யோவானின் படி இயேசு ஏன் கடவுளல்ல! பாகம் 2
52.இயேசுவை பிதா முத்திரித்திருக்கிறாராம்.. முத்திரித்தவர் தேவனா முத்திரிக்கப்பட்டவர் தேவனா?
²⁷ "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்."
(யோவான் 6:27)
53.தேவனுக்கேற்ற கிரியை என்பது தேவன் அனுப்பியவரை நம்புவது என இயேசு கூறி, தன்னை தேவனால் அனுப்பப்பட்டவர் என்கிறார்.
²⁸ அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
²⁹ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
(யோவான் 6:28-29)
-------------
54.இயேசு வானத்திலிருந்து தேவனால் கொடுக்கப்பட்ட அப்பமாம்!
³² "இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
³³ வானத்திலிருந்திறங்கி. உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.
³⁴ "அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள்."
³⁵ "இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்."
(யோவான் 6:33-35)
தேவன் கொடுத்த சாப்பாடும் தேவனும் ஒன்றாகுமா?? சாப்பாடு கடவுளாகுமா? இந்த அப்பத்தை கொடுத்தவர் கடவுளா?
-------------
55.இயேசு எதையும் சுயமாக உடையவரல்ல!! பிதா கொடுப்பதே அவருக்கு வருகிறது.
³⁷ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. (யோவான் 6:37)
-----------------
56.இயேசு பூமிக்கு வந்தது, அவரை அனுப்பியவருடைய சித்தத்தின்படி செய்யவே என்கிறார்.
³⁸ "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்." (யோவான் 6:38)
இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்தார் என இதை எழுதிய நபர் நம்பியதால் அதை இயேசுவுடைய வாயில் போட்டிருக்கிறார்.
காரணம், இயேசு பிறக்க முன்பு இயேசு இருக்கவே இல்லையே!! தேவனது ஒரு கட்டளை மூலம் மரியாள் இயேசுவை பெற்றெடுத்ததால், வார்த்தை தான் மனிசனானது என நம்பிய யோவான், இயேசு குழந்தையாக பிறந்ததால், தேவனிடம் இயேசு ஏற்கனவே அவரது மடியில் இருந்த குழந்தை என நம்பினார்.
அதன் வெளிப்பாடே இது!!
-----------------
57. இயேசு கடைசி நாளில் அவரை நம்பியோரை எழுப்புவது அவரை அனுப்பினவருடைய சித்தமாம்! இயேசுவுடைய சித்தம் அல்ல!
³⁹ "அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது."
⁴⁰ "குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்."
(யோவான் 6:39-40)
இயேசு தேவனுக்கு அடிபணிந்திருக்கும் அவரது பையன் என்பதே இவை கூறும் கருத்து.. ஒரே மெய்யான தேவனாக இயேசுவை யோவான் சித்தரிக்கவில்லை!
-------------------
58.பிதா இழுத்துக்கொண்டால் மட்டுமே இயேசுவிடம் ஒருவன் வருவானாம்! அதேபோல் பிதாவிடம் கேட்டு கற்றுக்கொள்பவன் தான் வருவானாம்
⁴⁴ என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
⁴⁵ எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
(யோவான் 6:44-45)
அதாவது இயேசுவாக தன் வல்லமையால் யாருக்கும் நேர்வழி கொடுக்க இயலாது.. மாறாக பிதாவே கொடுக்கிறார் என்பதே இது கூறும் கருத்து!
-----------------------------
59. இயேசு பிதாவை கண்டவராக சித்தரிக்கப்படுகிறது. இதன் மூலம் பிதா வேறொரு நபர் என அறிய்ப்படுகிறார்.
⁴⁶ "தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்."(யோவான் 6:46)
இயேசு தேவனுடைய பையன் என நம்பியதால், அவர் தன் தகப்பனை கண்டிருப்பார் என்பதே இதன்மூலம் யோவான் சொல்ல வருகிறார்.
-------
.60.இயேசு ஜீவனுள்ள பிதாவின் மூலமாக தான் பிழைத்திருக்கிறாராம்!
⁵⁷ "ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்."(யோவான் 6:57)
அதாவது இயேசு சுயமாக பிழைத்திருக்கவில்லை! அப்படி இருக்க இவர் எப்படி ஒரே தேவனாவது??
--------------
61.இயேசு ஏற்கனவே இருந்த இடத்திற்கு ஏறிப்போவாராம்!
