லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல
லூக்காவின்படி இயேசு ஏன் கடவுளல்ல?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
லூக்கா சுவிசேசத்தின்படி இயேசு பரிசுத்த ஆவி மூலம் மரியாளிடம் பிறந்த மனிதர். அவரை தேவன் தன் பிள்ளையாக தத்தெடுத்துக் கொண்டார்.. அவருக்கு அதிகாரங்களை கொடுத்து ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கிறார் என்பதே இதன் சுருக்கம்!
லூக்கா ஏனைய சுவிசேங்களை போலல்லாமல், இயேசு செய்த அற்புதங்கள் அனைத்துமே தேவன் நிகழ்த்தியது என கூறுவதோடு, அவ்வாறே மக்கள் புரிந்து கொண்டனர் என்பதை தெளிவாக சொல்லும் சுவிசேஷ கதையே இது!
1.அவர் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை! ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஒரு படைப்பே அன்றி வேறில்லை!
³¹ "இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக." (லூக்கா 1:31)
2.அவர் பெரியவராக இருப்பார். தேவனுடைய குமாரன் எனப்படுவாராம்.
கர்த்தராகிய தேவன் அவருக்கு இயேசுவின் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை கொடுப்பாராம்!
³² "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்." (லூக்கா 1:32)
தேவன் தான் இயேசுவுக்கு தாவீதின் சிங்காசனத்தையே கொடுக்க போகிறாராம்.. வாங்குபவர் கடவுளல்ல.. சிங்காசனத்தை கொடுப்பவரே கடவுள்
3.அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவாராம்! அவருடைய ராஜ்யத்துக்கு முடிவு இருக்காதாம்!
³³ அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். (லூக்கா 1:33)
அதாவது இவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் ராஜாவாக அல்லாமல், யாக்கோபின் குடும்பத்தாரை மட்டுமே அரசாள போகிற நபர்.
அந்த ஆட்சியை கூட தேவனே கொடுப்பார்- லூக்கா 1:32
4.இயேசு தேவனுடை குமாரன் என்பது , பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பமானதால் ஆகும் என்பதே லூக்கா பதிந்தது.
³⁴ அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.
³⁵ தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
(லூக்கா 1:34-35)
இங்கேயும் பெண் பெற்றதால் படைப்பு என தெளிவாகிறது.
5.இயேசு தேவனின் கனி அல்ல! மரியாளின் கர்ப்பத்தின் கனி ஆவார். இதை நான் சொல்லல. பரிசுத்த ஆவியால் எலிசபத்து சொன்னார்!
⁴¹ "எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு,"
⁴² "உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது." (லூக்கா 1:41-42)
6.இயேசுவை எலிசபெத் தன் ஆண்டவர் என்கிறார். அதாவது மரியாளை தன் ஆண்டவரின் தாய் என்கிறார்
⁴³ என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. (லூக்கா 1:43)
ஆண்டவர் என்பது பொதுவாக அதிகாரத்தில் இருப்போரை குறிக்க பாவிக்கப்படும்.
ஆரோன் தன் தம்பி மோசேயை தன் ஆண்டவன் என்கிறார்- எண்ணாகமம் 12:11
மேலும் இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
சோ, இது அவரை கடவுளாக்காது.
மேலும் இதில் இயேசுவை விட மரியாளே உயர்ல்தப்பட்டிருக்கிறாள்.. ஆண்டவர் தன்னிடம் வந்தார் என சொல்லாமல், ஆண்டவரின் தாய் வந்தாள் என் கூறி மரியாளையே அதிகம் சிறப்பிக்கிறது.
7.இயேசு என்பவர் தாவீதின் வம்சத்தில் அவர்களுடைய எதிரிகளிடமிருந்து தேவன் அவர்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இரட்சணியக்கொம்பாம்!
⁷⁴ "தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு,"
⁷⁵ தம்முடைய தாசனாகிய தாவீதின்வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார்.
(லூக்கா 1:74-75)
தேவன் ஒன்றும் தாவீதுடைய வம்சத்தார் அல்ல!
வேடிக்கையாக இங்கே சொல்லப்பட்டது போல, இயேசு அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவில்லை..
8.யோவான் கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணுபவனாம்
⁷⁶ "நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,"
⁷⁷ "நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய்." (லூக்கா 1:76-77)
இதிலுள்ள கர்த்தர் என்பது இயேசுவை குறிக்கும் என வாதிட்டாலும், இதே போல ஏசாயா தீர்க்கதரிசி யாவே என அழைக்கப்படிருக்கிறார்.-ஏசாயா 7:10
தேவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யாவே என அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதி 18 & 19 32:25-30
தீர்க்கதரிசிகள் கர்த்தரின் நாமத்தில் வருவார்கள்.
தாவீது ராஜா "நான் கர்த்தரின் (யாவேயின்) நாமத்தில் உன்னிடத்தில் வருகிறேன் " என சொன்னார்- 1 சாமுவேல் 17:45
தீர்க்கதரிசி காத் கர்த்தரின் நாமத்தில் பேசினான்- 1 நாளாகமம் 21:19
இவ்வாறே இயேசுவும் தீர்க்கதரிசி என்பதால் , கர்த்தரின் நாமத்தில் வருவதால் அவ்வாறு கூறப்படுகிறது.
