அப்போஸ்தலர் நடபடிகளின் படி இயேசு ஏன் கடவுளல்ல

 அப்போஸ்தலர் நடபடிகளின்படி இயேசு ஏன் கடவுளல்ல?

----------------------------------------------------------

இது லூக்காவினால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. முதல் மூன்று சுவிசேசங்களில் இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட கருத்துகளுடன் இது உடன்படுகிறது. யோவான் சுவிசேஷம் இயேசு தேவனிடம் ஏற்கனவே சொந்த பிள்ளையாக இருந்தவர்.. ஆனால் உண்மையான தேவன் பிதா தான் என கூறுகிறது . ஆனால் முதல் மூன்று சுவிசேசங்களும், இயேசு ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் மூலம் தேவன் அற்புதம் செய்தார். பிறகு அவரை தன் பிள்ளையாக தத்தெடுத்து கொண்டார் என போதிக்கின்றன.

அதே வகையில் இந்த அப்போஸ்தலர் நடபடிகளும் இயேசு மூலம் தேவன் அற்புதங்கள் செய்ததாகவும், தேவன் அவரை உயர்த்தி உயர் அந்தஸ்த்தை கொடுத்ததாகவும் கூறுகிறது. அதாவது இயேசுவை மெசியாவாக ஆக்கியதே தேவன் தான் என இது கூறுகிறது.

ஒருபடி மேலே போய், இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்ததாகவும், அவரிடம் நேரடியாக வேண்டுதல் செய்ததாகவும் இது கூறுகிறது. அத்தோடு தேவனிடமே ஜெபம் செய்ததாக இது கூறுகிறது.. இயேசு பிதாவை தொழுது கொள்ளவும் , பிதாவிடமே ஜெபம் செய்யவுமே போதித்ததாகவும் , அவ்வாறே இயேசுவும் பிதாவிடமே ஜெபம் செய்ததாகவுமே சுவிசேஷ கதைகள் போதிக்கின்றன. 


இனி நாம் இப்புத்தகத்தினுள் போவோம்:



1.இயேசு என்பவர் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனே. அவர் மூலம் அற்புதம் செய்ததே தேவன் தான்.


²² "இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்." -அப்போஸ்தலர் 2:22

இவ்வசனத்தில் இயேசுவை மனிதன் என்றே கூறியிருக்கிறது. அது இம்மொழியாக்கத்தில் விடப்பட்டிருக்கிறது. 

அதை ரோமன் கத்தோலிக்க பைபிளில்:

,“ԇஎனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும்.”

  — திருத் 2:22 (ERV-TA)


KJV பைபிளில் :

“Ye men of Israel, hear these words; Jesus of Nazareth, a man approved of God among you by miracles and wonders and signs, which God did by him in the midst of you, as ye yourselves also know:”

  — Acts 2:22 (KJV)

NRSV:.

“"You that are Israelites, listen to what I have to say: Jesus of Nazareth, a man attested to you by God with deeds of power, wonders, and signs that God did through him among you, as you yourselves know--”

  — Acts 2:22 (NRSV)

இங்கே அவை அனைத்தும் இயேசு தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதனே என்றும், அவர் மூலம் தேவன் தான் அற்புதம் செய்து தன்னை வெளிப்படுல்தியதாகவுமே அவை கூறுகின்றன. அதாவது அவர் ஒரு கடவுளாகவோ அல்லது கடவுளின் ஏற்கனவே இருந்த குழந்தையாகவோ சித்தரிக்க வில்லை! 

-------------




2.தேவன் தான் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார் என்றே இது கூறுகிறது.  

²⁴ "தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை ஏழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது." (அப்போஸ்தலர் 2:24) , 2:32, 3:15, 4:10, 5:30,10:40, 13:30



 அதாவது இயேசுவை விட வல்லமை மிக்க ஒருவர் உள்ளார். அவரே தேவன் என்றே இது கூறுகிறது

-------------

3.இயேசுவை ஆண்டவராகவும் , கிறிஸ்துவாகவும் (மெசியாவாகவும்) ஆக்கியதே தேவன் தான் என்கிறது.

³⁶ "ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்." -அப்போஸ்தலர் 2:36

அதாவது இயேசுவுக்கு மெசியா / கிறிஸ்து என்ற அந்தஸ்தையும், ஆண்டவர் என்ற அந்தஸ்தையும் கொடுத்த பெரிய ஒருவர் இருக்கிறார். அந்த பெரியவரே தேவன் என்கிறது.

அந்த பெரியவர் மட்டுமே மெய்யான தேவன் என இயேசு சொன்னதாக யோவான் 17:3 இல் எழுதப்பட்டுள்ளது.