⁶² மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? (யோவான் 6:62)
இயேசு ஏற்கனவே குழந்தையாக தேவனிடம் இருந்தார் என்பதே இது கூறவரும் மறைமுக கருத்து!
--------------
62.இயேசு சொல்லுகிற வசனங்கள் ஆவியும் ஜீவனுமாக இருக்கிறதாம்!
⁶³ "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது." (யோவான் 6:63)
இயேசு சொல்லக்கூடிய வசனங்கள் அவருடையதல்ல.. தேவனுடையது என்பதால் அவை ஆவியும் ஜீவனுமாக உள்ளன
-------
.
63.இயேசுவை அவரது சொந்த சகோதரர்கள் கூட ஆரம்பத்தில் நம்பவில்லை. தேவனுக்கு சகோதரர் இல்லை!
⁵ அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள் (யோவான் 7:5)
--------.
64.இயேசுவின் உபதேசம் அவருடையவை அல்ல!. அவரை அனுப்பியவருடையதாம்! அதுமட்டுமின்றி இயேசு சுயமகிமையௌ தேடாமல் அனுப்பினவருடைய மகிமையையே தேடுபவராம்!
¹⁶ "இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது."
¹⁷ "அவருடைய சித்தத்தின்படி செய்யமனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான்."
¹⁸ "சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை." (யோவான் 7:16-18)
-------------
65.இயேசு சுயமாக வரவில்லையாம்! பிதா தான் அவரை அனுப்பினாராம்!
²⁸ "அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்."
²⁹ "நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார்."(யோவான் 7:28-29)
அனுப்பப்பட்டவர், சுயமாக வராதவர் எப்படி ஒரே தேவனாவார்?
-----------------
66.இயேசுவின் பேச்சை கேட்டவர்கள் கூட அவரை தீர்க்கதரிசி என்றும் கிறிஸ்து என்றும் தான் சொன்னார்கள்-(யோவான் 7:40-41)
-----------
67.இயேசு உலகத்துக்கு ஒளியாக இருக்கிறாராம்! அவரை பின்பற்றுபவரும் ஜீவ ஒளியை அடைவார்களாம்!
¹² "மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்." (யோவான் 8:12)
இருளான பாதையில் செல்வதற்கு வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதல் தான் ஒளி..
-------
68.இயேசு வேறு பிதா வேறு என மூளை உள்ள எல்லோரும் புரிந்துகொள்வார்கள். ஆனால் கிறாஸ்தவர்களிலுள்ள ஒரு பிரிவினர் இயேசு தான் பிதா என்று வேறு கூறுகிறார்கள். அவர்களுக்கு பதிலாக இயேசுவும் பிதாவும் இரண்டு பேர் என இயேசு நேரடியாக சொல்வதாக யோவான் எழுதுகிறார்.
¹⁷ இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே.
¹⁸ "நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார். (யோவான் 8:17-18)
------------"
69.நானே அவர் என இயேசு சொன்னதால் அவர் தன்னை கடவுளென வாதிட்டதாக மடத்தனமான வாதத்தை சிலன் வைப்பார்கள்!
²⁴ ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.
²⁵ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.
²⁶ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார்.
²⁷ பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
²⁸ "ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்."
(யோவான் 8:24-28)
தான் பிதாவால் அனுப்பப்பட்ட கிறிஸ்த்து என்பதை தான் அவ்வாறு சொல்கிறார் என படித்தாலே புரிந்துவிடும்.. ஒரு வசனத்தை மட்டும் பிடித்து மற்றதை விட்டுவிட்டு பார்த்தால் தப்பாக தான் தெரியும்!
----------------
70.இயேசுவை அனுப்பியவர் இயேசுவுடனே இருக்கிறாராம். அவருக்கு பிரியமானவைகளையே இயேசு செய்பவராம்!
²⁹ "என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியேயிருக்கவிடவில்லை என்றார்." (யோவான் 8:29)
இயேசு தேவனால் பக்கபலம் கொடுக்கப்பட்டதாக தான் இவை சொல்கின்றன.
----------
71.இயேசு தேவனிடத்தில் சத்தியத்தை கேட்ட மனுசன் என்றே இயேசு சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.
⁴⁰ "தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே." (யோவான் 8:40)
--------------
72.இயேசு சுயமாக வரவில்லை.. அவரே இயேசுவை அனுப்பினாராம்!