இயேசு சுயமாக எதுவும் செய்துவிடவில்லை.
மாறாக தேவன் தான் இயேசு மூலமாக அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22
9.இயேசு மரியாளுக்கே முதற்பேரான குமாரன். மரியாளின் குமாரன் தேவனல்ல!
…
⁷ "அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்."
(லூக்கா 2:7)
10.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாவீதின் ஊரில் பிறந்தார் என தேவதூதன் மேய்ப்பர்களுக்கு சொன்னானாம்!
¹⁰ "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
¹¹ இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
(லூக்கா 2:10-11)
இங்கே கர்த்தர் என கூறப்படுவது, ராஜாக்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள்.
இயேசுவை கர்த்தராக (கர்த்தர் என்றால் ஆண்டவர் lord) , மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
அடுத்து பிறந்தவர் கடவுளல்ல! பிறக்க வைப்பவரே கடவுள்!
¹² "பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்."
."
11.மேய்ப்பர்கள் இயேசு குழந்தையை பார்த்து எல்லாவற்றுக்காகவும் தேவையே மகிமைப்படுத்தினார்கள்.
²⁰ "மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்." (லூக்கா 2:20)
அவர்கள் கூட தேவன் யார் குழந்தை யார் என அறிந்து வைத்திருந்தார்கள்.. இவர்களுக்கு தான் இன்னும் அறிவு வரவில்லை!
12.சிமியோன் என்ற தீர்க்கதரிசி இயேசுவை தேவனுடைய மெசியா என்றும், அவரை கண்டதற்காக தேவனையே ஸ்தோத்திரித்தார்.
தேவனால் ஆயத்தம் பண்ணப்பட்ட இரட்சணியமே இயேசு.. தேவனல்ல!
²⁵ "அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார்."
²⁶ கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.
²⁷ "அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாணமுறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில்,"
²⁸ "அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:"
²⁹ "ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;"
³⁰ "புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,"
³¹ தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
³² உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
(லூக்கா 2:25-32)
13.இதை கேட்டு மரியாள் ஆச்சரியப்படுகிறார். தேவதூதன் நேரடியாகஜமரியாளிடம் பேசியும் , இயேசுவை குறித்து எடுத்துச் சொல்லியும் சென்ற பின்பு கூட இயேசுவை தேவன் என அவர் நம்பவில்லை.. அதனால் தான் சிமியோன் இதை சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.
³³ அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். (லூக்கா 2:33)
14.இயேசு ஞானத்திலும் வளர்த்திலும் தேவகிருபையிலும் விருத்தியடைந்தாராம்!
⁵² "இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் ் விருத்தியடைந்தார். "(லூக்கா 2:52)
தேவனென்பவர் பூரணமானவர்.. படைப்புகள் தான் படிப்படியாக விருத்தியடைவார்கள்!
15.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என ஏசாயா வில் சொன்னது யோவானை குறிக்குமாம். (லூக்கா 3:3-5)
இங்கே கர்த்தர் என்பது பற்றி மேலே குறிப்பு 8 இல் எழுதிவிட்டேன்.
16.யோவான் இயேசுவை குறித்து அவரது செருப்பு வாரை அவிழ்ப்பதற்கு கூட நான் பாத்திரன் அல்ல என சொன்னாராம். -லூக்கா 3:16
யோவானே ஸ்திரிகளிடம் பிறந்தவர்களில் மிகப்பெரியவன் என இயேசு சொல்கிறார்-(மத்தேயு 11:11)
இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர். சோ இயேசுவின் வார்த்தைப் படி யோவானே இயேசுவிலும் பெரியவர்.
சோ அவர் கடவுளாக இயலாது
17.இயேசு ஞானஸ்நானம் பெற்று ஜெபம் செய்தார்
²¹ "ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது;"
(லூக்கா 4:21)
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!
18.பரிசுத்த ஆவி இயேசு மேல் அப்போது தான் இறங்கினார். வானத்திலிருந்து சத்தமும் டாக்ஸி நீர் என் நேசகுமாரன் என்றதாம்!
²² "பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது."
லூக்கா 3:22
ஆனால் யோவானோ கர்ப்பத்தில் இருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்-லூக்கா 1:15
மேலும் தேவனது குமாரன் என்பது புதிதான ஒன்று அல்ல.
இஸ்ரேலை (யாக்கோபின் பிள்ளைகளை) தன் குமாரன் என தேவன் சொன்னதாக யாத்திராகமம் 4:22, ஓசியா 11:1-2 இல் எழுதப்பட்டுள்ளது
சொலமோனை குறித்து அவன் எனக்கு குமாரனாக இருப்பான், நான் அவனுக்கு பிதாவாக இருப்பேன் என தாவீதிடம் சொன்னதாக எழுதப்பட்டுள்ளது- 2 சாமுவேல் 7:14-16
19.அவர் யோசேப்பின் குமாரன் என்று எண்ணப்பட்டாராம். (எண்ணப்பட்டார் என்பது பழைய பிரதிகளில் இல்லை.. லூக்கா அவரை யோசேப்பின் மகன் என கருதி அதற்கேற்ப ஆதாம் வரை வம்ச வரலாற்றை எழுதியுள்ளார்)
²³ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
(லூக்கா 3:23)
20.இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்டார். தேவனை சோதிக்க இயலாது!
