினால் அங்கே இயேசுவும் இருப்பாராம்.


²⁰ "ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்."(மத்தேயு 18:20)


இது உவமையாகும். எப்படி மோசேயும், தீர்க்கதரிசிகளும் இருப்பதாக ஆபிரகாம் சொன்னது போன்றதாகும்.(லூக்கா 16:29,31)


நீ எங்கிருந்தாலும் உன்கூட இருப்பேன் என நன்பர்களை உற்சாகப்படுத்த கூறுவது போன்றது. 


 



51. மறுமை சம்பந்தமான விடயங்களை பரம பிதாவே மன்னிக்கிறவர்.



³⁵ "நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். "(மத்தேயு 18:35)

இயேசுவுக்கு பூமியில் தான் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இதை ஏற்கனவே குறிப்பு 18 இல் காணவும்.




52.தீர்க்கதரிசிகளுக்கு சட்டத்தை கொடுக்க முடியுமாம். மோசே இஸ்ரேலியரின் இருதயகடினத்தினால் தள்ளிவிடுதலுக்கு இடங்கொடுத்தார் என்கிறார்.


⁸ அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. (மத்தேயு 19:8)

இது போல் தான் இயேசுவும் புதுசாக சட்டம் மாற்றினார். கடவுள் என்பதால் அல்ல.




53. இயேசுவுக்கு தேவன் ஏன் மனிதனை ஆணும் பெண்ணுமாக படைத்தார் என அறியாமல், கிரேக்க ரோம மத தத்துவங்களை சொல்கிறார். பைபிளில் உன்னதப்பாட்டு இருப்பதையே அறிந்திருக்கவில்லை போலும்!



¹⁰ "அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றி புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள்."

¹¹ அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

¹² தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.

(மத்தேயு 19:10-12)



பைபிள் படி தேவன் சந்நியாசியாக வாழ ஆணும் பெண்ணுமாக படைக்காமல், பழுகிப்பெருகவே ஆசிர்வதித்தார்-ஆதி 1:28


இதை கூட அறியாதவர் எப்படி கடவுளாவது?

(இதெல்லாம் இயேசுவுடைய வாயில் துறவறத்துக்கு சார்பாக துறவிகள் போட்டது)

 …  





54.ஒருவன் இயேசுவை நல்ல போதகர் என்கிறான். உடனே இயேசு, நல்லவன் தேவன் மட்டுமே என கூறி , இயேசு தேவனல்ல என நிரூபித்தார்.


¹⁶ "அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான்."

¹⁷ அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

(மத்தேயு 19:16-17)






 55.செபதேயுவின் குமாரருடைய தாய் தன் பிள்ளைகளிருவரும் இயேசுவுக்கு வலதிலும் இடதிலும் ராஜ்யத்தில் அமர்ந்திருக்க வேண்டுமென வேண்டினார். அதற்கு இயேசு, பிதா ஏற்கனவே யாருக்கு ஆயத்தம் பண்ணி வைத்தாரோ அவர்களை தவிர வேறு எவருக்கும் அதை தன்னால் கொடுக்க முடியாது என கூறி, பிதாவுக்கு சமனானவர் என்பது பொய் என நிரூபித்தார்.(மத்தேயு 20:20-23)





56.இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்.


⁹ "முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்."

¹⁰ "அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்."

¹¹ அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

(மத்தேயு 21:9-11)



தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் தான் வருவார்கள்.அதனால் தான் 21:11 இல் இயேசுவை தீர்க்கதரிசி என கூறப்பட்டுள்ளது.


தாவீது கர்த்தரின் நாமத்தில் தான் நான் வந்தேன் என்றார்-1சாமுவேல் 17:45

 காத் தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தில் பேசினார்-1 நாளாகமம் 21:19

எரேமியா கர்த்தரின் நாமத்தில் பேசினார்- எரேமியா 26:16




 

57.இயேசுவுக்கு பசி உண்டாகிவிட்டது. சாப்பிட்டு வாழ்ந்த மனிதரே இயேசு. கடவுளல்ல!."


  

¹⁸ "காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று."

¹⁹ "அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று."

²⁰ சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.

²¹ "இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."

²² "மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்."

(மத்தேயு 21:18-22)


அத்திமரம் பட்டுபோனது விசுவாசத்தினால் தான் என இயேசு தெளிவு படுத்துகிறார்.. தெய்வீகத்தால் அல்ல!

இதேபோல் கேயாசீயிற்கு வெண்குஷ்டம் வர எலிசா சொன்னவுடன் வந்தது.2 இராஜாக்கள் 5:27


 



58.இயேசுவை ஜனங்கள் தீர்க்கதரிசி என்றே எண்ணியிருந்தார்கள்


⁴⁶ அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

(மத்தேயு 21:46)

கடவுள் என்று அல்ல-! 