⁴² "இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்." (யோவான் 8:42)
சுயமாக வராதவர் தேவனா?
-----------+
73.இயேசு தனக்கு மகிமையை தேடமாட்டாராம்! அதை தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறாராம்!
⁵⁰ "நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்." (யோவான் 8:50)
---------------.
74.இயேசு ஆப்ராகாமிற்கு முன்பே இருக்கிறாராம்!
⁵⁶ உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.
⁵⁷ "அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்."
⁵⁸ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 8:56-58)
ஆப்ரகாம் இயேசுவுடைய நாளை கண்டு களிகூர்ந்தான் என கூறப்படுவதிலிருந்து, ஆப்ரகாம் தீர்க்கதரிசனத்தில் இதை கண்டார்.. அந்த படி இயேசு தேவனுடைய சித்தத்தில் ஆப்ரகாமுக்கு முன்பே இருக்கிறார் என்பதே இதன் கருத்து.
ஆனாலும் இயேசு ஆரம்பத்திலேயே தேவனுடைய குழந்தையாக மடியில் இருந்தார் என்பதே இப்புத்தகம் சொல்லும் கருத்து!
--------
75.இயேசு மூலம் பாரவையடைந்த குருடன் கூட இயேசுவை தேவன் என நம்பவில்லை!! மாறாக தீர்க்கதரிசி என்றே நம்பினான்.
¹⁷ "மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான்."(யோவான் 9:17)
-----------
76.இயேசுவை சுகப்படுத்தப்பட்ட குருடன் பணிந்து கொண்டாராம்!
³⁵ "அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார்."
³⁶ "அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான்."
³⁷ "இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே, பேசுகிறவர் அவர்தான் என்றார்."
³⁸ "உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான்." (யோவான் 9:35-38)
இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
பணிந்துகொள்வது பைபிளில் வழமையாக காணக்கிடைக்கும்
.தாவீதையும் தேவையும் மக்கள் பணிந்து கொண்டதாக பைபிளில் காணமுடிகிறது.
“"அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்தரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,"”
— 1 நாளாகமம் 29:20 (TBSI)
---------------
77.இயேசு ஆடுகளுக்காக உயிரை கொடுப்பாராம்! அதே உயிரை பிதா திருப்பி கொடுப்பாராம்!
¹⁵ நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
¹⁷ நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக்கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். (யோவான் 10:17-15,17)
உயிரை திருப்பி இவருக்கு கொடுக்கிறவர் தான் கடவுள்.. இவரல்ல!!
----------
78.இயேசுவுக்கு அந்த தன் உயிரை கொடுக்கவும் அதை திரும்ப எடுக்கவும் அதிகாரம் உண்டாம்!! இந்த கட்டளையை பிதா விடம் பெற்றுக்கொண்டாராம!
¹⁸ "ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்."(யோவான் 10:18)
பெற்றுக்கொண்டார் கடவுளல்ல!! கொடுத்தவரே கடவுள்!
-------------
79.இயேசுவும் பிதாவும் ஒரே நபர் என இயேசு சொன்னாரா? நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம என்பதன் அர்த்தம்:
“"நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதுமில்லை."”
²⁹ அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
³⁰ நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
இயேசுவின் கையிலிருந்து பிதா அவருக்கு கொடுத்த ஆடுகளை ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. காரணம் பிதா எல்லோரிலும் பெரியவர். அவரது கையிலிருந்து யாருக்கும் பறிக்க இயலாது. . பிதா என்னை கைவிட்டுவிடவில்லை.. நாம் ஒன்றாக ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்று தான் அதை படித்தால் புரிகிறது.
இது ஒற்றுமையை தான் குறிக்கிறது என்பதற்கு இதே யோவான் 17 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது.
²⁰ "நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், வேண்டிக்கொள்ளுகிறேன்."
²¹ "அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்."
²² "நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்."
(யோவான் 17:20-22)
அதாவது பிதா இயேசுவுடன் ஒற்றுமையாக தான் உள்ளார். அதனால் அவரது கையிலிருந்து ஆடுகளை பறிக்க முடியாது என்றே இங்கே கூறப்படுகிறது!
--------------------
80.கிறிஸ்தவர்களின் இன்னொரு தப்பான புரிதல்: இயேசு நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என சொன்னதற்காக யூதர்கள் தேவதூசனம் சொன்னதாக கூறி கல்லெறிந்தார்கள் என அதே அதிகாரத்தில் உள்ளது. ஆகவே இயேசு தெய்வீகத்தை இதில் வாதிட்டுள்ளார் என அடம்பிடிக்கிறார்கள்!