உணவு சாப்பிடாததால் அவருக்கு பசி ஏற்பட்டுவிட்டது.
² நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
(லூக்கா 4:2)
உணவு சாப்பிட்டு மலம் கழித்து வாழ்பவர் பலவீனமான படைப்பே அன்றி வேறில்லை.
…
21.இயேசு அவர் மீது இறங்கிய ஆவியானவருடைய பலத்தினால் தான் செய்யவேண்டியவற்றை செய்தார்.
¹⁴ பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. (லூக்கா 4:14)
…
22.இயேசு சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்காக அபிஷேகம் பண்ணப்பட்டவரே. தேவனால் அற்புதங்களும் அனுப்பப்பட்டவரே இயேசு. தேவன் அல்ல!
¹⁸ "கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,"
¹⁹ "கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,"
²⁰ "வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது." (லூக்கா 4:18-20)
23.தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றே இயேசு கருதினார்.. தேவன் என்று அல்ல!
²⁴ ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(லூக்கா 4:24)
24.அசுத்த ஆவி ஒன்று இயேசுவை தேவனுடைய பரிசுத்தர் என சொன்னதால்!
…
³³ ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
³⁴ "அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்."
(லூக்கா 4:33-34)
இதேபோல் ஆரோனும் தேவனுடைய பரிசுத்தர் என பைபிள் சொல்கிறது. சங்கீதம் 106:16
இதில் தெய்வீகம் இல்லை!
இயேசுவை பரிசுத்தம் பண்ணியதே தேவன் தான் என இயேசு சொன்னதாக யோவான் 10:36 இல் எழுதப்பட்டுள்ளது!
அவரை பரிசுத்தம் பண்ணியவர் தான் தேவன்.. இயேசு அல்ல!
25.இயேசு பிசாசை போ என அதட்டியதும் அது ஓடிவிட்டதாம்- லூக்கா 4:35
இயேசு பேயோட்டியது தேவனது ஆவியால் என்று அவரே சொல்கிறார். -மத்தேயு 12:28.
அந்த ஆவியே ஞானஸ்நானத்தின்போதே அவர்மீது இறங்கியது-லூக்கா 3:22
விசுவாசமிருந்தால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்! மத்தேயு 21:21
சோ இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.
மேலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
26.சீமோனின் மாமியாருக்கு காய்ச்சல் நீங்க கட்டளையிட்டார் அது நீங்கியது. நோயாளிகளை சுகப்படுத்தினார்.பேய்களை ஓட்டினார்- லூக்கா 4:38-41
இதற்கு குறிப்பு 25இலும் பதில் கொடுக்கப்பட்டு விட்டது.
27.பிசாசுகள் இயேசுவை தேவனுடைய குமாரன் என சத்தமிட்டனவாம்! லூக்கா 4:41
…இதற்கும் பதில் குறிப்பு 18 போதுமானது.
28.இயேசு தேவனுடைய ராஜ்யத்தை குறித்து பிரசங்கிக்க அனுப்பப்பட்டவரே. ஆவார்.
⁴³ "அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்." (லூக்கா 4:43)
அனுப்பப்பட்டவர் கடவுளல்ல! இயேசுவை அனுப்பியவரே கடவுள்.
29.இயேசு குஷ்டரோகியை சுகப்படுத்தினாராம்!
¹² "பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்."
¹³ "அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று."
(லூக்கா 5:12-13)
இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
மேலும் இயேசுவை ஆண்டவராக மெசியாவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36.
விசுவாசம் இருந்ததால் மலையை பார்த்து கடலில் போய் விழச்சொன்னாலும் அது நிகழுமாம்-மத்தேயு 21:21..
இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.
30.இயேசு தனித்து போய் ஜெபம் பண்ணினார்.
¹⁶ "அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."
லூக்கா 5:16
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல!
31.திமிர்வாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் -லூக்கா 5:20
பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்றாராம் லூக்கா 5:24
இதைக்கண்ட மக்கள் தேவனை மகிமைப்படுதினார்கள்.லூக்கா 5:26
மை கமெண்ட்:
*இயேசு தன்னை மனுஷகுமாரன் என சொல்லி , தான் ஒரு மனுஷனே ஆவேன். கடவுள் அல்ல என்கிறார்.
*.இதை கண்ட மக்கள் கூட, இவரை தேவன் என நம்பவில்லை.. இது போன்ற மனுசனுக்கு அதிகாரத்தை கொடுத்ததே தேவன் தான் என்பதால், தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
*இயேசுவுக்கு எல்லா பாவத்தையும் மன்னிக்க பூமியில் அதிகாரமில்லை.. பாரிசவாதத்துக்கு காரணமான பாவம் (??), அதை தான் மன்னிக்க முடிந்தது.