------------


4.இயேசுவின் நாமத்தில் சீடர்கள் அற்புதம் செய்ததாகவும், அதற்கு மூல காரணம் தேவன் தான் என்றே இது கூறுகிறது


⁶ "அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி,"

⁷ வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.

⁸ "அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்."

⁹ "அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:" (அப்போஸ்தலர் 3:6-9)

யாருக்கு இந்த அற்புதம் நடந்ததோ, அவன் தேவனைத் தான் துதித்தான் -3:8,9

இயேசு மூலம் அற்புதம் செய்தது கூட தேவன் தான் என்பதே இது கூறுவது- 2:22

-----------


5.இயேசு வேறு தேவன் வேறு. தேவன் என்பவர் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாவார். அவருடைய ஊழியக்காரனே இயேசு. அவரை தேவன் மகிமைப்படுத்தினார் என்பதே இது கூறுவது.

¹³ "ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்." (அப்போஸ்தலர் 3:13) மேலும் 3:26, 4:28,30

இங்கே தேவனுடைய பிள்ளை என மொழிபெயர்த்திருந்தாலும், அதிலுள்ள கிரேக்க வார்த்தை ஊழியரையே குறிக்கிறது. இதை கத்தோலிக்க மொழியாக்கம் சரி செய்கிறது:


“ԇஇல்லை! தேவன் இதைச் செய்தார்! அவர் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனும் ஆனவர். அவரே நமது முன்னோர்களின் தேவன். அவர் தனது விசேஷ ஊழியரான இயேசுவுக்கு மகிமையை அளித்தார். ஆனால் நீங்களோ இயேசுவைக் கொல்லும்படியாகக் கொடுத்தீர்கள். பிலாத்து இயேசுவுக்கு விடுதலையளிக்க முடிவு செய்தான். ஆனால் உங்களுக்கு இயேசு வேண்டாதவரென நீங்கள் பிலாத்துவுக்குக் கூறினீர்கள்.”

  — திருத் 3:13 (ERV-TA)


இதே கிரேக்க வார்த்தை தான் மத்தேயு 12:18 இல் கூறப்பட்டுள்ளது. அதுவும் எபிரேய வார்த்தையான "ஏபேத்- அடிமை" என்பதன் கிரேக்கம் மொழியாக்கமாக பாவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனமாக மத்தேயு அதை குறிப்பிடுகிறார். ஏசாயா 42:1 இல் ஏபேத்-அடிமை (தாசன்) / ஊழியன் என்று தான் கூறப்படுகிறது.


அதாவது தேவன் என்பவருடைய விசேட ஊழியரே இயேசு என்பதே இது கூறுவது.

-------------



 6.இயேசு என்பவர் மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி என்றே இப்புத்தகம் கூறுகிறது.

²² மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

²³ "அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்." (அப்போஸ்தலர் 3:22-23)

அதாவது மோசே எப்படி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரோ, அதேபோன்று தான் இயேசுவும் இருந்தார் என்றே சொல்கிறது. பிறகு தேவன் அவரது அந்தஸ்தை மிக உயர்வாக உயர்த்தினார் என்பதே இப்புத்தகம் சொல்லும் கருத்து

----------



7.இயேசு வேறு தேவன் வேறு. தேவனுடைய கிறிஸ்துவே இயேசு.


 …  

²⁴ "அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்."


²⁶ "கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே."

(அப்போஸ்தலர் 4:24,26)

மேலும் இயேசுவை கிறிஸ்துவாக ஆக்கியதே தேவன் தான்-அப்போஸ்தலர் 2:36

--------------

8.இயேசு என்பவர் தேவனுடைய பரிசுத்த ஊழியர். அவருடைய நாமத்தினால் அற்புதம் செய்ய சீடர்கள் தேவனிடம் வேண்டுதல் செய்தார்கள்.

 …  

²⁸ "ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்."


 …  

³⁰ "உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்." (அப்போஸ்தலர் 4:28,30)


இங்கே இந்த தமிழாக்கம் பிள்ளை என சொன்னாலும், அதன் கிரேக்க வார்த்தை ஊழியர் என்பதையே குறிக்கிறது.  

இதை குறிப்பு 5 இல் சொல்லிவிட்டதால் தவிர்க்கிறேன்


இதன்படி இயேசுவை விட பெரியவராக தேவன் உள்ளார். அவரிடமே இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்வதற்காக சீடர்கள் ஜெபித்தனர் என இது கூறுகிறது!