இது உண்மையா என பார்ப்போம்:
³³ "யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி, இவ்விதமாக தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."
³⁴ இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
³⁵ "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,"
³⁶ "பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?"
(யோவான் 10:33-36)
இதை படித்தால், இயேசு தேவதூசனம் சொன்னதாக யூதர்கள் கூற காரணம் "ஒன்றாக இருக்கிறோம்" என்பதற்காக அல்ல! மாறாக தேவனை பிதா என்றும் தன்னை தேவனுடைய குமாரன் என்றும் சொன்னதை குறித்து தான் என தெளிவாக புரிகிறது! அதை தான் யோவான் 10:36 இல் இயேசு சொன்னதாகவே எழுதப்பட்டுள்ளது!
ஏன் தன்னை தேவகுமாரன் என சொல்வதையும் அங்கே கூறப்படுகிறது!!
அதாவது தேவன் அவரை அனுப்பியதாலும், தேவனால் பரிசுத்தம்பண்ணப்பட்டதாலுமே அவ்வாறு சொன்னதாக கூறப்பட்டுள்ளது!
இதே போல பிதா குமாரன் உறவு பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும் .
உதாரணமாக சாலமோனை குறித்து,
“"நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன்."”
— 2 சாமுவேல் 7:14
ஆனாலும் இதை எழுதியவர் இயேசு தேவனிடம் அவரது மடியில் ஏற்கனவே குழந்தையாக இருந்தார் என்ற நம்பிக்கை உடையவர் தான் (யோவான் 1:18) அதை குறித்து அதிகாரம் 1 இல் எழுதியுள்ளேன்.
----------------------------
81. இயேசுவினுள் பிதா இருந்தாரா?
³⁷ "என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை."
³⁸ "செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்." (யோவான் 10:37-38)
இயேசு மூலம் பிதா தான் அற்புதம் செய்தார்.. அதனால் தான் 10:38 இல் அந்த கிரியைகளை விசுவாசிக்க சொல்கிறார்.
மேலும் இயேசு மூலம் தேவன் தான் அற்புதம் செய்தார் என்பதே ஆரம்பகால சீடர்கள் ஆவி தூண்டி பேசியதாக கூறப்படுகிறது -அப்போஸ்தலர் 2:22
இதே போல இயேசுவும் சீடர்களில் இருப்பதற்கும், பிதா இயேசுவில் இருப்பதற்கும் இயேசு வேண்டுதல் செய்கிறதாக இதே புத்தகம் கூறுகிறது:
“"ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்."”
— யோவான் 17:23
பிதா இவரது உடலுக்குள் புகுந்துவிடவில்லை என்பதை இவை காட்டுகிறது! ஏனெனில் புகுந்துவிட்டால், இவர் பிதாவிடம் வேண்டவேண்டியதில்லை... காரணம் அவரே பிதாவாகிவிடுவார். மேலும் சீடர்களுக்குள்ளும் இயேசு புகுந்தார் என நம்பவேண்டிவரும்.. அப்படி பார்த்தால் அவர்களும் இயேசு என புரியவேண்டும்!!
----------------
82.இயேசுவை நம்பிய மார்த்தாள் கூட இயேசுவை கடவுளென நம்பவில்லை! மாறாக கடவுளிடம் இயேசு எதை கேட்டாலும் கடவுள் இயேசுவுக்கு கொடுப்பார் என்றே நம்பினாள்
²¹ "மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்."
²² இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். (யோவான் 11:21-22)
-----------------------
83.இயேசு தன்னை உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என சொல்வது தெய்வீகமான?
²³ இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
²⁴ அதற்கு மார்த்தாள்: உயிர்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
²⁵ "இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;"
²⁶ உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
²⁷ "அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்." (யோவான் 11:23-27)
தேவன் ஒன்றும் உயிர்த்தெழுதல் அல்ல!! காரணம் அவர் மரணிப்பவர் அல்ல!
இதை சொன்னபோது கூட, இயேசுவை கிறிஸ்த்து என்றே நம்பினாள்!! தேவன் என்று அல்ல (யோவான் 11:27)
மேலும் இயேசுவை கிறிஸ்துவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
-----------------------------.