ஆனால் இயேசுவை கொல்ல பார்த்த பாவத்தை இயேசுவால் மன்னிக்க முடியல.. பிதாவிடம் மன்னிக்க வேண்டினார் என எழுதப்பட்டுள்ளது.(லூக்கா 23:34
*தீர்க்கதரிசிகளுக்கு பாவத்தை மன்னிக்க இயலும் என்பதே பைபிள் கூறுவது. அதனால் தான் சவுல் தன் பாவத்தை மன்னிக்க சாமுவேல் தீர்க்கதரிசியிடம் வேண்டினார். 1 சாமுவேல் 15:25
இயேசு தீர்க்கதரிசி என்பதால் இது முடிந்தது. அது கூட தேவன் கொடுத்ததே.
*இயேசுவின் கூற்றுப்படி, பரிசுத்த ஆவியை பெற்றவர்களுக்கு பாவத்தை மன்னிக்க இயலுமாம். சீடர்களுக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்,
"“"எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்."”
— John 20:23 (TBSI)
சோ, பரிசுத்த ஆவி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரமாக இது பார்க்கப்படுகிறது.
*இயேசுவுக்கு ஆதிமுதல் பரிசுத்த ஆவி இருக்கவில்லை.. மாறாக ஞானஸ்நானம் பண்ணிய பின்னே பரிசுத்த ஆவி வழங்கப்பட்டது.(லூக்கா 3:21-22
*பரிசுத்த ஆவி வழங்கப்பட்ட பின்பு கூட, இயேசு பாவம் செய்வோரை மன்னிப்பவராக இல்லாமல், அவர்களுக்கு பிதாவிடம் பரிந்து பேசுபவராகவே உள்ளார் என யோவான் எழுதுகிறார். 1 யோவான் 2:1
சோ, இதுவெல்லாம் இயேசு என்ற மனிதனை கடவுளாக்காது.
32.பரிசேயர் நினைத்ததை இயேசு அறிந்துகொண்டாராம்-லூக்கா 5:21-22
மை கமெண்ட்:
பைபிள் படி தீர்க்கதரிசிகளுக்கு தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால், அறிந்திருப்பார்கள்.
*அனனியா என்பவன் தன் சொத்துக்களை விற்று சிலதை தனக்கு வைத்துக்கொண்டு, சீடர்களிடம் மற்றதை கொடுக்கிறான். பேதுரு இதை அறிந்திருந்தான் என கூறப்படுகிறது.
அப்போஸ்தலர் 5:1-3
*தீர்க்கதரிசிகள் மறைவான விடயங்களை (தேவன் வெளிப்படுத்தி கொடுப்பதால்) அறிந்திருப்பார்கள் என்பதே அக்கால மக்களின் நம்பிக்கையும்கூட.
"இவன் தீர்க்கதரிசியாக இருந்தால், தம்மை தொடுகிற ஸ்திரீ இன்னாள் என்றும் இப்படிப்பட்டவள் என்றும் அறிந்திருப்பார்"-லூக்கா 7:39
* கேயாசி நாகமானிடம் செய்த செயல்களை பார்க்காமலேயே எலீஷா அறிந்திருந்தான் என கூறப்படுகிறது. 2 இராஜாக்கள் 5:19-26
சோ, தீர்க்கதரிசி இப்படி இருப்பதால் தெய்வீகமெல்லாம் இல்லை!!
33.மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவர் என சொன்னாராம்- லூக்கா 6:5
-முதலாவது ஓய்வு நாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்ட து- மாற்கு 3:27
-இயேசு மனுச குமாரன். மனுசகுமாரன் ஒரு மனிதனே.
-இயேசுவை ஆண்டவராக தேவனே ஆக்கினார்- அப்போஸ்தலர் 2:36
இயேசுவை ஆண்டவராக ஆக்கியவரே கடவுள். இயேசு வல்ல!
34.சூம்பின கையுடையவனை சுகப்படுத்தினார்- லூக்கா 6:6-8
இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22.
35.மலையில் ஏறி இரவு முழுவதும் தேவனிடம் ஜெபம் செய்தார் இயேசு
¹² "அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்."
(லூக்கா 6:12)
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள். இயேசு அல்ல!!
36.இயேசு மரித்துப் போன ஒரு பையனை உயிர்ப்பித்தாராம்.
இதை கண்ட மக்கள் கூட இயேசுவை மகா தீர்க்கதரிசி என்று கூறியதோடு தேவனை தான் மகிமைப்படுத்தினார்கள்.
¹² "அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்."
¹³ "கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி,"
¹⁴ "கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்."
¹⁵ "மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்."
¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)
தேவன் தீர்க்கதரிசி மூலம் அற்புதம் செய்வார் என யூதர்கள் அறிந்திருந்ததாலே இவ்வாறு சொன்னார்கள்.
இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
37.தேவன் மக்களை சந்தித்தார் என மக்கள் ஏன் சொன்னார்கள்?
¹⁶ "எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்." (லூக்கா 7:12-16)
லூக்கா 7:16
தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி அற்புதங்கள் செய்வதையே தேவன் மக்களை சந்தித்தார் என கூறப்படுகிறது.