--------------------------


9.இயேசுவை தேவனே எழுப்பினார். அதுமட்டுமின்றி அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தேவன் தான் உயர்த்தினார்.

³⁰ "நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,"

³¹ "இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்."

(அப்போஸ்தலர் 5:30-31)

தேவன் வேறு இயேசு வேறு. இயேசுவின் அந்தஸ்தை உயர்த்தியதே தேவன் தான் என்கிறது இது.

--------------


 10.சீடர்கள் இயேசுவே தேவன் என பிரசங்கம் பண்ணவில்லை! இப்போதுள்ள கிறிஸ்தவர்களை போல.

அவரை கிறிஸ்து என்றே பிரசங்கம் பண்ணினர்.

⁴² "தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். " (அப்போஸ்தலர் 5:42)


அதாவது இயேசு தேவன் மூலமாக தான் கிறிஸ்துவாக ஆக்கப்பட்டார்- அப்போஸ்தலர் 2:36

---------------

11.இயேசு வேறு தேவன் வேறு. தேவனது வலது பக்கத்தில் இருப்பவராகவே இது இயேசுவை காட்டுகிறது:


 

⁵⁵ "அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு:"

⁵⁶ "அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்." (அப்போஸ்தலர் 7:55-56)


தேவன் வேறு இயேசு வேறு என தெளிவாக இப்புத்தகம் கூறும்போது, இயேசுவாக தேவன் தான் செயற்படுகிறார் என கூறுவது அபத்தம் இல்லையா?

-------------


 12.இயேசு அந்தஸ்து உயர்த்தப்பட்ட ஊழியர் என்பதால், இயேசுவிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு ஸ்தேவான் வேண்டியதாக சித்தரிக்கிறது

⁵⁹ "அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள்."

⁶⁰ "அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான். " (அப்போஸ்தலர் 7:59-60)

லூக்கா சுவிசேசத்தில் இயேசுவும் தேவனிடம் இவ்வாறே சொன்னதாக இதே நபர் எழுதியுள்ளார்.

³⁴ "அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்."

⁴⁶ "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்." (லூக்கா 23:34,46)

இயேசு இப்புத்தகத்தில் தேவனால் பிள்ளையாக தத்தெடுக்கப்பட்டவர் என கருதப்படுவதால் இதெல்லாம் தெய்வீகத்திற்கு ஆதாரமாகாது!

---------------------


13.இயேசு தான் நோய்களுக்கு சுகத்தை கொடுக்கிறார் என்றே இது சொல்கிறது

³³ அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க்கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.

³⁴ "பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்." (அப்போஸ்தலர் 9:33-34)

ஆனாலும் இயேசு மூலம் அற்புதம் செய்தது தேவன் தான்-அப்போஸ்தலர் 2:22

இயேசு அந்தஸ்து உயர்த்தப்பட்டுள்ளது என்பதே இது கூறவரும் கருத்து.. தேவனாக சித்தரிப்பதல்ல!!



------------

14.இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி என்றே இது கூறுகிறது.

 

⁴² "அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்." (அப்போஸ்தலர் 10:42)

அதாவது தேவன் வேறு இயேசு வேறு. இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி..

-------------------------


15.தேவன் என்பவர் வேறு. இயேசு என்பவர் வேறு



¹⁷ ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.

¹⁸ "இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்."

(அப்போஸ்தலர் 11:17-18)

-------------

16.சீடர்கள் தேவனிடமே ஜெபம் செய்தார்கள்.

“அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.”

  — அப்போஸ்தலர் 12:5 

----------

17.இயேசு என்பவர் தாவீதுடைய சந்ததியில் இஸ்ரவேலருக்கு இரட்சகராக தேவனால் எழும்பப்பண்ணப்பட்டவராவார்.

²³ அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். (அப்போஸ்தலர் 13:23)

அதாவது தேவனால் எழும்பப்பண்ணப்பட்ட ஒரு இரட்சகரே இயேசு.

இதேபோல் வேறு சிலரையும் இரட்சகராக எழும்பப்பண்ணியதாக நியாயாதிபதிகள் புத்தகம் கூறுகிறது. 

ஒத்னியேல் எனும் இரட்சகன் -நியாயாதிபதிகள் 3:9

ஏகூத் எனும் இரட்சகன்- நியாயாதிபதிகள் 3:15




 -------------

18.இயேசு தேவனின் குமாரனாக ஜனிப்பிக்கப்பட்டது அவரை எழுப்பிய பின்னரே என்பதே பவுல் கூறும் கருத்து

 …  

³² "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,"

³³ இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.- அப்போஸ்தலர் 13:32-33)

--------------


19.இயேசு என்பவர் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட அவருடைய பரிசுத்தர். சோ இயேசு வேறு தேவன் வேறு


³⁴ இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம் பற்றினார்.