84.இயேசு லாசருவை உயிர்ப்பித்ததுகூட தேவன் அவருக்கு செவிகொடுப்பதால் தான் .
…
⁴¹ "அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்."
⁴² நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.
⁴³ "இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்."(யோவான் 11:41-43)
சோ இது தெய்வீகம் அல்ல-!
-----------------------
.
85. இயேசு கர்த்தரின் நாமத்தில் வந்தார்
…
¹³ "குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள்." (யோவான் 12:13)
கர்த்தரின் நாமத்தில் தான் தீர்க்கதரிசிகள் வருவார்கள்.
தாவீது கூட தான் கர்த்தரின் நாமத்தில் வந்தேன் என்றான் என் எழுதப்பட்டுள்ளது. 1 சாமுவேல் 17:45
-------------------
86.இயேசுவிடம் விசுவாசமாயிருக்கிறவன் அவரை அனுப்பியவருக்கு விசுவாசமாக இருப்பவனாம். அதேபோல் இயேசை கண்டவன் அவரை அனுப்பினவரை கொண்டவனாய்!
⁴⁴ "அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்."
⁴⁵ என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.(யோவான் 12:44-45)
-------
87.இயேசு சுயமாக பேசாமல், அவருக்கு பிதா கட்டளையிட்டவற்றையே பேசுகிறாராம்.. உபதேசிக்கிறாராம்!
⁴⁹ "நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்."
⁵⁰ அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.
(யோவான் 12:49-50)
இவை அவர் கடவுள் அல்ல என தெளிவாக சொல்கிறது!.
----------------------
88.இயேசு தன்னை ஆண்டவர் என சொன்னாராம்.
¹³ "நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்."
¹⁴ "ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்."(யோவான் 13:13-14)
இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
அதிகாரம் உள்ள நபரை ஆண்டவர் என அழைப்பர்.. மற்றபடி கடவுள் அல்ல!
தாவீதை அடிக்கடி ஆண்டவன் என அழைக்கப்பட்டதை சாமுவேல், நாளாகம புத்தகங்களில் காண கிடைக்கிறது. ஏற்கனவே எழுதியும் விட்டேன்!
----------------------
89. அனுப்பினவரை விட அனுப்பப்பட்டவன் பெரியவனல்ல என சொல்லிவிட்டு, என்னை ஏற்பவன் என்னை அனுப்பியவரை ஏற்கிறார் என கூறி தன்னைவிட பிதா பெரியவர் என கூறுகிறார்.
¹⁶ "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல."
…
²⁰ "நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்." (யோவான் 13:16,20)
---------------
90.இயேசு வழியும் சத்தியமுமாம்.
⁴ "நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்."
⁵ "தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்."
⁶ அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
(யோவான் 14:4-6)
பிதாவிடம் செல்வதற்கான வழியாகவே தன்னை காட்டுகிறார். அதாவது பிதாவிடம் போகவேண்டுமானால் இயேசு மூலமாக தான் போகவேண்டும் என்கிறார்.
இதன்மூலம் பிதா வேறு அவர் வேறு என்பதுடன், பிதா ஒருவரே மெய்யான தேவன்-யோவான் 17:3 என அவர் கூறியதாக எழுதவும் பட்டுள்ளது.
தேவன் எப்படி சத்தியமுள்ளவரோ, அதேபோல் சத்தியத்தை போதிக்க வருவோரும் சத்தியமானவரே.. அவர் தேவனல்ல!
------------------
91.இயேசுவை கண்டவன் பிதாவை கண்டவன் என்பது தெய்வீகத்தை வாதிடுவதா??
⁷ என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
⁸ "பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்."
⁹ "அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?"
¹⁰ "நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்."
¹¹ நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
(யோவான் 14:7-11)
இயேசு மூலம் காரியங்களை செய்தது பிதா என்பதால், தன்னை கண்டவன் பிதாவை கண்டவன் என கூறுகிறார்.
பிதா இயேசுவில் வாசமாயிருக்கிறார் என்பதை விளக்கும் வகையில் 14:23 உள்ளது.
²³ "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்
மற்றபடி இயேசு தேவனிடம் சத்தியத்தை கேட்ட மனுசன்-யோவான் 8:40
-------------------------
92. இயேசு பிதாவிடம் வேண்டும் வராமலே உள்ளார்.
…
¹⁶ "நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்." (யோவான் 14:16)
…
--------
93.இயேசுவிடம் கேட்கும் வசனங்கள் பிதாவினுடையவை. இயேசுவினுடையவை அல்ல!