மோசேயும் ஆரோனும் இஸ்ரேலியர் மத்தியில் அற்புதம் செய்ததால், "கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை சந்தித்தார்" என மக்கள் சொன்னதாக யாத்திராகமம் 4:31 கூறுகிறது.
இது போல் பல வசனங்களை பழைய ஏற்பாட்டில் காணலாம்! அனைத்தும் குறிப்பிட்டால் பதிவு இதைவிட நீண்டு விடும் என்பதால் தவிர்க்கிறேன்!
சோ, இதில் இயேசு அவர்களுக்கு தெய்வீகம் என வாதிட எந்த முகாந்திரமும் இல்லை!!!
38.இயேசு தேவனால் அனுப்பப்பட்டவரே. அவருக்கு முன்பாக இயேசுவின் வழியை ஆயத்தம் பண்ண யோவான் அனுப்பப்பட்டாராம்.
.
²⁷ "இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்." லூக்கா 7:27
அனுப்பப்பட்ட இயேசு கடவுளல்ல!! அவரை அனுப்பியவரே கடவுள்!
39.யோவான் இயேசுவை விட பெரிய தீர்க்கதரிசி
²⁸ "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."-லூக்கா 7:28
இயேசுவும் ஸ்திரீயிடம் பிறந்தவர்.
…
40.தேவனுடைய வசனத்தை கேட்டு அதன்படி செய்கிறவர்கள் இயேசுவுக்கு தாயும் சகோதரர்களும் ஆவார்களாம். லூக்கா 8:21
தேவனுக்கு தாயும் சகோதரருமாக மனிதர்கள் ஆக முடியாதே...
41.படகு ஓடும்போது இயேசுவுக்கு நித்திரை போய்விட்டது-லூக்கா 8:23
தூங்குபவர் கடவுளல்லவே.. பலவீனமான மனிதனுக்கு தான் தூக்கம் வரும்.
42.இயேசு காற்றை அதட்டினாராம்.. உடனே அமைதி ஏற்பட்டு விட்டதாம்!
²³ "படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது."
²⁴ "அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய்,, அமைதலுண்டாயிற்று."
²⁵ "அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்."(லூக்கா 8:23-25)
சீடர்கள் இங்கே பயப்பட காரணம் விசுவாசம் இல்லாமை என 8:25இல் கூறுகிறார்.
கடுகளவு விசுவாசம் இருந்தால் காட்டு அத்தி மரத்தை கடலில் போய் போட்டுக்கொள்ள சொன்னாலும் அப்படியே ஆகுமாம்-லூக்கா 17:6
இயேசுவுக்கு விசுவாசம் இருந்ததால் இது முடிந்தது.
இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
43.பிசாசுக்கூட்டத்தை பன்றிக்கூட்டத்தில் அனுப்பிய பின், பிசாசுபிடித்திருந்தவனை சுகமாக்கியது தேவன் தான் என இயேசுவே சொல்கிறார்.
…
³⁸ பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
³⁹ "இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்."(லூக்கா 8:38-39)
அதாவது "தேவன் உனக்கு செய்தவை கையெல்லாம் அறிவி" 8:39 அறு சொன்னார்.
ஏனெனில் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
44. 12 வருடம் நோயுள்ள பெண் இயேசுவை தொட்டதும் அவளது நோய் நீங்கி விட்டது.
ஆனால் இயேசுவுக்கு யார் அவரை தொட்டார் என தெரியவில்லை! தன்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை உணர்ந்தார். ஆனால் யாரென அறிய கேட்கிறார். (லூக்கா 8:46)
⁴³ "அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ,"
⁴⁴ "அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று."
⁴⁵ "அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்."
⁴⁶ அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
⁴⁷ "அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்."
⁴⁸ "அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்."(லூக்கா 8:43-48)
தொட்டது யாரென அறியாதவர் அறிவில் குறைவுள்ளவர்.
அதுமட்டுமின்றி இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22
45.இயேசு சீடர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார்.(லூக்கா 9:18)
இயேசுவை யூதர்கள் யாரும் தேவனென நம்பவில்லை-லூக்கா 9:19
¹⁸ "பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்."
¹⁹ "அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்." (லூக்கா 9:18-19)
46.சீடர்கள் கூட இயேசுவை தேவனுடைய கிறிஸ்து என்றே நம்பினர். தேவன் என நம்பவுமில்லை
²⁰ அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.
²¹ அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.(லூக்கா 9:20-21)
47.இயேசு தம் மகிமையுடனும் பிதாவுடைய மகிமையுடனும் தேவதூதரின்ஸமகிமையுடனும் வருவாராம்!
²⁶ "என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்."(லூக்கா 9:26)
இயேசுவை தேவனால் தான் மகிமைப்படுத்த இயலும். அதனால் தேவனிடம் தன்னை மகிமைப்படுத்த வேண்டுகிறார்-யோவான் 17:2
48.மீண்டும் இயேசு ஜெபம் பண்ண மலைக்கு ஏறினார்.
²⁸ "இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்."
²⁹ "அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது." லூக்கா 9:28-29
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.