59.இயேசு தேவனுடைய மார்க்கத்தை சத்தியமாக போதிப்பவர்.


¹⁶ "தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்."

(மத்தேயு 22:16)

தேவனுடைய மார்க்கத்தை போதிப்பவர். தேவன் அல்ல.



 …  






60.வரலாற்று அறிவு கூட இயேசுவுக்கு கம்மியாகவே உள்ளது.


³⁵ "நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்." (மத்தேயு 23:35)


யொய்தாவின் குமாரனாகிய சகரியாவே கொல்லப்பட்டவர்-2 நாளாகமம் 24:20-1

இயேசு பெரகியாவின் குமாரனாகிய வேறொரு தீர்க்கதரிசியின் பெயரை சொல்கிறார்.

இறைவனுக்கு வரலாற்று அறிவில் குறை இருக்குமா??





61.தீர்க்கதரிசனத்தைகூட இயேசு தப்பாக சொல்கிறார். ஆலயத்தின் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு யூதரின் ஆலயம் இடிக்க பட்டு போகும் என்றார். ஆனால் இன்றுவரை ஒரு பக்கம் சுவர் இருந்துகொண்டே உள்ளது.


இறைவன் எப்படி எதிர்கால அறிவு இல்லாமல் இருப்பாரா?


¹ "இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்."

² "இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."

(மத்தேயு 24:1-2)





62. இயேசுவுக்கு அவருடைய வருகை நாளை பற்றிய அறிவு கூட இல்லை!



³⁶ அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.

(மத்தேயு 24:36)



பிதா மட்டுமே அதை அறிந்துள்ளாராம். பிற்காலத்தில் குமாரன் என இதில் உள்ளதை நீக்கிக் டாங்க.. ஆனாலும் மாற்கு 13:32 இல் உள்ளது. ரோமன் கத்தோலிக்கர்கள் பைபிளில் குமாரன் என்பது இன்னும் உள்ளது.

சோ, இவர் எப்படி கடவுளாவார்?




63.பிதாவின் ராஜ்யத்தில் கூட, இயேசு பானம் பண்ணுபவராக தான் இருப்பார். உணவு உண்ணாத கடவுளாக அல்ல!!


²⁹ இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

(மத்தேயு 26:29)




 64.தன்னை காப்பாற்ற சக்தியுள்ள பிதாவிடம் ஜெபம் பண்ணினார். சோ இவர் கடவுள் அல்ல!  


³⁶ "அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;"


 …  

³⁹ "சற்று அப்புறம்போய், முகங்குப்புறவிழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."


⁴² "அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."


 …  

⁴⁴ "அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்."

(மத்தேயு 26:36,39,42,44)





65.கசப்பு கலந்த காடியை சுவைத்து பார்த்தே சுவை அறிந்துகொள்ளும் நபராகவே இருந்தார்.

³⁴ "கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்."(மத்தேயு 27:34)



 


66.கடைசியாக என் தேவனே என் தேவனே என் என்னை கைவிட்டீர் என கூறினார்! இப்படிப்பட்ட தன்னை தானே இரட்சித்துக்கொள்ள இயலாதவர் கடவுளாக முடியுமா?.

⁴⁶ "ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்." (மத்தேயு 27:46)





67.வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் தனக்கு கொடுக்கப்பட்டது என சொன்னாராம்!



¹⁸ "அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது."(மத்தேயு 28:18)


கொடுக்கப்பட்டு வாங்குபவர் கடவுளா அவருக்கு கொடுத்தவர் கடவுளா?? 

உண்மையில் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டது என்பது தவறாகும். அதற்கு பின்பும் பிதாவுக்கு அடிபணிந்து (1கொரிந்தியர் 15:28), பரிந்து பேசுபவரே (1 யோவான் 2:1)

சாத்தானும் இவ்வாறு கொடுக்கப்பட்டான்-லூக்கா 4:6



68.இயேசு உலகம் முடியும்வரை அவர்களுடன் இருப்பேன் என்றாராம்!


²⁰ "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். "(மத்தேயு 28:20)


ஆனால் சத்திய ஆவி எனும் தேற்றவாளன் தான் என்றென்றும் இருப்பார் என்றும், இயேசு போனபின்னே தான் தேற்றவாளன் வருவார் என்றும் யோவான் எழுதுகிறார் இயேசு சொன்னதாக.-யோவான் 14:16,16:7


ஒருவேளை தேற்றவாளன் வருகை பற்றி தெரியாமல் மத்தேயு எழுதிவிட்டாரோ?


குறிப்பு 50ஐ பார்க்கவும்!!


மாற்குவின்படி இயேசு ஏன் கடவுளல்ல

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்