²⁴ என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. (யோவான் 14:24)
------------------
94.பிதா இயேசுவிலும் பெரியவர்.
²⁸ "நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்."(யோவான் 14:28)
--------------
95.பிதா கட்டளையிட்டபடியே இயேசு செய்கிறாராம்.
³¹ "நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார். " (யோவான் 14:31)
----------------
96.இயேசு திரிட்சை செடி.. தேவன் அதன் தோட்டக்காரன்
அதாவது தேவனால் நடப்பட்ட செடியே இயேசு..
¹ "நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர்."
² "என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்." (யோவான் 15:1-2)
-----------------
97.பிதாவின் கற்பனைகளை கைக்கொள்வதால் இயேசு பிதாவின் அன்பில் நிலைத்திருக்கிறாராம்!
.
¹⁰ "நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்."
(யோவான் 15:10)
------------
98.இயேசு பிதாவிடம் கேள்விப்பட்டவற்றை அறிவிப்பவரே.
…
¹⁵ "இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்."
(யோவான் 15:15)
----------------
99.யூதர்கள் இயேசுவையும் பிராவையும் கண்டும் பகைத்தார்களாம்.
²³ என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
²⁴ "வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்."(யோவான் 15:23-24)
இயேசு மூலம் தேவனே அற்புதம் செய்தார் என்பதாலும் தேவனது கட்டளைகளையே இயேசு போதித்ததாலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது
-----------
100. பிதாவினுடையவை யாவும் இயேசுவுடையதாம். இயேசு பிதாவின் மடியிலிருந்த அவரது வாரிசு என்பதே இந்நூலாசிரியரின் கருத்து!
¹⁵ பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். (யோவான் 16:15)
… -----------
101. பிதா ஒருவரே மெய்யான தேவன் என்பதையே இயேசு பிதாவிடம் சொல்கிறார்.
³ ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)
பிதா மட்டுமே மெய்யான தேவனாக வானத்தில் இருக்க, இயேசு அவரால் அனுப்பபட்டுமிருக்க இயேசு எப்படி தேவனாவார்?
------------------
102.உலக தோற்றம் முன்பே இயேசு இருந்தாரா?
²⁴ "பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்கவிரும்புகிறேன்.". (யோவான் 17:24)
இயேசு தேவனிடம் உலக தோற்றத்தின் முன்பே இருந்தார் என்பதே யோவான் கூறவரும் கருத்து. ஆனாலும் இயேசு நேரடியாக இருக்கவில்லை என்பதே உண்மை.. இல்லாத ஒன்று உருவாக முன்பே அதை நேசிக்க அன்பு காட்ட இறைவனுக்கு இயலும்!
-------------
103.தேவன் தான் பிதா. அவர் இயேசுவுக்கும் தேவன்.. ஏனையோருக்கும் பிதா!
¹⁷ "இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்." (யோவான் 20:17)
-------------
104. தோமா இயேசுவை என் தேவனே என் ஆண்டவனே என சொன்னாராம்.
²⁷ "பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்."
²⁸ தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்.(யோவான் 20:27-28)
இயேசுவை ஆண்டவராக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36
மேலும் தேவன் என்பது அதிகாரம் கொடுக்கப்பட்டவர்களை தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்களை தேவன் என அழைப்பது பைபிளில் சாதாரணமாக காணக்கிடைக்கும்.
உதாரணமாக இயேசு கூட, தேவ வசனத்தை பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என யோவான் 10:35 இல் சொல்கிறார். அதேபோல ராஜாவை குறித்து தேவனே என ஊழியகாரனால் அழைக்கப்பட்டிருக்கிறான்.
⁶ "தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது."
⁷ "நீர் நீதியை விரும்பி, அக்கிர
மத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்."
…
¹⁶ உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.(சங்கீதம் 45:6-7,16)
இதுபோன்றே தோமா அழைத்திருக்கிறார்.
ஆனால் இயேசு , பிதா ஒருவரே மெய்யான தேவன் என்கிறார்-யோவான் 17:3
இதை எழுதிய யோவான் கூட, இவைற்றையெல்லாம் இயேசுவை கிறிஸ்த்து என அறியவேண்டும் என்பதற்காக எழுதியதாகவே சொல்கிறான்:
³¹ "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. " (யோவான் 20:31)
----------------
கருத்துகள்
கருத்துரையிடுக