49.பொல்லாத வேறொரு ஆவியை சீடர்களால் விரட்ட முடியாமல் போய்விட்டது. காரணம் அவர்களுக்கு விசுவாசம் இல்லை-லூக்கா 9:39-41
பிறகு இயேசு அதை விரட்டினார். அப்போது மக்கள் தேவனுடைய மகத்துவத்தை குறித்து பிரம்மித்தார்கள்-லூக்கா 9:42-43
காரணம் தேவன் தான் இயேசு மூலம் அற்புதம் செய்தார் - அப்போஸ்தலர் 2:22
³⁹ "ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது."
⁴⁰ "அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்."
⁴¹ "இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்."
⁴² "அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்."
⁴³ அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: (லூக்கா 9:39-43)
50.சிறுபிள்ளைகளை இயேசுவுக்காக ஏற்றுக்கொள்பவன் இயேசுவை ஏற்றுக்கொள்பவன். இயேசுவை ஏற்றுக்கொள்பவன் அவரை அனுப்பியவரை ஏற்றுக்கொண்டவன்.
⁴⁸ அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். லூக்கா 9:48
இதன் மூலம் இயேசுவை அனுப்பி வைத்த பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.
51.இயேசுவை பின்பற்றாத ஒருவன் இயேசுவின் நாமத்தினால் பிசாசுகளை விர்டினானாம்!
⁴⁹ "அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்."
⁵⁰ அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். (லூக்கா 9:49-50)
இயேசு பிசாசுகளை தேவனுடைய விரலினால் விரட்டினாராம்.லூக்கா 11:20
52.சீடரை அசட்டை பண்ணுபவன் இயேசுவை அசட்டை பண்ணுபவன். இயேசுவை அசட்டை பண்ணுபவன் அவரை அனுப்பினவரை அசட்டை பண்ணுபவன்
¹⁶ "சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைப்பண்ணுகிறான் என்றார்."லூக்கா 10:16
மீண்டும் இயேசுவை அனுப்பிய பெரியவர் இருக்கிறார் என தெளிவாகிறது.
53.இயேசு சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்தாராம்.
¹⁹ "இதோ, சர்ப்பங்களையும், தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது." (லூக்கா 10:19)
இயேசுவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவரே- மத்தேயு 28:18
அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுத்தார் பட்டுள்ளது. அதை அவன் விரும்பியவனுக்கு கொடுக்க இயலுமாம்- லூக்கா 4:6-7
சோ இதை வைத்து தெய்வீகம் உண்டு என கூற முடியாது.
.
54.பிதா தான் வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவர்-
²¹ "அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது."
லூக்கா 10:21
இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
55.இயேசுவுக்கு பிதாவினால் சகலதும் ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளதாம்
²² "சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்."லூக்கா 10:22.
ஒப்புக்கொடுத்தவரே கடவுள்.. கொடுக்கப்பட்டவர் அல்ல!
அதேபோல் சாத்தானும் ராஜ்யங்களின் மீது அதிகாரம் ஒப்புக்கொடுக்கபட்டுள்ளதாம்- லூக்கா 4:6
56. இயேசு மீண்டும் ஜெபம் செய்கிறார்
சீடர்களுக்கு பிதாவிடம் ஜெபம் செய்யுமாறு கற்றுக்கொடுத்தார்
¹ "அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான்."
² "அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக;"
(லூக்கா 11:1-2)
இதன் மூலம் இயேசு கடவுளல்ல என்பதை இயேசுவே நம்பவில்லை என தெளிவாக புரிகிறது
57.இயேசு தேவனுடைய விரலினால் பிசாசுகளை விர்டினாராம்
¹⁹ "நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள்."
²⁰ "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே."
லூக்கா 11:19-20
தேவன் இவரல்ல!
58.இயேசு கர்ப்பத்தில் சுமத்தப்பட்டு முலைப்பால் குடித்து வளர்ந்தவர்.. தேவனுடைய வார்த்தையை கேட்டு நடப்போரே இயேசுவை சுமந்த கர்ப்பத்தைவிடவும் அவர் பாலுண்ட முலைகளைவிடவும் பாக்கியவான்கள்
²⁷ "அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்."
²⁸ "அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்."
லூக்கா 11:27-28
இதன் மூலம் இயேசு பலவீனமாக படைப்பு என தெளிவாகிறது. தேவன் அல்ல!.
59.தேவனுக்கு பயப்படுமாறு இயேசு போதித்தார்.இயேசுவுக்கு சீடர்கள் சிநேகிதர்கள் என்பதால் அவர்கள் அவருக்கு பயப்பட தேவையில்லை.. ஆனால் தேவனுக்கு பயப்பட வேண்டும்.
⁴ "என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்."