³⁵ "அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது."

³⁷ தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. (அப்போஸ்தலர் 13:34-35,37)


இதேபோல் ஆரோனும் தேவனுடைய பரிசுத்தர் என அழைக்கப்பட்டுள்ளார்- சங்கீதம் 106:16 என்பது மேலதிக தகவல்

----------------

20.தேவன் தான் சகலத்தையும் படைத்தவர். இயேசு அல்ல!


¹⁵ "மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." (அப்போஸ்தலர் 14:15)

ஏனெனில் மெய்யான ஒரே தேவன் பிதா மட்டுமே-யோவான் 17:3

--------------


21. பவுல் கூட தேவனிடம் தான் ஜெபம் செய்தார். இயேசுவிடம் அல்ல!



²⁵ "நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்." (அப்போஸ்தலர் 16:25)


--------------


22.தேவனே சகலத்தையும் படைத்தவர். சகலத்தையும் செய்பவர்.. இயேசு என்பவர் தேவனால் எழுப்பப்பட்ட மனுசன். அந்த மனுஷனைக்கொண்டு பூமியை நியாயந்தீர்ப்பார் என்றே பவுல் சொல்கிறார்.

,"


²⁴ உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.

²⁵ "எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை."

²⁶ "மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;"

²⁷ கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

²⁸ "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்."

²⁹ "நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது."

³⁰ அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.

³¹ "மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்."

 (அப்போஸ்தலர் 17:24-31)



அதாவது இயேசு வேறு தேவன் வேறு. தேவன் சகலத்தையும் உண்டாக்கியவர். இயேசு என்பவர் ஒரு மனுசன். அந்த மனுஷனை கொண்டு தேவன் நியாயந்தீர்ப்பார் என்றே பவுல் நம்பிய கருத்து!! மாறாக இயேசுவே கடவுள் என்பதல்ல!!

-----------------------


23.பவுல் மூலமும் அற்புதம் செய்தது தேவன் தான் என்றே இப்புத்தகம் கூறுகிறது



 …  

¹¹ பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.

¹² "அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன."

(அப்போஸ்தலர் 19:11-12)

இதேபோல் இயேசு மூலமும் தேவன் தான் அற்புதம் செய்தார்-அப்போஸ்தலர் 2:22

-------------------


24.இயேசுவின் ரத்தம் தேவனது ரத்தமா?


“"ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்."”

  — அப்போஸ்தலர் 20:28

தேவனுக்கு ரத்தம் இல்லை.. காரணம் அவர் ஆவியாக இருக்கிறார் -யோவான 4:24

அதேபோல் பவுல் அவர்களின் நம்பிக்கை என்பது , இயேசு என்ற மனுஷனுடைய ரத்தம் மூலமே மீற்கப்பட்டனர் என்பதாகும்!

“எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.”

  — 1 தீமோத்தேயு 2:6

அப்படியிருக்க இது தேவனுடைய ரத்தம் என கூறமுடியாது.

மேலும் இதிலுள்ள கிரேக்க வார்த்தை

tou haimatios tou idiou-, the blood of His own அதாவது அவருக்கு சொந்தமானவருடைய ரத்தம் என்றே வரும்.

idiou haimatios என இருந்தால் தான் “his own blood.” அவருடைய சொந்த ரத்தம் என வரும்.


திரித்துவர்கள் இயேசுவை தேவனென ஏற்கனவே தீர்மானித்து விட்டதால் , அவ்வாறு மொழிபெயர்க்கின்றனர்.

ஆனால் நேரடி அர்த்தத்தை பவுலுடைய ஏனைய கருத்தோடு ஒப்பிட்டால், பவுல் இப்படி கூறவில்லை.. பவுல் கூறியதை தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள் என புரியவரும்!

ஏனெனில் பவுல், இயேசு வேறு தேவன் வேறு என்றும், இயேசு என்பவர் தேவனால் ஏற்படுத்தப்பட்ட மனுசனான நியாயாதிபதி என்றும் இரட்சகர் என்றுமே கூறுகிறார்.(அப்போஸ்தலர் 13:23, 32-33, 17:31, 1 தீமோத்தேயு 2:5-6)



சோ இந்த புத்தகம் இயேசுவை கடவுள் என சொல்லவில்லை!! மாறாக ஒரு மனுசனாகவும் அந்தஸ்து உயர்த்தப்பட்டவராகவுமே சொல்கிறது!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்