⁵ "நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
லூக்கா 12:4-5
60. இயேசு பரிசுத்த ஆவியிலும் தாழ்ந்தவர்.. ஆவியை திட்டினால் மன்னிப்பில்லை.. ஆனால் இயேசுவை திட்டினால் மன்னிப்பு கிடைக்கலாம்
¹⁰ எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ்சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. லூக்கா 12:10
.61.இயேசு முதுகுவளைந்த பெண்ணை சுகப்படுத்தியபோது கூட அந்த பெண்ணும் தேவனை தான் மகிமைப்படுத்தினாள்- லூக்கா 13:11-13
¹¹ அப்பொழுது பதினெட்டுவருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
¹² "இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,"
¹³ "அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்." லூக்கா 13:11-13
காரணம் அவளுக்கு தெரியும்.. இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22
62.குஷ்டரோகிகள் பத்து பேரை சுகப்படுத்தினாராம். சுகப்படுத்தப்பட்டவர்களில் ஒருவன் மட்டுமே திரும்பி வந்தான். அவனும் தேவனையே மகிமைப்பஞுத்தினான்- லூக்கா 17:15
¹² "அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:"
¹³ "இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்."
¹⁴ "அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்."
¹⁵ "அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி,"
லூக்கா 17:12-15
63.இயேசுவிடம் முகங்குப்புற விழுந்தானாம் அவன்
¹⁶ "அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்."லூக்கா 17:16
தீர்க்கதரிசிகள் பாதத்தில் விழுந்து வணங்கும் வழக்கம் அவர்களிடம் இருந்தது. (1 சாமுவேல் 28:14)
ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாக உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20
64.ஒருவன் இயேசுவை நல்ல போதகரே என கூப்பிடுகிறார்.. உடனே இயேசு என்னை ஏன் நல்லவன் என்கிறாய் என கேட்டு , தேவன் ஒருவனை தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என கூறி தனக்கு தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.
…
¹⁸ "அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்."
¹⁹ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
லூக்கா 18:18-19
65.இயேசு ஒரு குருடனை சுகப்படுத்தியபோது , அவனும் தேவனையே மகிமைப்படுத்தினான். மக்களும் தேவனையே மகிமைப்படுத்தினார்கள்
⁴¹ "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்."
⁴² "இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்."
⁴³ "உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள். "
(லூக்கா 18:41-43)
அவர்களெல்லாரும் இயேசுவை தேவனல்ல என அறிந்திருந்தனர்.
இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார்- அப்போஸ்தலர் 2:22
..
66.இயேசு கர்த்தருடைய நாமத்தில் வந்தார் . அதற்காக மக்கள் தேவனை தான் புகழ்ந்தார்கள்
³⁷ "அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,"
³⁸ "கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்." லூக்கா 19:37-38
கர்த்தருடைய நாமத்தில் தான் தாவீதும் வந்ததாக வேறொரு ராஜாவிடம் சொன்னார்- 1 சாமுவோல் 17:45
சோ இதில் தெய்வீகம் இல்லை!!
மக்களும் தேவனை தான் புகழ்ந்தனர்.
67.இயேசு தேவனுடைய மார்க்கத்தை போதிப்பவர்
²¹ "அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்."
லூக்கா 20:21
…
.68. கிறிஸ்த்து தாவீதின் குமாரன் என எப்படி சொல்லலாம்? காரணம் தாவீது அவரை ஆண்டவர் என சொன்னாரே என்கிறார்
⁴¹ அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
⁴² "நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,"
⁴³ கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
⁴⁴ "தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்."
முதலில் சங்கீதம் 110:1 தாவீது மெசியாவை பற்றி பாடியதல்ல.. தாவீதை பற்றி பாடகர் பாடியது ஆகும்.
ஒரு பேச்சுக்கு மெசியாவை குறித்து தாவீது பாடியிருந்தால், மெசியா தாவீதின் குமாரனில்லை என ஆகிவிடுவாரா?
ஆரோன் தன் தம்பியான மோசேயை ஆண்டவன் என சொல்லவில்லையா?? யாத்திராகமம் 32:22
அண்ணன் தன் தம்பியை ஆண்டவனே என கூறியிருக்க முடியுமாயின், தாவீதை விட பெரிய ராஜாவான மெசியாவை தாவீது அப்படி கூறுவதில் ஆச்சரியம் இல்லையே..
இதில் இயேசு சிறு புரிதல் குறைபாட்டை விட்டுள்ளார். இறைவனுக்கு இப்படி நிகழாது. (இது மத்தேயுவிலும் இடம்பெற்றுள்ளது.. நான் அதை மத்தேயு பற்றிய ஆக்கத்தில் குறிப்பிடவில்லை
69.ஆலயத்தின் ஒரு கல்லின் மீது மறு கல் இல்லாதவாறு இடிபட்டு போகும் என இயேசு முன்னறிவித்தார்.
⁶ அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
லூக்கா 21:6
ஆனால் இன்றுவரை மேற்கு சுவர் இருந்துகொண்டே உள்ளது..
70. மனுசகுமாரன் மிகுந்த வல்லமையோடு மேகத்தில் வருவாராம்!
²⁷ அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
லூக்கா 21:27
இங்கே கூட தன்னை மனுஷகுமாரன் என கூறி தெய்வீகம் இல்லை என நிரூபித்தார்.
71.தேவனுடைய ராஜ்யத்தில் கூட இயேசு அப்பம் சாப்பிட்டு திராட்சை பழரசம் குடிப்பவராகவே உள்ளார்.
¹⁶ "தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,"
¹⁷ "அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;"
¹⁸ தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
லூக்கா 22:16-18
அப்போது கூட அவர் மனிதராக தான் இருப்பார்.. தேவனாக அல்ல
72.இயேசுஸசீமோனுக்காக வேண்டிக்கொண்டாராம்.
…
³¹ "பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்."
³² நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.லூக்கா 22:31-32
இயேசு யாரிடம் வேண்டினாரோ அவரே கடவுள்..
73.இயேசு தேவனிடம் தன்னை காப்பாற்ற சித்தமிருந்தால் காப்பாற்றுமாறு ஜெபம் பண்ணினார்.
…
⁴¹ "அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:"
⁴² "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்."
லூக்கா 22:41-42
இயேசு யாரிடம் ஜெபம் செய்தாரோ அவரே கடவுள்.. இயேசு அல்ல
74.இயேசுவை வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரை பலப்படுத்தினாராம்.
⁴³ "அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்." லூக்கா 22:43
தேவதூதனால் பலப்படுத்தப்பட காரணம் அவர் தேவனல்ல.. தேவதூதனிலும் வல்லமையால் தாழ்ந்தவர் என்பதால் தான்!!
75 அவர் மிகவும் பயந்தாராம்.ஊக்கத்தோடே ஜெபம் செய்தாராம்.
⁴⁴ "அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது."
லூக்கா 22:44
அவர் பலவீனமான உணர்வுள்ள மனிதரேயன்றி கடவுளல்ல..
76.இயேசு தேவனது வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.
⁶⁹ இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.லூக்கா 22:69
சர்வ வல்லமையுள்ள தேவனாக இவர் இல்லை.. மாறாக அவருக்கு வலது பக்கத்தில் வீற்றிருப்பாராம்.. இது கூட அவர் தேவனல்ல என்பதற்கு ஆதாரம்.
77.இயேசு அவரை தேவனுடைய குமாரன் என்றாராம்
⁷⁰ "அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்."
லூக்கா 22:70
இயேசு தன்னை தேவன் பெற்றெடுத்த பிள்ளை என சொல்லவில்லை .. மாறாக பழைய ஏற்பாட்டில் உள்ளது போல் தான் சொல்லியிருக்கிறார்.
இதை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன்.
77.தன்னை கொடுமைப்படுத்தி சிலுவையில் அறைவோரை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டினாராம். காரணம் பிதா தான் தேவன்.
³⁴ "அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்." லூக்கா 23:34
78.இயேசு தன் ஆவியை பிதாவுடைய கையில் ஒப்புவிக்கிறேன் என்று சத்தமிட்டு சொன்னாராம்!
இதைக்கேட்ட நூற்றுக்கு அதிபதி அவரை நீதிபரன் என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.
⁴⁶ "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்."
⁴⁷ "நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்."
லூக்கா 23:46-47
மரணிப்பவர் கடவுளல்ல!! அவரது உயிரை தன் கையில் வாங்குபவரே கடவுள். நூற்றுக்கு அதிபதி கூட அவரை யாரென அறிந்திருந்தான். அவரை கடவுள் எனஜசொல்லவில்லை!
79.இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை கூட ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. காரணம் அவர் தேவனல்ல என அறிந்திருந்தனர் என்பதால் தான். அவர் தேவனல்ல என்பதால் தான் அதை குறித்து ஆச்சரியப்பட்டனர்.
¹¹ "இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை."
¹² "பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்."
(லூக்கா 24:11-12)
80.சீடர்கள் கூட இயேசுவை வல்லமையுள்ள தீர்க்கதரிசி என்றே நம்பினார்கள். கிறிஸ்தவர்களை போல அவரை வல்லமையுள்ள தேவன் என நம்பவில்லை!
¹⁸ அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்.
¹⁹ அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார்.
லூக்கா 24:18-19
.
81.இந்த போலி உயிர்த்தெழுதலின் பின்பு கூட இயேசு உடலோடு தான் இருந்தார்.. உணவு சாப்பிடுபவராக தான் இருந்தார்.
³⁶ "இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்."
³⁷ "அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள்."
³⁸ அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன?
³⁹ "நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி,"
⁴⁰ தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
⁴¹ ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார்.
⁴² அப்பொழுது பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
⁴³ "அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து,"
லூக்கா 24:36-43
82.இயேசு பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டாராம்.
எடுத்துக்கொள்ளப்பட்டவர் கடவுளா? எடுத்தவர் கடவுளா?
…
⁵¹ "அவர்களை ஆசிர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்." லூக்கா 24:51
83.அவரை பணிந்து கொண்டார்களாம்! தீர்க்கதரிசிகளை பணிந்து கொள்ளும் வழமை அவர்களுக்கு உண்டு (1 சாமுவேல் 28:14). ராஜாவை வணங்குவது அதைவிட அதிகமாகவே உள்ளது. உதாரணமாக 1 நாளாகமம் 29:20.
⁵² "அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து," லூக்கா 24;52
84.இதன் பின்பு கூட, தேவனை தான் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தனர். இயேசுவை அல்ல
⁵³ நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென். லூக்கா 24:53
கருத்துகள்
கருத்துரையிடுக